திருத்தலங்கள்
திருக்கதைகள்
ஜோதிடம்
Published:Updated:

ராசிபலன்

ராசிபலன்
பிரீமியம் ஸ்டோரி
News
ராசிபலன்

ஏப்ரல் 7 முதல் 20 - ம் தேதி வரை

மேஷம்

சுக்கிரனும் புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால் குடும்பத் தில் நிலவிய பிரச்னைகள் தீரும். வாழ்க்கைத்துணை வழியில் உதவிகள் கிடைக்கும். திருமணப் பேச்சுவார்த்தை கூடி வரும். 13-ம் தேதி முதல் சூரியன் ராசிக்குள் நுழைவதால் உடல்நலனில் கவனமாக இருப்பது நல்லது. 10-ம் வீட்டில் செவ்வாய் சாதகமாக இருப்பதால் மாறுபட்ட கருத்துடன் இருந்த சகோதரர்கள் உங்களைப் புரிந்துகொள்வார்கள். வியாபாரத்தில் வெளிப்படையாகப் பேசுவது நல்லதல்ல. உத்தியோகத்தில் பிறரின் குறைகளைச் சுட்டிக்காட்ட வேண்டாம். கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் தள்ளிப்போகும்.

மேஷம்
மேஷம்

சிறப்புப் பரிகாரம்: கொரோனா - தொற்றுநோய் உலகையே வாட்டி வதைக்கிறது. இந்நிலையில் தெய்வபலம் நமக்குத் துணை நிற்கும். மேஷ ராசிக்கு செவ்வாய் சாதகமாய் இருக்கிறார். திருச்செந்தூர் முருகனை தியானித்து வழிபட, பிணிகள் அண்டாது.

ரிஷபம்

சூரியன் 12-ம்தேதி வரை லாப வீட்டில் நிற்பதால் எதிலும் வெற்றி பெறுவீர்கள். 13-ம் தேதி முதல் சூரியன் 12-ம் வீட்டில் மறைவதால் தூக்கமின்மை, மனச்சஞ்சலம் இருக்கும். உடல்நலனில் கவனம் தேவை. எதிர்பாராத பணவரவு உண்டு. புதனும் ராசிநாதன் சுக்கிரனும் சாதகமாக இருப்பதால், எதிர்பார்த்த விலைக்கு மனையை விற்பீர்கள். வாழ்க்கைத்துணை வழியில் உதவிகள் உண்டு. குரு வலுவாக அமர்வதால் எதிலும் வெற்றி உண்டு. வியாபாரத்தில் புதிய ஒப்பந்தம் மூலம் உங்களின் நிறுவனத்தின் புகழ் கூடும். உத்தியோகத்தில் உழைப்புக்கேற்ற பாராட்டு கிடைக்கும். கலைத் துறையினருக்குப் புதிய நிறுவனங்களிலிருந்து வாய்ப்புகள் வரும்.

ரிஷபம்
ரிஷபம்
  • சிறப்புப் பரிகாரம்: ரிஷப ராசிக்கு சுக்ரன் சாதகமாக இருக்கிறார். இந்த ராசியினர் திருவரங்கநாதரை, `பச்சைமாமலை போல் மேனி...’ பாசுரம் பாடி வழிபடுவதால், நன்மைகள் சேரும்.

மிதுனம்

சூரியன் சாதகமான வீடுகளில் செல்வதால், வழக்கு சாதகமாகும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். குரு 8-ம் வீட்டில் மறைவதால் கணவன் மனைவிக்குள் வாக்குவாத வேண்டம். சுக்கிரனும் புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால், எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். பிள்ளைகளின் கல்யாணம், உயர்கல்வி முயற்சிகள் கூடி வரும். வாழ்க்கைத்துணை வழியில் நல்ல செய்திகள் உண்டு. வியாபாரத்தி பிரச்னைகளுக்கான காரணத்தை அறிந்து அதற்கேற்ப செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். கலைத்துறையினரின் படைப்புத்திறன் வளரும்.

மிதுனம்
மிதுனம்

சிறப்புப் பரிகாரம்: மிதுனத்துக்குச் சூரியன் சாதகமாக உள்ளார். இந்த ராசியினர், நரசிம்ம ஸ்வாமியை தியானித்து வழிபடவேண்டும். பிரகலாதன் கதையைக் கேட்பதும் பட்டிப்பதும் சிறப்பு. இதனால், மனத்தில் நம்பிக்கை கூடும்; வீண் பயம் விலகியோடும்.

கடகம்

சூரியன் 13-ம் தேதி முதல் 10-ம் வீட்டில் நுழைவதால் முன்கோபம் விலகும். புதிய வேலை கிடைக்கும். வி.ஐ.பிக்கள் உதவுவார்கள். குரு வலுவாக அமர்வதால் எதிர்பார்த்த காரியங்கள் வெற்றியடையும். குடும்பத்தில் அமைதி நிலவும். புதனும் சுக்கிரனும் வலுவாக இருப்பதால் உறவினர்கள் உதவி செய்வார்கள். நட்பால் ஆதாயம் உண்டு. விருந்தினர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் பொங்கும். வியாபாரத்தில் புதிய சலுகைகளால் லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். கலைத்துறையினர் மூத்த கலைஞர்களின் வழிகாட்டல் மூலம் வெற்றியடைவார்கள்.

கடகம்
கடகம்

சிறப்புப் பரிகாரம்: கடக ராசிக்கு கேது சாதகமான பலனைத் தரவுள்ளார். ஆக, இந்த ராசியினர் விநாயகரை வழிபடுவதும், விநாயகர் அகவல் படித்துத் தொழுவதும் சிறப்பு. விநாயகர் அருளால் உடல் ஆரோக்கியம் சிறக்கும்; அலர்ஜியால் ஏற்படும் பிணிகள் விலகியோடும்.

சிம்மம்

சுக்கிரனும் புதனும் ஓரளவு சாதகமாக இருப்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். நீண்ட நாள்களாகச் சந்திக்கவேண்டுமென்று நினைத்த நண்பர்களைச் சந்திப்பீர்கள். உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். அக்கம்பக்கத்தாரிடம் குடும்ப விஷயங்களைப் பகிரவேண்டாம். குரு 6-ம் வீட்டில் மறைவதால், கடன் பற்றிய கவலைகள் வரக்கூடும். செவ்வாய் 6-ம் வீட்டில் வலுவாக இருப்பதால் பழைய பிரச்னைகள் தீரும். உடன்பிறந்தவர்கள் உங்களைப் புரிந்துகொள்வார்கள். வியாபாரத்தில் ஆழம் தெரியாமல் காலை விடாதீர்கள். உத்தியோகத்தில் உழைப்புக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும். கலைஞர்கள் வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும்.

சிம்மம்
சிம்மம்

சிறப்புப் பரிகாரம்: சிம்மத்துக்குச் சனி பகவான் வலுத்துள்ளார். இந்த ராசியினர் சாஸ்தா வழிபாட்டை மேற்கொள்ளலாம். அனுதினமும் சபரிகிரிவாசனை தியானித்து வழிபட்டால், தொற்று நோய் போன்ற சங்கடங்கள் அணுகாது.

கன்னி

ராசிநாதன் புதனும் சுக்கிரனும் சாதகமாக இருப்பதால் உங்கள் செயலில் வேகம் கூடும். திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். குடும்பத்தினர் உங்களின் ஆலோசனையை ஏற்பார்கள். குலதெய்வக் கோயிலுக்குச் சென்று நேர்த்திக்கடனைச் செலுத்துவீர்கள். குரு 5-ம் வீட்டில் அமர்வதால் தாயாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். தாய்வழி உறவினர்கள் உங்களைப் புகழ்வார்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகளால் மதிக்கப்படுவீர்கள். கலைத் துறையினர் புதுமையாக சில படைப்புகளை வெளியிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பார்கள்.

கன்னி
கன்னி

சிறப்புப் பரிகாரம்: இந்த ராசிக்குச் சுக்ரன் சாதகமாக உள்ளார். இந்த ராசியினர் பெருமாளை வழிபடவேண்டும். பாகவதக் கதைகளைப் படிப்பதும் கேட்பதும் நலம்பயக்கும்.

துலாம்

சுக்கிரன் சாதகமாகச் செல்வதால், சிலர் வீடு மாறுவதற்கான முயற்சியில் இறங்குவீர்கள். 12-ம் தேதி வரை சூரியன் 6-ம் வீட்டில் இருப்பதால் வீடு கட்டும் பணி முழுமையடையும். அரசாங்கத் தால் ஆதாயம் உண்டு. 13-ம் தேதி முதல் சூரியன் 7-ம் வீட்டில் அமர்வதால் வாழ்க்கைத்துணையுடன் கருத்துமோதல்கள் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் வந்து போகும். உடன்பிறந்தவர்களை அனுசரித்துச் செல்லவும். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். உத்தியோகத்தில் சின்ன சின்ன இடர்பாடுகளைச் சமாளிக்க வேண்டியிருக்கும். கலைத்துறையினர் வீண் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம்.

துலாம்
துலாம்

சிறப்புப் பரிகாரம்: துலாம் ராசிக்கு கேது வலு சேர்க்கிறார். இந்த ராசியினர் துர்காதேவியை தியானித்து, மகிஷாசுர மர்த்தினி ஸ்லோகம் பாடி வழிபடுவதால், துன்பங்கள் சிதறியோடும்.

விருச்சிகம்

சூரியன்13-ம் தேதி முதல் ராசிக்கு 6-ம் வீட்டில் நுழைவதால், திடீர் யோகம் உண்டாகும். தடைப்பட்ட வேலைகள் உடனே முடியும். சுக்கிரனும் புதனும் சாதகமாக இருப்பதால் பண பலம் உயரும். கனிவான பேச்சால் காரியம் சாதிப்பீர்கள். பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். குரு 3-ம் வீட்டில் மறைவதால் முக்கிய வேலைகள் தாமதமாகி முடியும். கணவன் மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். மகளின் திருமணம் கூடி வரும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் உங்களைப் பாராட்டுவார்கள். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் அதிகரிக்கும்.

விருச்சிகம்
விருச்சிகம்

சிறப்புப் பரிகாரம்: இந்த ராசிக்கு சனி பகவான் சாதகமாக உள்ளார். இவர்கள், தங்கள் குடும்பத்தின் காவல் தெய்வங்களை தியானித்து வழிபடலாம். வீட்டிலேயே படையலிட்டு வணங்கலாம்.

தனுசு

புதன் 4-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் செல்வாக்கு உயரும். எதிர்பாராத பணவரவு உண்டு. 12-ம் தேதி வரை சூரியன் 4-ம் வீட்டில் இருப்பதால் புது வேலை கிடைக்கும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். அரசாங்க அதிகாரிகள் உதவுவார்கள். குரு 2-ம் வீட்டில் அமர்வதால் சந்தர்ப்ப சூழ்நிலையைப் புரிந்துகொண்டு சமயோஜிதமாகப் பேசும் சாமர்த்தியம் வரும். பணவரவும் உண்டு. உயர்பதவியில் இருப்பவர்களால் காரியம் சாதிப்பீர்கள். வீட்டைப் புதுப்பிக்கத் திட்டமிடுவீர்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்தியோகத்தில் பணிகளைப் போராடி முடிப்பீர்கள். கலைத்துறையினரின் புகழ் பட்டிதொட்டியெங்கும் பரவும்.

தனுசு
தனுசு

சிறப்புப் பரிகாரம்: குரு பகவான் இந்த ராசிக்குச் சாதகமாக உள்ளார். இவர்கள், பழநி முருகனை தியானித்து வழிபடவேண்டும். தினமும் குமாரஸ்தவம் முதலான துதிகளைப் படிப்பதால் நன்மைகள் தேடி வரும்; நோய் பயம் விலகும்.

மகரம்

புதனும் சுக்கிரனும் சாதகமாக இருப்பதால் உறவினர்கள், நண்பர் களுடன் மனம்விட்டுப் பேசுவீர்கள். சூரியன் சாதகமான வீடுகளில் செல்வதால் பிரச்னைகளைக் கண்டு அஞ்சமாட்டீர்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். மகனுக்கு நல்ல வாழ்க்கைத்துணை அமையும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். செவ்வாயும் குருவும் ராசிக்குள் வந்தமர்வதால் கவலைகள், மன இறுக்கம் வந்து செல்லும். தியானத்தில் ஈடுபடுங்கள். வியாபாரத்தில் அதிரடி லாபம் உண்டு. உத்தியோகத்தில் சூட்சுமங்களை உணர்வீர்கள். கலைத்துறையினரை உதாசீனப்படுத்திய நிறுவனமே அழைத்துப் பேசும்; புதிய வாய்ப்புகளால் முன்னேற்றம் உண்டு.

மகரம்
மகரம்

சிறப்புப் பரிகாரம்: மகரத்துக்கு 6-ல் ராகு வலுவாக உள்ளார். இந்த ராசியினர் துர்காதேவியை தியானிப்பதும், தினமும் நெய் தீபம் ஏற்றிவைத்து வழிபடுவதும் விசேஷம்; தேக ஆரோக்கியம் மேம்படும்.

கும்பம்

சூரியன் 13-ம் தேதி முதல் 3-ம் வீட்டில் நுழைவதால் புதிய வேலை அமையும். உயர் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக் கும். அரசு வேலைகள் வேகமாக முடியும். சுக்கிரனும் புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால் சமயோஜித புத்தியால் சாதித்துக் காட்டுவீர்கள். தடைகளெல்லாம் விலகும். எதிர்பார்த்த தொகையும் கைக்கு வரும். தன்னிச்சையாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் தாமதமாக வசூலாகும். உத்தியோகத்தில் தலைமையின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். கலைத்துறையினர் தானுண்டு தன் வேலையுண்டு என இருப்பது நல்லது.

கும்பம்
கும்பம்

சிறப்புப் பரிகாரம்: கும்ப ராசிக்கு சுக்ரன் சாதகமாக உள்ளார். இந்த ராசியினர் தினமும் லட்சுமிதேவியை வழிபடவேண்டும். மேலும் திருமீயச்சூர் லலிதாம்பிகையையும் மனத்தால் தியானித்து வழிபடுவதால், சகல வினைகளும் நீங்கும்; தேகத்தை வாட்டும் பிணிகள் விலகும்.

மீனம்

சுக்கிரனும் புதனும் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், குடும்ப வருமானம் உயரும். பழைய கடன் பிரச்னையில் ஒன்றை பைசல் செய்வீர்கள். உங்களின் தோற்றப்பொலிவு கூடும். சூரியன் சாதகமாக இல்லாததால் குடும்பத்தில் வீண் வாக்கு வாதங்களைத் தவிர்ப்பது நல்லது. குரு பகவான் லாப வீட்டில் வலுவாக அமர்வதால் கமிஷன் வகையில் லாபம் உண்டு. மரியாதை கூடும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் மற்றவர்களின் வேலையையும் சேர்த்து பார்க்க வேண்டி வரும். கலைத் துறையினரின் படைப்புகளுக்கு நல்ல விலை கிடைக்கும்.

மீனம்
மீனம்

சிறப்புப் பரிகாரம்: குரு, செவ்வாய், சனி ஆகியோர் மீன ராசிக்கு லாபம் தரும் விதமாக அமைந்துள்ளனர். இந்த ராசியினர் சிவனும் விஷ்ணுவும் இணைந்து அருள்பாலிக்கும் சங்கரநாராயண திருவடிவை தியானித்து வழிபடுவதால், நன்மைகள் உண்டாகும்.