Published:Updated:

ராசிபலன்

ராசிபலன்
பிரீமியம் ஸ்டோரி
News
ராசிபலன்

ஆகஸ்ட் 11 முதல் 24-ம் தேதி வரை

மேஷம்

சுக்கிரனும் புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால், தோற்றப் பொலிவு கூடும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வங்கியில் லோன் கிடைக்கும். புது வேலை கிடைக்கும். வாகனப் பழுதை சரி செய்வீர்கள்.

உறவினர், நண்பர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். வாழ்க்கைத் துணைவர் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். குரு வலுவாக அமர்ந்திருப்பதால், சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். திருப்பணிகளுக்கு நன்கொடை வழங்குவீர்கள்.

ராசிபலன்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

17 - ம் தேதி முதல் சூரியன் ஆட்சி பெற்று சொந்த வீட்டில் அமர்வதால், பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். பூர்விகச் சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். 12-ம் தேதி முதல் உங்கள் ராசிநாதன் செவ்வாய் ஆட்சி பெற்று அமர்வதால், நிர்வாகத் திறன் கூடும். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும்.

வியாபாரத்தில், வாடிக்கையாளர் விரும்பி வருவார்கள். பங்குதாரர் மதிப்பார். உத்தியோகத்தில் செல்வாக்குக் கூடும். கலைத் துறையினர் திறமைகளை வெளிப் படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.

பேச்சு வல்லமையால் சாதிக்கும் காலம் இது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

ரிஷபம்

ராசிநாதன் சுக்கிரன் சாதகமாக இருப்பதால் உங்கள் போக்கில் கொஞ்சம் மாற்றம் செய்வீர்கள். தடைப்பட்ட சில காரியங்களைப் பிரபலங்களின் உதவியால் செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத வகையில் பணம் வரும். புது வாகனம் வாங்குவீர்கள்.

புதன் சாதகமான வீடுகளில் செல்வதால், புதியவர்கள் நண்பர்கள் ஆவார்கள். நீண்ட நாள்களாகப் பார்க்க நினைத்த உறவினரைச் சந்திப்பீர்கள். சூரியன் போக்கு சாதகமாக இருப்பதால் அரசாங்க விஷயங்கள் சாதகமாக முடியும்.

ராசிபலன்

தாயாரின் உடல் நலம் சீராகும். 12-ம் தேதி முதல் செவ்வாய் 12-ல் மறைவதால் சகோதர வகையில் அலைச்சல், மனக்குழப்பம், சொத்து சிக்கல்கள் வந்து நீங்கும்.

வியாபாரத்தில், வாடிக்கை யாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, புதுச் சலுகைகளை அறிமுகம் செய்வீர்கள். உத்தியோகத்தில் பதற்றம் வேண்டாம். கலைத்துறையினர் பொது நிகழ்ச்சிகளுக்குத் தலைமை தாங்கும் அளவிற்குப் பிரபலமாவார்கள்.

விடாமுயற்சியால் விட்டதைப் பிடிக்கும் தருணம் இது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மிதுனம்

ராசிநாதன் புதனும் சுக்கிரனும் சாதகமாக இருப்பதால் திட்டமிட்ட காரியங்கள் தடையின்றி முடியும். பிள்ளைகளின் தவற்றைச் சுட்டிக் காட்டித் திருத்துவீர்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். உங்கள் ரசனைக்கு ஏற்ற வீடு, வாகனம் வாங்குவீர்கள்.

உறவினர்கள் சிலர், உங்களைக் கலந்தாலோசித்துச் சில முடிவுகள் எடுப்பார்கள். நண்பர்கள் உங்கள் உதவியை நாடுவார்கள். இதுவரையிலும் உங்களைக் கடுகடுப்புடன் பேசவும் செயல்படவும் வைத்த சூரியன் 17-ம் தேதி முதல் 3-ல் அமர்வதால், அரசு காரியங்கள் விரைந்து முடியும். வீடு கட்ட அரசிடமிருந்து அனுமதி கிடைக்கும்.

ராசிபலன்

12-ம் தேதி முதல் செவ்வாய் லாப வீட்டில் அமர்வதால், சொத்து வாங்குவதும் விற்பதும் லாபகரமாக அமையும். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும்.

வியாபாரத்தில், சூட்சுமங்களை உணர்வீர்கள். உத்தியோகத் தில் புதிய அனுபவங்களைக் கற்றுக் கொள்வீர்கள். கலைத் துறை யினருக்கு வருமானம் உயரும்.

காரியத் தடைகள் நீங்கும் காலம் இது.

கடகம்

சுக்கிரனும் புதனும் சாதகமாக இருப்பதால், பூர்விகச் சொத்தைச் சீர் செய்வீர்கள். உறவினர்கள் சிலர் உங்களின் அதிரடியான வளர்ச்சியைக் கண்டு பொறாமைப்படுவார்கள். நட்பு வட்டம் விரியும்.

17 - ம் தேதி முதல் சூரியன் ராசியை விட்டு விலகி 2-ல் அமர்வதால் முன்கோபம் குறையும். என்றாலும் யாரையும் தூக்கி எறிந்து பேசாதீர்கள். கண் எரிச்சல், பல் வலி வந்து நீங்கும்.

ராசிபலன்

12-ம் தேதி முதல் செவ்வாய் ஆட்சி பெற்று அமர்ந்திருப்பதால் உங்களின் ஆளுமைத்திறன் அதிகரிக்கும். கௌரவப் பதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். வீட்டில் ஆதரவு கிட்டும். திருமணப் பேச்சுவார்த்தை

சுபமாக நடைபெறும். பிள்ளைகள் வழியில் பெருமை உண்டாகும்.

வியாபாரத்தில், புகழ் பெற்ற நிறுவனங்களுடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத்தில் கடினமான வேலைகளையும் எளிதாக முடிப்பீர்கள். கலைத்துறையினரின் படைப்புகளுக்குப் பரிசும் பாராட்டும் கிடைக்கும்.

எதிர்பார்ப்புகள் யாவும் நிறைவேறும் நேரம் இது.

சிம்மம்

சுக்கிரன் லாப வீட்டில் இருப்பதால் சோர்வு நீங்கி உற்சாகமடைவீர்கள். புதுத் தெம்பு பிறக்கும். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு.

புதன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் உறவினர்களுக்கு மத்தியில் ஒருபடி உயர்ந்து நிற்க வேண்டுமென எண்ணுவீர்கள். நண்பர்கள் உதவுவார்கள்.

ராசிபலன்

17-ம் தேதி முதல் ராசிநாதன் சூரியன் ராசிக்குள் ஆட்சி பெற்று அமர்வதால் மதிப்பு, மரியாதை கூடும். அதிகாரப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு.

12-ம் தேதி முதல் செவ்வாய் ஆட்சி பெற்று அமர்வதால் பணவரவு, திடீர் யோகம் உண்டு.

வியாபாரத்தில், வாடிக்கையாளர் களின் கருத்தைக் கேட்டு கடையை இடமாற்றம் செய்வீர்கள். சிலர் சொந்தத் தொழில் தொடங்குவர். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடித்து வெற்றி பெறுவீர்கள். கலைத்துறையினர் கௌரவிக்கப்படுவார்கள்.

காசு-பணத்தின் அருமையைப் புரிந்துகொள்ளும் காலம் இது.

கன்னி

ராசிநாதன் புதன் சாதகமான வீடுகளில் அமர்ந்திருப்பதால் உங்களின் ரசனை மாறும். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். வீடு வாங்க, கட்ட வங்கிக் கடன் உதவி கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும்.

சுக்கிரன் சாதகமாகச் செல்வதால் புது பொறுப்புகளும், கௌரவப் பதவிகளும் தேடி வரும். சேமிக்கும் எண்ணம் பிறக்கும். வாழ்க்கைத் துணைவர் வழியில் ஆதரவு பெருகும்.

16-ம் தேதி வரை சூரியன் லாப வீட்டில் நிற்பதால், அரசாங்க விஷயம் சாதகமாக முடியும்.

ராசிபலன்

17-ம் தேதி முதல் 12-ம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்வதால் திடீர் பயணங்கள் உண்டு.

12- ம் தேதி முதல் 8-ல் செவ்வாய் மறைவதால் கணவன் - மனைவிக் குள் வாக்குவாதம் வந்து விலகும்.

வியாபாரம் சூடுபிடிக்கும். வேலையாள்கள் உங்களிடமிருந்து தொழில் யுக்திகளைக் கற்றுக் கொள்வார்கள். அலுவலகத்தில் மரியாதை கூடும். சக ஊழியர்களின் கடின உழைப்பால் நிர்வாகத்தின் லாபம் உயரும். கலைத்துறையினரின் படைப்புத் திறன் வளரும்.

வெற்றிப் பாதையில் பயணிக்கும் வேளை இது.

துலாம்

சூரியனும், புதனும் வலுவாக இருப்பதால் பிரச்னைகளை எதிர்கொள்ளும் ஆற்றல் பிறக்கும். எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். கட்டட வேலைகளைத் தொடங்குவீர்கள். அரசாங்க விஷயங்கள் நல்ல விதத்தில் முடியும்.

பூர்விகச் சொத்தில் மாற்றம் செய்வீர்கள். பிள்ளைகளால் மதிப்பு கூடும். உறவினர்கள் எதிர்பார்ப்புகளுடன் பேசுவார்கள். நண்பர்கள் பக்கபலமாக இருப்பார்கள். ராசிநாதன் சுக்கிரன் 9-ம் வீட்டில் நிற்பதால், பணவரவு திருப்தி தரும். தந்தைவழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

ராசிபலன்

எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். 12-ம் தேதி முதல் 7-ல் செவ்வாய் ஆட்சி பெற்று அமர்வதால், தைரியமாக சில முடிவுகள் எடுப்பீர்கள்.

வி.ஐ.பி-களின் தொடர்பு கிடைக் கும். கணவன் - மனைவிக்குள் அந்நியோன்யம் பிறக்கும்.

வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். பங்குதாரர்களால் விரயம் வரும். உத்தியோகத்தில் விமர்சனத்தைப் புறம் தள்ளுங்கள். கலைத்துறையினருக்குப் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும்.

தன்னம்பிக்கை துளிர்விடும் தருணம் இது.

விருச்சிகம்

சுக்கிரனும் புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால், வராது என்றிருந்த பணம் தேடி வரும். உறவினர், நண்பர்களுடன் மனம் விட்டுப் பேசுவீர்கள். புதிதாக டி.வி., ப்ரிட்ஜ் போன்ற சாதனங்கள் வாங்குவீர்கள். வாகனத்தைச் சரி செய்வீர்கள்.

17-ம் தேதி முதல் சூரியன் ராசிக்கு 10-ம் வீட்டில் நுழைவதால் புது வேலைக்கான உங்களின் முயற்சிக்கு நல்ல பதில் கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டு. தந்தையுடனான மோதல்கள் விலகும்.

ராசிபலன்

12-ம் தேதி முதல் செவ்வாய் 6-ல் நிற்பதால், புது வீடு, மனை வாங்குவீர்கள். எதிர்பாராத பண வரவு உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள்.

வியாபாரத்தில் தரமான சரக்குகளை மொத்த விலையில் வாங்க முடிவு செய்வீர்கள். வாடிக்கையாளர்களின் ரசனை யைப் புரிந்துகொள்வீர்கள்.

உத்தியோகத்தில், தலைமைக்கு நெருக்கம் ஆவீர்கள். புது வாய்ப்பு தேடி வரும். கலைத்துறையினரின் கற்பனைத் திறன் வளரும்.

நண்பர்களால் பிரச்னைக்குத் தீர்வு காணும் வேளை இது.

தனுசு

புதனும் சுக்கிரனும் சாதகமாக இருப்பதால் பழைய உறவினர், நண்பர்களைச் சந்தித்து மகிழ் வீர்கள். வெளியூர் பயணங்களால் பலனடைவீர்கள். வாகன வசதிகள் பெருகும்.

16-ம் தேதி வரை சூரியனின் போக்கு சரியில்லாததால் வீண் டென்ஷன், அலைச்சல் வந்து போகும். தந்தைக்கு மருத்துவச் செலவுகள் வரக்கூடும். அரசு காரியங்கள் தாமதமாக முடியும்.

17-ம் தேதி முதல் சூரியன் வலுவடைவதால், பணப்புழக்கம் அதிகரிக்கும். பூர்வ புண்ணியாதி பதி செவ்வாய் 12-ம் தேதி முதல் ஆட்சி பெறுவதால் புகழ், கௌரவம் உயரும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். வி.ஐ.பிகள் வீட்டு விஷேசங்களில் கலந்து கொள்வீர்கள்.

ராசிபலன்

வியாபாரத்தில், சந்தை நிலவரத்தை அறிந்து முதலீடு செய்யுங்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் நல்லவர்களைப் போல் நடித்து உங்களை ஏமாற்றுவார்கள். கொஞ்சம் கவனம் தேவை. கலைத்துறையினர், புதுமையாக சில படைப்புகளை வெளியிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பார்கள்.

எதிர்பாராத திடீர் திருப்பங்கள் நிகழும் காலம் இது.

மகரம்

புதன் சாதகமாக இருப்பதால் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். வராது என்றிருந்த பணம் வரும். வீட்டை விரிவு படுத்திக் கட்டுவீர்கள். உறவினர், நண்பர்களுடன் இருந்துவந்த அதிருப்தி, மோதல்கள் விலகும். புது நட்பு மலரும்.

சுக்கிரன் 6 -ல் மறைந்து இருப்பதால் கணவன் - மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும்.

ராசிபலன்

17-ம் தேதி முதல் சூரியன் ஆட்சிப் பெற்று 8-ல் அமர்வதால் தடைப்பட்ட வேலைகள் முடியும். அரசு அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். 12-ம் தேதி முதல் செவ்வாய் 4-ல் அமர்வதால் சகோதரிக்கு வேலை கிடைக்கும். நிலம், வீடு வாங்குவது, விற்பது சுமுகமாக முடியும். தாய் வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

வியாபாரத்தில், கடையை விரிவு படுத்துவீர்கள். வேலையாள்கள் நன்கு ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் புது அதிகாரி

உங்களை மதிப்பார். கலைத் துறையினர், அவ்வப்போது விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டி வரும்.

ரகசியம் பேணவேண்டிய வேளை இது.

கும்பம்

சுக்கிரன் சாதகமாக இருப்பதால், தடைகளைத் தாண்டி முன்னேறுவீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். கடந்த கால சுகமான அனுபவங்களை, நினைத்து மகிழ்வீர்கள். ஓரளவு பணம் வரும்; பற்றாக்குறையும் நீடிக்கும்.

16-ம் தேதி வரை சூரியன் 6-ல் நிற்பதால், எதிர்பார்ப்புகள் தடையின்றி முடியும். அரசால் அனுகூலம் உண்டு. சூரியன் 17-ம் தேதி முதல் 7-ம் வீட்டில் நுழைவதால், வாழ்க்கைத் துணைவருடன் வாக்குவாதம் வந்து போகும். புதன் 6-ல் மறைந்திருப்பதால் பிள்ளைகளிடம் கண்டிப்பு வேண்டாம்.

ராசிபலன்

13-ம் தேதி முதல் புதன் சாதக மாக இருப்பதால், வாழ்க்கைத் துணைவரின் உறவினர்கள் உதவுவார்கள். 12-ம் தேதி முதல் செவ்வாய் வலுவாக அமர்வதால் புதிய யோசனைகள் பிறக்கும்.

வியாபாரத்தில் லாபம் உண்டு. உத்தியோகத்தில், அதிகாரிகளிடம் நற்பெயர் எடுக்க போராட வேண்டி வரும். கலைத் துறையினர், யதார்த்த படைப்புகளால் புகழ் பெறுவார்கள்.

கடன் பிரச்னைகள் தீரும் காலம் இது.

மீனம்

சுக்கிரன் சாதகமாக இருப்பதால் உங்களின் செல்வாக்கு கூடும். எதிர்பாராத பணவரவு உண்டு. திருமணம் கூடி வரும். உங்கள் ரசனைக்கேற்ப வீடு, வாகனம் அமையும். உறவினர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். கடன் பிரச்சனைகளை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள்.

13-ம் தேதி முதல் புதன் 6-ல் சென்று மறைவதால் உறவினர்கள், நண்பர்களுடன் மனஸ்தாபம் வரும். பூர்விகச் சொத்து குறித்த சிக்கலுக்குச் சுமுகத் தீர்வு காண்பது நல்லது.

ராசிபலன்

17-ம் தேதி முதல் சூரியன் 6-ம் வீட்டில் ஆட்சி பெறுவதால், பிள்ளைகளால் இருந்த பிரச்னைகள் நீங்கும். அரசால் ஆதாயம் உண்டு. மேல்மட்ட அரசியல்வாதிகள் உங்களுக்கு உதவுவார்கள்.

உங்களின் தன-பாக்கியாதிபதி செவ்வாய் ஆட்சி பெற்றிருப்பதால் ஷேர், கமிஷன், ரியல் எஸ்டேட் வகைகளால் லாபம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் எதுகுறித்தும் பதற்றம் வேண்டாம்; பொறுமை அவசியம். கலைத்துறையினர் குறித்த வீண் வதந்திகள் விலகும்.

செல்வாக்கும் புகழும் உயரும் முன்னேற்ற வேளை இது.