Published:Updated:

ராசிபலன்

ராசிபலன்
பிரீமியம் ஸ்டோரி
ராசிபலன்

டிசம்பர் 1 முதல் 14 வரை

ராசிபலன்

டிசம்பர் 1 முதல் 14 வரை

Published:Updated:
ராசிபலன்
பிரீமியம் ஸ்டோரி
ராசிபலன்

மேஷம்

ராசிபலன்

சுக்ரன் உங்கள் ராசியைப் பார்த்துக் கொண்டே இருப்பதால் சவாலான காரியங்களைக் கூட சாமர்த்தியமாக செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த பணம் வரும். சொந்த ஊரில் செல்வாக்குக் கூடும்.

பூர்வ புண்யாதிபதி சூரியன் கேதுவுடன் சேர்ந்திருப்பதால் பிள்ளைகளின் நட்பு வட்டத்தைக் கண்காணிப்பது நல்லது. கர்ப்பிணிப் பெண்கள் நீண்ட தூரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. புதனும் சேர்ந்து அமர்ந்திருப்பதால் பழைய நண்பர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள்.

உறவினர்கள், நண்பர்களுடன் அளவாகப் பழகுங்கள். மூச்சுப் பிடிப்பு, கழுத்து வலி, கண்டைக் கால் வலி வந்து நீங்கும். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். வேலையாட்கள், பங்குதாரர்களை விட்டுப்பிடிப்பது நல்லது.

உத்யோகத்தில் சூழ்ச்சிகளை தாண்டி அதிகாரியின் ஆதரவைப் பெறுவீர்கள். சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். கலைத்துறையினரே புது வாய்ப்புகள் தேடி வரும்.

விட்டுக் கொடுக்கும் வேளையிது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ரிஷபம்

ராசிபலன்

பூர்வபுண்யாதிபதி புதன் சாதகமாக இருப்பதால் பணவரவு, வீடு, மனை சேர்க்கை எல்லாம் உண்டு. அரசு வேலைகளும் பரபரப்பாக முடியும். ஆனால் சுகாதிபதி சூரியன் கேதுவுடன் நிற்பதால் முதுகு வலி, ஹார்மோன் பிரச்னை, செரிமானக் கோளாறு வந்து நீங்கும்.

முன்கோபத்தால் நல்ல நண்பர்கள், உறவினர்களை இழக்க வேண்டி வரும். 6-ல் சுக்ரன் மறைந்திருப்பதால் கணவன்,

மனைவிக்குள் கருத்து மோதல், பிரிவு வந்து செல்லும். வாகன விபத்துகள் ஏற்படக்கூடும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. குருபகவான் வலுவாக இருப்பதால் மனக்குழப்பங்கள் நீங்கும். பிரபலங்களைச் சந்திப்பீர்கள்.

ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் பழைய வேலையாட்கள் மீண்டும் உங்களைத் தேடி வருவார்கள். பங்குதாரர்களுடன் கவனமாக பழங்குங்கள்.

உத்யோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். கலைத்துறையினரே சம்பள விஷயத்தில் கறாராக இருங்கள்.

தன்னை உணரும் வேளையிது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மிதுனம்

ராசிபலன்

சுக்ரன் 5-ல் நிற்பதால் பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். மனைவி வழியில் மதிப்பு, மரியாதைக் கூடும். சிலருக்கு குழந்தை பாக்யம் கிடைக்கும். புது வீட்டிற்கு மாறுவீர்கள். 6-ல் சூரியன் வலுவாக நிற்பதால் பழைய வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். எதிர்பார்த்த பணம் வரும். அரசு காரியங்கள் சாதகமாக முடியும்.

பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். ராசிநாதன் புதன் 6-ல் நிற்பதால் தொண்டை, கழுத்து, இடுப்பு வலி வந்து போகும். ஒருவித அலுப்பும், சலிப்பும் வந்து நீங்கும். கேது வலுவாக இருப்பதால் வேற்றுமொழிக்காரர்கள் உதவுவார்கள்.

அயல்நாட்டுப் பயணங்கள் உண்டு. அண்டை வீட்டாரின் ஆதரவு கிட்டும். ஷேர் மூலம் பணம் வரும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும். வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பர். கலைத்துறையினரே மூத்த கலைஞர்களின் நட்பை பெறுவீர்கள்.

சாதிக்கும் வேளையிது.

கடகம்

ராசிபலன்

குரு வலுவாக இருப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். வாழ்க்கை துணை வழியில் அனுகூலம் உண்டு. 5-ல் நிற்கும் கேதுவுடன் சூரியனும்,புதனும் அமர்ந்திருப்பதால் பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தும் உட்கொள்ள வேண்டாம். நண்பர்கள், உறவினர்களுடன் பகை வந்து நீங்கும். சுக்ரன் 4-ல் வலுவாக நிற்பதால் எதிர்பார்த்த பணம் வரும்.

வங்கிக் கடன் கிடைக்கும். தந்தைவழி சொத்து கிட்டும். குடும்பத்தில் சில முக்கிய பொறுப்புகள் உங்கள் கைக்கு மாறும். மகளுக்கு நல்ல வரன் அமையும். கம்பிரமாகப் பேசி எதையும் சாதிப்பீர்கள். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள்.

புது ஒப்பந்தங்களை யோசித்து ஏற்பது நல்லது. உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கவில்லையே என ஆதங்கப்படுவீர்கள். கலைத்துறையினரே மறைமுகப் போட்டிகள் அதிகரிக்கும்.

பொறுமை காக்கும் வேளையிது.

சிம்மம்

ராசிபலன்

சுக்ரன் 3-ல் நிற்பதால் புதிய முயற்சிகள் பலிதமாகும். தொட்டது துலங்கும். எதிர்ப்புகள் நீங்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். ஆடை, அணிகலன்கள் சேரும். வாகனப் பழுதை சரி செய்வீர்கள். திருமணம், சீமந்தத்தை முன்னின்று நடத்துவீர்கள். புதன் சாதகமாக இருப்பதால் புதியவர்கள் நண்பர்களாவார்கள். பூர்வீக சொத்துப் பிரச்னைக்கு சுமுக தீர்வு காண்பீர்கள்.

வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. ராசிநாதன் சூரியன் கேதுவுடன் நிற்பதால் டென்ஷன், படபடப்பு, விபத்து வந்து போகும். யாருக்கும் கேரண்டர் கையெழுத்திட வேண்டாம். குரு சரியில்லாததால் வீண்பழி, மன உளைச்சல் வரக்கூடும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.

வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்துக் கொள்வீர்கள். கலைத்துறையினரே எதிர்பார்த்த புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

ஆசை நிறைவேறும் வேளையிது

கன்னி

ராசிபலன்

2-ல் சுக்ரன் நிற்பதால் இங்கிதமாகப் பேசத் தொடங்குவீர்கள். கொடுத்த பணத்தையும் நாசூக்காகப் பேசி வசூலிப்பீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். உங்கள் ரசனைக்கேற்ற வீடு அமையும். சூரியனும், புதனும் 3-ல் அமர்ந்திருப்பதால் அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுக

மாவார்கள். கௌரவப் பதவிகள் தேடி வரும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். தைரியமாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். ஆன்மீகப் பயணம் சென்று வருவீர்கள்.

உறவினர்கள், நண்பர்களுடன் சுமூகமான உறவுகள் நீடிக்கும். கேதுபகவான் 3-ல் வலுவாக அமர்ந்திருப்பதால் ஹிந்தி, தெலுங்கு பேசுபவர்களால் ஆதாயம் உண்டு. ஷேர் மூலம் பணம் வரும். வியாபாரத்தில் வெளிப்படையாக பேசுவது கூடாது என்பதை உணர்வீர்கள். வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் தலையிட வேண்டாம். கலைத்துறையினரே புதுமையாக சில படைப்புகளை வெளியிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள்.

நினைப்பது நடக்கும் வேளையிது.

துலாம்

ராசிபலன்

ராசிநாதன் சுக்ரன் தொடர்ந்து ஆட்சிபெற்று வலுவாக இருப்பதால் பிரச்சனைகளை தைரியமாக எதிர்கொண்டு வெற்றி பெறுவீர்கள். முகப் பொலிவு கூடும். குடும்பத்தாரின் ஆதரவு கிட்டும். பேச்சில் கம்பீரம் பிறக்கும். வாழ்க்கை துணை வழியில் ஆதாய

முண்டு. சூரியனும், புதனும் கேதுவுடன் நிற்பதால் தந்தையாரின் உடல் நலம் பாதிக்கும். அவருடன் கருத்து மோதல்கள் வந்து செல்லும். கண், பல் வலி வந்து நீங்கும். வழக்கில் வழக்கறிஞரை மாற்ற வேண்டி வரும். புண்ணிய ஸ்தலங்கள் செல்வீர்கள். மனம் ஆறுதல் அடையும். அரசு காரியங்கள் தாமதமாக முடியும்.

குரு 4-ல் நிற்பதால் தன்னம்பிக்கை பிறக்கும். தடைகள் நீங்கும். ஆனால் தாயாரின் உடல்நிலை பாதிக்கும். அலைச்சல், டென்ஷன் இருக்கும். வியாபாரத்தில் லாபம் ஈட்டுவீர்கள். கடையை உங்கள் ரசனைக்கேற்ப அழகுப்

படுத்துவீர்கள். உத்யோகத்தில் தைரியமாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். புது வாய்ப்புகளும் தேடி வரும். கலைத்துறையினரே உங்களின் படைப்புத் திறன் வளரும்.

எதையும் சாதிக்கும் வேளையிது.

விருச்சிகம்

ராசிபலன்

சுக்ரன் வலுவாக இருப்பதால் வரவேண்டிய பணம் வந்துசேரும். நீண்ட நாளாக போக நினைத்த புண்ணியத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். ராசிக்குள் சூரியன் கேதுவுடன் நிற்பதால் சோர்வு, களைப்பு வந்து நீங்கும்.

தந்தையின் உடல் நலம் பாதிக்கும். புதன் சாதகமாக இருப்பதால் பாதியிலேயே நின்று

போன பல வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த வகையில் உதவியுண்டு. பழைய சிக்கலுக்கு வழி பிறக்கும். குடும்பத்தில் நிலவிவந்த குழப்பங்கள் விலகும்.

குரு 3-ல் நிற்பதால் திட்டமிட்ட வேலைகளை முடிக்க தடை, தாமதங்கள் வந்து போகும். இளைய சகோதரர்களால் அலைச்சல்கள் வந்து நீங்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையை புரிந்துகொண்டு அதற்கேற்ப சில மாற்றங்களைச் செய்யுங்கள். உத்யோகத்தில் இடமாற்றம் ஏற்படும். அதிகாரிகளிடம் வளைந்துக் கொடுத்துப் போவது நல்லது. கலைத்துறையினரே விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள்.

வெற்றி பெறும் வேளையிது.

தனுசு

ராசிபலன்

சுக்ரன் சாதகமாக இருப்பதால் பணவரவு திருப்திகரமாக இருக்கும். ஆடை, ஆபரணங்கள் சேரும். ஆனாலும் பாக்யாதிபதி சூரியன் கேதுவுடன் 12-ல் நிற்பதால் அடுத்தடுத்து செலவுகளும், வீண் டென்ஷனும் இருக்கும்.

தந்தையின் உடல் நலத்தில் கவனம் தேவை. சிறுசிறு விபத்துகள் வந்து நீங்கும். புதன் 12-ல் நிற்பதால் மனைவிக்கு கர்ப்பப்பை கோளாறு, அலைச்சல் இருக்கும்.

பூர்வீக சொத்துப் பிரச்னைக்கு சுமுக தீர்வு காண்பது நல்லது. உறவினர்கள், நண்பர்களால் சில நெருக்கடிகளை சந்திக்க நேரிடும்.

குரு சாதகமாக இருப்பதால் புத்துணர்ச்சி ததும்பும். பேச்சில் முதிர்ச்சி தெரியும். வியாபாரத்தில் தேங்கிக் கிடந்த சரக்குகளை சாமார்த்தியமாக விற்றுத் தீர்ப்பீர்கள்.

உத்யோகத்தில் உயரதிகாரிகளின் ராஜதந்திரத்தை உடைத்தெறிவீர்கள். சக ஊழியர்களை அன்பால் உங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவீர்கள். கலைத்துறையினரே பெரிய நிறுவனங்கள் உங்களை அழைத்துப் பேசும்.

உழைப்பால் உயரும் வேளையிது.

மகரம்

ராசிபலன்

சூரியன், புதன், கேது ஆகிய மூன்று கோள்கள் பதினோராவது வீட்டில் நிற்பதால் கேட்ட இடத்தில் ஓரளவு பணம் கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகள் நல்ல வழிக்கு திரும்புவார்கள். மூத்த சகோதரர் உதவுவார். ஆனால் இளைய சகோதர வகையில் அலைச்சல், டென்ஷன் வந்து போகும்.

அரசால் ஆதாயம் உண்டு. வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். சுக்ரன் 10-ல் வலுவாக இருப்பதால் பாதியிலேயே நின்றுபோன பணிகளை விரைந்து முடிப்பீர்கள். உடல் நலத்தில் கவனம் தேவை.

புது வேலை கிடைக்கும். ஆனால் குரு ராசிக்குள் நிற்பதால் உடல் நலம் பாதிக்கும். குடும்பத்தில் சண்டை, சச்சரவுகள் இருந்துக் கொண்டேயிருக்கும். வியாபாரத்தில் லாபத்தை பெருக்க நவீன விளம்பர யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் கூடுதலாக வேலைப் பார்க்க வேண்டி வரும். கலைத்துறையினரே உங்களை சிலர் விமர்சித்துப் பேசிக் கொண்டுதான் இருப்பார்கள். அதையும் தாண்டி முன்னேறுவீர்கள்.

கோபம் தவிர்க்கும் வேளையிது.

கும்பம்

ராசிபலன்

சூரியனும், புதனும் 10-ல் நிற்பதால் வேலையில்லாமல் தவித்தவர்களுக்கு வேலை கிடைக்கும். தந்தை வழியில் உதவிகள் கிட்டும். பதவிகள் தேடி வரும். அரசாங்க அதிகாரிகளின் நட்பு கிடைக்கும்.

உறவினர்கள், நண்பர்கள் மதிப்பார்கள். பூர்வீக சொத்தை மாற்றியமைப்பீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். சுக்ரன் 9-ல் நிற்பதால் எதிர்பார்த்த பணம் கைக்கு வரும்.

புது டிசைனில் நகைகள் மற்றும் ஆடைகள் வாங்குவீர்கள். மகனுக்கு நல்ல மணப்பெண் அமைவார். மகளுக்கு வேலை கிடைக்கும். குடும்பத்தில் நிலவிவந்த குழப்பங்கள் விலகும்.

குரு 12-ல் நிற்பதால் சுபச்செலவுகள் அதிகமாகிக் கொண்டே போகும். வியாபாரத்தில் அதிரடி லாபம் உண்டு. புது வேலையாட்களை பணியில் அமர்த்துவீர்கள். உத்யோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். கலைத்துறையினரே கௌரவிக்கப்படுவீர்கள்.

பிரச்னைகள் விலகும் வேளையிது.

மீனம்

ராசிபலன்

சுக்ரன் 8-ல் ஆட்சி பெற்று நிற்பதால் தடைகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வீட்டை விரிவுப்படுத்தும் பணி சிறப்பாக முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். உறவினர், நண்பர் வீட்டு திருமணத்தை சிறப்பாக நடத்தி முடிப்பீர்கள்.

எனினும் பழைய கடனை நினைத்து அவ்வப்போது டென்ஷனாவீர்கள். சூரியன் 9-ல் கேதுவுடன் நிற்பதால் பழைய கடன் தீர்க்க வழி பிறக்கும். தந்தையாருடன் மனக்கசப்பு, அவருக்கு மருத்துவச் செலவுகள் வந்து போகும். புதனும் 9-ல் நிற்பதால் வாழ்க்கை துணையுடன் விவாதம் வேண்டாம்.

உறவினர்கள், நண்பர்களால் மறைமுகப் பிரச்னைகள் வரக்கூடும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் உங்களின் செல்வாக்குக் கூடும். சக ஊழியர்கள் உங்கள் வேலையை பகிர்ந்து கொள்வார்கள். கலைத்துறையினரே சம்பள பாக்கி கைக்கு வரும்.

தெளிவு பெறும் வேளையிது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism