Published:Updated:

மகிழ்ச்சியான மண வாழ்க்கை!

திருமணம்
பிரீமியம் ஸ்டோரி
திருமணம்

`ஜோதிட மாமணி’ முனைவர் முருகு பால முருகன்

மகிழ்ச்சியான மண வாழ்க்கை!

`ஜோதிட மாமணி’ முனைவர் முருகு பால முருகன்

Published:Updated:
திருமணம்
பிரீமியம் ஸ்டோரி
திருமணம்

திருமணம் என்பது ஆண் பெண் இருவரின் வாழ்விலும் முக்கியமான நிகழ்ச்சி. திருமணத்துக்குப் பிறகு கணவன் மனைவி இருவரும் சந்தோஷமாக வாழ்ந்தால் மட்டுமே குடும்ப வாழ்க்கை சிறக்கும்.

திருமணத்தில் பிரச்னைகள் ஏற்பட்டால், வாழ்க்கையே நிம்மதி இல்லாமல் போய்விடுகிறது. ஜாதக ரீதியாக கிரகங்களின் நிலை சிறப்பாக இருந்தால்தான், ஒருவரின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

ஒருவரின் ஜாதகத்திலிருக்கும் 1, 4, 7, 10-ம் வீடுகள் கேந்திர ஸ்தானம் எனவும், 1, 5, 9-ம் வீடுகள் திரிகோண ஸ்தானம் எனவும், 7-ம் வீடு என்பது களத்திரஸ்தானம் எனவும் அழைக்கப்படுகின்றன.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஜன்ம லக்னத்துக்கோ, சந்திரனுக்கோ 7-ம் அதிபதி ஆட்சி உச்சம் பெற்றோ, கேந்திரஸ்தானமான 1, 4, 7, 10-ம் வீடுகளிலோ திரிகோண ஸ்தானமான 1, 5, 9-ம் வீடுகளிலோ அமையப்பெற்றிருப்பது நல்லது.

நவகிரகங்களில் குரு, சுக்கிரன், வளர்பிறைச் சந்திரன், சுபகிரகச் சேர்க்கை பெற்ற புதன் ஆகியவை சுபகிரகங்கள். சூரியன், செவ்வாய், சனி, ராகு கேது, தேய்பிறைச்சந்திரன், பாவிகள் சேர்க்கை பெற்ற புதன் ஆகியவை பாவ கிரகங்களாகும்.

களத்திர ஸ்தானமான 7-ம் வீட்டில் சுபர் இருப்பது, பார்ப்பது, 7- ம் அதிபதி சுபர் சேர்க்கையோ பார்வையோ பெற்றிருத்தல் ஆகிய நிலைகளால் மணவாழ்க்கை மகிழ்ச்சியுடன் அமைந்திடும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

7-ம் அதிபதி பாவியாக இருக்கும்பட்சத்தில் சுப நட்சத்திரத்தில் அமைவதும், சுபர் பார்வையுடன் இருப்பதும், சொந்த வீட்டில் அமைவதும் கெடுதல் இல்லை.

7- ம் அதிபதி, சுக்கிரன், செவ்வாய் ஆகியோர் பாவ கிரகச் சேர்க்கையின்றி அமையப்பெற்று, சுப நட்சத்திரத்தில், சுபர் பார்வையுடன் இருப்பது மிகவும் நல்ல அமைப்பாகும்.

குடும்பத்தில் நிம்மதி இருந்தால்தான் கணவன் மனைவியிடையே மகிழ்ச்சி நிலவும். ஆகவே, குடும்ப ஸ்தானமான 2-ம் வீட்டில் சுபகிரகங்கள் அமைவதும் அவசியம்.

லக்னாதிபதியும் 7-ம் அதிபதியும் ஒருவருக்கொரு வர் கேந்திர திரிகோண ஸ்தானங்களில் அமைந்திருப்பது, சிறப்பான மண வாழ்க்கையைத் தரும்.

ஜன்ம லக்னத்துக்கோ, சந்திரனுக்கோ 2, 7-ம் அதிபதிகள் பாவ கிரகங்களின் சேர்க்கை, பார்வை பெறாமல் இருப்பதும், பாவ கிரகங்களுக்கு இடையே அமையாமல் இருப்பதும், 6, 8, 12-ம் வீட்டில் மறையாமல் இருப்பதும் நல்லது.

ஒருவரின் ஜாதகத்தில் கிரகங்கள் வக்கிரம் பெற்றால் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகின்றன. ஜன்ம லக்னத்துக்கு 2, 7-ம் வீட்டின் அதிபதிகளோ, சுக்கிரனோ (ஆண்கள் ஜாதகத்தில்), செவ்வாயோ (பெண்கள் ஜாதகத்தில்) வக்கிரம் பெற்றால் திருமண வாழ்வில் மகிழ்ச்சி குறையும்.

மணவாழ்க்கையானது மகிழ்ச்சிகரமானதாக அமைவதற்கு நடப்பில் நடைபெறும் தசா புக்திகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன.

திருமணத்துக்குப் பிறகு வரக்கூடிய காலங்களில் நடைபெறக்கூடிய தசா புக்திகள், ஜன்ம லக்னத்துக்கு நட்பு கிரகங்களின் தசா புக்தியாக இருந்தாலும், கேந்திர திரிகோணாதிபதிகளின் தசா புக்தியாக இருந்தாலும், சுபகிரகங்களின் தசா புக்தியாக இருந்தாலும் வாழ்க்கை நிம்மதியாக இருக்கும்.

திருமணம்
திருமணம்

ஜன்ம லக்னத்துக்கோ, சந்திரனுக்கோ 2, 7-ம் வீடுகளில் பாவிகள் அமைந்து, அவர்களின் தசா புக்திகள் நடைபெறும் காலங்களில் மண வாழ்வில் மகிழ்ச்சி குறைவு ஏற்படுவதுடன், குடும்ப ஒற்றுமை பாதிக்கப்படும். ஜாதகர் ஓர் ஊரிலும் வாழ்க்கைத் துணை மற்றோர் ஊரிலும் வாழும் இக்கட்டான சூழ்நிலை ஏற்பட வாய்ப்பு உண்டு.

மகிழ்ச்சியான வாழ்க்கை அமைவதற்கு வாழ்க்கைத் துணையின் ஜாதக அமைப்பும் சிறப்பாக இருப்பது அவசியம்.

திருமண வாழ்வில் எத்தனை பிரச்னைகள், சண்டைகள் வந்தாலும் கணவன் மனைவி இருவருடைய ராசியும் பொருந்தி வந்தால் மனத்தளவில் ஒன்றுபடக் கூடிய அமைப்பு நிச்சயமாக இருக்கும். நடைமுறையில் இப்படிப்பட்ட அமைப்பு யாருக்கு ஏற்படுகிறது எனப் பார்க்கும்போது, அதில் சில சூட்சுமங்கள் உள்ளன.

ஆண் பெண் இருவருக்கும் ராசியாதிபதி நட்பாக இருந்தால் ஒற்றுமை நன்றாக இருக்கும்.

ராசி மண்டலத்தில் உள்ள 12 ராசியில் ராசி அதிபதியின் அடிப்படையில் மேஷம், கடகம், சிம்மம், விருச்சிகம், தனுசு, மீனம் ஆகிய ஆறு ராசிகளும் ஒன்றுக்கொன்று நட்பு ராசிகளாகும்.

அடுத்தபடியாக ரிஷபம், மிதுனம், கன்னி, துலாம், மகரம், கும்பம் ஆகிய ஆறு ராசிகளும் ஒன்றுக்கு ஒன்று நட்பு ராசிகளாகும்.

ஆண் பெண் இருவருக்கும் ராசியாதிபதிகள் ஒருவராகவே இருந்தாலும், நட்பு ராசிகளாக இருந்தாலும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்லும் அமைப்பு உண்டாகிறது. காதுமட்டுமன்றி இருவருடைய லக்னங்கள் நட்பாக இருந்தாலும் சிறப்பான வாழ்க்கை அமையும்.

மண வாழ்க்கை மங்கலகரமாக அமைய ஈசனின் அர்த்தநாரீஸ்வரர் திருவடிவை வணங்கி வரவேண்டும். அதேபோல், அன்னை உமையவளை கெளரி தேவியாக பாவித்து வெள்ளி, செவ்வாய் மற்றும் ஞாயிற்றுக் கிழமையில் செந்நிற மலர்களால் அர்ச்சனை செய்து, நெய் தீபங்கள் ஏற்றிவைத்து, சர்க்கரைப் பொங்கல் சமர்ப்பித்து வழிபட்டு வந்தால் மண வாழ்க்கை மிக நிம்மதியாக அமையும்; வாழ்க்கை வரமாகும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism