தொடர்கள்
திருத்தலங்கள்
திருக்கதைகள்
Published:Updated:

ராசிபலன்

ராசிபலன்
பிரீமியம் ஸ்டோரி
News
ராசிபலன்

ஏப்ரல் 21 முதல் மே 4-ம் தேதி வரை

மேஷம்

சுக்கிரனின் ஆதரவு இருப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். சொத்துப் பிரச்னை தீரும். சூரியன் ராசிக்குள் நிற்பதால் மனத்தில் சஞ்சலம் அதிகரிக்கும். ஓய்வெடுக்க முடியாதபடி அடுத்தடுத்து வேலைகள் இருக்கும்.

ராசிபலன்

புதன் சாதகமாக இருப்பதால், தள்ளிப்போன சில விஷயங்கள் நல்லவிதமாக முடியும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். செவ்வாய், குரு சேர்ந்து 10-ம் வீட்டில் நிற்பதால் திடீர் பணவரவு உண்டு. வியாபாரத்தில் வேலையாள்கள், பங்குதாரர்களால் மறைமுகப் பிரச்னைகள் வரக்கூடும். உத்தியோகத்தில் பணிகளைப் போராடி முடிப்பீர்கள். கலைத்துறையினரின் கலைநயம் மிகுந்த படைப்புகள் பட்டிதொட்டியெங்கும் பேசப்படும்.

சாதுரியமான பேச்சால் சாதிக்கும் காலம் இது!

ரிஷபம்

ராசி நாதன் சுக்கிரன் 3-ம் தேதி வரை ஆட்சிபெற்று அமர்ந்திருப் பதால் அழகும் இளமையும் கூடும். புதிய முயற்சிகள் கைகூடி வரும். பணவரவு அதிகரிக்கும். வாழ்க்கைத் துணைவரின் உடல்நிலை சீராகும். சிலருக்கு வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். சகோதரிக்குத் திருமணம் பேசி முடிப்பீர்கள்.

ராசிபலன்

செவ்வாய், குரு சேர்ந்து 9-ம் வீட்டில் அமர்வதால் சகோதரர் உங்களின் வேலைகளைப் பகிர்ந்துகொள்வார். சொத்துப் பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். வழக்கு சாதகமாக முடியும். புதன் 12-ம் வீட்டில் நிற்பதால் பழைய கடனைத் தீர்க்க புதிய வழி கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். பணியாளர்கள் பொறுப்பாக நடந்துகொள்வார்கள். அஷ்டமத்துச் சனி தொடர்வதால், உத்தியோகத் தில் மேலதிகாரியுடன் கருத்து வேறுபாடு வேண்டாம்.கலைத் துறையினரின் கலைத்திறன் வளரும்.

விடாமுயற்சியால் வெற்றிபெறும் வேளை இது.

மிதுனம்

புதன் லாப வீட்டில் நிற்பதால் இழுபறியான வேலைகள் விரைந்து முடியும். பிள்ளைகளால் சமூகத்தில் அந்தஸ்து உயரும். நண்பர்கள் உதவுவார்கள். உறவினர்கள் வீட்டு விசேஷங்களில் முதல் மரியாதை கிடைக்கும். வி.ஐ.பிக்கள் உங்களின் நேர்மையைப் புரிந்துகொண்டு பாராட்டுவார்கள். சொந்த ஊரில் செல்வாக்கு கூடும்.

ராசிபலன்

பூர்வபுண்னியாதிபதி சுக்கிரன் 12-ம் வீட்டில் ஆட்சி பெற்றிருப்ப தால் பிள்ளைகளின் உயர்கல்வி, திருமண முயற்சிகள் எதிர்பார்த்தபடி நல்லவிதத்தில் அமையும். சூரியன் லாப வீட்டில் நிற்பதால், அரசாங்க அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். வீடு, மனை வாங்குவது, விற்பதில் அவசரம் வேண்டாம். வியாபாரத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமை வெளிப்படும். கலைத்துறையினருக்குப் பாராட்டுகளும் விருதுகளும் வந்து சேரும்.

நினைத்ததை நிறைவேற்றிக் காட்டும் நேரம் இது.

கடகம்

சுக்கிரன் சாதகமாக இருப்பதால் விலையுயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். வெளிவட்டாரம் மகிழ்ச்சி தரும். புதன் 10-ம் வீட்டில் கேந்திர பலம் பெற்று நிற்பதால், புதிய கோணத்தில் யோசிப்பீர்கள். சொந்தங்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். பூர்வீகச் சொத்தில் உங்களுக்கான பங்கைக் கேட்டு வாங்குவீர்கள்.

ராசிபலன்

சூரியன் 10-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் புதிய பொறுப்புகளும் வாய்ப்புகளும் தேடி வரும். அரசு வகையில் அனுகூலம் உண்டு. உங்களைச் சுற்றியிருப்பவர்களின் பலம், பலவீனத்தை உணர்வீர்கள். 7-ம் வீட்டில் குரு வலுவாக அமர்ந்திருப்பதால், எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டங்களை அனுபவ அறிவால் சரி செய்வீர்கள். உத்தியோகத்தில் கால நேரமில்லாமல் உழைக்க வேண்டி வரும். கலைத்துறையினரின் வருமானம் உயர வழி பிறக்கும்.

தன்னம்பிக்கை துளிர்விடும் வேளை இது.

சிம்மம்

ங்களின் ராசிக்கு 9-ம் வீட்டில் நிற்கும் புதன் சாதகமாக இருப்பதால் சொந்தங்களுடன் மனம் விட்டுப் பேசி மகிழ்வீர்கள். வெளிவட்டாரத்தில் புதியவர்கள் நண்பர்களாவார்கள். 10-ம் வீட்டில் சுக்கிரன் நிற்பதால் புதிய பதவிகள் தேடி வரும். அடகிலிருந்த நகைகளை மீட்பீர்கள். வாகனத்தைச் சரிசெய்வீர்கள்.

ராசிபலன்

சூரியன் 9-ம் வீட்டில் நிற்பதால், பேச்சில் நிதானம் வரும். குழப்பங்கள் நீங்கும். எதிலும் தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். ஓரளவு பணவரவு உண்டு. செவ்வாய், குரு சேர்ந்து 6-ம் வீட்டில் நிற்பதால், சொத்துப் பிரச்னை சுமுகமாக முடியும். சகோதர வகையில் இருந்த சங்கடங்கள் தீரும். வியாபாரத்தில் பழைய சரக்குகளைத் தள்ளுபடி விலையில் விற்று முடிப்பீர்கள். அலுவலகத்தில் அமைதி நிலவும். அதிகாரிகளிடம் செல்வாக்கு கூடும். கலைத்துறையினர், மூத்த கலைஞர்களின் வழிகாட்டல் மூலம் வெற்றியடைவார்கள்.

சுயபலத்தை உணர்ந்து முன்னேறும் தருணம் இது.

கன்னி

சுக்கிரன் ஆட்சி பெற்று நிற்பதால் எவ்வளவு பிரச்னைகள், சிக்கல்கள் வந்தாலும் அனைத்தையும் எதிர்கொண்டு வெற்றி பெறும் வல்லமை பிறக்கும். பணப் பற்றாக்குறையைச் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். சிலருக்கு நல்ல வேலை அமையும். புதன் 8-ம் வீட்டில் நிற்பதால் நண்பர்கள், உறவினர்களால் புதிய செலவுகள் வந்து போகும். சூரியனும் 8-ம் வீட்டில் இருப்பதால் திடீர் பணவரவு உண்டு.

ராசிபலன்

5-ம் வீட்டில் குரு அமர்ந்திருப்பதால், வி.ஐ.பிக்களின் ஆதரவு கிடைக்கும். பணவரவு திருப்தி தரும். குழந்தை பாக்கியம் சிலருக்குக் கிடைக்கும். பாகப்பிரிவினை சுமுகமாக முடியும். வியாபாரத்தில் ஆழம் தெரியாமல் காலை விடாதீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்கள் வேலையைப் பகிர்ந்துகொள்வார்கள். கலைத்துறையினர் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவார்கள்.

மனநிம்மதி கிடைக்கும் காலம் இது.

துலாம்

புதன் சாதகமாக நிற்பதால் வேலைச்சுமை குறையும், உடல்நலம் சீராகும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். ராசிநாதன் சுக்கிரன் 8-ம் வீட்டில் மறைந்தாலும் ஆட்சிபெற்று அமர்ந்திருப்பதால், பேச்சைக் குறைத்து செயலில் வேகம் காட்டுவீர்கள். பணவரவு அதிகரிக்கும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்கள் நண்பர்களாவார்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை சுமுகமாக மூடியும். முயற்சிகள் பலிதமாகும்.

ராசிபலன்

செவ்வாயும் குருவும் சேர்ந்து நிற்பதால் சொத்துப் பிரச்னைகள் முடிவுக்கு வரும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களைத் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் செயல்திறனை மூத்த அதிகாரி புரிந்துகொண்டு உதவுவார். கலைத் துறையினர், பொது நிகழ்ச்சிகளில் தலைமை தாங்கும் அளவுக்குப் பிரபலமாவார்கள்.

யதார்த்தமான முடிவுகளால் வெற்றிபெறும் வேளை இது.

விருச்சிகம்

சூரியன் 6-ம் வீட்டில் நிற்பதால் அரசால் அனுகூலம் உண்டு. சிலருக்கு நல்ல வேலை கிடைக்கும். பணவரவு கணிசமாக உயரும். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். வீட்டில் உற்சாகம் பொங்கும். சுக்கிரன் 7-ம் வீட்டில் ஆட்சிபெற்று அமர்ந்திருப்பதால் வாகன வசதி பெருகும். வாழ்க்கைத் துணைவரின் வழி உறவினர்கள் உதவுவார்கள்.

ராசிபலன்

செவ்வாயும் குருவும் சேர்ந்து வலுவாக நிற்பதால் துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்களின் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். வியாபார ரகசியங்கள் யார் மூலம் கசிகிறது என்பதை அறிந்து வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் புகழ் உயரும். கலைத்துறையினர் மூத்த கலைஞர்களின் நட்பால் சாதிப்பார்கள்.

திட்டமிட்டுச் செயல்பட்டுச் சாதிக்கும் காலம் இது.

தனுசு

புதன் 5-ம் வீட்டில் சாதகமாக இருப்பதால் புதிய சிந்தனைகள் மனத்தில் தோன்றும். உறவினர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். பள்ளிக்கூடம் மற்றும் கல்லூரி கால நண்பர்களைச் சந்திப்பீர்கள். கணவன் மனைவிக்கு இடையே வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. சூரியன் 5-ம் வீட்டில் நிற்பதால் தூக்கமின்மை இருக்கும்.

ராசிபலன்

செவ்வாய் 2-ம் வீட்டில் இருப்பதால் சகோதர வகையில் மனவருத்தம் வரலாம். சொத்து விவகாரங்களைக் கனிவான முறையில் அணுகுங்கள். வியாபாரத்தில் சந்தை நுணுக்கங்களைத் தெரிந்துகொண்டு முதலீடு செய்யுங்கள். உத்தியோகத்தில் உங்களின் கை ஓங்கும். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். கலைத்துறையினரின் படைப்புகளுக்கு நல்ல சன்மானம் கிடைக்கும்.

தேவையான செலவுகள் அதிகரிக்கும் காலம் இது.

மகரம்

ங்களின் ராசிக்கு 4-ம் வீட்டில் புதன் சாதகமாக இருப்பதால், மனத்துக்கு இதமான செய்திகள் வரும். பூர்வபுண்ணியாதிபதியும், ஜீவனாதிபதியுமான சுக்கிரன் சாதகமாக அமர்ந்திருப்பதால் அடிப்படை வசதிகள் பெருகும். புதிய வேலை அமையும். குழந்தை பாக்கியம் சிலருக்குக் கிடைக்கும். வாழ்க்கைத் துணைவர் வழி உறவினர்களால் திடீர்த் திருப்பம் உண்டாகும்.

ராசிபலன்

ஒரு சொத்தைக் காப்பாற்ற மற்றொரு சொத்தை விற்கவேண்டி வரும். நகைகளை இரவல் தர வேண்டாம். சகோதர வகையில் அலைச்சல் இருக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களைக் கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளிடம் பேசும்போது கவனம் தேவை. கலைத்துறையினரின் திறமைகள் வெளிப்படும்.

எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் தருணம் இது.

கும்பம்

சூரியன் 3-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால், எதிலும் வெற்றி பெறுவீர்கள். எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். நாடாளுபவர்களின் உதவி கிடைக்கும். அரசியல் செல்வாக்கு கூடும். தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சுக்கிரனும் புதனும் சாதகமாக இருப்பதால் பொது அறிவை வளர்த்துக்கொள்வீர்கள். போட்டித் தேர்வில் வெற்றி கிடைக்கும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். உறவினர்களால் ஆதாயம் கிடைக்கும்.

ராசிபலன்

பால்ய நண்பர்களைச் சந்திப்பீர்கள். செவ்வாய், குரு சேர்ந்து 12-ம் வீட்டில் நிற்பதால் சொத்து பிரச்னைக்கு சுமுகத் தீர்வு காண்பது நல்லது. வழக்கில் அவசரம் வேண்டாம். வியாபாரத்தில் நவீன யுக்திகளைக் கையாளுவீர்கள். உத்தியோகத்தில் அடுக்கடுக்கான வேலைகளால் மன இறுக்கம் அதிகரிக்கும். கலைத்துறையினரின் படைப்புகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும்.

எதிலும் ஏற்றம் காணும் காலம் இது.

மீனம்

புதனும் சுக்கிரனும் சாதகமாக இருப்பதால் உற்சாகமாகப் பல வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். உறவினர்கள் சிலர் உங்களின் அதிரடியான வளர்ச்சியைக் கண்டு பொறாமைப்படுவார்கள். ராசிக்கு 2-ம் வீட்டில் சூரியன் அமர்ந்திருப்பதால், உடல் நலனில் கவனம் தேவை. வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது.

ராசிபலன்

செவ்வாய், குரு சேர்ந்து லாப வீட்டில் இருப்பதால் தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். சகோதரர்களால் பயனடைவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்ததைவிட லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் எளிதாக முடிப்பீர்கள். கலைத்துறையினர், மூத்த கலைஞர்களிடம் சில நுணுக்கங்களைக் கற்றுத் தெளிவார்கள்.

ஏமாற்றங்களிலிருந்து விடுபடும் வேளை இது.