பிரீமியம் ஸ்டோரி

மேஷம்

பூர்வ புண்ணியாதிபதி சூரியன் ஆட்சி பெற்று அமர்ந்திருப்பதால், பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். பூர்விகச் சொத்து கைக்கு வரும். பழுதடைந்த குலதெய்வக் கோயிலைப் புதுப்பிக்க உதவுவீர்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

29-ம் தேதி முதல் புதன் 6-ல் மறைவதால் பணத்தட்டுப்பாடு, நெருங்கிய நண்பர்கள், உறவினர் களுடன் மனக் கசப்பு வரக் கூடும். பயணங்கள் அலைச்சல் தரும்.

ராசிபலன்

சுக்கிரன் சாதகமாக இருப்பதால் நவீன மின்னணு, மின்சார சாதனங் கள் வாங்குவீர்கள். சமையலறையை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள். சில எதிர்பார்ப்புகள் நிறைவேறும்

1 - ம் தேதி முதல் ராகு 2 லும், கேது 8 - ம் வீட்டிலும் அமர்வதால் முன்கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டியது அவசியம். குடும்பத் திலும் சச்சரவுகள் வரக்கூடும்.

வியாபாரத்தில் அதிரடி மாற்றங் கள் செய்வீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரியின் தவறுகளைச் சுட்டிக் காட்டுவீர்கள். கலைத்துறையினரின் படைப்புகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும்.

தொட்டது துலங்கும் பொன்னான நேரம் இது.

ரிஷபம்

சுகாதிபதி சூரியன் ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதால், தாயாரின் உடல் நலம் சீராகும். வீடு, மனை வாங்குவது, கட்டுவது, அரசாங்கத்திடமிருந்து ப்ளான் அப்ரூவல் கிடைப்பது ஆகியவை சாதகமாக முடியும்.

பூர்வ புண்ணியாதிபதி புதன் 29-ம் தேதி முதல் சொந்த வீட்டில் அமர்வதால் பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டு. எதிர்பார்த்தபடி பணவரவு உண்டு. கணவன் - மனைவிக்குள் அந்நியோன்யம் பிறக்கும்.

ராசிபலன்

சுக்கிரன் சாதகமாக இருப்பதால், உங்களின் ஆரோக்கியம் கூடும். குழப்பங்கள், தடுமாற்றங்கள் நீங்கித் தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். வீண் விவாதங்கள் நீங்கும்.

1-ம் தேதி முதல் ராகு உங்கள் ராசிக்குள் நுழைவதால், ஒருவித படபடப்போடு காணப்படுவீர்கள். 7-ல் கேது அமர்வதால் சோர்வு, சலிப்பு, ஹார்மோன் பிரச்னைகள் வந்து செல்லும்.

வியாபாரத்தில் வேலையாள்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் வளைந்துகொடுத்துப் போகவும். கலைத்துறையினர், புதுமையான படைப்புகளால் புகழ் பெறுவர்.

தெளிவான முடிவுகளால் வெற்றி பெறும் வேளை இது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மிதுனம்

ங்களின் தைரிய ஸ்தானமான 3-ம் வீட்டில் சூரியன் அமர்ந்திருப்பதால், குழப்பங் களிலிருந்து விடுபடுவீர்கள். மகிழ்ச்சி உண்டாகும். பணம் எதிர்பார்த்த வகையில் வரும்.

கணவன் - மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். ஆடை, ஆபரணம் சேரும். வாகனத்தைச் சீர் செய்வீர்கள். உங்கள் ராசிநாதன் புதன் சாதகமாக இருப்பதால் உடல் ஆரோக்கியம் மேம்படும். எதிர்பார்த்த வகையில் பண உதவியுண்டு.

ராசிபலன்

குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பழைய நண்பர்களைச் சந்திப்பதால் வருங்காலத் திட்டங்களில் ஒன்று நிறைவேறும்.

சுக்கிரன் சாதகமாக நிற்பதால் வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். பூர்விகச் சொத்துப் பிரச்னை தீரும். 1-ம் தேதி முதல் கேது 6-ல் நுழைவதால், பழைய கடனைத் தீர்க்க புது வழி பிறக்கும்.

வியாபாரத்தில் புது முதலீடுகள் குறித்து ஆலோசிப்பீர்கள். உத்தி யோகத்தில் உங்கள் திறமையை மூத்த அதிகாரி பரிசோதிப்பார். கலைத் துறையினரின் நீண்ட நாள் கனவு நனவாகும்.

திட்டமிட்டு செயல்பட்டு வெற்றி காணும் வேளை இது.

கடகம்

உங்களின் தனாதிபதி சூரியன் வலுவாக இருப்பதால் பணம் வரும். ஆரோக்கியம் கூடும். அரசால் அனுகூலம் உண்டு. புதன் சாதகமான வீடுகளில் செல்வதால், எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். பால்ய நண்பர்கள், உறவினர்களின் வீட்டு விசேஷங்களில் பங்கேற்பீர்கள்.

சுக்கிரன் வலுவாக நிற்பதால் எதிர்பாராத பணவரவு உண்டு. சுப நிகழ்ச்சிகளில் முக்கியத்துவம் கிடைக்கும். 1-ம் தேதி முதல் ராகு லாப வீட்டில் நுழைவதால் திடீர் யோகம் உண்டாகும். வேற்று மொழிக்காரர்கள் நண்பர்களாவார்கள். பதவிகள் தேடிவரும்.

ராசிபலன்

உங்களை அவமானப்படுத்தியவர்கள், வலிய வந்து மன்னிப்பு கேட்பார்கள். கேது 1-ம் தேதி முதல் 5-ல் அமர்வதால் பிள்ளைகளின் போக்கைக் கண்காணிப்பது நல்லது. பூர்விகச் சொத்துப் பிரச்னை தலைதூக்கும்.

வியாபாரத்தில் வாடிக்கை யாளர்கள் அதிகரிப்பார்கள். உத்தியோகத்தில், சில ரகசியப் பொறுப்புகள் வந்து சேரும். கலைத் துறையினர், மூத்த கலைஞர்களின் நட்பைப் பெறுவீர்கள்.

வி.ஐ.பிகளால் உதவிகள் பெறும் தருணம் இது.

சிம்மம்

சுக்கிரன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் தடைப்பட்ட வேலைகள் முடியும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. விலை உயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள்.

ராசிநாதன் சூரியன் ராசிக்குள் ஆட்சி பெற்று வலுவாக நிற்பதால், தொலைநோக்குச் சிந்தனையால் சாதிப்பீர்கள். உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். பழைய பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கும். எதிர்பாராத பணம் வரும். பதவிகளும் கிடைக்கும்.

ராசிபலன்

புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் பணத்தட்டுபாடு ஓரளவு சீராகும். வீட்டிற்குத் தேவையான பொருள்களை வாங்குவீர்கள். பேச்சில் நிதானம் தேவை.

1 - ம் தேதி முதல் கேது 4-ம் வீட்டில் நுழைவதால் தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில், கடையை உங்கள் ரசனைக்கேற்ப சீர் செய்வீர்கள். 1-ம் தேதி முதல் ராகு 10 - ல் அமர்வதால், உத்தியோகத்தில் வேலைச்சுமை, இடமாற்றம் உண்டு. கலைத்துறையினர் தங்களின் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் தேடி வரும்.

செல்வம், செல்வாக்கு கைகூடும் காலம் இது.

கன்னி

உங்கள் ராசிநாதன் சூரியன் வலுவாக நிற்பதால், தொலை நோக்குச் சிந்தனையால் சாதிப் பீர்கள். பழைய பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கும். எதிர்பாராத பணம் வரும். பதவிகளும் கிடைக்கும்.

புதன் 29-ம் தேதி முதல் ராசிக்குள் வலுவாக நுழைவதால் அலைச்சல், வீண் விரயம், டென்ஷன் குறையும். சுக்கிரன் வலுவாக இருப்பதால் நினைத்தது நிறைவேறும். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். கல்யாணம் கூடி வரும்.

ராசிபலன்

1-ம் தேதி முதல் கேது 3-ம் வீட்டில் நுழைவதால் தாயாரின் உடல் நிலை சீராகும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். 1 - ம் தேதி முதல் ராகு 9-ல் அமர்வதால் தந்தைக்கு மருத்துவச் செலவுகள் வந்து போகும்.

வியாபாரத்தை புது முதலீடுகள் செய்து விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் மட்டத்தில் உங்களிம் மதிப்பும் செல்வாக்கும் கூடும். சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். கலைத்துறையினர் வேற்றுமொழி வாய்ப்புகளால் பட்டிதொட்டி எங்கும் புகழ் அடைவார்கள்.

தொலைநோக்குச் சிந்தனையால் சாதிக்கும் வேளை இது.

துலாம்

சூரியன் லாப வீட்டில் நிற்ப தால் மூத்த சகோதர வகையில் ஆதாயம் உண்டு. புதுப் பொறுப்பு களும், பதவிகளும் தேடி வரும். அரசியல்வாதிகள் உதவுவார்கள். புது வேலைக்கு முயற்சி செய்தீர் களே... நல்ல பதில் வரும்.

புதன் ஓரளவு சாதகமாக இருப்ப தால் பண வரவு ஓரளவு இருக்கும். விரும்பிய பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். ராசிநாதன் சுக்கிரன் வலுவாக நிற்பதால் வேலைச் சுமை இருந்தாலும் சமாளிப்பீர்கள். புது வாகனம் வாங்கும் யோகம் உண்டு. சிலர் வீடு மாறுவீர்கள்.

ராசிபலன்

1-ம் தேதி முதல் கேது 2-ம் வீட்டிலும், ராகு 8-ம் வீட்டிலும் அமர்வதால் குடும்பத்தினருடன் வாக்குவாதம், அவ்வப்போது தர்ம சங்கடமான சூழல்கள், செலவுகள் வந்து செல்லும்.

வியாபாரத்தில் பாக்கிகள் வசூல் ஆகும். பழைய சரக்குகளைப் போராடி விற்பீர்கள். உத்தியோகத் தில் பேச்சால் பிரச்னைகள் எழ வாய்ப்பு உண்டு. ஆகவே, பேச்சில் கவனம் தேவை. மற்றவர் பிரச்னைகளில் தலையிடுவதைத் தவிர்க்கவும். கலைத் துறையினர், சம்பள விஷயத்தில் கறாராக இருங்கள்.

தடைகளைத் தாண்டி சாதிக்கும் நேரம் இது.

விருச்சிகம்

பிரபல யோகாதிபதி சூரியன் ஆட்சி பெற்றிருப்பதால் உத்தியோகத்தில் உயர்வு உண்டு. அரசாங்க விஷயங்கள் சாதகமாக முடியும். புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் தடைப்பட்ட வேலைகள் முழுமையடையும்.

பால்ய நண்பர்களின் சுபநிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். விலையுயர்ந்த ஆடை - அணிகள் வந்து சேரும். சுக்கிரன் ஓரளவு சாதகமாக இருப்பதால் பணவரவு இருக்கும். வாகனம் வாங்குவீர்கள்.

ராசிபலன்

வாழ்க்கைத் துணைவரின் ஆரோக்கியம் சீராகும். இதுவரை 2-ல் அமர்ந்து உங்களைப் பிரச்னை களில் சிக்க வைத்த கேது 1-ம் தேதி முதல் ராசிக்குள் நுழைவதால், இனி பேச்சு சாதுர்யத்தால் சாதிப்பீர்கள்.தலைச்சுற்றல், செரிமானக் கோளாறு வந்து செல்லும்.

ராகு 7- ல் நுழைவதால் வீட்டில் கருத்து மோதல்கள் எழும்.

வியாபாரத்தில் புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி பெறும். பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில், உங்களுக்குப் புதிய பொறுப்புகள் தேடி வரும். கலைத்துறையினரின் வருமானம் உயர வழி பிறக்கும்.

இடைவிடாத உழைப்பால் இலக்கை எட்டும் காலம் இது.

தனுசு

பாக்கியாதிபதி சூரியன் வலுவாக இருப்பதால் பண வரவு உண்டு. செல்வாக்கு கூடும். சிலர் புதுப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.

புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் சொந்தபந்தங்களின் உதவியுண்டு. பூர்விகச் சொத்தை மாற்றியமைப்பீர்கள். பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.

ராசிபலன்

சுக்கிரன் சாதமகமாக இருப்பதால் சோர்வு நீங்கி உற்சாகமடைவீர்கள். புது முடிவுகள் எடுப்பீர்கள். உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும். 1 - ம் தேதி முதல் ராசியை விட்டு கேது விலகுவதாலும், ராகு 6-ல் நுழைவதாலும் எதிர்ப்புகள் அடங்கும். உடல் ஆரோக்கியம் சீராகும். பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேர்வர். வாழ்க்கைத் துணைவர் வழி உறவினர்களுடன் பிணக்குகள் நீங்கும்.

வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். வேலையாள்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்க வில்லையே என ஆதங்கப்படுவீர்கள். கலைத்துறையினரின் படைப்புகளுக்குப் பரிசு, பாராட்டு கிடைக்கும்.

தள்ளிப்போன விஷயங்கள் விரைந்து முடியும் காலம் இது.

மகரம்

சூரியன் வலுவாக இருப்பதால் குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். உங்கள் பாக்கியாதிபதி புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் வரவேண்டிய பணம் வந்துசேரும். உறவினர்கள் உங்களைப் பற்றிப் பெருமையாகப் பேசுவார்கள்.

30-ம் தேதி வரை சுக்கிரன் 6- ல் மறைந்திருப்பதால், முன்பு ஆதரவாகப் பேசியவர்களெல்லாம் உங்களைக் கண்டு ஒதுங்குவார்கள்.

ராசிபலன்

பிள்ளைகள் இன்னும் கொஞ்சம் கடினமாக உழைத்தால் நல்லது என நினைப்பீர்கள். 31-ம் தேதி முதல் சுக்கிரன் சாதகமாவதால் உறவினர்களுடன் இருந்து வந்த கருத்து மோதல்கள் விலகும்.

1-ம் தேதி முதல் கேது லாப வீட்டில் நுழைவதால் ஷேர் மூலம் பணம் வரும். புதுப் பதவி தேடி வரும். ராகு 5 - ல் அமர்வதால் இனம்தெரியாத கவலைகள் வந்து செல்லும்.

வியாபாரத்தில் வேலையாள்கள், பங்குதாரர்களால் மறைமுகப் பிரச்னைகள் வரக்கூடும். உத்தியோகத்தில், உயரதிகாரிகள் நெருக்கம் ஆவார்கள். கலைத் துறையினரின் படைப்புகளுக்குச் சிலர் உரிமை கொண்டாடுவார்கள்.

வளைந்துகொடுத்து வளர வேண்டிய காலம் இது.

கும்பம்

சூரியன் ஓரளவு சாதகமாக இருப்பதால் அரசுக் காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். சகோதர வகையில் ஆரோக்கியமான விவாதங்கள் வரும். ஒரு சொத்தை விற்றுச் சில பிரச்சினைகளில் இருந்து வெளி வருவீர்கள்.

புதன் சாதகமாவதால் பண வரவு அதிகரிக்கும். புது ஆடை, ஆபரணங்கள் சேரும். தூரத்து உறவினர்கள் தேடி வருவார்கள். பிள்ளைகளை நல்வழியில் கொண்டு செல்ல முற்படுவீர்கள்.

ராசிபலன்

30 - ம் தேதி வரை சுக்கிரன் 5-ம் வீட்டில் நிற்பதால் புதிய சிந்தனைகள் உருவாகும். எதிர்பார்த்த பணம் வரும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தைத் தந்து முடிப்பீர்கள்.

1 - ம் தேதி முதல் ராகு 4 - ம் வீட்டில் அமர்வதால், தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வந்து செல்லும்; கேது 10-ல் நுழைவ தால் வேலைச்சுமை அதிகரிக்கும்.

வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில், அதிகாரிகள் குறைகளைச் சுட்டிக் காட்டினால் அமைதியாக ஏற்றுக் கொள்ளுங்கள். கலைத் துறையினரின் படைப்புத் திறன் வளரும்.

சிந்தித்துச் செயல்பட வேண்டிய வேளை இது.

மீனம்

சூரியன் 6-ம் வீட்டில் ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதால் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பெரிய பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வங்கிக் கடன் உதவி கிடைக்கும். வழக்கு சாதகமாகும்.

29-ம் தேதி முதல் புதன் 7-ல் சாதகமாக அமர்வதால் ஓரளவு பண வரவு உண்டு. கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். சுக்கிரன் சாதகமான வீடுகளில் நிற்பதால், பழைய வீட்டை இடித்துக் கட்டுவீர்கள். புறநகர்ப் பகுதியில் புது வீடு, மனை வாங்குவீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள்.

ராசிபலன்

1-ம் தேதி முதல் ராகு 3 - ல் அமர்வதால் புதிய கோணத்தில் யோசித்துப் பழைய சிக்கல்களைத் தீர்ப்பீர்கள்; கேது 9 - ல் நுழைவதால் சேமிப்புகள் கரையும். தந்தைக்கு நெஞ்சு வலி, ரத்த அழுத்தம், வேலைச்சுமை வந்து செல்லும்.

வியாபாரத்தில் ஆர்வம் பிறக்கும். புது முதலீடுகளைத் தவிர்க்கவும். உத்தியோகத்தில் முக்கியக் கோப்புகளைக் கையாளும்போது அலட்சியம் வேண்டாம். கலைத் துறையினருக்குப் பெரிய நிறுவனங் களிலிருந்து வாய்ப்புகள் வரும்; பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

அதிரடி திட்டங்களால் வெற்றி பெறும் வேளை இது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு