Published:Updated:

ராசிபலன்

மேஷம்
பிரீமியம் ஸ்டோரி
மேஷம்

டிசம்பர் 3 முதல் 16 - ம் தேதி வரை

ராசிபலன்

டிசம்பர் 3 முதல் 16 - ம் தேதி வரை

Published:Updated:
மேஷம்
பிரீமியம் ஸ்டோரி
மேஷம்

அசுவினி, பரணி கிருத்திகை 1-ம் பாதம்

மேஷம்

சூரியனும் புதனும் 8-ம் வீட்டில் வலுவாக இருப்பதால், அரசு தொடர்பான காரியங்களில் வெற்றி உண்டு. திட்டமிட்டு சில வேலைகளைச் செய்வீர்கள். சொந்தபந்தங்களிடையே கலகலப்பாகப் பேசி மகிழ்வீர்கள். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். புண்ணிய க்ஷேத்திரங்களுக்குச் சென்று வருவீர்கள். பழைய வாகனத்தை மாற்றுவீர்கள். அண்டைவீட்டாரின் ஆதரவு கிடைக்கும்.

சுக்கிரனும் குருவும் 9-ம் வீட்டில் நிற்பதால் எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். புதிய டிசைனில் நகைகள், ஆடைகள் வாங்குவீர்கள். மகனுக்கு நல்ல மணப்பெண் அமைவார். மகளுக்கு வேலை கிடைக்கும். வியாபாரத் தில், போட்டியாளர்களைச் சமாளிக்கப் போராடுவீர்கள். உத்தியோகத்தில், மேலதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள்; அவர் மூலம் முன்னேற்றம் உண்டு. கலைத்துறையினர், கவலைகள் நீங்கி உற்சாகத்துடன் காணப் படுவார்கள்.

திறம்பட செயல்பட்டு காரியங்களைச் சாதிக்கும் தருணம் இது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ரிஷபம்

ரிஷபம்
ரிஷபம்

ங்களின் சுகஸ்தானாதிபதி சூரியனும் பூர்வபுண்யாதிபதி புதனும் ஒன்று சேர்ந்திருப்பதால் பணவரவு, வீடு, மனை சேர்க்கை, நாடாளுபவர் களின் நட்பு எல்லாம் கிடைக்கும். அரசாங்க வேலைகள் விரைந்து நிறைவேறும். ராசிநாதன் சுக்கிரன் ஓரளவு சாதகமாக இருப்பதால் தடைகளைத் தாண்டி முன்னேறுவீர்கள். வாகனத்தைச் சீர்செய்வீர்கள்.

செவ்வாய் 6-ம் வீட்டில் நிற்பதால் வீட்டை விரிவுபடுத்தும் பணி சிறப்பாக முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். உறவினர்கள், நண்பர்கள் வீட்டுத் திருமணத்தைச் சிறப்பாக நடத்தி முடிப்பீர்கள். விலையுயர்ந்த பொருள்களில் கவனம் தேவை. வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். எனினும் சாமர்த்தியமாகச் சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் தலையிடாதீர்கள். கலைத்துறையினருக்கு, எதிலும் வேகம் கூடாது. எடுக்கும் காரியங்களில் நிதானத்துடன் செயல்படுவது நல்லது.

சாமர்த்தியமாகச் சாதிக்கும் காலம் இது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மிதுனம்

மிதுனம்
மிதுனம்

ராசிக்கு 6-ம் வீட்டில் சூரியன் வலுவாக இருப்பதால், அரசாங்கக் காரியங்களில் வெற்றியுண்டு. பிரபலங்களின் உதவியை நாடுவீர்கள். உங்கள் ராசிநாதன் புதன் 6-ம் வீட்டில் மறைந்திருப்பதால் அலைச்சல், டென்ஷன் அதிகரிக்கும். ஓரளவு பணவரவு உண்டு. குருவும் உங்களின் பூர்வ புண்ணியாதிபதி சுக்கிரனும் ராசியைப் பார்த்துக்கொண்டே இருப்ப தால், சவாலான காரியங்களைக்கூட சாமர்த்தியமாகச் செய்து முடிப்பீர்கள்.

கணவன் மனைவிக்குள் மனம்விட்டுப் பேசுவீர்கள். குழந்தை பாக்கியம் சிலருக்குக் கிடைக்கும். மகனுக்கு வேலை கிடைக்கும். நல்ல மணப்பெண்ணும் அமைவாள். வியாபாரத்தில் சுமுகமான நிலை காணப்படும். வாடிக்கையாளர்களைத் திருப்திப்படுத்த புதிய சலுகைகளை அறிமுகப்படுத்துவீர்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும் என்றாலும் சமாளிப்பீர்கள். கலைத்துறையினருக்குச் சம்பளப் பாக்கி கைக்கு வந்து சேரும்.

சகிப்புத்தன்மையால் சாதித்துக் காட்டும் தருணம் இது.

கடகம்

கடகம்
கடகம்

4-ம் வீட்டில் செவ்வாய் நிற்பதால் தைரியம் கூடும். சகோதரர் உங்களின் வளர்ச்சிக்கு உதவுவார். வி.ஐ.பி-களிடமிருந்து எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். புண்ணிய தலங்களுக்குச் சென்று வருவீர்கள். விவாதங்களில் வெற்றிபெறுவீர்கள். சூரியன் சரியில்லாமலிருந்தாலும் புதன் சாதகமாக இருப்பதால், பிள்ளைகளால் பெருமையடைவீர்கள்.

6-ம் வீட்டில் சுக்கிரனும் குருவும் மறைந்திருப்பதால் கணவன் மனைவிக்கு இடையே வீண் வாக்குவாதங்கள் வேண்டாம். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போகவும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள்; எதிர்பார்த்த லாபம் உண்டு. உத்தியோகத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். மறைமுக எதிர்ப்புகள் இருக்கும். பணியில் அலட்சியம் கூடாது; கூடுதல் கவனம் செலுத்துங்கள். கலைத்துறையினருக்குச் சக கலைஞர்களால் பிரச்னை எழ வாய்ப்பு உண்டு. அவர்களுடன் அளவோடு பழகுவது நல்லது.

சிலரின் உள்மனத்தை உணர்ந்துகொள்ளும் வேளை இது.

சிம்மம்

சிம்மம்
சிம்மம்

சூரியனும் புதனும் வலுவாக இருப்பதால் தடைப்பட்ட வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். கணவன் மனைவிக்குள் நிலவி வந்த பனிப்போர் மறையும். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துப் போவீர்கள். பணத்தைத் தராமல் ஏமாற்றியவர்கள் தேடிவந்து தருவார்கள். சுக்கிரனும் குருவும் 5-ம் வீட்டில் நிற்பதால் பிள்ளைகள் உங்கள் பேச்சுக்கு மதிப்பளிப்பார்கள். மனைவி வழியில் மதிப்பு, மரியாதை கூடும். குழந்தை பாக்கியம் சிலருக்குக் கிடைக்கும். சிலர் புது வீட்டுக்கு மாறுவீர்கள்.

செவ்வாய் 3-ம் வீட்டில் நிற்பதால் தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுத்து வெற்றிபெறுவீர்கள். வீடு, மனை வாங்குவது விற்பது லாபகரமாக அமையும். வியாபாரத்தில், பங்குதாரர்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில், பணிகளை விரைந்து முடிப்பது நல்லது. கலைத் துறையினருக்குச் சம்பளப் பாக்கி கைக்கு வரும்.

சகிப்புத்தன்மை தேவைப்படும் தருணம் இது.

கன்னி

கன்னி
கன்னி

ராசிக்கு 3-ம் வீட்டில் சூரியனும் ராசிநாதன் புதனும் சாதகமாக இருப்பதால், சமூகத்தில் அந்தஸ்துமிக்கவர்களின் அறிமுகம் கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகளை முறியடிப்பீர்கள். வழக்குகள் சாதகமாக முடியும். உங்கள் தனஸ்தானபதியும் பாக்யாதிபதியுமான சுக்கிரன் 4-ம் வீட்டில் வலுவாக நிற்பதால் எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். வீடு வாங்கும் முயற்சியில் முன்னேற்றம் உண்டு. வங்கிக்கடன் கிடைக்கும். தந்தைவழிச் சொத்துகள் கிடைக்கும்.

குடும்பத்தில் முக்கிய பொறுப்புகள் உங்கள் கைக்கு மாறும். மகளுக்கு நல்ல வரன் அமையும். செவ்வாய் 2-ம் வீட்டில் நிற்பதால், சாமர்த்தியமாகச் செயல்பட்டு சாதிப்பீர்கள். உடன்பிறப்புகள் உதவிகரமாக இருப்பார்கள். சொத்து வாங்க முன்பணம் தருவீர்கள். வியாபாரத்தில் சரக்குகள் விற்றுத் தீரும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடத்துக்கு மாற்றம் கிடைக்கும். கலைத்துறையினரைப் புகழ்பெற்ற நிறுவனங்கள் அழைத்துப் பேசும்.

வெற்றியை நோக்கி முன்னேறும் வேளை இது.

துலாம்

துலாம்
துலாம்

ராசிநாதன் சுக்கிரன் 3-ம் வீட்டில் நிற்பதால் புதிய முயற்சிகள் பலிதமாகும். தொட்டது துலங்கும். எதிர்ப்புகள் நீங்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். ஆடை, அணிகலன்கள் சேரும். வாகனப் பழுதைச் சரிசெய்வீர்கள். திருமணம், சீமந்தத்தை முன்னின்று நடத்துவீர்கள். புதன் சாதகமாக இருப்பதால் அயல்நாட்டிலிருக்கும் உறவினர்கள், நண்பர்கள் உதவுவர். கல்யாணம், கோயில் நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். அரசு வகை வேலைகளில் வெற்றியுண்டு.

செவ்வாய் ராசிக்குள் நிற்பதால் எதையும் திட்டமிட்டு செய்வீர்கள். எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். பாதிப் பணம் தந்து முடிக்காமலிருந்த சொத்தை மீதிப்பணம் தந்து பத்திரப்பதிவு செய்வீர்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் சக ஊழியர் களிடம் குறை சொல்லிக்கொண்டிருக்காதீர்கள். கலைத்துறையினர், சக கலைஞர்களிடம் வீண் வாக்குவாதங்கள் செய்யவேண்டாம்.

சிந்தனைத்திறனால் சாதிக்கும் காலம் இது.

விருச்சிகம்

விருச்சிகம்
விருச்சிகம்

சூரியனும் புதனும் ராசிக்குள் நிற்பதால், பாதியில் நின்றுபோன பல வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த வகையில் உதவியுண்டு. பழைய சிக்கலுக்கு நல்ல வழி பிறக்கும். குடும்பத்தில் நிலவிவந்த கூச்சல், குழப்பங்கள் விலகும். உறவினர்களால் ஆதாயமுண்டு. ஆனால், கோபத்தைக் கட்டுப்படுத்திக்கொள்ளுங்கள்.

2-ம் வீட்டில் சுக்கிரனும் குருவும் நிற்பதால் இங்கிதமாகப் பேசத் தொடங்குவீர்கள். கொடுத்த பணத்தை சாமர்த்தியமாகப் பேசி வசூலிப்பீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். கல்யாணப் பேச்சுவார்த்தை நல்லவிதமாக முடியும். உங்கள் ரசனைக்கேற்ற வீடு அமையும். சிலர் திடீரென வீடு மாற வேண்டி வரும். வியாபாரத்தில் வரவு உயரும். உத்தியோகத்தில் பணிகளில் இருந்த தேக்கநிலை மாறும். முன்னேற்றப் பாதை புலப்படும். கலைத்துறையினரின் எண்ணங்கள் பூர்த்தியாகும்.

அனுபவ அறிவைப் பயன்படுத்தி வெற்றிபெறும் வேளை இது.

தனுசு

தனுசு
தனுசு

செவ்வாய் வலுவாக லாப வீட்டில் இருப்பதால், உடன் பிறந்தவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். பூர்வீகச் சொத்துப் பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கும். உங்களால் வளர்ச்சியடைந்த சிலர், நன்றி மறவாமல் இப்போது உங்களுக்கு உதவுவார்கள். ராசிக்கு 12-ம் வீட்டில் சூரியனும் புதனும் வலுவாக இருப்பதால் திட்டவட்டமான முடிவுகளை எடுப்பீர்கள். குடும்பத்தில் சுபகாரியங்கள் ஏற்பாடாகும். கணவன் மனைவிக்குள் மனம்விட்டுப் பேசுவீர்கள்.

சுக்கிரன் ராசிக்குள் நிற்பதால் பணவரவு திருப்திகரமாக இருக்கும். ஆடை, ஆபரணங்கள் சேரும். குரு, கேது, சனி ராசிக்குள் நிற்பதால் அலைச்சல்கள் அதிகரிக்கும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் அலுவல் ரகசியங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம். கலைத்துறையினருக்குப் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

திடமான முடிவுகளால் வெற்றி காணும் காலம் இது.

மகரம்

மகரம்
மகரம்

சூரியனும் புதனும் ராசிக்கு 11-ம் வீட்டில் பலமாக இருப்பதால் வரவேண்டிய பணம் கைக்கு வரும். வி.ஐ.பி-களின் அறிமுகமும் அவர்களால் உதவிகளும் கிடைக்கும். பழைய பிரச்னைகளுக்குத் தெளிவான முடிவு கிடைக்கும். கணவன் மனைவிக்குள் அந்நியோன்யம் பிறக்கும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள்.

சுக்கிரன் 12-ம் வீட்டில் நிற்பதால் செலவுகள் அதிகமாகும். சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். தடைப்பட்ட திருமணப் பேச்சுவார்த்தை நல்லவிதத்தில் முடியும். செவ்வாய் வலுவாக இருப்பதால் பாதியிலேயே நின்றுபோன பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புதிய இடத்தில் வேலை கிடைக்கும். வியாபாரத்தில் நம்பிக்கைக்குரியவர்களின் ஆலோசனையை ஏற்று கடையை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மத்தியில் ஈகோ பிரச்னை வரும். கலைத்துறையினரின் எண்ணங்கள் பூர்த்தியாகும்.

தடைப்பட்ட காரியங்கள் இனிதே நடந்தேறும் காலம் இது.

கும்பம்

கும்பம்
கும்பம்

சூரியனும் புதனும் சாதகமாக இருப்பதால் அரசாங்க விஷயங்களில் வெற்றியுண்டு. நாடாளுபவர்களின் சந்திப்பு நிகழும். வெளி மாநில புண்ணிய தலங்களுக்குச் சென்று வருவீர்கள். உங்களின் லாப வீட்டில் குரு, சுக்கிரன், சனி, கேது ஆகிய கிரகங்கள் அமர்ந்திருப்பதால் எதிர்பார்த்த வகையில் பணம் வரும். வி.ஐ.பி-களின் தொடர்பு கிடைக்கும். ஷேர் மூலம் பணம் வரும். வீடு வாங்குவது, கட்டுவது சாதகமாக அமையும்.

குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். பிள்ளைகளை உற்சாகப்படுத்த, கேட்டதை வாங்கித் தருவீர்கள். வீட்டுக்குத் தேவையான பொருள்களை வாங்குவீர்கள். பயணங்கள் திருப்திகரமாக அமையும். வியாபாரத்தில் நம்பிக்கைக்குரியவர்களிடம் ஆலோசனை செய்து புதிய முடிவுகள் எடுப்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் வீண் வாக்குவாதம் செய்ய வேண்டாம். கலைத்துறையினருக்கு வேலைச்சுமை அதிகரித்தாலும் புது அனுபவம் உண்டாகும்.

புதிய சிந்தனைகள் மனத்தில் உருவாகும்.

மீனம்

மீனம்
மீனம்

சூரியன் 9-ம் வீட்டில் நிற்பதால் பழைய கடனைத் தீர்க்க புதிய வழி பிறக்கும். புதனும் சாதகமாக இருப்பதால் பால்ய நண்பர்களால் சில உதவிகள் கிடைக்கும். இஷ்டதெய்வத்தை வணங்க வெளியூர்ப் பயணங்களை மேற்கொள்வீர்கள். புண்ணிய தீர்த்தத்தில் நீராடுவீர்கள்.

சுக்கிரன் 10-ம் வீட்டில் நிற்பதால் புது வேலை அமையும். திடீர்ப் பயணங்கள் உண்டு. விரும்பிய பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். வீட்டைப் புதுப்பிக்கத் திட்டமிடுவீர்கள். செவ்வாய் 8-ம் வீட்டில் நிற்பதால் கணவன் மனைவிக்குள் வீண் வாக்குவாதங்கள் வேண்டாம். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் இப்போது வேண்டாம். எதிலும் முன் யோசனையுடன் செயல்படவேண்டிய தருணம் இது. உத்தியோகத்தில் உயரதிகாரிகள் சொல்வதைத் தாமதமின்றி நிறைவேற்றுங்கள். கலைத் துறையினருக்குப் பாராட்டுகள் குவியும்.

அறிவுபூர்வமான சிந்தனையால் வெற்றிபெறுவீர்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism