Published:Updated:

ராசிபலன்

மேஷம்
பிரீமியம் ஸ்டோரி
News
மேஷம்

டிசம்பர் 17 முதல் 30-ம் தேதி வரை

மேஷம்

ங்களின் தனஸ்தானாதிபதி சுக்கிரன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் பணவரவு அதிகரிக்கும். வீட்டின் அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்திசெய்வதில் ஏற்பட்ட சிரமங்கள் நீங்கும். கணவன் மனைவிக்குள் நிலவிய பனிப்போர் விலகும். பூர்வ புண்ணியாதிபதி சூரியன் 9-ம் வீட்டில் சனி, கேதுவுடன் இணைவதால் பிள்ளைகளால் அலைச்சல், செலவுகள் ஏற்படும்.

மேஷம்
மேஷம்

குரு 9-ம் வீட்டில் நிற்பதால் உறவினர்களுடனான கருத்துமோதல்கள் விலகும். அரசாங்க விஷயங்களில் வெற்றி கிடைக்கும். புதன் சாதகமான வீடுகளில் செல்வதால், பழைய நண்பர்கள் உங்களின் தேவையறிந்து உதவுவார்கள். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. வியாபாரத்தில் புதிதாக ஏஜென்சி எடுப்பீர்கள். உத்தியோகத்தில் அடுக்கடுக்கான வேலைகளால் மன இறுக்கம் அதிகரிக்கும். கலைத்துறையினருக்குப் புதிய சலுகைகள் கிடைக்கும்.

மனத்தில் உற்சாகம் பிறக்கும் வேளை இது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

ரிஷபம்

ங்களின் ராசிக்கு 6-ம் வீட்டில் செவ்வாய் வலுவாக இருப்பதால், எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். கணவன் மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும்.

ரிஷபம்
ரிஷபம்

ராசிநாதன் 9-ம் வீட்டில் நிற்பதால் வீடு, மனை வாங்கவும் விற்கவும் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியடையும். 8-ம் வீட்டில் சூரியன், சனி, கேது, குரு ஆகிய கிரகங்கள் மறைந்து நிற்பதால், உடல் நலனில் கவனமாக இருப்பது நல்லது. புதன் சாதகமாக இருப்பதால் விலகிச்சென்ற உறவினர்கள் விரும்பிவந்து பேசுவார்கள். புதிய நட்பு மலரும். வியாபாரத்திலிருப்பவர்கள் தங்களின் கடையை விரிவுபடுத்துவார்கள். உத்தியோகத்திலிருப்பவர்களின் திறமையை மூத்த அதிகாரி பரிசோதிப்பார். முனைப்புடன் பணி புரிந்தால் வெற்றி உண்டு. கலைத்துறையினரின் படைப்புகளுக்கு நல்ல வரவேற்பு உண்டு.

நினைத்ததை முடிக்கும் காலம் இது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மிதுனம்

சுக்கிரன் 8-ம் வீட்டில் மறைந்திருக்கிறார். பணவரவு குறையாது. குலதெய்வப் பிரார்த்தனைகள் நிறைவேறும். சூரியன் 7-ம் வீட்டில் சனி, கேதுவுடன் அமர்வதால் தியானம், யோகா பயிற்சி வகுப்புகளில் சேர்வது நல்லது. அரசாங்கக் காரியங்கள் தாமதமாக முடியும்.

மிதுனம்
மிதுனம்

7-ம் வீட்டில் குரு அமர்ந்திருப்பதால் புதிதாக ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். 20-ம் தேதி வரை ராசிநாதன் புதன் 6-ம் வீட்டில் மறைவதால் வேலைச்சுமை அதிகரிக்கும். ஆனால், 21-ம் தேதி முதல் புதன், ராசியைப் பார்ப்பதால் ஓரளவு பணவரவு உண்டு. வெகுநாள்களாகப் பார்க்க நினைத்தும் முடியாமல்போன நண்பர்களை இப்போது சந்திப்பதன் மூலம் மகிழ்ச்சியில் மூழ்குவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, புதிய சலுகைகளை அறிமுகப்படுத்துவீர்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமை குறையும். கலைத்துறையினரின் கற்பனைத் திறன் வளரும்.

புதிய முயற்சிகளில் வெற்றி காணும் தருணம் இது.

கடகம்

சுக்கிரன் 7-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் கணவன் மனைவிக்குள் இருந்த மனஸ்தாபம் நீங்கும். வாகனப் பழுதைச் சரிசெய்வீர்கள். புதிய டிசைனில் நகைகள் வாங்குவீர்கள். சூரியன், சனி, கேது ஆகிய கிரகங்கள் 6-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் எதிர்ப்புகள் அடங்கும். அரசாங்கக் காரியங்கள் சுலபமாக முடியும். வழக்கு சாதகமாகும்.

கடகம்
கடகம்

குரு 6-ம் வீட்டில் மறைந்திருப்பதால் அலைச்சல் இருக்கும். மறைமுக எதிர்ப்புகள் விலகும். புதன் 21-ம் தேதி வரை சாதகமாக இருப்பதால் தன்னம்பிக்கை துளிர்விடும். புண்ணிய நதிகளில் நீராடுவீர்கள். சித்தர்களின் ஆசி கிடைக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனைக்கேற்ற பொருள்களைக் கொள்முதல் செய்து லாபத்தைப் பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் வீண் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். கலைத்துறையினர் போராடி வாய்ப்புகளைப் பெற வேண்டியிருக்கும்.

தடைகளைத் தாண்டி முன்னேறும் தருணம் இது.

சிம்மம்

சூரியனும் குருவும் ஒரே வீட்டில் அமர்ந்திருப்பதால், மனத்தில் உற்சாகம் பிறக்கும். உறவினர்கள், நண்பர்களுடன் இருந்த மனக்கசப்பு நீங்கும். தந்தைவழி உறவினர்கள் தேடி வந்து உதவுவார்கள்.

சிம்மம்
சிம்மம்

குரு பகவான் வலுவாக அமர்ந்திருப்பதால் பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலை கிடைக்கும். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்துப்போவது நல்லது. புதன் சாதகமாக அமைந்திருப்பதால் உங்கள் பேச்சில் தெளிவு பிறக்கும். பிள்ளைகளின் செயல்களை நினைத்து மகிழ்வீர்கள். சகோதரி உதவுவார். விருந்தினர் களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். வியாபாரத்தின் நெளிவு சுளிவுகளைக் கற்றுக்கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்களின் கை ஓங்கும். கலைத்துறையினர் தங்களின் படைப்புகள் பற்றி மற்றவர்களிடம் விவாதிக்க வேண்டாம்.

மாறுபட்ட அணுகுமுறையால் சாதிக்கும் வேளை இது.

கன்னி

புதன் சாதகமான வீடுகளில் செல்வதால், அரசாங்கக் காரியங்களைச் சிரமமில்லாமல் முடிக்க வழி பிறக்கும். வீட்டை விரிவுபடுத்துவீர்கள். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். அண்டை வீட்டாரின் ஆதரவு கிடைக்கும். சூரியன் ஓரளவு சாதகமாக இருப்பதால் விரயங்களைக் கட்டுப்படுத்துவீர்கள். புண்ணிய தலங்களுக்குச் செல்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. பழைய பாக்கிகள் வந்து சேரும். புதிய இடத்தில் நல்ல வேலை கிடைக்கும்.

கன்னி
கன்னி

சுக்கிரன் 5-ம் வீட்டில் நிற்பதால் குழந்தை பாக்கியம் சிலருக்குக் கிடைக்கும். பிள்ளைகளைப் புதிய பயிற்சி வகுப்பில் சேர்ப்பீர்கள். வியாபாரத்தில் மாறுபட்ட அணுகுமுறையால் லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். கலைத் துறையினர் மூத்த கலைஞர்களின் பாராட்டைப் பெறுவார்கள்.

அடிப்படை வசதிகள் பெருகும் காலம் இது.

துலாம்

ங்களின் ராசிநாதன் சுக்கிரன் வலுவாக நிற்பதால், திட்டமிட்ட காரியங்கள் நல்லவிதத்தில் முடியும். வாகனத்தை மாற்றுவீர்கள். பணவரவு உண்டு. மகளுக்கு எதிர்பார்த்த இடத்தில் நல்ல வரன் அமையும். 3-ம் வீட்டில் சூரியன், சனி, கேது ஆகிய கிரகங்கள் அமர்ந்திருப்பதால், இழுபறி நிலை மாறும். பேச்சில் நிதானம் உண்டாகும். அரசாங்க வகையில் ஆதாயம் உண்டு. உயரதிகாரிகள் உதவுவார்கள்.

துலாம்
துலாம்

கௌரவப் பதவிகள் தேடி வரும். மூத்த சகோதரர் வகையில் நன்மை உண்டாகும். புதன் உங்களுக்கு சாதகமாக இருப்பதால் எதிர்பார்த்த காரியங்கள் கைகூடி வரும். சொத்துப் பிரச்னை ஒரு முடிவுக்கு வரும். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பு கிடைக்கும். கலைத்துறையினரைப் பழைய நிறுவனங்கள் அழைத்துப் பேசும்.

யதார்த்தமான முடிவுகளால் முன்னேறும் தருணம் இது.

விருச்சிகம்

சுக்கிரனும் புதனும் சாதகமாக இருப்பதால் புதிய கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கலைத் தீர்ப்பீர்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். சூரியன் ராசியை விட்டு விலகுவதால், அரைகுறையாக நின்ற வேலைகள் இனி விரைந்து முடியும். 2-ம் வீட்டில் சனி, கேதுவுடன் சேர்ந்திருப்பதால் உடல்நலனில் கவனமாக இருப்பது நல்லது.

விருச்சிகம்
விருச்சிகம்

குரு பகவான் சாதகமாக இருப்பதால், மறைமுக எதிர்ப்புகள் விலகும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். குடும்பத்தினருக்காக அதிக நேரம் ஒதுக்கி மனம்விட்டுப் பேசுவீர்கள். பிள்ளைகள் தங்களின் பொறுப்பை உணர்ந்து நடந்துகொள்வார்கள். வியாபாரத்தில் வரவு சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் வேலையைத் தேக்கிவைக்காமல் அவ்வப்போது முடிப்பது நல்லது. கலைத்துறையினர் மறைமுகப் போட்டிகளைச் சமாளித்து முன்னேறுவார்கள்.

செலவுகளைக் கட்டுப்படுத்தவேண்டிய நேரம் இது.

தனுசு

சுக்கிரன் சாதகமாக இருப்பதால், எதிர்பாராத பணவரவு உண்டு. உங்கள் ரசனைக்கேற்ப வீடு, வாகனம் அமையும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். உறவினர்கள், நண்பர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களைப் பகிர்ந்துகொள்வார்கள். புதன் வலுவாக இருப்பதால் எதிரிகளும் நண்பர்களாவார்கள். அரசாங்கக் காரியங்களில் இழுபறி நிலை ஏற்படும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.

தனுசு
தனுசு

ராசியிலேயே சனி, கேது, குருவுடன் சூரியனும் நுழைவதால் தந்தையின் உடல்நலத்தில் அவ்வப்போது கவனம் தேவை. உங்களின் செயல்களில் வேகம் தேவைப்படும் நேரம் இது. உங்களின் பணிகளை விரைந்து முடிப்பது நல்லது. பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். கலைத்துறையினருக்குப் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவேண்டிய வேளை இது.

மகரம்

புதன் வலுவாக இருப்பதால், நீண்ட நாள்களுக்குப் பிறகு உங்களின் பழைய நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். புதிய எண்ணங்கள் மனத்தில் தோன்றும். தாயாரின் உடல்நலம் சீராகும். வெளியூரிலிருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். சுக்கிரன் சாதகமாக இருப்பதால் வீட்டைக் கட்டி முடிக்க வங்கிக் கடன் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும்.

மகரம்
மகரம்

சூரியன், சனி, கேது, குரு ஆகிய கிரகங்கள் 12-ம் வீட்டில் மறைந்திருப்பதால் திடீர்ப் பயணங்கள், செலவுகள் ஏற்படும். புண்ணிய தலங்களுக்குச் சென்று வருவீர்கள். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். பழைய சரக்குகளைப் போராடி விற்பீர்கள். உத்தியோகத்தில், வேலைப்பளு அதிகரிக்கும். அதிகாரிகள் சொல்வதை உடனே செயல்படுத்துங்கள். கலைத்துறையினர், சம்பள விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது.

அமைதியான அணுகுமுறையால் வெற்றிபெறும் வேளை இது.

கும்பம்

ங்களின் ராசிக்கு லாப வீட்டில் முக்கிய கிரகங்கள் சாதகமாகச் செல்வதால், எதிர்த்தவர்களும் நண்பர்களாவார்கள். நாடாளுபவர்கள் உதவுவார்கள். அரசியலில் செல்வாக்கு அதிகரிக்கும். வீடு கட்ட அனுமதி கிடைக்கும். குடும்பத்தினர் உங்களின் ஆலோசனையை ஏற்பர். பிள்ளைகள் உங்களின் அருமையைப் புரிந்துகொள்வார்கள். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.

கும்பம்
கும்பம்

சுக்கிரன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் பண வரவு திருப்தி தரும். மதிப்பு, மரியாதை கூடும். வீடு மாறத் திட்டமிடுவீர்கள். புதன் சாதகமாக இருப்பதால், எதிர்பார்த்த வகையில் உதவி உண்டு. பணவரவு அதிகரிக்கும். வாகனத்தை மாற்றுவீர்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபம் அடைவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். கலைத்துறையினர், அயல்நாட்டு நிறுவனங்களிலிருந்து வாய்ப்புகளைப் பெறுவார்கள்.

செல்வமும் செல்வாக்கும் பெருகும் காலம் இது.

மீனம்

சுக்கிரன் சாதகமாக இருப்பதால் பேச்சைக் குறைத்து செயலில் வேகம் காட்டுவீர்கள். உயர் அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமை ஓங்கும். பிள்ளைகளின் தனித்திறமைகளைக் கண்டறிவீர்கள். நவீனரக வாகனம் வாங்குவீர்கள்.

மீனம்
மீனம்

சூரியன் 10-ம் வீட்டில் சனி, கேது, குருவுடன் நிற்பதால் நல்ல வேலை கிடைக்கும். அரசாங்க அதிகாரிகளின் உதவியுடன் சில விஷயங்களை உடனே முடிப்பீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. பழைய கடனைத் தீர்க்க புதிய வழி பிறக்கும். புதன் சாதகமாக இருப்பதால் மனத்தில் புத்துணர்ச்சி ததும்பும். உங்களின் முயற்சிகள் சாதகமாக முடியும். அயல்நாட்டுப் பயணங்கள் தேடிவரும். பிரார்த்தனைகளைப் பூர்த்திசெய்வதன் மூலம் நிம்மதியடைவீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி உங்கள் ஆலோசனையை ஏற்பார். கலைத் துறையினருக்கு வசதிவாய்ப்புகள் பெருகும்.

நினைத்ததை முடிக்கும் நேரம் இது.