Published:Updated:

ராசிபலன்

ராசிபலன்
பிரீமியம் ஸ்டோரி
ராசிபலன்

பிப்ரவரி 11 - ம் தேதி முதல் 24 -ம் தேதி வரை

ராசிபலன்

பிப்ரவரி 11 - ம் தேதி முதல் 24 -ம் தேதி வரை

Published:Updated:
ராசிபலன்
பிரீமியம் ஸ்டோரி
ராசிபலன்

மேஷம்

யோகாதிபதி சூரியன் 13-ம் தேதி முதல் லாப வீட்டில் அமர்வதால் பிள்ளைகளால் மகிழ்ச்சி ஏற்படும். மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். புது வீடு புகுவீர்கள். தடைப்பட்ட காரியங்கள் முடியும். குழந்தை பாக்கியம் சிலருக்குக் கிடைக்கும்.

மேஷம்
மேஷம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்களின் தனஸ்தானாதிபதி சுக்கிரன் உச்சமாகி நிற்பதால், எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். செல்வாக்கு கூடும். இடம், பொருள் ஏவலறிந்து பேசி சாதிப்பீர்கள். குடும்பத்தில் அமைதி உண்டாகும். திருமணம் கூடி வரும். வீடு, வாகனம் அமையும். உறவினர்கள், நண்பர்களால் ஆதாயம் உண்டு. புண்ணியஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். பயணங்கள் வெற்றி பெறும். புதிய ஃப்ரிட்ஜ், வாஷிங்மெஷின் வாங்குவீர்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்வது பற்றி நம்பிக்கைக்குரியவர்களைக் கலந்தாலோசிப்பீர்கள். உத்தியோகத்தில் அலுவலகச் சூழ்நிலை அமைதி தரும். கலைத்துறையினரின் நீண்ட நாள் கனவு நனவாகும்.

வெற்றிப் பாதையில் பயணிக்கும் தருணம் இது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ரிஷபம்

ராசிநாதன் சுக்கிரன் உச்சமாகி, முழுபலத்துடன் நிற்பதால் எதிலும் வெற்றி கிடைக்கும். பெரிய பதவிகள் தேடி வரும். எதிர்பாராத பணவரவு உண்டு. வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். வி.ஐ.பிக்கள் நண்பர்களாவார்கள்.

ரிஷபம்
ரிஷபம்

உங்களின் பூர்வ புண்ணியாதிபதியான புதன் சாதகமாக நிற்பதால் தைரியம் பிறக்கும். தயக்கமில்லாமல் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வெளிப்படையாக சில கருத்துகளைத் தெரிவிப்பீர்கள். கல்யாணம், கிரகப்பிரவேசம் என பரபரப்பாகக் காணப்படுவீர்கள். மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். மகனுக்கு வேலை கிடைக்கும். அரசாங்க அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடித்து வெற்றிபெறுவீர்கள். கலைத்துறையினர் பொது நிகழ்ச்சிகளில் தலைமைதாங்கும் அளவுக்குப் பிரபலமாவார்கள்.

பெரிய பதவிகள் தேடிவரும் நேரம் இது.

மிதுனம்

ங்களின் பூர்வ புண்ணியாதிபதி சுக்கிரன் 10-ம் வீட்டில் முழுபலத்துடன் நிற்பதால் எதையும் சாதிப்பீர்கள். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். குழந்தை பாக்கியம் சிலருக்குக் கிடைக்கும். கணவன் மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். உங்கள் ரசனைக்கேற்ப வீடு, மனை அமையும். வங்கிக்கடன் கிடைக்கும். புதிய இடத்தில் வேலை கிடைக்கும். வீடு கட்ட அரசு அனுமதி கிடைக்கும். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும்.

மிதுனம்
மிதுனம்

ராசிநாதன் புதன் சாதகமாக நிற்பதால் நன்றாக ஓய்வெடுப்பீர்கள். செவ்வாய் 7-ம் வீட்டில் நிற்பதால், உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். வியாபாரம் செழிக்கும். பழைய வேலையாட்கள் மீண்டும் பணியில் சேர்வார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களைவிட அதிகாரிகளிடம் செல்வாக்கு கூடும். கலைத்துறையினர் எதிர்பார்த்த புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

பழைய நண்பர்களால் மறுமலர்ச்சி உண்டாகும் காலம் இது.

கடகம்

சூரியன் 13-ம் தேதி முதல் 8-ம் வீட்டில் நிற்கும் புதனுடன் சேர்வதால் புதிய முயற்சிகள் வெற்றி அடையும். பணத்தட்டுபாடு விலகும். வாழ்க்கைத் துணையின் உடல்நலம் சீராகும். அரசு காரியங்கள் விரைந்து முடியும். புதன் மறைந்து நிற்பதால் நண்பர்களுடன் இருந்த மோதல்கள் விலகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். வங்கிக்கடன் கிடைக்கும்.

கடகம்
கடகம்

சுக்கிரன் உச்சமாகி 9-ம் வீட்டில் நிற்பதால் தன்னம்பிக்கை பிறக்கும். உடல் அசதி, சோர்வு விலகும். வாகனத்தைச் சீர்செய்வீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். தாயாருடனிருந்த மனத்தாங்கல் விலகும். சொத்து வகையில் இருந்த பிரச்னைகள் சுமுகமாக முடியும். உறவினர்கள், சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். செவ்வாயும் சாதகமாக இருப்பதால் எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தில் போட்டிகள் இருந்தாலும் லாபம் குறையாது. உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். கலைத்துறையினரின் திறமைக்கேற்ற வாய்ப்புகள் கிடைக்கும்.

வேலை மாற்றம், இடமாற்றம் ஏற்படும் காலம் இது.

சிம்மம்

சுக்கிரனும் உங்களின் ராசிநாதன் சூரியனும் சாதகமான நட்சத்திரத்தில் செல்வதால் தைரியமாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வாகனம் வாங்குவீர்கள். வீடு, மனை உங்கள் ரசனைக்கேற்ப அமையும். கல்யாணப் பேச்சுவார்த்தை கூடி வரும். சிலர் புது வீடு கட்டிக் கிரகப்பிரவேசம் செய்வார்கள். புது வேலை கிடைக்கும். குடும்பத்தில் உங்களின் கை ஓங்கும். மகனுக்கு நீங்கள் எதிர்பார்த்ததைப்போல் நல்ல குடும்பத்தில் மணப்பெண் அமைவார்.

சிம்மம்
சிம்மம்

புதன் வலுவாகக் காணப்படுவதால், வி.ஐ.பிக்களின் அறிமுகத்தால் உற்சாகம் அடைவீர்கள். நீண்ட நாள் கனவு நனவாகும். உயர் கல்வியில் வெற்றி உண்டு. செவ்வாய் 5-ம் வீட்டில் நிற்பதால் பிள்ளைகளால் அலைச்சல், செலவுகள் வந்து போகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துகொள்வீர்கள். கலைத்துறையினர் புதுமையாக சில படைப்புகளை வெளியிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பார்கள்.

தைரியமான முடிவுகள் எடுக்கவேண்டிய வேளை இது.

கன்னி

சூரியன் 13-ம் தேதி முதல் 6-ம் வீட்டில் அமர்வதால் மனம் தெளிவடையும். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். இழுபறியான வேலைகள் முடிவுக்கு வரும். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்துகொள்வீர்கள். ராசிநாதன் புதன் 6-ம் வீட்டில் நிற்பதால் பணிச்சுமை இருக்கும். குடும்ப விஷயங்களை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளாதீர்கள்.

கன்னி
கன்னி

சுக்கிரன் 7-ம் வீட்டில் உச்சமாகி ராசியைப் பார்ப்பதால் பணம் பல வழிகளில் வரும். வாகனத்தை மாற்றுவீர்கள். கல்யாணப் பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும். புதிதாக வீடு, மனை அமையும். தந்தைவழியில் அனுகூலம் உண்டு. செவ்வாய் 4-ம் வீட்டில் நிற்பதால் புகழ், கௌரவம் பல மடங்கு உயரும். உறவினர்கள், நண்பர்களுடன் மனம்விட்டுப் பேசுவீர்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகளைப் போராடி வசூலிப்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் பேசும்போது கவனமாகப் பேசுங்கள். கலைத்துறையினர் வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது.

ஆரோக்கியத்தில் அக்கறை காட்டும் நேரம் இது.

துலாம்

ங்களின் பாக்கியஸ்தானாதிபதி புதன் வலுவாக நிற்பதால் புதுத் திட்டங்கள் மனத்தில் உருவாகும். பழைய கடனைக் கொடுத்து முடிப்பீர்கள். நண்பர்கள், உறவினர்களுடன் இருந்த மனஸ்தாபங்கள் விலகும். திருமணம், கிரகப்பிரவேசம் என அடுத்தடுத்து வீடு களைகட்டும். பிள்ளைகள் குடும்பத்தின் சூழ்நிலையைப் புரிந்துகொள்வார்கள். வீண் விவாதம் விலகும். குழந்தை பாக்கியம் சிலருக்குக் கிடைக்கும். தாய்வழி உறவுகள் உதவுவார்கள்.

துலாம்
துலாம்

ராசிநாதன் சுக்கிரன் உச்சம் பெறுவதால் ஆளுமைத்திறன் அதிகரிக்கும். சாதிக்கும் தைரியம் பிறக்கும். ஆனால், போராடி சில வேலைகளை முடிக்கவேண்டி வரும். வாழ்க்கைத்துணையின் உடல்நலத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் லாபம் பெருகும். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். கலைத்துறையினர் புகழ்பெற்ற நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்படுவார்கள்.

கலகலப்பாகப் பேசி காரியம் சாதிக்கும் தருணம் இது.

விருச்சிகம்

ங்களின் யோகாதிபதி சூரியன் சாதகமான வீடுகளில் செல்வதால் நல்ல வேலை கிடைக்கும். அரசு வகையில் அனுகூலம் உண்டு. சொத்துப் பிரச்னை தீரும். பகைவர்கள் ஒதுங்குவார்கள். வழக்கில் வெற்றி உண்டு. தாய்வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். புதன் சாதகமாக இருப்பதால் வெளிநாட்டுப் பயணம் அமையும்; விசா கிடைக்கும். புது நண்பர்களின் அறிமுகத்தால் உற்சாகமடைவீர்கள்.

விருச்சிகம்
விருச்சிகம்

சுக்கிரன் 5-ம் வீட்டில் நிற்பதால் பூர்வீகச் சொத்தை சரிசெய்வீர்கள். உறவினர்களால் ஆதாயமடைவீர்கள். மகளின் திருமணப் பேச்சு வார்த்தை நல்லவிதத்தில் முடியும். மகனுக்கும் நல்ல வேலை கிடைக்கும். உங்களின் ரசனைக்கேற்ப வீடு அமையும். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. உத்தியோகத்தில் கோப்புகளைக் கையாளும்போது அலட்சியம் வேண்டாம். கலைத்துறையினரின் திறமை வெளிப்படும்.

வளைந்து கொடுத்து பயணிக்கும் வேளை இது.

தனுசு

சூரியன் 13-ம் தேதி முதல் 3-ம் வீட்டில் அமர்வதால் இங்கிதமாகப் பேசுவீர்கள். தடைப்பட்ட அரசு வகை காரியங்கள் உடனே முடியும். புது வீடு கட்ட தொடங்குவீர்கள். புதன் வலுவான நட்சத்திரத்தில் செல்வதால் வாழ்க்கைத் துணையின் உடல்நலத்தில் கவனம் தேவை. வாழ்க்கைத் துணையின் வழியில் சொத்து சேரும். திருமணம், சீமந்தம் என வீடு களைகட்டும். கல்யாண முயற்சிகள் வெற்றியடையும்.

தனுசு
தனுசு

சுக்கிரன் 4-ம் வீட்டில் இருப்பதால் திடீர்ப் பணவரவு உண்டு. வீடு, வாகன வசதி பெருகும். கல்யாண விஷயங்கள் சாதகமாக முடியும். வியாபார ரகசியங்கள் யார் மூலம் கசிகிறது என்பதை அறிந்து அதற்கேற்ப செயல்படுவீர்கள். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆச்சர்யப்படும் அளவுக்குச் சில வேலைகளைப் பரபரப்புடன் செய்து முடிப்பீர்கள். கலைத்துறையினரின் படைப்புகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும்.

பிள்ளைகளால் பெருமை சேரும் காலம் இது.

மகரம்

சுக்கிரன் உச்சமாகி நிற்பதால் உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். உள் மனத்தில் தொக்கி நிற்கும் தாழ்வு எண்ணங்களைத் தூக்கி எறிவீர்கள். இங்கிதமாக, இதமாகப் பேசுவீர்கள். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். வளைந்து கொடுத்துப்போவது நல்லது. புதன் சாதகமாக இருப்பதால் தந்தைவழியில் உதவிகள் உண்டு. பங்குச் சந்தையில் பணம் வரும். பழைய கடனை நினைத்துப் பயப்படாதீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துகொள்வார்கள். மகனுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

மகரம்
மகரம்

செவ்வாய் 12-ம் வீட்டில் மறைவதால் வீண் விரயம், செலவு, திடீர்ப் பயணம் ஏற்படும். அலைச்சல் அதிகரிக்கும். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். வாடிக்கையாளர்களை மேம்படுத்த சில விளம்பர யுத்திகளைக் கையாளுவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமைக்கேற்ற வாய்ப்பும் சம்பள உயர்வும் கிடைக்கும். கலைத்துறையினர் உற்சாகத்துடன் காணப்படுவார்கள்.

இலக்கை நோக்கி முன்னேறும் வேளை இது.

கும்பம்

ங்களின் ராசிக்குள் நிற்கும் புதன், தடைப்பட்ட காரியங்களை முடிக்க உதவுவார். மாறுபட்ட அணுகுமுறையால் பழைய சிக்கல்களுக்குத் தீர்வு கிடைக்கும். எதிர்பார்த்த பணம் வரும். பிள்ளைகளிடம் முக்கியமான குடும்ப விஷயங்களைப் பகிர்ந்துகொள்வதில் தவறில்லை. மகனுக்கு வெளிமாநிலத்தில் நல்ல வேலை கிடைக்கும்.

கும்பம்
கும்பம்

சுக்கிரன் 2-ம் வீட்டில் நிற்பதால் உங்களின் எண்ணங்கள் நிறைவேறும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். உணவு விஷயத்தில் அலட்சியம் வேண்டாம். செவ்வாய் சாதகமாக இருப்பதால் செல்வாக்கு கூடும். வியாபாரத்தில் சில மாற்றங்களைச் செய்து வெற்றியடைவீர்கள். வெளிநாட்டுத் தொடர்புடைய நிறுவனத்தின் மூலம் லாபம் அடைவீர்கள். உத்தியோகத்தில் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. கலைத்துறையினரின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும்.

எதிர்பார்ப்புகள் யாவும் நிறைவேறும் தருணம் இது.

மீனம்

சுக்கிரன் ராசியில் நிற்பதால் தைரியம் கூடும். பணவரவு உண்டு. வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். இளைய சகோதர வகையில் நன்மை உண்டாகும். தள்ளிப்போன திருமணம் கூடி வரும். புதன் சாதகமாக இருப்பதால் உறவினர்கள், நண்பர்கள் சிலர் உங்கள் ஆலோசனையை நாடுவார்கள். நவீன ரக மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள்.

மீனம்
மீனம்

சூரியன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் அரசாங்க விஷயங்கள் விரைந்து முடியும். பழைய கடனில் ஒரு பகுதியைக் கொடுத்து முடிப்பீர்கள். தந்தைவழியில் உங்களைப் பற்றி பெருமையாகப் பேசுவார்கள். செவ்வாய் சாதகமான வீடுகளில் செல்வதால் பழைய இடத்தை விற்றுப் புது வீடு வாங்குவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் பொறுப்பாக நடந்துகொள்வார்கள். உத்தியோகத்தில் கடினமான வேலைகளையும் மாறுபட்ட அணுகுமுறையால் எளிதாக முடிப்பீர்கள். கலைத்துறையினர் சம்பள விஷயத்தில் கறாராக இருப்பது நல்லது.

நினைத்ததை நிறைவேற்றும் காலம் இது.