Published:Updated:

ராசிபலன்

ராசிபலன்
பிரீமியம் ஸ்டோரி
ராசிபலன்

பிப்ரவரி 25 - முதல் மார்ச் - 9 வரை

ராசிபலன்

பிப்ரவரி 25 - முதல் மார்ச் - 9 வரை

Published:Updated:
ராசிபலன்
பிரீமியம் ஸ்டோரி
ராசிபலன்

மேஷம்

ராசிநாதன் செவ்வாய் 9-ம் வீட்டிலேயே தொடர்கிறார். சூரியன் லாப வீட்டில் வலுவாக நிற்கிறார். ஆகவே, பணவரவு திருப்திகரமாக இருக்கும். எனினும் தவிர்க்க முடியாத செலவுகளும் அதிகமாகும். சொத்துப் பிரச்னைக்கு சுமுக தீர்வு காண்பது நல்லது. வீட்டைக் கட்டி முடிக்க எதிர்பார்த்த வங்கிக் கடனுதவி கிடைக்கும். விலகிச்சென்ற சொந்தங்கள் உங்களைப் புரிந்துகொண்டு வலியவந்து பேசுவார்கள். வழக்கில் வெற்றி உண்டு.

மேஷம்
மேஷம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சுக்கிரனும் புதனும் வலுவாக இருப்பதால் திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். வாகனப் பழுதைச் சரிசெய்வீர்கள். உங்கள் ரசனைக்கேற்ற வீடு, மனை வாங்குவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். கலைத்துறையினர் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவார்கள்.

இலக்கை எட்டிப்பிடிக்கும் தருணம் இது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ரிஷபம்

ராசிநாதன் சுக்கிரன் சாதகமாக இருப்பதால் மாறுபட்ட அணுகு முறையால் சாதிப்பீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். புதிதாக வாகனம் வாங்குவீர்கள். சிலர் வீடு மாற வேண்டி வரும். பிள்ளைகள் உங்களின் மனம் கோணாதபடி நடந்துகொள்வார்கள். பால்ய நண்பர்கள் தேடி வந்து உதவுவார்கள். பூர்வீகச் சொத்தை சரிசெய்வீர்கள்.

ரிஷபம்
ரிஷபம்

செவ்வாய் 8-ம் வீட்டில் நிற்பதால் உடல்நலனில் கவனமாக இருங்கள். சூரியனும் புதனும் சாதகமாக இருப்பதால் புதிய பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். கல்யாண முயற்சிகள் கைகூடும். வெளியூர்ப் பயணங்களால் ஆதாயம் உண்டு. அரசாங்க விஷயங்கள் சாதகமாக முடியும். விருந்தினர்களின் வருகையால் வீடு களைகட்டும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் திறமையை மூத்த அதிகாரி பரிசோதிப்பார். கலைத்துறையினருக்குப் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும் வேளை இது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மிதுனம்

பூர்வ புண்ணியாதிபதி சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் குழந்தை பாக்கியம் சிலருக்குக் கிடைக்கும். சிக்கனமாகச் செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். சிலர் வீட்டை விரிவுபடுத்துவார்கள். சூரியன் 9-ம் வீட்டில் நிற்பதால் தந்தையுடன் வீண் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம். உங்களின் ராசிநாதன் புதன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் பூர்வீகச் சொத்து கைக்கு வரும். வழக்கில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள்.

மிதுனம்
மிதுனம்

செவ்வாய் 7-ம் வீட்டில் நிற்பதால் சகோதரர்களால் அலைச்சல்கள் இருந்தாலும், அவர்களால் பல உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனங்களுடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்களிடம் முக்கிய பொறுப்பை ஒப்படைப்பார்கள். கலைத் துறையினர் கௌரவிக்கப்படுவார்கள்.

வெற்றிப்பயணம் தொடரும் தருணம் இது.

கடகம்

செவ்வாய் 6-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் உங்களின் புகழ், கௌரவம் உயரும். சகோதரர்களை அனுசரித்துப் போவது நல்லது. சுக்கிரனும் புதனும் சாதகமாக இருப்பதால் புத்திசாலித்தனத்தால் முன்னேறுவீர்கள். வி.ஐ.பிக்களின் ஆதரவால் சில காரியங்களை விரைந்து முடிப்பீர்கள். ஓரளவு பணவரவு உண்டு. பூர்வீகச் சொத்தில் உங்களுக்கான பங்கைக் கேட்டு வாங்குவீர்கள். தோற்றப்பொலிவு கூடும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும்.

கடகம்
கடகம்

சூரியன் 8-ம் வீட்டில் மறைந்திருப்பதால் அரசாங்கப் பணிகள் விரைந்து முடியும். வாழ்க்கைத்துணைவர் வழியில் பிணக்குகள் நீங்கும். வியாபாரத்தில் ஆழம்தெரியாமல் காலை விடாதீர்கள். உத்தியோகத்தில் சின்னச் சின்ன இடர்பாடுகளைச் சமாளிக்க வேண்டி வரும். கலைத் துறையினரை உதாசீனப்படுத்திய நிறுவனமே அழைத்து வாய்ப்பு தரும்.

விட்டதைப்பிடிக்கும் தருணம் இது.

சிம்மம்

சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்களுக்கு மத்தியில் ஒருபடி உயர்ந்து நிற்கவேண்டுமென எண்ணுவீர்கள். நெருங்கிய நண்பர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வீட்டை விரிவுபடுத்துவீர்கள். புதன் 6-ம் வீட்டில் மறைந்திருப்பதால், உறவினர்களிடம் பேசும்போது கவனம் தேவை. முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழந்துவிடாதீர்கள்.

சிம்மம்
சிம்மம்

குரு வலுவாக இருப்பதால் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். புண்ணியத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். ராசிநாதன் சூரியன் 7-ம் வீட்டில் இருப்பதால், உடல்நலனில் கவனமாக இருங்கள். செவ்வாய் 5-ம் வீட்டில் தொடர்வதால் பிள்ளைகளின் வருங்காலம் குறித்துத் திட்டமிடுவீர்கள். வியாபாரத்தில் அலுவலகத்தைப் புதுப்பிப்பீர்கள். உத்தியோகத்தில் அதிக சம்பளத்துடன் புது வாய்ப்புகள் தேடி வரும். கலைத் துறையினரை மூத்த கலைஞர்கள் பாராட்டுவார்கள்.

வசதிவாய்ப்புகள் பெருகும் நேரம் இது.

கன்னி

சுக்கிரன் சாதகமாக இருப்பதால் வெற்றிபெற்ற மனிதர்களின் நட்பு கிடைக்கும். எதிர்பார்த்த வகையில் பணம் வரும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். வாழ்க்கைத்துணைவர் வழியில் நல்ல செய்தி வரும். சூரியன் 6-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால், அதிகாரம் மிக்க பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். அரசால் ஆதாயம் உண்டு. வீடு கட்ட எதிர்பார்த்த பணம் வரும்; கட்டட பிளான் அப்ரூவலாகும். நீண்ட நாள்களாக எதிர்பார்த்துக் காத்திருந்த அயல்நாட்டுப் பயணம் அமையும்.

கன்னி
கன்னி

புதன் 5-ம் வீட்டில் நிற்பதால், உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் போட்டி களையும் தாண்டி ஓரளவு லாபம் சம்பாதிப்பீர்கள். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களைக் கற்றுக்கொள்வீர்கள். கலைத்துறையினரின் திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு வரும்.

புதிய பாதையில் பயணிக்கும் வேளை இது.

துலாம்

சூரியன் 5-ம் வீட்டில் நிற்பதால் பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். கர்ப்பிணிகள் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. ஆன்மிகப் பணிகளை முன்னின்று செய்வீர்கள். 29-ம் தேதி வரை ராசிநாதன் சுக்கிரன் 6-ம் வீட்டில் மறைந்திருப்பதால், எதிலும் ஒருவித சலிப்பும் சோர்வும் உண்டாகலாம். வாழ்க்கைத்துணையின் ஆரோக்கியம் சீராகும்.

துலாம்
துலாம்

செவ்வாய் 3-ம் வீட்டில் தொடர்வதால் உயர் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். புதன் சாதகமாக இருப்பதால் பணவரவு அதிகரிக்கும். வியாபாரத்தில் சில மாற்றங்களைச் செய்வதன் மூலம் அதிக லாபம் அடைவீர்கள். உத்தியோகத்தில் அலுவலக ரகசியங்களை மூத்த அதிகாரி உங்களிடம் பகிர்ந்துகொள்வார். கலைத்துறையினர் வேற்றுமொழி வாய்ப்புகளால் புகழடைவார்கள்.

சவால்களைச் சமாளிக்கவேண்டிய தருணம் இது.

விருச்சிகம்

சூரியனும் புதனும் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் புதிய கோணத்தில் யோசித்து பழைய சிக்கல்களுக்குத் தீர்வு காண்பீர்கள். பணவரவு திருப்தி தரும். குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகள் படிப்பில் முன்னேறுவார்கள். 29-ம் தேதி வரை சுக்கிரன் 5-ம் வீட்டில் நிற்பதால் வி.ஐ.பிக்களின் நட்பு கிடைக்கும். வீட்டைக் கட்டி முடிக்க எதிர்பார்த்த வங்கிக்கடன் கிடைக்கும்.

விருச்சிகம்
விருச்சிகம்

மார்ச் 1-ம் தேதி முதல் சுக்கிரன் 6-ம் வீட்டில் மறைவதால் கணவன் மனைவி இருவரும் பரஸ்பரம் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது.

வாகனம் பழுதாகும். செவ்வாய் 2-ம் வீட்டில் நிற்பதால் வீண் வாக்கு வாதங்களில் ஈடுபடாதீர்கள். வியாபாரத்தில் வேலையாள்கள் மற்றும் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்தியோகத்தில் வளைந்துகொடுத்துப் போவது நல்லது. கலைத்துறையினர் மூத்த கலைஞர்களின் நட்பைப் பெறுவார்கள்.

முன்னேற்றப் பாதையில் பயணிக்கும் நேரம் இது.

தனுசு

சூரியன் 3-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் சவால்களில் வெற்றி பெறுவீர்கள். நாடாளுபவர்களின் நட்பு கிடைக்கும். அரசியலில் செல்வாக்கு கூடும். குடும்பத்தில் உங்களின் கை ஓங்கும். மகளின் திருமணத்தைச் சிறப்பாக நடத்துவீர்கள். மகனுக்கு உயர்கல்வி, உத்தியோகம் நல்லவிதத்தில் அமையும். பிதுர்வழிச் சொத்து கைக்கு வரும். சிலருக்கு அயல்நாட்டில் வேலை கிடைக்கும். வழக்கு சாதகமாக அமையும்.

தனுசு
தனுசு

புதனும் சுக்கிரனும் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் பூர்வீகச் சொத்தைப் புதுப்பிப்பீர்கள். வாழ்க்கை த்துணை வழியில் ஆதாயம் உண்டு. செவ்வாய் ராசிக்குள் தொடர்வதால் தூக்கம் குறையும். வியாபாரத்தில் பெரிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்வதன் மூலம் உங்கள் புகழ் கூடும். உத்தியோகத்தில் மேலதிகாரியிடம் நற்பெயரை ஈட்டுவீர்கள். கலைத்துறையினரின் வாழ்வில் அதிரடியான முன்னேற்றங்கள் உண்டு.

தொட்டதெல்லாம் துலங்கும் வேளை இது.

மகரம்

புதனும் சுக்கிரனும் சாதகமாக இருப்பதால் குழந்தை பாக்கியம் சிலருக்குக் கிடைக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். சொந்தங்கள் மத்தியில் மதிக்கப் படுவீர்கள். சிலருக்குப் புதிய இடத்தில் நல்ல வேலை கிடைக்கும். சகோதரிக்கு நல்ல வரன் அமையும். தாயாரின் உடல்நலம் சீராகும். நட்பு வழியில் நல்ல செய்தி வரும். அயல்நாடு செல்லும் வாய்ப்பு சிலருக்கு வரும்.

மகரம்
மகரம்

சூரியன் ராசிக்கு 2-ம் வீட்டில் நிற்பதால் உடல்நலனில் கவனமாக இருப்பது நல்லது. யாரையும் அலட்சியப்படுத்தாதீர்கள். செவ்வாய் ராசிக்கு 12-ம் வீட்டில் மறைந்திருப்பதால் சேமிப்புகள் கரையும். சகோதரரால் அலைச்சல் இருக்கும். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்தியோகத்தில் எவர் உங்களைத் தாக்கிப்பேசினாலும் பதற்றப்படாதீர்கள். கலைத்துறையினரின் நீண்ட நாள் கனவு நனவாகும்.

தடைப்பட்ட காரியங்கள் உடனுக்குடன் முடியும் வேளை இது.

கும்பம்

சுக்கிரன் வலுவாக இருப்பதால் பேச்சைக் குறைத்து செயலில் வேகம் காட்டுவீர்கள். அழகு, இளமை கூடும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் குறையும். திருமணப் பேச்சுவார்த்தை கைகூடும். பாகப்பிரிவினை சுமுகமாக முடியும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சுற்றுலா சென்று வருவீர்கள். ராசிக்குள் சூரியன் நிற்பதால் முன்கோபம் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள். அரசாங்கப் பணிகள் இழுபறியாகும்.

கும்பம்
கும்பம்

செவ்வாய் லாப வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை வரும். பணவரவு அதிகரிக்கும். பத்திரப் பதிவு செய்வீர்கள். வியாபாரத்தில், வேலையாள்களால் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் இடும் வேலைகளை உடனுக்குடன் நிறைவேற்றுவது முன்னேற்றகரமாக அமையும். பனிப்போர் வந்து விலகும். கலைத்துறையினரின் கற்பனைத் திறன் வளரும்.

பழைய சிக்கல்களுக்குத் தீர்வுகாணும் வேளை இது.

மீனம்

சுக்கிரனும் புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். புதிதாக ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். மனக்கசப்பால் ஒதுங்கியிருந்த வாழ்க்கைத்துணைவர் வழியிலான உறவினர்கள் விரும்பி வந்து உதவுவார்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் ஏற்படும். ராசிக்கு 12-ம் வீட்டில் சூரியன் அமர்ந்திருப்பதால், சில வேலைகளை அலைந்து திரிந்து முடிக்கவேண்டியிருக்கும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம்.

மீனம்
மீனம்

செவ்வாய் 10-ம் வீட்டில் தொடர்வதால் கௌரவப் பதவிக்கு தேர்ந்தெடுக் கப்படுவீர்கள். உடன்பிறந்தவர்கள் ஓடிவந்து உதவுவார்கள். புது வீடு, மனை வாங்குவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்ததைவிட லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்களை நம்பி சில முக்கியப் பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். கலைத்துறையினர் புதுமையான சில படைப்புகளை வெளியிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பார்கள்.

பணப்புழக்கம் அதிகரிக்கும் தருணம் இது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism