Published:Updated:

புதன் அருள் இருந்தால் வெற்றியும் மகிழ்ச்சியும் தேடி வரும்!

‘ஜோதிடஸ்ரீ’முருகப்ரியன்

பிரீமியம் ஸ்டோரி

`பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது’ என்பார்கள். நவகிரகங்களில் புத பகவானின் அனுக்கிரகம் வாய்ப்பதும் அப்படியே! ஒருவர் சீரும்சிறப்புமாக வாழவும், வித்யைகளில் சிறந்து விளங்கவும் புத பகவானின் திருவருள் தேவை. படிப்புக்குக் காரணமானவர் புத பகவான்.

இந்தப் பூமியில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மற்றும் இனிமேல் கண்டறியப் போகும் அனைத் துக் கண்டுபிடிப்புகளுக்கும் சொந்தக்காரர் புதன்தான்.

விண்வெளியில் சந்திரனுக்கும் சுக்கிரனுக் கும் இடையே அமைந்துள்ளது, புதனின் பயணப் பாதை. ராசிச் சக்கரத்தில், சூரியனுக்கும் சந்திரனுக்கும் பின்வீட்டில் தென்படுவார் புதன். மிதுனமும் கன்னியும் அவர் இருக்கும் இடங்கள். கன்னியில் உச்சம் பெற்றிருப்பதால், அவரது பலம் வலுத்திருக்கும்.

புதன் என்றால், அறிதல், உள்வாங்கி உணர்தல் என்று அர்த்தம் உண்டு. உடலையும் உள்ளத்தையும் இணைப்பதில் புதனுக்குப் பங்கு உண்டு. ஆன்மிகத்தையும் உலகவியலையும் இணைக்கிற பாலமாகச் செயல்படுவார், புதன்.

புதன் அருள் இருந்தால் வெற்றியும் மகிழ்ச்சியும் தேடி வரும்!

மனம் நினைத்ததைப் புத்தி ஆராயும். அந்த வேலையை இறுதி செய்வதற்குப் புதன் தேவை. உலக சுகத்தை அடைவதற்குப் பணம் வேண்டும்; அதனை ஈட்டுவதற்கு உயரிய கல்வி வேண்டும்; அதனைப் பெறுவதற்கு, புதனின் ஒத்துழைப்பு தேவை. பேரறிவை, பெருஞானத்தை அடைவதற்கு, துறவறம் ஏற்பவர்களுக்கு புதனின் உறுதுணை அவசியம்.

சந்திரனின் (மனம்) மைந்தனாக புதனைச் சித்திரிக்கிற தகவல், புராணத்தில் உண்டு. அதாவது, சந்திரனிலிருந்து வெளியானவர் புதன். புதனுக்கு, ‘ஸெளம்யன்’ என்ற பெயர் உண்டு. ஸோமன் என்றால் சந்திரன். அவருடைய மைந்தன் என்று இதற்கு அர்த்தம் சொல்வர். சந்திரன் மனோகாரகன். ஆகவே, மனத்தின் எண்ண ஓட்டத்துடன் நெருங்கிய தொடர்பு, புதனுக்கு உண்டு என்று அறியலாம்.

உடலில் அணு அளவில் உள்ள மனம், புதனின் ஒத்துழைப்பில், தன்னுடைய எண்ணங் களை விரிவாக்கிச் செயல்படுத்தி வெற்றிக்கு வழி வகுக்கிறது. சிந்தனை வளத்துக்கான அடித்தளம், புத்தி; அது, புதனுடன் இணைந்தே இருக்கும். ஆக, நாகரிகமான சிந்தனையைத் தூண்டுபவரும் முதிர்ச்சி அடைந்த செயல் பாட்டுக்கு உரியவரும் புதனே!

மனமானது நினைக்கவல்லது; புத்தி ஆராய வல்லது; அத்துடன், அதற்குத் தகுந்தபடி உத்தரவிடவும் செய்யும். புலன்கள் அதன்படி செயல்படும். புதனுடன், வளர்பிறை சந்திரன், சுக்கிரன், குரு ஆகியோர் இணைந்தால், சிந்தனை வளம் பெருகும்; சிந்தனையில் தடங்கல் இருக்காது; வெற்றியும் மகிழ்ச்சியும் தேடி வரும்.

புதன், சுபக்கிரகம். ஆனால், பாபக் கிரகத் துடன் இணைந்தால், பாவியாக மாறுவார் என்கிறது ஜோதிடம். அப்படித்தான், அறிவானது துஷ்டனுடன் இணையும்போது மங்கிவிடும்; நல்லவனுடன் இணைந்தால் துளிர்விட்டு மிளிரும். ஒருவரது ஜாதகத்தில் புதன் வலுப் பெற்றால், துர்க்குணங்களை அடக்கி நற்குணங் களை வளரச் செய்வார்; சிந்தனை தரத்தை உயர்த்துவார்.

காலத்தின் அளவுகோலான ஒரு வாரத்தின் நடுநாயகமாக வீற்றிருப்பவர், புதன். மனத்தில் படிந்த அழுக்கு மற்றும் உடலில் தென்படும் அழுக்கு ஆகியவற்றை அகற்ற, புதன்கிழமை சிறந்தது என்கிறது சாஸ்திரம்.

முடியும் நகமும் உடலின் கழிவுப் பொருள் கள் என்கிறது ஆயுர்வேதம். மஜ்ஜை, எலும்பு இவற்றின் கழிவுகள் என்றும் தெரிவிக்கிறது. அந்தக் கழிவுகளை அகற்ற, புதன் கிழமை யைப் பரிந்துரைக்கிறது தர்மசாஸ்திரம். ஆண்கள், எண்ணெய் தேய்த்துக் குளிக்க, புதன் கிழமையைத் தேர்ந்தெடுக்கும் சம்பிரதாயமும் உண்டு.

அறிவால் உலகத்தை ஆட்டுவிப்பவர் புதன் என்பதால், எல்லாவற்றிலும் நிபுணத்துவம் உள்ளவர் எனும் அர்த்தத்தில் இவரை ‘நிபுணன்’ என்று ஜோதிட சாஸ்திரம் புகழ்கிறது.

புதன் அருள் இருந்தால் வெற்றியும் மகிழ்ச்சியும் தேடி வரும்!

ஒருவருக்குப் புதனின் அருள் பரிபூரணமாகக் கிடைப்பது எப்போது? புதன் எந்த கிரகத்துடன் சேர்ந்திருக்கும் போது என்ன பலன்தருவார்... விரிவாகத் தெரிந்து கொள்வோமா!

புதன் - சூரியன்: ஜாதகத்தில் சூரியனுடன் புதன் இணைந்து அமையப்பெற்றிருக்கும் ஜாதகர்கள், தெய்விக அருளைப் பெற்றிருப் பார்கள். புராணங்கள், இதிகாசங்கள், சாஸ் திரங்கள், சரித்திரங்கள் முதலியவற்றைத் தெரிந்து கொள்வதில் ஆர்வமாய் இருப்பர். எல்லோரிடமும் அன்புடன் பழகுவர். நல்ல விஷயங்களை போதிப்பதிலும், வாதம் செய்வதிலும் வல்லவர்களாகத் திகழ்வர். உடலில் உஷ்ணத்தின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும். தனவனாகவும் புகழ் பெற்றவராகவும் திகழ்வர்.

புதன் - சந்திரன்: வேதம், சாஸ்திரம், விஞ்ஞானம், ஜோதிடம் முதலியவற்றில் ஆர்வம்கொண்டவர்கள். தேர்ந்த ஆசானைப் போல் நல்ல விஷயங்களை மற்றவர்களுக்கு போதிப் பார்கள். நீதிக்கும் நேர்மைக்கும் முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

எதிரிகளைச் சுலபமாக வெற்றி கொள்ளும் இவர்களுக்கு அவ்வப் போது கர்வம் தலைதூக்கும். மற்றவர்களால் புகழையும், கீர்த்தியையும் பெறுவார்கள்.

புதன் - செவ்வாய்: விவசாய நிலங்கள், மாடு கன்று பால் பாக்கியங் களுடனும், வீடு- மனைகளுடனும் செல்வந்தராக இருப்பார்கள். கல்வியில் நாட்டம் இருக்காது. ஆசார அனுஷ்டானங்களைப் பின்பற்றுவதில் கண்டிப்புடன் இருப்பர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அடிக்கடி உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும். மனத்துக்குள் தகாத எண்ணங்கள் ஏற்பட்டாலும், அவற்றை வெளியில் தெரியாமல் மறைப்பதில் சமர்த்தர். இவர்களுக்கு மனோதைரியம் அவ்வளவாக இருக்காது. சகோதரர்களால் ஏமாற்றப்படக்கூடும். இவர் களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகளும் உண்டாகும்.

புதன் - குரு: அழகாகவும் கம்பீரமாகவும் தோன்றும் இவர்களுக்குப் பயணங்களில் சுற்றுலா செல்வதில் ஆர்வம் இருக்கும். வாக்கு சாதுர்யம் பெற்றிருப்பர். ஞானிகள் மகான்களின் ஆசி கிடைக்கும். கணிதத்தில் நிபுணத்துவம் பெற்றிருப்பர்.

மன அழுத்தக்காரராக இருப்பர். எப்போதும் உண்மையைக் கடைப்பிடிக்கும் இவர்களுக்கு பிறர் பொருள்களில் ஆசை இருக்காது. முன்கோபம் அதிகம் உண்டு.

புதன் - சுக்ரன்: ஆசார அனுஷ்டானங்களில் பிடிப்புள்ளவர். தெய்விக வழிபாடுகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வர். பிறர் மனம் புண்படாதபடி நடந்துகொள்வார்கள். தாராளமாக உதவும் மனப்பான்மை கொண்டிருப்பார்கள். எடுத்த பணியைத் திறம்படச் செய்து முடிப்பதில் வல்லவர். சத்தியத்தில் இருந்து தவறாதவர்.

புதன் - சனி: எல்லோரையும் நண்பர்களாக்கிக் கொள்வார்கள். பொருள் சேமிப்பதிலும் பாதுகாப்பதிலும் வல்லவர். அவசரப்பட்டு கோபப் படுவார்கள். பண விஷயங்களில் கண்டிப்புடன் இருப்பார்கள். பிறரைக் குறைகூறுவதில் ஆர்வம் காட்டுவார்கள். துன்பப்படுபவர் களிடம் இவர்கள் இரக்கம் காட்டுவார்கள் என எதிர்பார்க்க முடியாது. தனது கருத்தை ஆணித்தரமாக முன்வைப்பார்கள்.

புதன் - ராகு: கல்வியில்ல் ஆர்வமும் அறிவுக் கூர்மையும் அதிகம் கொண்டவர். நிலையான எண்ணம் இருக்காது; சஞ்சலம் மிகுந்தவர். இவர்களின் மனத்தில் உள்ளதை எளிதில் அறிய முடியாது.

இவர்கள் உடலில் பித்தம் மிகுந்திருக்கும். பிறரை நன்றாகப் புரிந்துகொள்வதில் வல்லவர்கள். உடல் ஆரோக்கியம் அடிக்கடி பாதிக்கப்படும். ஆசார அனுஷ்டானங்களில், தெய்வ நம்பிக்கைகளில் பற்றுதல் இருக்காது. இவர்கள் உடல் நலனில், குறிப்பாக பற்களின் நலனில் அக்கறை காட்ட வேண்டும்.

புதன்-கேது: அறிவுக்கூர்மையுடன் திகழும் இவர்கள், பிறருக்கு ஆசிரியர்களாக போதிப்பார்கள். ஆன்மிக ஞானம் பெற்றிருப்பார்கள். கவலையை வெளியில் காட்டிக்கொள்ளாமல் சிரித்த முகத்துடன் வலம் வருவார்கள். எல்லோரிடமும் சகஜமாகப் பழகுவார்கள். எடுத்த காரியத்தை உடனே முடித்துவிடும் சுபாவம் கொண்டவர்கள். நண்பர்கள் உறவினர்களிடம் புகழுடனும் பெருமையுடனும் திகழ்வார்கள். சகல விதமான போகங்களையும் அனுபவிப்பார்கள்.

புதன் அருள் இருந்தால் வெற்றியும் மகிழ்ச்சியும் தேடி வரும்!

புதனின் அருள் பெற பூமிதேவியை வழிபடலாம்!

புதனை வழிபட்டால், அகங்காரம் அழியும்; அமைதி கிடைக்கும். விவேகத்தைத் தரவல்லவர் புதன் பகவான்; அவரை வழிபட, விவேகம் வளரும். அடக்கமும் சகிப்புத் தன்மை யும் இருந்தால் வளமான வாழ்க்கை நிச்சயம்.

‘பும் புதாய நம:’ என்று சொல்லி புதன் பகவானது திரு விக்கிரகத்துக்கு 16 உபசாரங்களைச் செய்யுங்கள். அல்லது, அதன் அதிதேவதையான ஸ்ரீமந் நாராயணனை, ‘நமோ நாராயணாய’ என்று சொல்லி வழிபடுவதுடன், புதபகவானையும் தியானித்து வணங்குங்கள்; இன்னலை அகற்றி, இன்பத்தை வழங்குவார்!

பஞ்சபூதங்களில், பூமியின் பங்கு புதனில் உண்டு. நம் உடலிலும் பூமியின் பங்கு உண்டு. ஆகவே, பூமித் தாயின் வழிபாடு, புதன் பகவானின் வழிபாடாக மாறி விடும். ‘சமுத்ரவஸனே! தேவி! பர்வதஸ்தன மண்டிதே! விஷ்ணு

பத்னி... நமஸ்துப்யம் பாதஸ்பர்சம் க்ஷமஸ்வமே’ எனும் ஸ்லோகத்தை மனதாரச் சொல்லலாம்.

ஸெளம்ய! ஸெளம்ய குணோபேத!

புதக்ரஹ மஹாமதே!

ஆத்மானாத்ம விவேகம் மே

ஜயை த்வத்ப்ரசாதத:

என்று சொல்லி வணங்கி, இயற்கையில் விளைந்த பொருள் களைப் புதனுக்கு அர்ப்பணிக்கலாம். புதன்கிழமை நன்னாளில், இப்படி மனதாரப் பிரார்த்தியுங்கள்; செழிப்பான வாழ்வை வரமாகத் தருவார் புதபகவான்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு