Published:Updated:

வீட்டுமனை... வியக்கவைக்கும் நிமித்த பலன்கள்!

வீட்டுமனை
பிரீமியம் ஸ்டோரி
News
வீட்டுமனை

நிலத்தை அகழ்ந்து பலன் காணலாம்

`வீட்டைக் கட்டிப் பார்; கல்யாணம் பண்ணிப் பார்’ என்றொரு சொல் வழக்கு உண்டு. இரண்டு விஷயங்களுமே எல்லோருக்கும் பெரும் சவாலாக அமைபவை. குறிப்பாக `சொந்த வீடு’ என்பது சாமான்யர்களின் பெருங்கனவாக - லட்சியமாக இருக்கும்.

சிறுகச் சிறுக சேமித்தும், வங்கிக்கடன் பெற்றும் சொந்த வீடு கட்டும் அன்பர்கள், அந்த வீட்டில் வாழ்வாங்கு வாழவேண்டும். அவ்வகையில் சொந்த வீடு ராசியாகவும், யோகம் மிகுந்ததாகவும் அமைய நம் ஞான நூல்கள் பல வழிமுறைகளைச் சுட்டிக்காட்டுகின்றன.


புதிதாக நிலம் வாங்கி வீடு கட்டத் தொடங்கும் அன்பர்கள், அந்த நிலத்தை அகழ்ந்து ஆராய்ந்து பார்க்காமல், சட்டென்று கட்டடப் பணிகளை ஆரம்பித்துவிடக் கூடாது. கட்டடம் அமையப்போகும் மனை குறை உள்ளது எனில், அந்தக் கட்டடத்தில் வசிப்போரும் குறைகளையும், இழப்புகளையும் சந்திக்க நேரிடும்.

மனை வாங்கும்போதே தெற்கு, மேற்குப் பகுதிகள் உயரமாகவும், கிழக்கு மற்றும் வடக்கு தாழ்வாகவும் அமைந்துள்ளது போன்ற மனைகளைத் தேர்வு செய்து வாங்கலாம்.

திசை கோணலாக இல்லாமலும், நீள்சதுரமாகவும், சம அளவு உடையதாகவும் உள்ள நிலம் அனைவருக்கும் ஏற்றதாகும்.

சிறுமணல் நிறைந்ததும், மரங்களின் வேர்கள், பாழ்கிணறுகள், கூழாங்கற்கள், சாம்பல், உமி போன்றவை இல்லாததுமான மனை சிறப்பானது.

சரி, மனை வாங்கிவிட்டோம். நம்மையும் அறியாமல் அதில் குறைகள் ஏதேனும் இருந்தால், என்ன செய்வது?

இதற்கு, நம் முன்னோர்கள் சொல்லிச் சென்ற நிமித்த பலன்கள் வழிகாட்டும்.

கட்டடம் அல்லது மனையின் உரிமையாளரும் கட்டட கலைஞரும் மனையில் போய் நிற்கும்போது ஏற்படும் நிமித்த பலன்கள் சில உண்டு. உரிமையாளரும், கட்டடக் கலைஞரும் நிற்கும் இடத்துக்கு வலது பக்கமாக பல்லி செல்வது நல்லது. வலப்புறம் சென்று தொடர்ந்து இடப் புறமும் செல்லும் எனில், உரிமையாளர் ஆள்வோருக்கு மிக வேண்டியவனாகவும் நல்வாழ்வு வாழ்பவனாகவும் திகழ்வார்.

அவர்கள் இருவரும் மனையில் நிற்கும்போது வெண்புறா, வெள்ளைப் பசு, வெள்ளை காளை ஆகியவற்றைக் காண்பதும் விசேஷம்.

மனையில் நிற்கும்போது எறும்புகள் சாரை சாரையாகச் செல்லாமல் தேங்கி நிற்பது, கரையான்கள் பரவியிருப்பது, வண்டுகள் கண்டபடி மண் பரப்பைத் துளைத்துக்கொண்டு இருப்பது, ஓணான் எதிரில் ஓடி வருவது போன்ற சகுனங்கள் நிகழ்ந்தால் மனைக் கோலுவதைத் தவிர்க்கவேண்டும்.

வீட்டுமனை... வியக்கவைக்கும் நிமித்த பலன்கள்!

நிலத்தை அகழ்ந்து பலன் காணலாம்

மனைக்கோலுதல் நிகழவேண்டிய நிலத்தைத் தோண்டிப் பார்க்கும்போது தவளை, அரணை, பல்லி, சிலந்தி, நண்டு ஆகியவை தென்பட்டால் வீடு சிறப்படையும். பசுவின் கொம்பு, பல தானியங்கள், செங்கல் பஞ்சலோகம் இவற்றுள் எது கிடைத்தாலும் செல்வம் மேன்மேலும் பெருகும்.

பொன், வெள்ளி, செம்பு இவற்றில் யாதொன்று அகப்பட்டாலும் நன்மையே. புதையல் கிடைத்தால் மிகப்பெரிய இன்பம் விளையும்.

இரும்பு, ஈயம், பித்தளை இவற்றில் ஏதேனும் ஒன்று கிடைத்தால் நற்பலன் குறைந்த அளவே விளையும்.

தோண்டிப் பார்த்த மனையில் உடும்பு, பாம்பு, தேன் கூடு, ஆமை, பூரான், வண்டு ஆகியவை தென்பட்டால் வீடு தீ விபத்துக்குள்ளாகும்.

எறும்பு, தேள், கரையான், மரக்கட்டை, முட்டை, நகம், ரோமம், மண்டை ஓடு, எலும்பு இவற்றுள் ஏதேனும் தென்படுமாயின் பெருந்தீங்கு நேரிடும். கரியோ கட்டையோ தோன்றினால் பிணியும், உமி தோன்றினால் செல்வக்கேடும் உண்டாகும் என்கிறது மனை நூல். கருங்கல்லோ, எலும்போ தென்பட்டால் இல்லத் தலைவிக்கு பாதிப்பும், தலைவருக்கு நோயும் நலிவும் ஏற்படும்.

ஆகவே, நிலத்தை அகழ்ந்து பார்க்காமல் வீடுகட்ட முயற்சி செய்யக் கூடாது. ஒருவேளை, அவ்வாறு ஆராயாமல் கட்டடம் கட்டிவிட்டால், அங்கு நடக்கும் தீய நிகழ்வுகளைக்கொண்டே கட்டப்பட்ட மனையின் எந்தெந்த பகுதியில் என்னென்ன குறை உள்ளது என்று உய்த்துணர முடியும் என்கிறது மனை நூல்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
வீட்டுமனை... வியக்கவைக்கும் நிமித்த பலன்கள்!

புது வீட்டில் சில நிமித்தங்கள்...

புது வீட்டுக்குச் சென்ற பிறகு, மாடுகள் முன்பு போல் பால் கறக்கவில்லை என்றாலோ, அவை அடிக்கடி நோய்வாய்ப்பட்டாலோ, அந்த மனையில் கிழக்கு மூலையில் சிறு குழந்தையின் எலும்பு புதைந்திருக்க வாய்ப்பு உண்டு.

புதுமனை புகுந்தபிறகு அரசாங்க கோபத்துக்கு ஆளாக நேர்ந்தால், தென் கிழக்கு மூலையில் குதிரை எலும்பு இருக்கும். மனைக்கு உரியவன் நித்ய நோயாளியாகத் துன்புற்றால், மனையின் தென்புறத்தில் யானையின் எலும்பு புதைந்திருக்க வாய்ப்பு உண்டு.

மேலும், மனையின் மேற்குப் புறத்தில் எருதின் எலும்பு கிடந்தால், அந்த மனைக்குச் சொந்தக்காரர் பிறருக்கு ஆரூடம் சொல்லும் தொழிலில் இருப்பார். மனையில் எப்பகுதியிலாவது கழுதையின் எலும்பு இருக்க நேர்ந்தால், மனைக்குச் சொந்தக்காரர் தொடர்ந்து நாசத்தைச் சந்திப்பார்.

மனைக்கு வடக்கில் ஆட்டின் எலும்பு கிடக்குமானால் அண்டை அயலாரின் விரோதம் நிகழும். வடகிழக்கு மூலையில் நாயின் எலும்பு கிடந்தால், இல்லத்தில் கலகம் தொடரும் என்கிறது மனைநூல்.

வீடு கட்டத் துவங்குமுன், மனையை அளந்து அளவீடு செய்து, அதன் நான்கு மூலைகளிலும் முளைக்குச்சி அடித்து, அந்த நான்கையும் இணைக்கும்விதமாகக் கயிறு கட்டிவைப்பார்கள்.

அந்த இடத்தில் உரிமையாளருடன் கட்டடம் கட்டித் தருபவரும் இருக்கும் நிலையில்... கோழி ஒன்று கயிற்றைத் தாண்டி மனைக்குள் நுழைந்தால், மனையின் கிழக்குப் பக்கத்தில் ஏதேனும் ஒரு பறவையின் எலும்பு புதைந்திருக்குமாம்.

கயிற்றைத் தாண்டி பூனை நுழைந்தால், மனையின் தென்கிழக்கில் பூனையின் எலும்பு புதைந்திருக்கும்; எருமை நுழைந்தால் நிலத்தின் வடகிழக்கில் முயலின் எலும்பும்; பசுமாடு உள்ளே வந்தால், நிலத்தின் மேற்கு பாகத்தில் ஒரு பசுவின் எலும்பு புதைந்திருக்கும்; கழுதை உள்ளே வந்தால், நிலத்தின் வடமேற்கில் கழுதையின் எலும்பு புதைந்து இருக்கும் என்று அறியலாம்.

அறிமுகம் இல்லாத புதிய மனிதர் ஒருவர் கயிற்றைத் தாண்டி உள்ளே வந்தால், மனையின் மத்திய பகுதியான பிரம்ம ஸ்தானத்தில் மனித எலும்பு புதைந்து இருக்கும். இவ்வாறான விஷயங் களை அறிந்து, எளிய பரிகாரங்கள் மூலம் குறைகளை நிவர்த்தி செய்த பிறகு கட்டடப் பணியை ஆரம்பிக்கலாம்.

வீட்டுமனை... வியக்கவைக்கும் நிமித்த பலன்கள்!

வீட்டு மனை விருத்தியாக...

வீடு அமையவிருக்கும் இடத்தில் 6 அங்குல அளவு ஆழம் மண்ணை அப்புறப்படுத்திவிட்டு, வேறு மண்ணைப் பரப்பி, குறிப்பிட்ட இடத்தில் நவதானிய தாவரங்களை வளர்க்கவேண்டும். அவை வளர்ந் ததும் 7 நாள்கள் தொடர்ந்து பசுவும் கன்றுமாக சேர்த்து மேய விட வேண்டும். இதன் மூலம் மனையின் குறைகள் நீங்கும்.

மேலும் தலைமைக் கட்டடக் கலைஞர் - ஸ்தபதியானவர் உருவம், நிறம், ஒலி முதலான குணங்களுடன் கூடிய பூமியில் முறையாக பூஜைகள் செய்து, மங்கல வாத்திய சப்தங்களுடன் வழிபடவேண்டும்.

அப்போது ‘இந்தப் பூமியில் வசிக்கக்கூடிய பூதங்களும், தேவதைகளும், ராட்சஸர்களும் இந்த பூமியிலிருந்து விலகி வேறு இடத்துக் குச் செல்ல வேண்டும். இந்த பூமியை நான் எடுத்துக்கொள்ளப் போகிறேன்’ என்று மந்திரம் சொல்லி பிரார்த்தனை செய்ய வேண்டும் என்கிறார் மயன்.

இவ்வாறு பிரார்த்தனை செய்யப்பட்ட இடத்தை உழுது, பசுஞ்சாணம் கலந்த விதைகளை விதைக்கவேண்டும். அந்த இடத்தில் பசுக்கள், கன்றுகள், காளைகள் ஆகியவற்றை வளர்க்க வேண்டும்.

பசுக்களின் குளம்படி பட்டதும், அவற்றால் முகர்ந்துபார்க்கப்பட்டதுமான பூமி பரம பவித்திரமாகிறது. கன்றுகளின் வாயில் இருந்து சிந்திய நுரையாலும் பசுக்களின் பால்பெருக்கினாலும் அந்த பூமி சுத்தம் செய்யப் படுகிறது.

இத்தகைய பூமியில், ஜோதிட சாஸ்திரப்படி நிச்சயிக்கப்பட்ட சுபமுகூர்த்த சுபநாளில் வெள்ளை புஷ்பங்களால் பலிஹரணம் செய்ய வேண்டும் என்றும் மயன் அறிவுறுத்துகிறார்.

வீட்டுமனை... வியக்கவைக்கும் நிமித்த பலன்கள்!

உங்களுக்கு நட்பு நன்மை செய்யுமா?

திறமை, இனம், மதம், கல்வித் தகுதி, பொருளாதார நிலை போன்றவற்றுக்கு அப்பாற்பட்டது நட்பு. எவரிடமும் வலுக் கட்டாயமாக அன்பைப் பெற முடியாது.

பணப் பரிமாற்றமும், சுப காரியங்களின்போது விலையுயர்ந்த பொருட்களை பரிசளிப்பதும் மட்டுமே நல்ல நட்பாகிவிடாது. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், தன்னிடம் பழகிய நபர் எங்கிருந்தாலும் நலமுடன் இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொள்வதே நல்ல நட்பு!

 11-ம் அதிபதி 2-ம் இடத்தில் இருந்தால் நண்பர்களால் குடும்பத்துக்கு எல்லாவித நன்மைகளும் ஏற்படும்.

 11-ம் அதிபதி 5-ல் இருந்தால், பூர்வ புண்ணியத்தின் காரணமாக நல்ல நண்பர்கள் அமைவார்கள். அந்த நண்பர்

களால் ஜாதகரின் குழந்தைகள் நன்மை அடைவார்கள்.

 11-ம் அதிபதி 9-ல் இருந்தால், நண்பர்களால் பலவித நன்மைகளையும், அவர்கள் மூலம் பல்வேறு பாக்கியங்களையும் பெறுவார்கள்.

 11-ம் அதிபதி 11-ல் இருந்தால் நண்பர்களால் அதீத லாபம் கிடைக்கும். லக்னத்தில்

11-ம் அதிபதி இருந்தால், அந்த ஜாதகர் எப்போதும் நண்பர்கள் பட்டாளத்துடனேயே இருப்பார்.

 11-ம் வீட்டில் குரு, சந்திரன், சுக்கிரன், புதன் போன்ற சுபக் கிரகங்கள் இருந்தால், நட்பால் ஆதாயம் உண்டு.