Published:Updated:

ராசிபலன்

ராசிபலன்
பிரீமியம் ஸ்டோரி
ராசிபலன்

ஜனவரி 14 முதல் 27 - ம் தேதி வரை

ராசிபலன்

ஜனவரி 14 முதல் 27 - ம் தேதி வரை

Published:Updated:
ராசிபலன்
பிரீமியம் ஸ்டோரி
ராசிபலன்

மேஷம்

சுக்கிரன் லாப வீட்டில் நிற்பதால் செயலில் வேகம் கூடும். எதிர்பாராத பண வரவு உண்டு. பிரபலங்கள் அறிமுகமாவார்கள்; அவர்களால் உதவிகள் கிடைக்கும். குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். பிள்ளைகளின் தனித்திறமைகளைக் கண்டறிந்து, அவற்றை மேம்படுத்த வழிகாட்டுவீர்கள். விரும்பிய பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள்.

மேஷம்
மேஷம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வெளிவட்டாரங்களில் புதியவர்கள் நண்பர்களாவார்கள். வெளியூர்ப் பயணங்களால் புதிய அனுபவம் உண்டாகும். உத்தியோகத்தில் பணிகளைப் போராடி முடிக்க வேண்டி வரும். எனினும், எதிர்பார்த்த நற்பலன்கள் கிடைக்கும். சிலருக்குப் புதிய பதவி, பொறுப்புகள் தேடி வரும். புது வேலை கிடைக்கும். வியாபாரத்தில் புதிய முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது. கலைத்துறையினருக்குத் தள்ளிப்போன வாய்ப்புகள் இப்போது தேடி வரும்; நல்லமுறையில் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

சவால்களையும் எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறும் நேரம் இது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ரிஷபம்

புதனும் சுக்கிரனும் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர்கள். திருமண முயற்சிகள் வெற்றி பெறும். சிலர் புது வீட்டில் குடிபுகுவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். குழந்தை பாக்கியம் சிலருக்குக் கிடைக்கும். பிள்ளைகள் பாசமழை பொழிவார்கள். பூர்வீகச் சொத்து கைக்கு வரும். நட்பால் ஆதாயம் உண்டு.

ரிஷபம்
ரிஷபம்

செவ்வாய் 7-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் நகை வாங்குவீர்கள். சொத்து வாங்க முன்பணம் தருவீர்கள். சகோதர வகையில் அனுகூலம் உண்டு. மனைவிவழி உறவினர்கள் உங்களைப் பற்றி பெருமையாகப் பேசுவார்கள். வியாபாரத்தில் புது யுக்திகளால் தேங்கிக்கிடந்த சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பார்கள். கலைத்துறையினர் பொது நிகழ்ச்சிகளில் தலைமை தாங்குவார்கள்.

எதையும் சாதித்துக் காட்டும் தருணம் இது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மிதுனம்

செவ்வாய் 6-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் சவால்களில் வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் இருந்த கூச்சல், குழப்பங்கள் நீங்கி அமைதி திரும்பும். வீடு, மனை வாங்குவது, விற்பதிலிருந்த தேக்க நிலை மாறும். உங்களின் ராசிநாதன் புதன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் குழப்பம் நீங்கும். தைரியம் பிறக்கும். கணவன் மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். உறவினர்கள், நண்பர்களுடன் இருந்த மோதல்கள் விலகும்.

மிதுனம்
மிதுனம்

சூரியன் 8-ம் வீட்டில் மறைவதால் உயர் பதவிகள் கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டு. இளைய சகோதரருடன் இருந்த மனத்தாங்கல் நீங்கும். தந்தைவழி சொத்துகள் வந்து சேரும். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. புதிய கிளைத் தொடங்குவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். கலைத்துறையினரின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும்.

தொட்டதெல்லாம் வெற்றிபெறும் நேரம் இது.

கடகம்

சுக்கிரன் 8-ம் வீட்டில் மறைந்து நிற்பதால் உதாசீனப்படுத்தியவர்கள் மதிப்பார்கள். இதுவரை தடைப்பட்ட வேலைகள், இனி எளிதாக முடியும். பழுதாகிக்கிடந்த வாகனத்தை மாற்றிவிட்டு புதிய வாகனம் வாங்குவீர்கள். குடும்பத்தாருடன் நேரம் செலவிடுவீர்கள். அவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக்கொள்வீர்கள்.

கடகம்
கடகம்

சூரியனும் புதனும் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், சில விஷயங்களில் கறாராக நடந்துகொள்வீர்கள். தேங்கிக் கிடந்த அரசாங்க வேலைகள் இனி விரைந்து முடியும். வியாபாரத்தில் பழைய பாக்கிகளைப் போராடி வசூலிப்பீர்கள். புதிய கிளை தொடங்குவீர்கள். உத்தியோகத்தில், சூழல் உங்களுக்குச் சாதகமாகும். அதிகாரிகள் உங்களை மதிப்பார்கள். எனினும், சக ஊழியர்களுடன் வீண் வாக்குவாதம் செய்ய வேண்டாம்; அவர்களால் வீண் பிரச்னைகள் உண்டாகலாம். கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

பொறுப்புகள் அதிகரிக்கும் காலம் இது.

சிம்மம்

ராசிநாதன் சூரியன் 6-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் திடீர் யோகம், பணவரவு உண்டாகும். வழக்கில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் உங்களின் கை ஓங்கும். குழந்தை பாக்கியம் சிலருக்குக் கிடைக்கும்.உண்டாகும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். புது வீடு வாங்குவீர்கள். திருமணம், கிரகப் பிரவேசத்தை முன்னின்று நடத்துவீர்கள். சுக்கிரன் 7-ம் வீட்டில் இருப்பதால் வாழ்க்கைத்துணை வழியில் அனுகூலம் உண்டு. குரு வலுவாக அமாந்திருப்பதால் தந்தை வழியில் மதிப்புக் கூடும்.

சிம்மம்
சிம்மம்

திடீர்ப் பணவரவு, செல்வாக்கு தேடி வரும். அயல்நாடு செல்லும் வாய்ப்பும் உண்டு. செவ்வாய் சாதகமாக இருப்பதால் புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்வீர்கள். பெரிய நிறுவனங்களுடன் புதிய ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களுக்காக மேலதிகாரியிடம் பரிந்து பேசுவீர்கள். கலைத்துறையினர் வேற்றுமொழிப்பட வாய்ப்புகளால் புகழடைவீர்கள்.

அச்சம் விலகி அதிகாரப் பதவி பெறும் காலம் இது.

கன்னி

செவ்வாய் 3-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால், மனத்தில் தயக்கம் நீங்கும். சோர்வு விலகி புது தெம்பு பிறக்கும். நீண்ட நாள்களாகத் தள்ளிப்போன காரியங்கள் முடியும். பேச்சிலிருந்த தடுமாற்றம் நீங்கும்; கம்பீரமான பேச்சாலும் செயலாலும் அனைவரையும் ஈர்ப்பீர்கள். பணவரவு சரளமாக இருக்கும். புதன் சாதகமாக இருப்பதால் தொல்லைகளிலிருந்து விடுபடுவீர்கள். 6-ம் வீட்டில் சுக்கிரன் மறைந்திருப்பதால் பயணங்களில் கவனமாக இருக்கவும்.

கன்னி
கன்னி

சிலர் வீடு மாற வேண்டிய கட்டாயம் ஏற்படும். டி.வி, ஃப்ரிட்ஜ் போன்ற சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களைக் கற்றுக்கொள்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரக்கூடும். கலைத்துறையினரின் படைப்புகளுக்கு வேறொருவர் உரிமைக் கொண்டாடுவார்.

தன்னடக்கத்தால் சாதிக்கும் வேளை இது.

துலாம்

சுக்கிரன் 5-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். குடும்ப வருமானத்தை உயர்த்துவீர்கள். குழந்தை பாக்கியம் சிலருக்குக் கிடைக்கும். பிள்ளைகள் உங்களின் மனம் கோணாமல் நடந்துகொள்வார்கள். பூர்வீகச் சொத்தில் சிக்கல் தீரும். விருந்தினர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் பொங்கும். திருமணம், சீமந்தம் என வீடு களைகட்டும்.

துலாம்
துலாம்

செவ்வாய் 2-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால், புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். தாயாரின் உடல்நலம் சீராகும். வியாபாரத்தில் வரவு உயரும். புதிய முயற்சிகளில் உற்சாகமாக இறங்குவீர்கள். புது வேலையாட்கள், பங்குதாரர்கள் அமைவார்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களைச் சொல்லித் தருவார். அவர்களின் வழிகாட்டல்களை ஏற்று நடப்பதால் முன்னேற்றம் உண்டு. கலைத்துறையினர் சம்பள விஷயத்தில் கறாராக இருப்பது நல்லது.

வெற்றிக்கு வித்திடும் காலம் இது.

விருச்சிகம்

சூரியன் 3-ம் வீட்டில் அமர்வதால் எதிலும் வெற்றி பெறுவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். செல்வாக்கு உயரும். பதவிகள் தேடி வரும். புதிய இடத்தில் நல்ல வேலை கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். திருமணம் கூடி வரும். பிள்ளைகள் தங்களின் தவற்றை உணருவார்கள். தாயாரின் உடல்நலம் சீராகும்.

விருச்சிகம்
விருச்சிகம்

புதன் சாதகமாக இருப்பதால் திடீர்ப் பயணங்கள் உண்டு. புது நட்பு மலரும். ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பது நல்லது. வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். சகோதரர் உதவுவார். வழக்குகளில் அவசரம் வேண்டாம். உரிய சட்ட ஆலோசனை பெற்று செயல்படவும். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளைச் சமாளிப்பீர்கள். பற்று-வரவு எதிர்பார்த்தபடி இருக்கும். உத்தியோகத்தில், எவர் உங்களை விமர்சனம் செய்தாலும் பதற்றப்படாதீர்கள். கலைத்துறையினர் மூத்த கலைஞர்களின் நட்பைப் பெறுவார்கள்.

கோபத்தை விலக்கி வெற்றி காணவேண்டிய காலம் இது.

தனுசு

3 -ம் வீட்டில் சுக்கிரன் அமர்ந்திருப்பதால் பொன், பொருள், ஆபரணச் சேர்க்கை உண்டு. வாகனம் வாங்குவீர்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். திருமணம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். புதன் வலுவாக இருப்பதால் அழகு, அறிவு கூடும். உங்களின் அணுகுமுறைகளில் மாற்றம் வரும். பணவரவு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். வரவேண்டிய பணம் கைக்கு வரும்.

தனுசு
தனுசு

சூரியன் 2-ம் வீட்டில் நுழைவதால் பேச்சில் நிதானம் தேவை. நண்பர்கள், உறவினர்களிடம் கண்டிப்பு காட்டாமல், கனிவுடனும் அன்புடனும் பேசுங்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். கலைத்துறையினருக்குப் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

தலைநிமிர்ந்து நடக்கும் நேரம் இது.

மகரம்

செவ்வாய் வலுவாக இருப்பதால் எதிலும் வெற்றி பெறுவீர்கள். திடமாக சில முடிவுகள் எடுப்பீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. கணவன் மனைவிக்குள் இருந்த சச்சரவுகள் நீங்கும். பிள்ளைகளின் பாசம் அதிகரிக்கும். ராசிக்குள் புதன் அமர்வதால் பணப்பற்றாக்குறை நீங்கும். உறவினர்கள், நண்பர்களால் ஆதாயம் உண்டு. விருந்தினர் வருகை அதிகரிக்கும்.

மகரம்
மகரம்

வெளியூர்ப் பயணங்களால் மகிழ்ச்சியும் புதிய அனுபவங்களும் கிடைக்கும். 2-ம் வீட்டில் சுக்கிரன் நிற்பதால், கனிவாகப் பேசி சாதிப்பீர்கள். கல்யாணப் பேச்சுவார்த்தை வெற்றியடையும். வியாபாரத்தில் புதிய முதலீடு செய்வது பற்றி யோசிப்பீர்கள். உங்களின் வேலையாட்கள், பங்குதாரர்களுக்கு உதவுவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் கடின உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கும். கலைத்துறையினரின் படைப்புத்திறன் வளரும்.

போராடி வெற்றி பெறும் வேளை இது.

கும்பம்

சுக்கிரன் ராசிக்குள் நிற்பதால் மனத்தெளிவு, உற்சாகம் பிறக்கும். தோற்றப்பொலிவு கூடும். நவீனரக வாகனம் வாங்குவீர்கள். கணவன் மனைவிக்குள் அந்நியோன்யம் பிறக்கும். பிள்ளைகளின் நட்புவட்டம் விரியும். வீடு கட்ட, வாங்க வங்கிக்கடன் உதவி கிடைக்கும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.

கும்பம்
கும்பம்

சூரியனும் புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால் எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். எதிலும் மகிழ்ச்சி தங்கும். திருமணம் கூடி வரும். சிலர் வீடு மாறுவீர்கள். செவ்வாய் 10-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் உங்களின் ஆளுமைத்திறன் அதிகரிக்கும். வியாபாரத்தில் சில தந்திரங்களைக் கற்றுக்கொள்வீர்கள். புது யுக்திகளால் வாடிக்கை யாளர்களைக் கவர்வீர்கள்.உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் வீண்விவாதம் வேண்டாம். கலைத்துறையினருக்கு வெகுநாள்களாகத் தடைப்பட்டிருந்த வாய்ப்பு இனி கூடி வரும்.

புகழ் வெளிச்சத்துக்கு வரும் வேளை இது.

மீனம்

சூரியனும் புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால் புதிய திட்டங்கள் நிறைவேறும். பெரிய பதவிகள், பொறுப்புகள் கிடைக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். குடும்பத்தினர் உங்களின் ஆலோசனையை ஏற்பார்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வெளிவட்டாரத்தில் மரியாதை, செல்வாக்கு கூடும்.

மீனம்
மீனம்

பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். சுக்கிரன் 12-ம் வீட்டில் மறைந்திருப்பதால் திடீர் யோகம், ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. செவ்வாய் 9-ம் வீட்டில் நிற்பதால் நேர்மறை எண்ணங்கள் தோன்றும். புதிய முதலீடு செய்து வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துகொள்வீர்கள். உத்தி யோகத்தில் இருந்துவந்த தடைகள் விலகும். கலைத்துறையினர் கெளரவிக்கப்படுவார்கள்.

கடின உழைப்பால் முதலிடம் பிடிக்கும் தருணம் இது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism