Published:Updated:

ராசிபலன்

ராசிபலன்
பிரீமியம் ஸ்டோரி
ராசிபலன்

ஜனவரி 12 முதல் 25 வரை

ராசிபலன்

ஜனவரி 12 முதல் 25 வரை

Published:Updated:
ராசிபலன்
பிரீமியம் ஸ்டோரி
ராசிபலன்

மேஷம்

அசுவினி, பரணி கிருத்திகை 1-ம் பாதம்

ராசிபலன்

புதன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். நட்பு வட்டம் விரியும். வெளியூர் பயணங்களால் புது அனுபவம் உண்டாகும். 14 - ம் தேதி முதல் சூரியனும் 10-ல் அமர்வதால் தந்தையின் உடல் நலம் சீராகும். சிலருக்குப் புது பதவி, பொறுப்பு தேடி வரும். புது வேலைக் கிடைக்கும். என்றாலும் வேலைச்சுமை இருந்துகொண்டேயிருக்கும்.

செவ்வாய் சாதகமாக இருப்பதால் பழைய வீட்டை நல்ல விலைக்கு விற்றுப் புது வீடு வாங்குவீர்கள். சுக்கிரன் 9-ல் நிற்பதால் ஷேர் மூலம் பணம் வரும். குழந்தை பாக்கியம் உண்டாகும். தந்தைவழியில் மகிழ்ச்சி தங்கும். தந்தைவழிச் சொத்துகள் வந்து சேரும். வியாபாரத்தில் புது முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் பணிகளைப் போராடி முடிக்க வேண்டி வரும். கலைத்துறையினருக்குத் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும்.

எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறும் வேளையிது!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ரிஷபம்

கிருத்திகை 2,3,4-ம் பாதம், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ம் பாதம்

ராசிபலன்

ராசிநாதன் சுக்கிரன் 8 - ல் மறைந்து நிற்பதால் உதாசீனப்படுத்தியவர்கள் மதிப்பார்கள். தடைப்பட்ட வேலைகள் முடியும். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்து உங்களை மாற்றிக் கொள்வீர்கள். புதன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் கைமாற்றாக வாங்கிய பணத்தைத் தந்து முடிப்பீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். 14-ம் தேதி முதல் 9-ல் சூரியன் நுழைவதால் தந்தையின் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.

அரசு காரியங்கள் இழுபறியாகும். 12-ல் நிற்கும் செவ்வாயால் சகோதர வகையில் அலைச்சல்கள் வந்து போகும். வியாபாரத்தில் புது யுக்திகளால் தேங்கிக் கிடந்த சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பார்கள். கலைத்துறையினர் பொது நிகழ்ச்சிகளில் தலைமை தாங்கும் அளவிற்குப் பிரபலமாவீர்கள்.

எதையும் சாதித்துக் காட்டும் வேளையிது!

மிதுனம்

மிருகசீரிடம் 3,4-ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1, 2,3-ம் பாதம்

ராசிபலன்

ராசிநாதன் புதன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் குழப்பம் நீங்கும். தைரியம் பிறக்கும். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். உறவினர்கள், நண்பர்களுடன் இருந்த மோதல்கள் விலகும். சுக்கிரன் 7-ல் இருப்பதால் வாழ்க்கைத்துணைவழியில் அனுகூலம் உண்டு. திருமணம் கூடி வரும். சூரியன் 14-ம் தேதி முதல் 8-ல் மறைவதால் கௌரவப் பதவிகள் கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டு.

செவ்வாய் லாப வீட்டில் ஆட்சி பெற்று நிற்பதால் கடன் பிரச்னைகள் கொஞ்சம் தீரும். சகோதரர்கள் உங்களுக்குப் பக்கபலமாக இருப்பார்கள். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. புதுக் கிளை தொடங்குவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்து கொள்வீர்கள். சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். கலைத்துறையினருக்குத் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும்.

தொட்டதெல்லாம் துலங்கும் வேளையிது!

கடகம்

புனர்பூசம் 4-ம் பாதம், பூசம், ஆயில்யம்

ராசிபலன்

சூரியனும், புதனும் சாதகமான நட்சத்திரங்களில் ஓரளவு செல்வதால் வி.ஐ.பிகளின் ஆதரவால் சில காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வழக்கு சாதகமாகும். குடும்பத்தில் நிம்மதி கிட்டும். பணம் வந்தாலும் சேமிக்க முடியாதபடி செலவுகள் துரத்தும். 6-ல் சுக்கிரன் மறைந்திருப்பதால் வாகனத்தில் செல்லும்போது கவனம், வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் அக்கறை ஆகியன அவசியம். சிலர் வீடு மாற வேண்டிய கட்டாயம் வரும்.

செவ்வாய் 10-ல் நீடிப்பதால் உங்களின் ஆளுமைத்திறன் அதிகரிக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. வியாபாரத்தில் பழைய பாக்கிகளைப் போராடி வசூலிப்பீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் உங்களை மதிப்பார்கள். கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

பொறுப்புகள் அதிகரிக்கும் வேளையிது!

சிம்மம்

மகம், பூரம், உத்திரம் 1-ம் பாதம்

ராசிபலன்

சுக்கிரன் 5-ல் அமர்ந்திருப்பதால் புது முயற்சிகள் யாவும் வெற்றியடையும். குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். குழந்தை பாக்கியம் கிடைக்கும். பூர்வீகச் சொத்து சிக்கல் தீரும். உறவினர்கள், நண்பர்களின் ஆதரவு பெருகும். 14-ம் தேதி முதல் ராசிநாதன் சூரியன் 6-ல் அமர்வதால் திடீர் யோகம், பணவரவு உண்டாகும். வழக்கில் வெற்றி உண்டு. பிள்ளைகளால் இருந்த பிரச்னைகள் நீங்கும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். திருமணம், கிரகப் பிரவேசம் முன்னின்று நடத்துவீர்கள். வேலை கிடைக்கும்.

செவ்வாய் 9-ம் வீட்டில் நிற்பதால் நேர்மறை எண்ணங்கள் தோன்றும். புதன் 6-ல் நிற்பதால் உறவினர்கள், நண்பர்களுடன் மோதல் போக்கு வந்து போகும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களுக்காக மேலதிகாரியிடம் பரிந்து பேசுவீர்கள். கலைத்துறையினர் வேற்றுமொழி வாய்ப்புகளால் புகழடைவார்கள்.

அச்சம் விலகி அதிகாரம் பெருகும் வேளையிது!

கன்னி

உத்திரம் 2,3,4-ம் பாதம், அஸ்தம், சித்திரை 1,2-ம் பாதம்

ராசிபலன்

சுக்கிரன் சாதகமாக இருப்பதால் எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். விருந்தினர்களின் வருகையால் வீடு களைகட்டும். 14-ம் தேதி முதல் சூரியன் 5-ல் நுழைவதால் பிள்ளைகளால் அலைச்சல், வாக்குவாதம் வந்து போகும். உறவினர்கள் சிலர் பணம் கேட்டுத் தொந்தரவு தருவார்கள். ஆனால் புதன் 5-ல் நிற்பதால் உறவினர்கள், நண்பர்களால் அனுகூலமான சூழல் உருவாகும். பிள்ளைகளின் நலனில் அதிகம் அக்கறை காட்டுவீர்கள்.

8-ல் செவ்வாய் நிற்பதால் மனஇறுக்கம், முன்கோபம் வந்து நீங்கும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களைக் கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரக்கூடும். கலைத்துறையினரின் படைப்புகளுக்கு வேறொருவர் உரிமை கொண்டாடுவார்.

தன்னடக்கத்துடன் செயல்படும் வேளையிது!

துலாம்

சித்திரை 3,4-ம் பாதம், சுவாதி, விசாகம் 1,2,3-ம் பாதம்

ராசிபலன்

சூரியன் சாதகமான வீடுகளில் செல்வதால் அரசியலில் செல்வாக்குக் கூடும். 3-ல் சுக்கிரன் அமர்ந்திருப்பதால் பொன், பொருள், ஆபரணச் சேர்க்கை உண்டு. பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். திருமணம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். புதனும் சாதகமாக இருப்பதால் தொட்ட காரியம் துலங்கும். கனிவான பேச்சால் காரியம் சாதிப்பீர்கள். கணவன்-மனைவிக்குள் அந்நியோன்யம் பிறக்கும். செவ்வாய் 7-ல் ஆட்சிப் பெற்றிருப்பதால் புதிதாக சொத்து, நகை வாங்குவீர்கள். சகோதர வகையில் அனுகூலம் உண்டு.

வியாபாரத்தில் பற்று வரவு உயரும். புது வேலையாள்கள், பங்குதாரர்கள் அமைவார்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களைச் சொல்லித் தருவார். மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். கலைத்துறையினர் சம்பள விஷயத்தில் கறாராக இருப்பது நல்லது.

வெற்றிக்கு வித்திடும் வேளையிது!

விருச்சிகம்

விசாகம் 4-ம் பாதம், அனுஷம், கேட்டை

ராசிபலன்

சூரியன் 14-ம் தேதி முதல் 3-ல் அமர்வதால் எதிலும் வெற்றி பெறுவீர்கள். பணப்புழக்கம், செல்வாக்கு உயரும். பதவிகள் தேடி வரும். குடும்பத்தில் அமைதி நிலவும். திருமணம் கூடி வரும். தாயாரின் உடல் நலம் சீராகும். புதன் சாதகமாக இருப்பதால் திடீர் பயணங்கள் உண்டு. புது நட்பு மலரும். ஆடம்பரச் செலவுகளைக் குறைக்கப்பாருங்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். 2-ல் சுக்கிரன் நிற்பதால் கனிவாகப் பேசி சாதிப்பீர்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும்.

ஆடை, ஆபரணம் சேரும். 6-ல் செவ்வாய் நிற்பதால் வீடு, மனை வாங்குவது விற்பது சுமுகமாகும். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளைச் சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களைப் பகைத்துக் கொள்ளாதீர்கள். கலைத்துறையினர் மூத்த கலைஞர்களின் நட்பைப் பெறுவீர்கள்.

கோபத்தைக் குறைக்கும் வேளையிது!

தனுசு

மூலம், பூராடம், உத்திராடம் 1-ம் பாதம்

ராசிபலன்

சுக்கிரன் ராசிக்குள் நிற்பதால் மனத்தெளிவு, உற்சாகம் பிறக்கும். கணவன்-மனைவிக்குள் அந்நியோன்யம் பிறக்கும். வீடு கட்ட, வாங்க வங்கிக் கடன் உதவி கிடைக்கும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். 14-ம் தேதி முதல் உங்கள் ராசியை விட்டு விலகி சூரியன் 2-ல் நுழைவதால் உடல் வலி, முன்கோபம் விலகும். பேச்சில் நிதானம் தேவை.

செவ்வாய் 5-ம் வீட்டில் நிற்பதால் பிள்ளைகளால் மனக்குழப்பம் வந்து நீங்கும். உடன்பிறந்தவர்களுடன் விவாதம் வந்து போகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். வேலையாள்கள், பங்குதாரர்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். கலைத்துறையினருக்குப் புது வாய்ப்பு கிடைத்து அதிகம் சம்பாதிப்பார்கள்.

தலை நிமிர்ந்து நடக்கும் வேளையிது!

மகரம்

உத்திராடம் 2,3,4-ம் பாதம், திருவோணம், அவிட்டம் 1,2-ம் பாதம்

ராசிபலன்

ராசிக்குள் புதன் அமர்வதால் பணப்பற்றாக்குறை நீங்கும். உறவினர்கள், நண்பர்களால் ஆதாயம் உண்டு. நீண்ட நாள்களாகப் பார்க்க நினைத்தவரைச் சந்திப்பீர்கள். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். சுக்கிரன் 12-ல் மறைந்திருப்பதால் திடீர் யோகம், ஆடை, ஆபரணச் சேர்க்கை எல்லாம் உண்டு. சூரியன் 14-ம் தேதி முதல் ராசிக்குள் நுழைவதால் தலைச்சுற்றல், பெற்றோருடன் வாக்குவாதம் வந்து செல்லும்.

செவ்வாய் சாதகமாக இருப்பதால் புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். தள்ளிப் போன வழக்கில் தீர்ப்பு சாதகமாக வரும். வியாபாரத்தில் புது முதலீடு செய்வது பற்றி யோசிப்பீர்கள். வேலையாள்கள், பங்குதாரர்களுக்கு உதவுவீர்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் உங்களின் கடின உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். கலைத்துறையினரின் படைப்புத் திறன் வளரும்.

போராடி வெற்றி பெறும் வேளையிது!

கும்பம்

அவிட்டம் 3,4-ம் பாதம், சதயம், பூரட்டாதி 1,2,3-ம் பாதம்

ராசிபலன்

சூரியன், புதனும் ஓரளவு சாதகமான வீடுகளில் செல்வதால் எதிர்பார்த்த பணம் வரும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். திருமணம் கூடி வரும். சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். சுக்கிரன் லாப வீட்டில் நிற்பதால் உங்கள் செயலில் வேகம் கூடும். எதிர்பாராத பணவரவு உண்டு. குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். விரும்பிய பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள்.

செவ்வாய் 3-ம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்ந்திருப்பதால் புதுத் தெம்பு பிறக்கும். நீண்ட நாள்களாகத் தள்ளிப் போன காரியங்கள் முடியும். பேச்சிலிருந்த தடுமாற்றம் நீங்கும். வியாபாரத்தில் சில தந்திரங்களைக் கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்களின் பரந்த மனதை மூத்த அதிகாரி புரிந்து கொண்டு உதவுவார். கலைத்துறையினருக்கு வெகுநாள்களாக தடைப்பட்ட வாய்ப்பு இனி கூடி வரும்.

வெளிச்சத்திற்கு வரும் வேளையிது!

மீனம்

பூரட்டாதி 4-ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி

ராசிபலன்

சூரியனும், புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால் புதுத் திட்டங்கள் நிறைவேறும். பெரிய பதவிகள், புது வேலை கிடைக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். சொந்த-பந்தங்களின் சுய ரூபத்தைத் தெரிந்து கொண்டு செயல்படுவீர்கள். வெளிவட்டாரத்தில் மரியாதை, செல்வாக்கு கூடும். சுக்கிரன் வலுவடைந்திருப்பதால் உங்களின் நிர்வாகத் திறன், ஆளுமைத் திறன் அதிகரிக்கும்.

செவ்வாய் 2-ல் ஆட்சிப் பெற்றிருப்பதால் புதிய முயற்சிகள் வெற்றியடையும். புது முதலீடு செய்து வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் சொந்த விஷயங்களை உங்களிடம் சொல்லி ஆறுதல் அடைவார்கள். கலைத்துறையினர் கௌரவிக்கப்படுவார்கள்.

கடின உழைப்பால் முதலிடம் பிடிக்கும் வேளையிது!