Published:Updated:

ராசிபலன்

ராசி பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
ராசி பலன்கள்

பிப்ரவரி 22 முதல் மார்ச் 7-ம் தேதி வரை

ராசிபலன்

பிப்ரவரி 22 முதல் மார்ச் 7-ம் தேதி வரை

Published:Updated:
ராசி பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
ராசி பலன்கள்

மேஷம்

சூரியன் லாப வீட்டில் வலுவாக நிற்பதால் பணவரவு உண்டு. மேல்மட்ட அரசியல்வாதிகளின் தொடர்பு கிடைக்கும். சொத்துப் பிரச்னைக்கு சுமூகத் தீர்வு காண்பது நல்லது. வீட்டைக் கட்டி முடிக்க எதிர்பார்த்த வங்கிக் கடன் உதவி கிட்டும். பழைய வழக்கில் வெற்றி உண்டு. சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் செல்வாக்கு கூடும். பூர்வீகச் சொத்துப் பிரச்னை தீரும். வாழ்க்கைத் துணைவரின் உடல் நலம் சீராகும்.

ராசிபலன்கள்
ராசிபலன்கள்

புதன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், பழைய கடனில் ஒரு பகுதியைப் பைசல் செய்வீர்கள். பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். ராசிக்கு 2-ல் ராகுவும், 8-ல் கேதுவும் தொடர்வதால் எதிலும் பிடிப்பில்லாமல் போகும். சிறு விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. வியாபாரத்தில் வேலையாட் கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில், பொறுப்புகள் அதிகரிக்கும். சக ஊழியர்களால் மறைமுகத் தொந்தரவு வந்து நீங்கும். கலைத்துறையினர் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவார்கள்.

தொலைநோக்குச் சிந்தனையால் இலக்கை எட்டிப் பிடிக்கும் நேரம் இது.

ரிஷபம்

ராசிநாதன் சுக்கிரன் சாதகமாக இருப்பதால் மாறுபட்ட அணுகுமுறையால் சாதிப்பீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். புதிதாக வாகனம் வாங்குவீர்கள். சிலர் வீடு மாற வேண்டி வரும். பால்ய நண்பர்கள் தேடி வந்து உதவுவார்கள். பூர்வீகச் சொத்தை சீர் செய்வீர்கள்.

ரிஷபம்
ரிஷபம்

சூரியனும், புதனும் சாதகமாக இருப்பதால் புதுப் பதவிக்குத் தேர்ந்தெடுக் கப் படுவீர்கள். கல்யாண முயற்சிகள் கைகூடும். வெளியூர்ப் பயணங்களால் ஆதாயம் உண்டு. அரசாங்க விஷயங்கள் சாதகமாக முடியும். ராசிக்குள் ராகுவும் 7-ல் கேதுவும் நிற்பதால் அவ்வப்போது உணர்ச்சிவசப்படுவீர்கள். யாரை நம்புவது என்கிற மனக்குழப்பத்திற்கு ஆளாவீர்கள். சில நேரங்களில் விரக்தியாகப் பேசுவீர்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் உங்கள் திறமையை மூத்த அதிகாரி பரிசோதிப்பார். கலைத்துறையினருக்குப் புது வாய்ப்புகள் கிட்டும்.

நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும் நேரம் காலம் இது.

மிதுனம்

பூர்வபுண்ணியாதிபதி சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால், சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். சேமிக்கத் தொடங்குவீர்கள். சிலர் வீட்டை இடித்துக் கட்டுவீர்கள். புதிதாக வீட்டு உபயோகப்பொருள்கள் வாங்குவீர்கள். சூரியன் 9 - ம் வீட்டில் நிற்பதால் தந்தையுடன் கருத்து மோதல்கள், அவருக்கு உடல் நிலை பாதிப்பு வந்து போகும்.

மிதுனம்
மிதுனம்

ராசிநாதன் புதன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் பூர்வீகச் சொத்து கைக்கு வரும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். உறவினர்கள் உங்களின் சகிப்புத்தன்மையைப் பாராட்டுவார்கள். புது நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள். கேது 6 - ல் நிற்பதால் எதிர்ப்புகள் விலகும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். புகழ் பெற்ற நிறுவனங்களுடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். பழைய பங்குதாரரை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் மனம் விட்டுப் பேசுவார்கள். சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். கலைத்துறையினர் கௌரவிக்கப்படுவார்கள்.

வெற்றிப் பயணம் தொடரும் நேரம் காலம் இது.

கடகம்

சுக்கிரன் 26-ம் தேதி முதல் 7-ம் வீட்டில் நுழைவதால் புத்துணர்ச்சி பெருகும். கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். சூரியன் 8 - ல் மறைந்திருப்பதால் அரசுக் காரியங்கள் விரைந்து முடியும். வாழ்க்கைத் துணைவர் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

கடகம்
கடகம்

புதன் சாதகமாக இருப்பதால் உறவினர் சிலரின் சுயரூபத்தைக் கண்டறிவீர்கள். ராகு லாப வீட்டில் நிற்பதால் தொட்டது துலங்கும். எடுத்த காரியங்கள் வெற்றியடையும். வியாபாரத்தில் ஆழம் தெரியாமல் காலை விடாதீர்கள். வேலையாட்கள், பங்குதாரர்கள் உதவுவார்கள். உத்தியோகத் தில் சின்னச் சின்ன இடர்பாடுகளைச் சமாளிக்க வேண்டி வரும். எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும். கலைத்துறையினரே! அலட்சியப்படுத்திய நிறுவனமே உங்களை அழைத்துப் பேசும்.

விட்டதைப் பிடிக்கும் நேரம் இது.

சிம்மம்

புதன் 1-ம் தேதி வரை 6-ல் மறைந்திருப்பதால் சோர்வு, களைப்பு, நண்பர்களுடன் வாக்குவாதம் வந்து போகும். குருபகவான் வலுவாக இருப்பதால் வீட்டில் தள்ளிப்போன சுப காரியங்கள் ஏற்பாடாகும். 26-ம் தேதி முதல் சுக்கிரன் 6-ல் மறைவதால், அத்தியாவசியச் செலவுகள் அதிகரிக்கும். ராசிநாதன் சூரியன் 7 -ல் நிற்பதால் வேலைச்சுமை, வாழ்க்கைத் துணைக்கு உடல்நலக் கோளாறுகள் வந்து போகும். பழைய கசப்பான சம்பவங்களை நினைத்து அவ்வப்போது வருந்துவீர்கள்.

சிம்மம்
சிம்மம்

4 - ல் கேது நிற்பதால் தாய் வழி உறவினர்களுடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். வியாபாரத்தில் தரமான சரக்குகளை மொத்த விலையில் வாங்க முடிவு செய்வீர்கள். வேலையாட்கள், பங்குதாரர்களின் ஆதரவு பெருகும். அலுவலகத்தை விரிவுப்படுத்துவீர்கள். மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பார்கள். கலைத்துறையினரை, மூத்த கலைஞர்கள் பாராட்டுவார்கள்.

வசதி-வாய்ப்புகள் பெருகும் தருணம் இது.

கன்னி


ராசிநாதன் புதனும், யோகாதிபதி சுக்கிரனும் சாதகமான வீடுகளில் செல்வதால் மாறுபட்ட அணுகுமுறையால் பழைய சிக்கல்களுக்குத் தீர்வு காண்பீர்கள். பணப் புழக்கம் அதிகரிக்கும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். பூர்வீகச் சொத்து கைக்கு வரும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். தூரத்துச் சொந்தங்களால் ஆதாயம் உண்டு.

கன்னி
கன்னி

சூரியன் 6-ல் வலுவாக அமர்ந்திருப்பதால் அதிகாரப் பதவியில் இருப்பவர் உதவுவார். அரசால் ஆதாயம் உண்டு. வீடு கட்ட எதிர்பார்த்த பணம் வரும். கட்டட வரைபடமும் அப்ரூவலாகும். தந்தைவழியில் ஒத்தாசையாக இருப்பார்கள். அயல்நாட்டுப் பயணம் சாதகமாக அமையும். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் சம்பாதிப்பீர்கள். வேலையாட்கள் கொஞ்சம் முரண்டு பிடிக்கத்தான் செய்வார்கள். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள். கலைத் துறையினரின் திறமையை வெளிப்படுத்தத் தகுந்த வாய்ப்பு வரும்.

முன்னேற்றப் பாதையில் நடைபோடும் நேரம் இது.

துலாம்

புதன் சாதகமான வீடுகளில் நிற்பதால் உறவினர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். ராசிநாதன் சுக்கிரன் வலுவாக நிற்பதால் சோர்ந்து கிடந்த நீங்கள் சுறுசுறுப்படைவீர்கள். முடிவுகள் எடுப்பதில் இருந்த தயக்கம் நீங்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். தினந்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். வீட்டைக் கட்டி முடிக்க வங்கிக் கடன் கிடைக்கும்

துலாம்
துலாம்

சூரியன் 5 - ல் நிற்பதால் பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். கர்ப்பிணிகள் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. ராகுவும், கேதுவும் சரியில்லாததால் குடும்பத்தில் செலவுகள் அதிகமாகும். பிரச்னைகளும் வந்து போகும். வியாபாரத்தில் சில மாற்றங்களைச் செய்வதன் மூலம் லாபம் அடைவீர்கள். பழைய வாடிக்கையாளர்களும், பங்குதாரர்களும் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் அலுவலக ரகசியங்களை மூத்த அதிகாரி உங்களிடம் பகிர்ந்து கொள்வார். கலைத்துறையினர் வேற்று மொழி வாய்ப்புகளால் புகழடைவார்கள்.

சவால்களைச் சமாளித்து சாதிக்க வேண்டிய நேரம் இது.

விருச்சிகம்

புதன் சாதகமாக இருப்பதால் மூளை பலத்தால் முன்னேறுவீர்கள். சுக்கிரன் சாதகமாக இருப்பதால் மனைவி வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வாகனத்தைச் சீர்செய்வீர்கள். வீட்டை அழகு படுத்துவீர்கள். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். 4 -ல் சூரியன் வலுவாக நிற்பதால் வீடு, மனை வாங்குவது, விற்பது சாதகமாக அமையும். புது வேலையும் கிடைக்கும்.

விருச்சிகம்
விருச்சிகம்

ராகுவும், கேதுவும் சரியில்லாததால் உடல் நலத்தில் கவனம் தேவை. கணவன்-மனைவிக்குள் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. வியாபாரத்தில் சில தந்திரங்களைக் கற்றுக் கொள்வீர்கள். வேலை ஆட்கள், வாடிக்கையாளர்களுடன் கனிவாகப் பழகுங்கள். உத்தியோகத் தில் வளைந்துகொடுத்துப் போகவும். சக ஊழியர்கள் உங்களைக் குறை கூறுவர். கலைத்துறையினர் மூத்த கலைஞர்களின் நட்பைப் பெறுவார்கள்.

கடின உழைப்பால் உயரும் காலம் இது.

தனுசு

புதன் சாதகமாக இருப்பதால் பணவரவு அதிகரிக்கும். உறவினர்கள் சிலர் உங்களின் அதிரடியான வளர்ச்சியைக் கண்டு பொறாமைப் படுவார்கள். அவர்களிடம் அளவாகப் பழகுவது நல்லது. சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் ஆடை, ஆபரணம் சேரும். வெளியூர்ப் பயணங்களால் திடீர் திருப்பம் உண்டாகும்.

தனுசு
தனுசு

சூரியன் 3 - ல் வலுவாக அமர்ந்திருப்பதால் சவால்களில் வெற்றி பெறுவீர்கள். அரசியலில் செல்வாக்கு கூடும். மகளின் திருமணத்தைச் சிறப்பாக நடத்துவீர்கள். மகனுக்கு உயர்கல்வி, உத்தியோகம் நல்ல விதத்தில் அமையும். பிதுர்வழிச் சொத்து கைக்கு வரும். வழக்கு சாதகமாகும். வியாபாரத்தில் பெரிய நிறுவனங்களுடன் புது ஒப்பந்தம் செய்வதன் மூலம் லாபம் உண்டு. உத்தியோகத்தில் நற்பெயர் எடுப்பீர்கள். கலைத்துறையினருக்கு அதிரடி மாற்றங்கள் உண்டு.

தொட்டதெல்லாம் துலங்கும் நேரம் இது.

மகரம்

புதன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், மனதில் தெளிவு பிறக்கும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். குடும்பத்தில் ஓரளவு நிம்மதி உண்டு. பழைய வீட்டை நல்ல விலைக்கு விற்றுப் புது இடம் வாங்குவீர்கள். நண்பர்களால் ஆதாயம் அடைவீர்கள். உதவிகள் தக்க தருணத்தில் கிடைக்கும். சுக்கிரன் 26-ம் தேதி முதல் ராசிக்குள் நுழைவதால் உடல் ஆரோக்கியம் சீராகும். குழந்தை பாக்கியம் உண்டா கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்திகள் வரும்.

மகரம்
மகரம்

சூரியன் ராசிக்கு 2-ல் நிற்பதால் கண், காது வலி வந்து நீங்கும். அரசியல்வாதிகள் வாக்குறுதியை நிறைவேற்றப் போராட வேண்டி வரும். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிடவேண்டாம். புதியவர்களை நம்பி பெரிய முதலீடுகள் செய்யாதீர்கள். உத்தியோகத்தில் பதற்றம் தவிர்க்கவும். கலைத்துறையினரின் நீண்ட நாள் கனவு நனவாகும்.

தடைப்பட்ட காரியங்கள் உடனுக்குடன் முடியும் நேரம் இது.

கும்பம்

சுக்ரன் சாதகமாக இருப்பதால் இனி எதையும் திட்டமிட்டுச் செய்வீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். வராமலிருந்த பணம் கைக்கு வரும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். வாழ்க்கத் துணை வர் வழியில் நல்ல செய்தி உண்டு. விருந்தினர் வருகை அதிகரிக்கும்.

கும்பம்
கும்பம்

புதன் சாதகமான வீடுகளில் செல்வதால், சவாலான விஷயங்களை சாமர்த்தியமாகப் பேசி முடிப்பீர்கள். நட்பு வட்டம் விரியும். ராசிக்குள் சூரியன் நிற்பதால் உடல் உஷ்ணத்தால் வேனல் கட்டி, காரிய தாமதம், முன்கோபம் வந்து செல்லும். அரசுக் காரியங்கள் இழுபறியாகும். தாயாரின் உடல் நலம் பாதிக்கும். வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். பங்குதாரர்களுடன் மோதல்கள் வரக்கூடும். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து விலகும். சக ஊழியர்கள் உதவுவார்கள். கலைத்துறையினரின் கற்பனைத் திறன் வளரும்.

மாறுபட்ட அணுகுமுறையால் வெற்றி காணும் வேளை இது!

மீனம்

சுக்கிரனும், புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால் தடைகளைத் தாண்டி முன்னேறுவீர்கள். பணம் வரும். வி.ஐ.பிகளின் தொடர்பு கிடைக் கும். குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகளின் பொறுப்பு உணர்வு அதிகமாகும். உறவினர், நட்பு வகையில் ஆதாயம் உண்டு. பூர்வீகச் சொத்துப் பிரச்னைக்கு சுமுகத் தீர்வு காண்பீர்கள்.

மீனம்
மீனம்

ராசிக்கு 12 - ல் சூரியன் அமர்ந்திருப்பதால் வீண் டென்ஷன், திடீர் பயணம், தூக்கமின்மை வந்து போகும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். குரு 12 - ல் நிற்பதால் முன்பின் அறியாதவர்களிடம் குடும்ப அந்தரங்க விஷயங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டாம். வேலையாட்களால் வியாபாரத்தின் தரம் உயரும். பங்குதாரர்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்களை நம்பிச் சில பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். கலைத்துறையினர் புதுமையான படைப்புகளால் கவனம் ஈர்ப்பார்கள்.

எதிர்பார்ப்புகளும் விருப்பங்களும் நிறைவேறும் காலம் இது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism