குழந்தைக்கு ஜாதகம் எழுதும்போது முதலில் தினசுத்திப் பாடலுடன் தொடங்குவார்கள். அந்தப் பாடலில் இடம்பெறும் ‘பதவீ பூர்வ புண்ணியானாம்’ என்ற வரி, நமது பூர்வஜன்ம புண்ணியத்தைக் குறிக்கும். பூர்வ ஜன்மத்தில் அதிகம் புண்ணியம் செய்தவர்கள், இந்த ஜன்மத்தில் மிக உயர்ந்த பதவியைப் பெறுவார்கள்.

பூர்வஜென்மத்தில் நாம் புண்ணியம் செய்திருக்கிறோமா என்பதை அவரவர் ஜாதகத்தின் மூலம் அறியலாம். ஜாதக லக்னத்தில் இருந்து (லக்னமே 1-ம் இடம் ஆகும்) எண்ண வரும் 5-ம் இடம் பூர்வ புண்ணிய ஸ்தானம் ஆகும். அந்த வீட்டுக்கு அதிபதி பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதி ஆவார். பூர்வ புண்ணியத்துக்குக்காரகன் குரு.

ஆக, ஒருவரது ஜாதகத்தில் 5-ம் வீடும், 5-ம் வீட்டோனும், குருவும் பலம் பெற்றிருந்தால், அந்த ஜாதகர் பூர்வ ஜென்மத்தில் அதிகம் புண்ணியம் செய்து, அந்தப் புண்ணிய பலனை அனுபவிப்பதற்காக இந்த மண்ணுலகில் அவதரித்திருக்கிறார் என்று சொல்லலாம்.

அதேபோல் ஜாதகத்தில் தொழில் - உத்தியோக ஸ்தானமான 10-ம் இடமும் நல்லமுறையில் திகழ வேண்டும். இந்த இடத்துக்குரிய கிரகத்தின் (10-ம் வீட்டோனின்) தசை, புக்தி காலங்களில் பதவி உயர்வு கிடைக்கும்.

மேலும், 10-ம் வீட்டுக்கு நேர் 7-ம் வீடான 4-ம் இடத்தில், 4-ம் வீட்டோன் அமர்ந்திருக்க, அவருடன் சுபக் கிரகங்கள் கூடியிருந்தால்... 4-ம் வீட்டோனின் தசை, புக்திக் காலங்களில் பதவி உயர்வு கிடைக்கும்.

4-ம் வீடு நாம் அமரும் நாற்காலியைக் குறிக்கும். அந்தப் பதவி அல்லது வேலை மிகச் சிறப்பாக அமைய, 4-ம் இடம் வலுத்திருக்க வேண்டும். 4-ம் வீட்டோனும், 10-ம் வீட்டோனும் இணைந்து 4-ல் அமர்ந்து, 10-ம் இடத்தைப் பார்க்கும் நிலை அமையப் பெற்ற ஜாதகருக்கு உயர் பதவி கிடைப்பதுடன், பதவிச் சிறப்பும் உண்டாகும். குறிப்பிட்ட ஜாதகரால் அந்தப் பதவிக்கே சிறப்பு உண்டாகும்.

பதவியைப் பெறுவதற்கு உரிய வழிபாடுகள்...

மேஷ, ரிஷப லக்னத்தில் பிறந்தவர்கள் சனி பகவான், சாஸ்தா மற்றும் ஆஞ்சநேயருக்கு ஆராதனைகள் செய்து வழிபடுவது நல்லது.

மிதுன, மீன லக்னத்தில் பிறந்தவர்கள் குருவுக்கும் ஸ்ரீதட்சிணாமூர்த்திக்கும் அர்ச்சனை, ஆராதனைகள் செய்வதன் மூலம் உயர் பதவி கிடைக்கும்.

கடக, கும்ப லக்னக்காரர்கள் முருகப் பெருமானையும் செவ்வாயையும் தொடர்ந்து முழு நம்பிக்கையுடன் வழிபடுவதன் மூலம் பதவி யோகம் ஸித்திக்கும்.

சிம்ம லக்னக்காரர்கள் மகாலட்சுமியையும் சுக்கிரனையும் வழிபடுவதன் மூலம் பதவி யோகம் கிடைக்கப் பெறலாம். கன்னியா, தனுசு லக்னக்காரர்கள் புதனையும் திருமாலையும் வழிபட வேண்டும். துலாம், மகர லக்னக்காரர்கள் சந்திரனையும் பராசக்தியையும், விருச்சிக லக்னக்காரர்கள் சூரியனையும் ருத்திரனையும் வழிபடுவதன் மூலம் பதவி யோகம் ஸித்திக்கும்.

- ராம் திலக்