Published:Updated:

ராசிபலன்

ராசிபலன்
பிரீமியம் ஸ்டோரி
News
ராசிபலன்

டிசம்பர் 15 முதல் 28 வரை

மேஷம்

ராசிபலன்

ங்கள் ராசிக்கு சுக்கிரன் ஓரளவு சாதகமாக இருப்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். செல்லும் இடங்களில் சிறப்பு கூடும். கல்யாணப் பேச்சு வார்த்தை நல்லவிதத்தில் முடியும்.

8-ல் கேதுவுடன் நிற்பதால் கணவன் - மனைவிக்குள் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. சூரியன் 16-ம் தேதி முதல் 9-ல் அமர்வதால் தந்தை யின் உடல் நிலை பாதிக்கும்.

புதன் சாதகமாக இருப்பதால் நண்பர்கள், உறவினர்களுடன் அதிக நேரம் செலவிடுவீர்கள். சனி பகவான் 26-ம் தேதி முதல் ஆட்சி பலம் பெறுவதால் திடீர் யோகம் உண்டாகும். கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துச் சேமிக்கத் தொடங்குவீர்கள்.

வியாபாரத்தில் அதிரடி மாற்றங்கள் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் கடினமான வேலைகளையும் எளிதாக முடிப்பீர்கள். கலைத் துறையினர் மூத்த கலைஞர் களிடம் சில நுணுக்கங்களை கற்றுத் தெளிவார்கள்.

எதிர்ப்புகளைத் தாண்டி வெற்றிபெறும் வேளை இது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

ரிஷபம்

ராசிபலன்

ங்கள் ராசிநாதன் சுக்கிரன் 7-ல் அமர்ந்து ராசியைப் பார்க்க இருப்பதால் அழகு, இளமை கூடும். எதிர்மறை எண்ணங்கள் விலகும். என்றாலும் அவர் கேதுவுடன் நிற்பதால் கணவன் - மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். பெண்களுக்கு மாதவிடாய்க் கோளாறு, முதுகு வலி வந்து நீங்கும்.

சூரியனும் புதனும் ஓரளவு சாதகமாக இருப்பதால் பெற்றோரின் உடல் நிலை சீராகும். திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் சுபச் செலவுகள் அதிகமாகும்.

சனி பகவான் 26-ம் தேதி முதல் ஆட்சிபெற்று 9-ம் வீட்டில் நுழைவதால் கவலைகள், விரக்தி விலகும். பெரிய நோய் இருப்பதைப் போன்ற பிரமை யிலிருந்து விடுபடுவீர்கள்.

வியாபாரத்தில், முக்கிய பிரமுகர்களின் அறிமுகத்தால் பெரிய நிறுவனங்களின் ஒப்பந் தங்கள் கிடைக்கும். பற்று வரவு உயரும். உத்தியோகத்தில், அதிகாரியின் ஆதரவால் செல்வாக்கு கூடும். கலைத்துறை யினருக்கு வருமானம் உயரும்.

வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும் வேளை இது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மிதுனம்

ராசிபலன்

சூரியன் 16-ம் தேதி முதல் 7-ல் அமர்ந்து உங்கள் ராசியைப் பார்க்க இருப்பதால் அதிகமாகக் கோபப்படுவீர்கள். அரசு விவகா ரங்களில் அலட்சியம் வேண்டாம். மருத்துவச் செலவுகள் வந்து போகும்.

ராசிநாதன் புதன் சாதகமாக இருப்பதால் தெளிவான முடிவு களை எடுப்பீர்கள். அரசு அதிகாரி களின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். சுக்கிரன் 6-ல் மறைவ தால் வாகனப் பழுது, விபத்துகள் வரக்கூடும். கணவன் - மனைவிக்குள் கருத்து மோதல்கள் வந்துபோகும்.

சனிபகவான் 26-ம் தேதி முதல் அஷ்டமத்துச்சனியாக அமர்வதால் இரவு நேரப் பயணங் களைத் தவிர்ப்பது நல்லது.

வியாபாரம் மந்தமாக இருக் கும். புது முதலீடுகளைத் தவிர்க் கவும். உத்தியோகத்தில் சின்னச் சின்ன அவமானங்கள் ஏற்படக் கூடும். மேலதிகாரி, கனிவாக நடந்துகொள்வார். கலைத் துறையினருக்குக் கிசுகிசுத் தொந்தரவுகளும் வதந்திகளும் வந்துபோகும்.

வாக்கு சாதுர்யத்தால் வெற்றி பெறும் வேளை இது!

கடகம்

ராசிபலன்

சுக்கிரன் 5-ல் நிற்பதால் தோற்றப் பொலிவுக் கூடும். தோல் நோய், அலர்ஜி நீங்கும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் உண்டாகும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.

கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். உறவினர்கள் உங்களின் சகிப்புத் தன்மையைப் பாராட்டுவார்கள். பால்ய நண்பர் களின் சந்திப்பால் மகிழ்வீர்கள்.

16-ம் தேதி முதல் சூரியன் வலுவாக 6-ம் வீட்டில் அமர்வதால் வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். பெரிய பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். திடீர் பண வரவு உண்டு. புதன் 6-ல் தொடர்வதால் சளி, காய்ச்சல் வந்து போகும். 26-ம் தேதி முதல் சனி 7-ல் அமர்வதால் எவருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம்.

வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. வியாபாரத்தின் தரம் உயரும். உத்தியோகத்தில் பதவி, சம்பள உயர்வு உண்டு. எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக் கும். கலைத் துறையினரின் படைப்புத் திறன் வளரும்.

தொடர் முயற்சிகளால் சாதிக்கும் வேளை இது!

சிம்மம்

ராசிபலன்

ங்களுக்குச் சாதகமாக சுக்கிரன் நிற்பதால் புதிய திட்டங் கள் நிறைவேறும். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். தைரியமாக, சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.

உங்கள் ராசிநாதன் சூரியன் 16-ம் தேதி முதல் 5-ல் அமர்வ தால் பிள்ளைகளை அவர்களின் எண்ண ஓட்டத்திலேயே விட்டுப் பிடிப்பது நல்லது. கர்ப்பிணிப் பெண்கள் கவனமாக இருக்கவும். புதன் சாதகமாக இருப்பதால் கடின வேலைகளையும் எளிதில் முடித்துக் காட்டுவீர்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும்.

சனி 26-ம் தேதியிலிருந்து 6-ல் சென்று அமர்வதால் எதிலும் யோகம், வெற்றி உண்டாகும். வியாபாரத்தில் வாடிக்கை யாளர்களின் எண்ணிக்கை அதிகப்படுத்த புது சலுகைகளை அறிமுகம் செய்வீர்கள்.

உத்தியோகத்தில் சின்னச் சின்ன எதிர்ப்புகள் இருக்கும். நிதானம் தேவைப்படும் காலம்; அவசர முடிவுகள் வேண்டாம். கலைத்துறையினருக்கு, வெகு நாள்களாகத் தடைப்பட்ட வாய்ப்பு கூடி வரும்.

அச்சம் விலகி அதிகாரப் பதவி பெறும் வேளை இது.

கன்னி

ராசிபலன்

ராசிநாதன் புதன் சாதகமாக இருப்பதால் உறவினர்கள், நண்பர்களுடன் சுமுகமான சூழல் உருவாகும். சுக்கிரன் 3-ல் சென்று மறைவதால் சிக்கனமாக இருங்கள். மற்றவர்களை நம்பிப் பெரிய முடிவுகள் எடுக்காதீர்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை தாமதமாக முடிவடையும்.

சூரியன் சாதகமான வீடுகளில் சஞ்சாரம் செய்வதால் மனக் குழப்பங்கள், வீண் விவாதங்கள் நீங்கும். எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். நாடாளு பவர்களின் நட்பு கிடைக்கும். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.

சனிபகவான் 26-ம் தேதி முதல் 5-ல் அமர்வதால் பிள்ளை களின் எதிர்காலம் குறித்த கவலைகள் வந்து நீங்கும்.

வியாபாரம் ஓரளவு லாபம் தரும். வேலையாள்களிடம் பணி வாகப் பேசி வேலை வாங்குங்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமை இருந்தாலும் பாராட்டுகள் கிடைக்கும். கலைத்துறையினரின் படைப்புகளுக்கு வேறொருவர் உரிமை கொண்டாட வாய்ப்பு உண்டு; கவனம் தெவை.

நிதானத்தால் நெருக்கடிகளை கடக்கும் வேளை இது.

துலாம்

ராசிபலன்

சூரியன் 16-ம் தேதி தேதி முதல் 3-ல் நுழைவதால் மூத்த சகோதரர் ஆதரவாக இருப்பார். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. எதிர்பார்ப்புகள் யாவும் நல்ல விதத்தில் முடியும். ஷேர் மூலம் பணம் வரும்.

ராசிநாதன் சுக்கிரன் 2-ல் அமர்வதால் உடல் நிலை சீராகும். சிறுநீர்த் தொற்று, தூக்கமின்மை யிலிருந்து விடுபடுவீர்கள். ஆடை, அணிகலன் சேரும். கல்யாண முயற்சிகள் நல்ல விதத்தில் முடியும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தைத் தந்து முடிப்பீர்கள். பணவரவு உண்டு.

26-ம் தேதி முதல் சனிபகவான் 4-ல் அமர்வதால் தாயாரின் உடல் நலம் பாதிக்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகளைத் தள்ளுபடி விலைக்கு விற்றுத் தீர்ப்பீர்கள். கடையை விரிவுபடுத்தும் முயற்சி யில் இறங்கி வெற்றி பெறுவீர்கள். லாபம் உண்டு.

உத்தியோகத்தில் உங்களின் கோரிக்கையை மேலதிகாரி ஏற்பார். சக ஊழியர்களின் கடின உழைப்பால் நிர்வாகத்தின் லாபம் உயரும். கலைத்துறையினர் வேற்று மொழி வாய்ப்புகளால் புகழ் அடைவார்கள்.

பலவீனங்களைச் சரி செய்யும் வேளை இது!

விருச்சிகம்

ராசிபலன்

சுக்கிரன் ராசிக்குள் நிற்பதால் கணவன்-மனைவிக்குள் இருந்த கருத்து மோதல் விலகும். குழந்தை பாக்கியம் உண்டாகும். புது டிசைனில் ஆபரணம் வாங்குவீர்கள்.

16-ம் தேதி முதல் உங்கள் ராசியை விட்டு சூரியன் விலகுவ தால் மனஇறுக்கம், வேனல் கட்டி, கண் வலியிலிருந்து விடுபடு வீர்கள். ஆனால் அவர் 2-ல் அமர்வதால் பேச்சில் காரம் வேண்டாம். முன்கோபத்தால் சிலரின் நட்பை இழக்காதீர்கள்.

புதன் தனஸ்தானத்தில் அமர்ந்திருப்பதால் எதிர்பார்த்த பணவரவு உண்டு. வீடு கட்ட வங்கிக் கடன் கிடைக்கும். சனிபகவான் 26-ம் தேதி முதல் 3-ம் வீட்டில் அமர்வதால் உடல் நலம் சீராகும்.

வியாபாரத்தில் தரமான சரக்குகளை மொத்த விலையில் வாங்க முடிவு செய்வீர்கள். அனுபவசாலிகளை வேலைக்கு வரவழைப்பீர்கள். உத்தியோகத் தில் புதுப் பொறுப்புகளை ஏற்பீர் கள். பலரும் வியக்கும் வண்ணம் பணியில் சாதிப்பீர்கள். கலைத் துறையினர் புதுமையான படைப்பு களால் கவனம் ஈர்ப்பார்கள்.

கடின உழைப்பால் இலக்கை எட்டும் வேளை இது.

தனுசு

ராசிபலன்

சூரியன் 16-ம் தேதி தேதி முதல் ராசிக்குள் நுழைவதால், சில நேரங்களில் எதிர்மறை எண்ணங்கள் வரும். சுற்றி யிருப்பவர்களின் சுயரூபத்தையும் அறிந்து கொள்வீர்கள். சின்னச் சின்ன சச்சரவுகள் வரக்கூடும். அரசாங்க விஷயங்கள் தள்ளிப் போய் முடியும்.

புதன் சாதகமாக இருப்பதால் புதிய கோணத்தில் சிந்தித்துப் பழைய சிக்கலைத் தீர்ப்பீர்கள். சுக்கிரன் 12-ம் வீட்டில் மறை வதால் வராது என்று நினைத் திருந்த பணம் கைக்கு வரும். பழைய வழக்கு விரைந்து முடியக் கூடும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியம் கூடும்.

பிரச்னைகளையும், மன இறுக்கத்தையும் தந்த சனி பகவான் 26 - ம் தேதி முதல் 2- ல் ஆட்சிப் பெற்று அமர்கிறார். ஆகவே, தாழ்வு மனப்பான்மை யிலிருந்து விடுபடுவீர்கள்.

வியாபாரத்தில் திடீர் லாபம், யோகம் உண்டாகும். உங்களின் ஆலோசனையை மேலதிகாரி ஏற்றுக்கொள்வார். உத்தியோகத் தில் உங்கள் கை ஓங்கும். கலைத் துறையினருக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் வந்துசேரும்.

வெற்றிக்கான காலம் கனியும் வேளை இது.

மகரம்

ராசிபலன்

சுக்கிரனும் புதனும் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் படிப்படியாக குடும்ப வருமானம் உயரும். பழைய கடன் ஒன்றை பைசல் செய்ய முயல்வீர்கள். தொழிலுக்காகக் குறைந்த வட்டியில் புதுக் கடன் கிடைக்கும்.

சூரியன் 16-ம் தேதி முதல் 12-ல் மறைவதால் கொஞ்சம் அலைச்சல், தூக்கமின்மை, சிறுசிறு விபத்துகள் வந்து போகும். இரவு நேர பயணத்தைத் தவிர்ப்பது நல்லது.

சனி பகவான் 26-ம் தேதி முதல் உங்கள் ராசிக்குள்ளேயே ஆட்சி பெற்று ஜன்மச் சனியாக வந்து அமர்வதால் தூக்கமின்மை, கனவுத் தொல்லை நீங்கும். உடல் நலத்தில் கவனம் தேவை. வெளி உணவுகள் வேண்டாம்.

வியாபாரத்தில் நவீன யுக்தி களைக் கையாளுவீர்கள். வாடிக்கையாளர்களின் கருத் தைக் கேட்டு, அதற்கேற்ப கடையை இடமாற்றம் செய்வீர்கள். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். மேலதிகாரிகள் சில முக்கிய அறிவுரைகள் தருவார்கள். கலைத்துறையினர் மூத்த கலைஞர்களின் பாராட்டைப் பெறுவார்கள்.

அனைவராலும் மதிக்கப்படும் வேளை இது.

கும்பம்

ராசிபலன்

சுக்கிரனும், புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால் எங்கு சென்றாலும் மதிப்பு, மரியாதைக் கூடும். பணப்புழக்கம் அதிகரிக்கும். பழைய கடன் பிரச்னையைத் தீர்க்க வழி பிறக்கும். கல்யாணப் பேச்சு வார்த்தை சுமுகமாக முடியும்.

பூர்விகச் சொத்தை மாற்று வீர்கள். கணவன் - மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளை களின் பிடிவாதம் தளரும். சூரியன் சாதகமான வீடுகளில் செல்வதால் அரசு அதிகாரிகள், நாடாளுபவர்களின் நட்பு கிடைக்கும். ஷேர் மூலம் பணம் வரும். இழுபறியாக இருந்த வேலை உடனே முடியும்.

26-ம் தேதி முதல் ஏழரைச் சனி தொடங்குவதால் வீண் செலவு, திடீர் பயணம், தூக்க மின்மை வந்துபோகும்.

வியாபாரத்தில் மாறுபட்ட அணுகுமுறையால் லாபம் ஈட்டுவீர்கள். வேலையாள்கள் கடமையுணர்வுடன் செயல் படுவார்கள். உத்தியோகத்தில் உங்களின் பரந்த மனதை மூத்த அதிகாரி புரிந்துகொண்டு உதவுவார். கலைத்துறையினரின் கற்பனைத் திறன் வளரும்.

சாமர்த்தியமான செயல்பாடுகளால் சாதிக்கும் வேளை இது.

மீனம்

ராசிபலன்

சூரியன் 16-ம் தேதி முதல் 10-ல் நுழைவதால் தந்தையாரின் உடல் நிலை சீராகும். அவருடன் இருந்து வந்த மனக்கசப்பு, ஈகோ பிரச்னைகள் நீங்கும். அரசால் அனுகூலம் உண்டு.

புதனும், சுக்கிரனும் சாதகமாக இருப்பதால் பழுதான மின்னணு, மின்சார சாதனங்களை மாற்றிப் புதிது வாங்குவீர்கள். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். வாழ்க்கைத்துணை வழியில் உதவிகள் உண்டு.

உத்தியோகத்தில் வேலைச் சுமையையும், பிரச்னைகளையும் தந்த சனிபகவான் 26-ம் தேதி முதல் 11-ம் வீட்டில் அமர்வதால் பதவிகளும், பொறுப்புகளும் தேடி வரும்.

வியாபாரத்தில், பழைய பாக்கிகள் விரைவில் வசூலாகும். வேலையாள்களும் பங்குதாரர் களும் உதவி செய்வார்கள். உத்தியோகத்தில் இழந்த பதவி, சலுகைகளை மீண்டும் பெறுவீர்கள். பெரிய பொறுப்புகள் தேடி வரும். கலைத் துறையினர், மூத்த கலைஞர்களின் அறிவுரை, வழிகாட்டல்கள் மூலம் வெற்றி அடைவார்கள்.

எங்கும் எதிலும் பொறுமை காக்கவேண்டிய தருணம் இது.