Published:Updated:

ராசிபலன்

ராசிபலன்
News
ராசிபலன்

பிப்ரவரி 9 முதல் 22-ம் தேதி வரை

மேஷம்:

மேஷம்
மேஷம்

சூரியன் சாதகமான வீடுகளில் செல்வதால் பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டு. மகளுக்கு நல்ல வரன் அமையும். புது வீடு புகுவீர்கள். தடைப்பட்ட காரியங்கள் முடியும். பாகப்பரிவினை சுமூகமாக முடியும். புதனும் சுக்கிரனும் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள்.

பணப் பற்றாக்குறையைச் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். 17-ம் தேதி வரை செவ்வாய் ராசிக்குள் நிற்பதால் டென்ஷன், தலைச்சுற்றல் வந்து போகும். 18-ம் தேதி முதல் உடல் நலம் சீராகும். ஆனால் பேச்சில் நிதானம் தேவை. தாய்வழி சொத்துகளை அடைவதிலிருந்த சிக்கல்கள் தீரும். வழக்கு சாதகமாகும். வியாபாரத்தில் புது முதலீடு செய்வது பற்றி ஆலோசிப்பீர்கள். பழைய பாக்கிகளை வசூலிப்பீர்கள். உத்தியோகத்தில் அலுவலகச் சூழ்நிலை அமைதி தரும். கலைத்துறையினரின் நீண்ட நாள் கனவு நனவாகும்.

வெற்றிப் பாதையில் பயணிக்கும் வேளை இது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ரிஷபம்:
ரிஷபம்:

ரிஷபம்:

சூரியன் 13-ம் தேதி முதல் 10-ல் நுழைவதால் புது வேலை அமையும். அரசாங்க அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். பிதுர்வழிச் சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். புதன் வலுவாக இருப்பதால் அனுபவ அறிவால் சாதிப்பீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. பிரபலங்கள் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும்.

சுக்கிரன் 9-ம் வீட்டில் சாதகமாக நிற்பதால் மனைவிவழி உறவினர்கள் மதிப்பார்கள். செவ்வாய் சாதகமாக இல்லாததால் வயிற்றுவலி, காய்ச்சல், முன்கோபம், டென்ஷன் வந்து போகும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். வழக்கில் வழக்கறிஞரின் ஆலோசனையின்றி எந்த முடிவுகளும் எடுக்காதீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடித்து வெற்றி பெறுவீர்கள். கலைத்துறையினர் புகழ் பெறுவார்கள்; பிரபலமாவார்கள்.

அதிகாரப் பதவி வகிப்பவர்களால் ஆதரிக்கப்படும் காலம் இது.

மிதுனம்:
மிதுனம்:

மிதுனம்:

ராசிநாதனும் சுக்கிரனும் சாதகமான வீடுகளில் செல்வதால் திருமணப் பேச்சு வார்த்தை கூடி வரும். பிள்ளைகளின் பொறுப்பு உணர்வு அதிகமாகும். சூரியனின் போக்கு சுமாராக இருப்பதால் யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். 17 - ம் தேதி வரை செவ்வாய் லாப வீட்டில் நிற்பதால் வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். புதிதாக வீடு கட்டுவீர்கள்.

பிப்ரவரி 18-ம் தேதி முதல் செவ்வாய் 12 - ல் மறைவதால் வீண் விரயம், செலவு, திடீர்ப் பயணம், சகோதர வகையில் சங்கடங்கள் வந்து போகும். அரசுக் காரியங்கள் இழுபறியாகும். வியாபாரம் சற்று மந்தமாகும். பழைய வேலையாள்கள் மீண்டும் பணியில் வந்து சேர்வார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களைவிட அதிகாரிகளிடம் செல்வாக்கு கூடும். சம்பளப் பாக்கி கைக்கு வரும். கலைத்துறையினர், எதிர்பார்த்த புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்; முன்னேற்றத்துக்கான வழிகள் புலப்படும்.

பழைய நண்பர்களால் மறுமலர்ச்சி உண்டாகும் நேரம் இது.

கடகம்
கடகம்

கடகம்:

சூரியன் ஓரளவு சாதகமாக இருப்பதால் கோபம் குறையும். புது முயற்சிகள் முடியும். பணத்தட்டுபாடு விலகும். மனைவியின் ஆரோக்கியப் பிரச்னைகள் குறையும். அரசுக் காரியங்கள் விரைந்து முடியும். அவ்வப்போது கடனை நினைத்துக் குழம்புவீர்கள். சுக்கிரனும் புதனும் 7 - ல் நிற்பதால் தைரியம் கூடும். மனோபலம் அதிகரிக்கும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். அடகிலிருந்த நகையை மீட்பீர்கள். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும்.

உறவினர்கள் உதவுவர். செவ்வாய் சாதகமான வீடுகளில் செல்வதால் செல்வாக்கு கூடும். மகனுக்கு வெளிநாட்டுத் தொடர்புடைய நிறுவனத்தில் புது வேலை அமையும். புது வீடு கட்டிக் குடி புகுவீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் இருந்தாலும் லாபம் குறையாது. பெரிய முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். கலைத்துறையினர், கிசுகிசுத் தொந்தரவுகள், வதந்திகளைக் கண்டு அஞ்சமாட்டார்கள்.

வேலை மாற்றம், இடமாற்றம் ஏற்படும் தருணம் இது.

சிம்மம்
சிம்மம்

சிம்மம்:

ங்கள் ராசிநாதன் சூரியன் சாதகமான நட்சத்திரத்தில் செல்வதால் தைரியமாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உங்கள் ரசனைக்கேற்ப வீடு, மனை அமையும். கல்யாணப் பேச்சுவார்த்தை கூடி வரும். சிலர் புது வீடு கட்டி கிரகப் பிரவேசம் செய்வீர்கள். புது வேலை கிடைக்கும். மகனுக்கு நல்ல மணப்பெண் அமைவாள். மகள் உங்களைப் புரிந்து கொள்வாள்.

சுக்கிரனும் புதனும் 6-ல் மறைந்திருப்பதால் வாகன விபத்து, வீண் டென்ஷன் வந்து போகும். உடல் நலத்தில் கூடுதல் கவனம் தெவை. செவ்வாய் சாதகமான வீடுகளில் செல்வதால் பழைய இடத்தை விற்றுப் புது வீடு வாங்குவீர்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். மனைவிவழியில் நல்ல செய்திகள் வரும். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்களைக் கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பார்கள். கலைத் துறையினர் புதுமையான படைப்புகளால் கவனம் ஈர்ப்பார்கள்.

சுற்றி இருப்பவர்களின் சுயரூபத்தை அறியும் காலம் இது.

கன்னி
கன்னி

கன்னி:

சுக்கிரனும் புதனும் 5-ல் நிற்பதால் உங்கள் பேச்சில் கனிவு கூடும். பிரபலங்களின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். கைமாற்றாகக் கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பூர்வீக சொத்துப் பிரச்னை தீரும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். சூரியன் 13 - ம் தேதி முதல் 6 - ல் அமர்வதால் மனம் தெளியும். டென்ஷன் தீரும். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். பிள்ளைகள் மீது இருந்த சலிப்பு, வெறுப்பு குறையும்.

17-ம் தேதி வரை செவ்வாய் 8 - ல் நிற்பதால் வாகன விபத்து, அலைச்சல், மனஉளைச்சல், மனைவி வழியில் மனத்தாங்கல் வந்து நீங்கும். 18 - ம் தேதி முதல் செவ்வாய் 9 - ம் வீட்டில் அமர்வதால் அலைச்சல் குறையும். ஆனால் தந்தைக்கு உடல் நலம் பாதிக்கும். வியாபாரத்தில் பாக்கிகளைப் போராடி வசூலிப்பீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி அன்பாக நடந்துகொள்வார். கலைத்துறையினர் வதந்திகளிலிருந்து விடுபடுவார்கள்.

ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய வேளை இது.

துலாம்
துலாம்

துலாம்:

புதனும் ராசிநாதன் சுக்கிரனும் 4 - ல் இருப்பதால் திடீர் பணவரவு உண்டு. வீடு, வாகன வசதி பெருகும். கல்யாண விஷயங்கள் சாதகமாக முடியும். 17 - ம் தேதி வரை செவ்வாய் 7 - ல் இருப்பதால் உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். வழக்கில் நீங்கள் விரும்பியபடி சாதகமான தீர்ப்பு வரும்.

18-ம் தேதி முதல் செவ்வாய் 8 - ல் மறைவதால் வீண் செலவு, சகோதரப் பகை வந்து நீங்கும். சூரியன் 13-ம் தேதி முதல் 5-ல் அமர்வதால் முன்கோபம், காரியத் தடை, தூக்கமின்மை, உறவினர்களால் அன்புத் தொல்லைகள் வந்து விலகும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். கலைத்துறையினர் புகழ் பெற்ற நிறுவனங் களுடன் ஒப்பந்தங்கள் செய்வார்கள்.

கலகலப்பாகப் பேசி காரியம் சாதிக்கும் தருணம் இது.

விருச்சிகம்
விருச்சிகம்

விருச்சிகம்:

சூரியன் சாதகமான வீடுகளில் செல்வதால் வேலை கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு. சொத்துப் பிரச்னை தீரும். பகைவர்கள் ஒதுங்குவார்கள். வழக்கில் வெற்றி உண்டு. புதனும் சுக்கிரனும் சாதகமான வீடுகளில் செல்வதால் ஓரளவு பணப்புழக்கம் உண்டு. குடும்பப் பொறுப்புகள் அதிகரிக்கும். கடன் பிரச்சனைகளைச் சாமர்த்தியமாகச் சமாளிப்பீர்கள்.உறவினர், நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

செவ்வாய் ஓரளவு சாதகமாக இருப்பதால் எதிர்த்தவர்கள் நண்பர்களா வார்கள். சகோதரியின் திருமணத்தை முன்னின்று முடிப்பீர்கள். புதிய சொத்துக்கு பாக்கி பணத்தைத் தந்து, பத்திரப்பதிவு செய்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. உத்தியோகத்தில் முக்கியக் கோப்புகளைக் கையாளும்போது அலட்சியம் வேண்டாம். கலைத்துறையினரின் திறன் வளரும்.

எதிலும் வளைந்துகொடுத்துச் செல்ல வேண்டிய தருணம் இது.

தனுசு
தனுசு

தனுசு:

சுக்கிரனும், புதனும் சாதகமாக இருப்பதால் புதிய முயற்சிகள் யாவும் நிறைவேறும். பிரபலங்கள் நண்பர்களாவார்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. கணவன் - மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். பிள்ளைகளிடம் மறைந்திருந்த திறமைகளை இனம் கண்டறிவீர்கள். சூரியன் 13 - ம் தேதி முதல் 3-ல் அமர்வதால், அரசுக் காரியங்கள் உடனே முடியும். புது வீடு கட்டத் தொடங்குவீர்கள்.

18-ம் தேதி முதல் செவ்வாய் 6-ல் நுழைவதால் திடீர் திருப்பம் உண்டாகும். சொத்து வாங்குவது, விற்பதிலிருந்த வில்லங்கம் விலகும். வியாபார ரகசியங்கள் யார் மூலம் கசிகிறது என்பதை அறிந்து அதற்கேற்ப செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரியின் ஆதரவைப் பெறுவீர்கள். சில வேலைகளைப் பரபரப்புடன் செய்து முடிப்பீர்கள். கலைத் துறையினரின் படைப்புகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும்.

பிள்ளைகளால் பெருமை சேரும் காலம் இது.

மகரம்
மகரம்

மகரம்:

புதனும் சுக்கிரனும் ராசிக்குள் இருப்பதால் நிர்வாகத் திறன் கூடும். ஓரளவு பணம் வரும். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பூர்விகச் சொத்துப் பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கும். விருந்தினர் வருகை அதிகரிக்கும். உறவினர்கள் வீட்டு சுப நிகழ்ச்சிகளை எடுத்து நடத்துவீர்கள். 13 - ம் தேதி முதல் உங்கள் ராசியை விட்டு சூரியன் விலகுவதால் சோர்வு, களைப்பு, வயிற்றுவலி நீங்கும். பார்வையைப் பரிசோதித்துக் கொள்ளுங்கள்.

செவ்வாய் சரியில்லாததால் அறுவை சிகிச்சை, சகோதர வகையில் மன வருத்தம் வந்து நீங்கும். பிள்ளைகளால் அலைச்சல், செலவுகள் வந்துபோகும். பூர்விகச் சொத்தில் பிரச்னைகள் வரக்கூடும். அரசுக் காரியங்கள் இழுபறியாகும். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் மறைமுகப் பிரச்னைகள் வரக்கூடும். கலைத்துறையினர் உற்சாகத்துடன் காணப்படுவார்கள்.

புது அனுபவங்களுடன் புதுப் பாதையில் பயணிக்கும் வேளை இது.

கும்பம்:
கும்பம்:

கும்பம்:

சுக்கிரனும் புதனும் 12 - ல் மறைந்திருப்பதால் சுபச் செலவுகள் அதிகரிக் கும். 13-ம் தேதி முதல் சூரியன் ராசிக்குள் நுழைவதால் கார, வாயு பதார்த்தங் களை உணவில் தவிர்ப்பது நல்லது. அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். செவ்வாய் வலுவாக இருப்பதால் புகழ், கௌரவம் பல மடங்கு உயரும். பூர்விகச் சொத்துப் பங்கைக் கேட்டு வாங்குவீர்கள்.

சொந்த ஊரில் மதிக்கப்படுவீர்கள். சகோதரிக்கு நல்ல வாழ்க்கைத் துணை அமையும். அரசாங்கத்தாலும், அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயம் உண்டு. வழக்கால் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். தடைப்பட்ட வீடு கட்டும் பணி விரைந்து முடியும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை அதிகப்படுத்த சில விளம்பர யுத்திகளைக் கையாளுவீர்கள் உத்தியோகத்தில் அதிகப் பேச்சைக் குறைக்கவும். அதிகாரிகள் சொல்வதை உடனே செயல்படுத்துங்கள். கலைத் துறையினரின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும்.

எதிர்பார்ப்புகள் நிறைவேறும் காலம் இது.

மீனம்
மீனம்

மீனம்:

சூரியன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் அரசாங்க விஷயங்கள் விரைந்து முடியும். பழைய கடனில் ஒரு பகுதி தீரும். தந்தைவழியில் உங்களைப் பற்றிப் பெருமையாகப் பேசுவார்கள். 18-ம் தேதி முதல் 3-ல் செவ்வாய் அமர்வதால் திடீர் யோகம் உண்டாகும். அரசாங்கத்தாலும், அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயம் உண்டு. வழக்கால் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். தடைப்பட்ட வீடு கட்டும் பணி விரைந்து முடியும்.

சுக்கிரனும் புதனும் சாதகமாக இருப்பதால் லோன் கிடைக்கும். நினைத் திருந்த டிசைனில் ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் தரமான சரக்குகளை மொத்த விலையில் வாங்க முடிவு செய்வீர்கள். வேலையாள்கள் இனி பொறுப்பாக நடந்துகொள்வார்கள். உத்தியோகத்தில் கடினமான வேலைகளையும் மாறுபட்ட அணுகுமுறையால் முடித்துக் காட்டுவீர்கள். கலைத்துறையினர் சம்பள விஷயத்தில் கறாராக இருக்க வேண்டும்; எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டு.

எதிர்நீச்சலின்றி இலக்குகளை எட்டிப்பிடிக்கும் தருணம் இது.