வீடாக இருந்தாலும் சரி, தொழில் நிறுவனமாக இருந்தாலும் சரி... அவற்றைக் கட்டும்போது சில அடிப்படை யான வாஸ்து விதிகளைக் கடைப்பிடிப்பது நல்லது. அதுவே அந்த இல்லத்திலிருப்பவர்கள் சுபிட்சமாக வாழ்வதற்கும் அந்த நிறுவனம் வளர்ச்சியடையவும் வழிவகை செய்யும். வாஸ்துபடி மிக முக்கியமாக கடைப்பிடிக்கவேண்டிய ஆறு அடிப்படை விதிகள் உண்டு.

காலியாகவுள்ள ஒரு மனையில் அமைக்கப்படும் கட்டடம், சதுரம் அல்லது செவ்வகமாக இருத்தல் அவசியம். மனையின் தெற்கு மற்றும் மேற்குப் பகுதியைவிட, வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியில் அதிக அளவிலான காலியிடம் இருத்தல் அவசியம்.

மனையின் வடகிழக்குப் பகுதி பள்ளமாகவும் கனமில்லாமலும் இருக்க வேண்டும்; தென்மேற்குப் பகுதி உயரமாகவும் கனமாகவும் இருக்க வேண்டும். அதேபோல் தலைவாசல் கட்டாயம் உச்சத்தில்தான் இருக்க வேண்டும்.

வாஸ்து அடிப்படையில் ஒரு மனையைத் தேர்வு செய்வது எப்படி?

மனையை வாங்கும்போது அதன் திசையை அறிந்து வாங்குவது சிறந்தது. மனையின் திசையை, திசைக்காட்டி மூலம் அறிந்துகொள்ளலாம். கிழக்கு மற்றும் வடக்குப் பார்த்த மனையை வாங்குவது சிறந்தது. ஏனெனில், கிழக்கு மற்றும் வடக்குப் பார்த்த மனைகளில் வாஸ்துபடி கட்டடம் கட்டுவது சுலபமாக இருக்கும்.

இயற்கையாகவே ஓர் இடத்தின் வடகிழக்குப் பகுதி பள்ளமாகவும், தென்மேற்குப் பகுதி உயர்ந்தும் இருந்தால், அந்த மனை விசேஷமானது எனலாம். மேலும், மனையின் வடகிழக்குப் பகுதியில் இயற்கையாகவே ஏரி, குளம், பொதுக் கிணறு ஆகியவை இருந்தால் நல்லது.

மனையின் தென்மேற்குப் பகுதியில் குன்றுகள், தொலைபேசி கோபுரம், உயர்ந்த மரங்கள் போன்றவை இருந்தால் மிகவும் சிறப்பு. வீடு கட்டும் முயற்சியில் இறங்கும்போது, இப்படிப்பட்ட விதிகளையெல்லாம் கவனித்து அதற்கேற்ப மனை வாங்கி வீடு கட்டினால், நம் குடும்பமும் நாமும் மகிழ்வான வாழ்க்கை வாழலாம்.

- வாஸ்து நிபுணர் ஆண்டாள் பி.சொக்கலிங்கம்