Published:Updated:

ராசிபலன்

ராசிபலன்
பிரீமியம் ஸ்டோரி
ராசிபலன்

டிசம்பர் 29 முதல் ஜனவரி 11- ந் தேதி வரை

ராசிபலன்

டிசம்பர் 29 முதல் ஜனவரி 11- ந் தேதி வரை

Published:Updated:
ராசிபலன்
பிரீமியம் ஸ்டோரி
ராசிபலன்

மேஷம்

ராசிபலன்

புதன் சாதகமாக இருப்பதால் புதிய எண்ணங்கள் உதயமாகும். பிரபலங்கள் நண்பர்களாவார்கள். பணவரவு அதிகரிக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். பிள்ளைகளின் பொறுப்பு உணர்வு அதிகமாகும். சூரியன் 9-ம் வீட்டில் நிற்பதால் சேமிப்புகள் கரையும். சனிபகவான் 10-ல் ஆட்சி பெற்றிருப்பதால், தடைகள் நீங்கும். வி.ஐ.பிகள் உதவுவார்கள். அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலை கிடைக்கும். தந்தை வழியில் அனுகூலம் உண்டு.

சுக்ரன் சாதகமான வீடுகளில் செல்வதால் வீடு, வாகன வசதிகள் பெருகும். வாழ்க்கைத் துணைவர் வழியில் உதவிகள் கிடைக்கும். 10-ல் சனியும், குருவும் நிற்பதால் வியாபாரத்தில் ஆழம் தெரியாமல் காலை விடாதீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரியின் தவறுகளைச் சுட்டிக்காட்டுவீர்கள். சக ஊழியர்களால் பிரச்னைகள் வந்து நீங்கும். கலைத்துறையினரே! உங்களின் படைப்புத் திறன் வளரும்.

நம்பிக்கையைப் பெற்று மிளிரும் நேரம் இது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ரிஷபம்

ராசிபலன்

ராசிநாதன் சுக்ரன் பலமாக அமர்ந்திருப்பதால் சோம்பல் நீங்கும். இழுபறியான வேலைகள் உடனே முடியும். ஆரோக்கியம் மேம்படும். வாழ்க்கைத் துணைவருடன் சச்சரவுகள் நீங்கும். சூரியன் 8-ல் நிற்பதால் முன்கோபம், சிறுசிறு காயங்கள், வாழ்க்கைத் துணைவருக்கு மருத்துவச் செலவுகள் வந்து போகும்.

புதன் சாதகமாக இருப்பதால் சொந்தபந்தங்கள் தேடி வந்து பேசுவார்கள். சனி 9-ம் வீட்டில் ஆட்சி பெற்று நிற்பதால் பயம் விலகும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் சலசலப்புகள் விலகும். கணவன்-மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவீர்கள். வியாபாரத்தில் லாபம் வரும். வாடிக்கையாளர்களை அதிகப் படுத்த விளம்பர யுக்திகளைக் கையாளுவீர்கள். உத்தியோகத்தில் நல்ல பெயர் கிடைத்தாலும் உடன்பணிபுரிவோர் குறை கூறத்தான் செய்வார்கள். கலைத் துறையினரின் உழைப்பிற்கு அங்கிகாரம் கிடைக்கும்.

பெரிய மனிதர்களின் பாராட்டுகளும் வாழ்த்துகளும் கிடைக்கும் நேரம் இது.

மிதுனம்

ராசிபலன்

ராசிநாதன் புதன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், இழுபறியான வேலைகள் முடியும். குடும்பப் பொறுப்புகள் அதிகரிக்கும். ஒரு சொத்தைக் காப்பாற்ற மற்றொரு சொத்தை விற்க வேண்டி வரும். பிள்ளைகளின் திறமைகளை இனம் கண்டறிந்து வளர்ப்பீர்கள். சூரியன் 7-ல் நிற்பதால் அவ்வப்போது உணர்ச்சி வசப்படுவீர்கள். வாழ்க்கைத் துணைவரின் உடல் நலத்தில் அக்கறை தேவை.

5-ம் தேதி வரை சுக்ரன் 6-ல் மறைவதால் கணவன்-மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. வாகன பயணத்தில் கவனம் தேவை. பழைய கசப்பான அனுபவங்கள் நினைவுக்கு வரும். அஷ்டமத்துச் சனி இருப்பதால் முன்கோபத்தைத் தவிர்த்துவிடுங்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்தியோகத்தில் முக்கிய பொறுப்புகள் வந்து சேரும். கலைத்துறையினரே! வேற்று மொழி வாய்ப்புகளால் புகழ் அடைவீர்கள்.

நினைத்த காரியங்கள் நினைத்தபடி நிறைவேறும் காலம் இது.

கடகம்

ராசிபலன்

புதன் 30-ம் தேதி முதலும் சுக்ரன் 5-ம் தேதி வரையும் சாதகமான வீடுகளில் செல்வதால், சாமர்த்தியத்தால் சாதிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். கணவன் - மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். பிள்ளைகளால் மதிப்பு கூடும். உங்கள் ரசனைக்கேற்ப வீடு, வாகனம் அமையும். வங்கிக் கடன் கிடைக்கும். அந்தஸ்து உயரும். சூரியன் 6-ம் வீட்டில் நிற்பதால் சவால்களில் வெற்றி பெறுவீர்கள்.

அரசியலில் செல்வாக்கு கூடும். குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். பிள்ளைகள் உங்கள் அருமையைப் புரிந்துக் கொள்வார்கள். பிதுர்வழிச் சொத்து கைக்கு வரும். 7-ல் சனி அமர்ந்திருப்பதால், வாழ்க்கைத் துணைவருக்குத் தலைச்சுற்றல், வயிற்று வலி வந்துபோகும். வியாபாரத்தில் அதிரடி அறிவிப்புகளால் போட்டிகளைச் சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் அலைக்கழிப்பு உண்டு என்றாலும் ஆதாயமும் உண்டு. கலைத்துறையினருக்கு, எதிர்பார்த்த புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

செல்வாக்கு கூடும்; பணம் சேரும் தருணம் இது.

சிம்மம்

ராசிபலன்

சூரியன் 5-ல் நிற்பதால் அவ்வப்போது முன்கோபம் வரும். சுக்ரன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் பொலிவு கூடும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் புதியவர்கள் நண்பர்களாவார்கள். மனதுக்கு இதமான செய்திகள் வந்து சேரும். 30-ம் தேதி முதல் புதன் 6-ல் சென்று மறைவதால், உறவினர்களும் நண்பர்களும் உதவி கேட்டு தொந்தரவு தருவார்கள்.

எதிர்பாராத பயணம் உண்டு. ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். சனி பகவான் 6-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் சாதிக்கும் எண்ணம் பிறக்கும்.எதிரிகளும் நண்பர்கள் ஆவார்கள். குடும்பத்தில் மதிப்பு கூடும். வியாபாரத்தில் வாடிக்கையாளர் களின் எண்ணிக்கை அதிகரிக்கும். புதுக் கிளைகள் தொடங்குவீர்கள். உத்தியோகத் தில் சில நுணுக்கங்களைக் கற்றுக்கொள்வீர்கள். கலைத்துறையினரே! உங்களின் படைப்புகளைப் போராடி வெளியிட வேண்டி வரும்.

எந்தக் காரியத்திலும் அவசரத்தைத் தவிர்க்கவேண்டிய காலம் இது.

கன்னி

ராசிபலன்

சூரியனும் புதனும் வலுவாக இருப்பதால் சவாலான விஷயங்களையும் சாமர்த்தி யமாகப் பேசி முடிப்பீர்கள். அரசாங்கத்தாலும் அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயம் உண்டு. கௌரவப் பொறுப்புகள் தேடி வரும். எதிர்பாராத வகையில் பணவரவு உண்டு. குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக்கொள்வார்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள்.

சுக்ரன் சாதகமான வீடுகளில் செல்வதால் புத்துணர்ச்சி பெருகும். செலவுகளைக் கட்டுப்படுத்துவீர்கள். சனி 5-ல் நிற்பதால் பிள்ளைகளின் பிடிவாதம் உயரும். பூர்வீகச் சொத்துப் பிரச்னையைச் சுமூகமாகத் தீர்க்கப் பாருங்கள். வியாபாரத்தில் சலுகைகளால் லாபம் கிடைக்கும். கடையை விரிவுப்படுத்த முடிவெடுப்பீர்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடித்து வெற்றி பெறுவீர்கள். கலைத்துறையினரே! உங்களை அலட்சியப்படுத்திய நிறுவனமே மீண்டும் அழைத்துப் பேசும்.

புதுமையான எண்ணங்களால் சாதிக்கும் நேரம் இது.

துலாம்

ராசிபலன்

புதன் வலுவாக நிற்பதால் உறவினர்களின் ஆதரவு பெருகும். வெளிநாட்டில் இருப்பவர்களால் அனுகூலம் உண்டு. ராசிநாதன் சுக்ரன் சாதகமான வீடுகளில் அமர்ந்திருப்பதால் திடீர் பண வரவு உண்டு; பேச்சில் நிதானம் வரும். பால்ய நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். சூரியன் 3-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் எதிர்த்தவர்கள் அடங்குவார்கள். அரசுக் காரியங்கள் விரைந்து முடியும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள்.

4-ல் சனி நிற்பதால் கால், கழுத்து, முதுகு வலி வந்து செல்லும். வெளி வட்டாரத்தில் நிதானமாகப் பழகுங்கள். வியாபாரத்தில் புது யுக்திகளால் தேங்கிக் கிடந்த சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். தள்ளிப்போன ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். சக ஊழியர்கள் மதிப்பார்கள். கலைத்துறையினர், மூத்த கலைஞர்களின் வழிகாட்டலால் வெற்றி அடைவீர்கள்.

புதிய பொறுப்புகளும் கடமைகளும் அதிகரிக்கும் நேரம் இது.

விருச்சிகம்

ராசிபலன்

சுக்ரன் சாதகமாக நிற்பதால் அலுப்பும் சலிப்பும் நீங்கும். பல வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். வாராது என்றிருந்த பணம் வரும். கணவன்-மனைவிக்குள் அந்நியோன்யம் பிறக்கும். பிள்ளைகள் தங்கள் தவற்றை உணர்வார்கள். வாழ்க்கைத் துணைவர் வழியில் நல்ல செய்தி உண்டு. சூரியன் ராசிக்கு 2-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால், எவரையும் தூக்கி எறிந்து பேசாதீர்கள். கண் வலி ஏற்படக்கூடும்.

சனி பகவான் 3-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் புதுத் திட்டங்கள் நிறைவேறும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். தினந்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். சந்தை நிலவரம் அறிந்து புது முதலீடுகள் செய்வது நல்லது. உத்தியோகத்தில் சூழ்ச்சிகளைத் தாண்டி முன்னேறுவீர்கள். கலைத்துறையினரே! நீங்கள் எதிர்பார்த்த சலுகைகள் அனைத்தும் கிடைக்கும்.

பேச்சில் கவனம் செலுத்த வேண்டிய காலம் இது.

தனுசு

ராசிபலன்

புதன் சாதகமாக இருப்பதால் வருங்காலத் திட்டங்களில் ஒன்று நிறைவேறும். வி.ஐ.பிகளின் நட்பு கிடைக்கும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். வீடு கட்ட லோன் கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷம் குடிகொள்ளும். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்திசெய்வீர்கள். அந்தஸ்து உயரும். சுக்ரன் சாதகமாக இருப்பதால் புது வாகனம் வாங்குவீர்கள். உறவினர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். பழைய வீட்டை நல்ல விலைக்கு விற்றுவிட்டு, புது இடம் வாங்குவீர்கள்.

சூரியன் ராசிக்குள் நிற்பதால் தந்தையின் உடல் நலம் சீராகும். உங்களுக்கு வேலைச்சுமை, வீண் செலவுகள் வந்து செல்லும். சனி 2-ல் நிற்பதால் பணவரவு உண்டு என்றாலும் செலவுகளும் துரத்தும். வியாபாரத்தில் புதுத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவீர்கள். பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவர். உத்தியோகத் தில் கோரிக்கைகள் ஏற்கப்படும். கலைத்துறையினரின் திறமைகள் வெளிப்படும்.

பண வரவால் சேமிப்பு கூடும் நேரம் இது.

மகரம்

ராசிபலன்

புதனும் சுக்ரனும் சாதகமான வீடுகளில் செல்வதால் உறவினர்களால் நன்மை உண்டு. அடகிலிருந்த நகையை மீட்பீர்கள். புதியவர்கள் அறிமுகமாவார்கள். நண்பர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். 12-ல் சூரியன் நிற்பதால் வீண் பகை, மன உளைச்சல், கண் எரிச்சல், செலவுகள் வந்து போகும். அரசுக் காரியங்கள் இழுபறியாகும். வெளிநாட்டில் இருப்பவர்களால் ஆதாயம் உண்டு.

சனி ராசிக்குள் நிற்பதால் இனம்புரியாத சோர்வு ஏற்பட்டாலும் பணவரவு குறையாது. வியாபாரத்தில் கடின உழைப்பால் லாபம் ஈட்டுவீர்கள். வேலையாள்களிடம் தொழில் சம்பந்தமான ரகசியங்களை சொல்லவேண்டாம். உத்தியோகத்தில் கூடுதலாக வேலை பார்க்க வேண்டி வரும். அதிகாரியால் சில நெருக்கடிகளைச் சந்திக்க நேரிடும். கலைத்துறையினரே! பொது நிகழ்ச்சிகளில் தலைமை தாங்கும் அளவுக்குப் பிரபலமாவீர்கள்.

இழுபறியான வேலைகள் இனிதே முடியும் நேரம் இது.

கும்பம்

ராசிபலன்

சூரியன் லாப வீட்டில் வலுவாக நிற்பதால் அரசாங்க அதிகாரிகள் உதவுவார்கள். அரசால் ஆதாயம் உண்டு. தாயாரின் உடல் நலம் சீராகும். மூத்த சகோதரர் பாசமழை பொழிவார். புதன் சாதகமாக இருப்பதால் ஏளனமாகவும், இழிவாகவும் திட்டியவர்கள் எல்லாம் இனி உங்களைப் பாராட்டுவார்கள். நட்பு வட்டம் விரியும். சுக்ரன் சாதகமான வீட்டில் நிற்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். தங்க ஆபரணம் வாங்குவீர்கள். திருமணப் பேச்சுவார்த்தை நன்மை பயக்கும். குலதெய்வக் கோயிலைப் புதுப்பிக்க உதவுவீர்கள்.

ஏழரைச் சனி தொடங்கியிருப்பதால் பயம், வீண் செலவு, டென்ஷன் ஏற்படும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களைத் தீட்டுவீர்கள். அனுபவசாலிகள் வேலையில் இணைவார்கள். உத்தியோகத்தில், உயரதிகாரி உங்களிடம் ரகசியங் களைப் பகிர்ந்துகொள்வார். கலைத்துறையினர்களே! எதிர்பார்த்திருந்த சம்பளப் பாக்கி கைக்கு வரும்.

முக்கிய முடிகளை எடுக்கும் நேரம் இது!

மீனம்

ராசிபலன்

புதன் சாதகமாக இருப்பதால் உறவினர்கள் உதவி கேட்பார்கள். பால்ய நண்பர்களின் சந்திப்பு நிகழும். சூரியன் 10-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால், எதிர்பார்ப்புகள் நிறைவேறும். ஆளுபவர்கள் அறிமுகமாவார்கள். புது வேலை கிடைக்கும். சுக்ரன் வலுவான வீட்டில் அமர்வதால் பணவரவு அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வெளியூர்ப் பயணங்களால் மகிழ்ச்சியுண்டு.

புதிய பதவிகள் தேடி வரும். அரசுக் காரியங்கள் விரைந்து முடியும். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். அயல்நாடு செல்லும் வாய்ப்பு சாதகமாக அமையும். சனி பகவான் லாப வீட்டில் நிற்பதால் கௌரவப் பதவிகள் தேடி வரும். வியாபாரத்தில் லாபம் குறையாது. கடையை ரசனைக்கேற்ப மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உங்களுக்கு முக்கியத்துவமும் சலுகைகளும் கிடைக்கும். கலைத்துறையினர், மூத்த கலைஞர்களின் நட்பைப் பெறுவீர்கள்.

செயல்கள் அனைத்திலும் வெற்றி கைகூடும் நேரம் இது.