தொடர்கள்
ஜோதிடம்
Published:Updated:

ராசிபலன்

ராசிபலன்
பிரீமியம் ஸ்டோரி
News
ராசிபலன்

ஜனவரி 28 முதல் பிப்ரவரி 10 - ம் தேதி வரை

மேஷம்

ங்கள் பூர்வபுண்ணியஸ்தானதிபதி சூரியன் 10-ம் வீட்டில் கேந்திர பலம் பெற்றிருப்பதால் நிர்வாகத் திறன் கூடும். குழந்தை பாக்கியம் சிலருக்குக் கிடைக்கும். பிள்ளைகளால் சமூகத்திலும் உறவினர்கள் மத்தியிலும் செல்வாக்கு உயரும். சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். அரசு வகை காரியங்கள் விரைந்து முடியும். பூர்வீகச் சொத்தைச் சீர்செய்வீர்கள்.

மேஷம்
மேஷம்

புதனும் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். சுக்கிரனும் குருவும் சாதகமான வீடுகளில் செல்வதால் உறவினர்கள் மூலம் உதவிகள் உண்டு. வியாபாரத்தில் மாறுபட்ட அணுகுமுறையால் லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். கலைத்துறையினரின் திறமைகள் வெளிப்படும்.

கடின உழைப்பால் இலக்கை எட்டும் தருணம் இது.

ரிஷபம்

ங்கள் ராசிநாதன் சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால், எதிலும் உங்கள் கை ஓங்கும். மதிப்பு அதிகரிக்கும். பெரிய பதவிக்கு உங்கள் பெயர் முன்மொழியப்படும். வாகனத்தைச் சீர்செய்வீர்கள். வீடு கட்ட அனுமதி கிடைக்கும். தோற்றப்பொலிவு கூடும். புதன் சாதகமாக இருப்பதால் பிள்ளைகள் பொறுப்பாக இருப்பார்கள்.

ரிஷபம்
ரிஷபம்

செவ்வாய் ஓரளவு சாதகமாக இருப்பதால் வெளிநாடு செல்லும் வாய்ப்பு சிலருக்குக் கிடைக்கும். கடனாகக் கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். சகோதரர்கள் வகையில் பயனடைவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உங்களைப் பற்றி விமர்சித்தாலும் அனுசரித்துப் போவது நல்லது. கலைத்துறையினர் மூத்த கலைஞர்களின் வழிகாட்டல் மூலம் வெற்றியடைவார்கள்.

பிரச்னைகளுக்கு நல்ல முடிவு கிடைக்கும் வேளையிது.

மிதுனம்

சுக்கிரனும் ராசிநாதன் புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால் எதிர்பார்த்த பணம் வரும். உறவினர்கள், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வெளியூர்ப் பயணங்கள் சென்று வருவீர்கள்.

மிதுனம்
மிதுனம்

சூரியன் 8-ம் வீட்டில் மறைந்திருப்பதால் எதிர்த்தவர்கள் அடங்குவார்கள். இயக்கம், சங்கம் இவற்றில் கௌரவப் பதவிகள் தேடி வரும். அரசால் அனுகூலம் உண்டு. குரு பகவான் வலுவாக இருப்பதால் தள்ளிப்போன சுப காரியங்கள் கூடி வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை ஈர்க்க சில சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்தியோகத்தில் உங்களின் கை ஓங்கும். சக ஊழியர்களின் பிரச்னையைத் தீர்த்துவைப்பீர்கள். கலைத்துறையினருக்குப் பட்டிதொட்டியெங்கும் பாராட்டு கிடைக்கும்.

புதிய திட்டங்கள் நிறைவேறும் காலம் இது.

கடகம்

புதனும் சுக்கிரனும் சாதகமான வீடுகளில் செல்வதால் எதையும் சாதிக்கும் துணிச்சல் வரும். வீடு கட்ட வங்கிக் கடன் கிடைக்கும். புது வாகனம் வாங்குவீர்கள். வரவேண்டிய தொகை வந்து சேரும். பிள்ளைகள் ஆக்கபூர்வமாகச் செயல்படுவார்கள். பூர்வீகச் சொத்தில் தீர்வு கிடைக்கும். உறவினர்கள் நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள்.

கடகம்
கடகம்

சூரியன் 7-ம் வீட்டில் தொடர்வதால் கணவன் மனைவிக்குள் வாக்குவாதங்கள் வந்து போகும். மற்றபடி அரசாங்க விஷயங்கள் சாதகமாக முடியும். தந்தை வழியில் உதவிகள் உண்டு. வெளியூர் செல்லும் வாய்ப்பு கிடைக்கும். வியாபாரத்தில் பங்குதாரரை அனுசரித்துப்போவது நல்லது. உத்தியோகத்தில் வேலைச்சுமை இருந்தாலும் மேலதிகாரியின் பாராட்டு கிடைக்கும். கலைத் துறையினரின் படைப்புத் திறன் வளரும்.

அனுபவ அறிவால் வெற்றி பெறும் வேளையிது.

சிம்மம்

ராசிநாதன் சூரியன் வலுவாக 6-ம் வீட்டிலேயே நிற்பதால் எதிலும் வெற்றிபெறுவீர்கள். ஆளுமைத் திறன் அதிகரிக்கும். பணபலம் உயரும். பாதியில் நின்ற வீடு கட்டும் பணியைத் தொடங்குவீர்கள். கணவன் மனைவிக்குள் அந்நியோன்யம் பிறக்கும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். உறவுகள் உதவிகரமாக இருப்பார்கள்.

சிம்மம்
சிம்மம்

சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். புதிய டிசைனில் நகை வாங்குவீர்கள். வியாபாரத்தில், கடையை உங்களின் ரசனைக்கேற்ப அழகுபடுத்துவீர்கள். புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் புது பொறுப்பை ஒப்படைப்பார்கள். சக ஊழியர்களால் நிம்மதி கிடைக்கும். கலைத்துறையினரை உதாசீனப்படுத்திய நிறுவனமே அழைத்துப் பேசும்.

அதிரடி மாற்றங்கள் நிகழும் தருணம் இது.

கன்னி

செவ்வாய் சாதகமாக இருப்பதால் தன்னம்பிக்கை பிறக்கும். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அக்கறை காட்டுவார்கள். வழக்கு சாதகமாகும். சூரியன் 5-ம் வீட்டில் இருப்பதால் பிள்ளைகளிடம் கண்டிப்பு காட்டாமல் அன்போடு வழிநடத்துங்கள்.

கன்னி
கன்னி

பிப்ரவரி 3-ம் தேதி வரை யோகாதிபதி சுக்கிரன் 6-ம் வீட்டில் மறைந்திருப்பதால் உடல்நலனில் கவனம் செலுத்துங்கள். பயணங்களை முன்கூட்டியே திட்டமிட்டுக்கொள்ளுங்கள். கணவன் மனைவிக்குள் அனுசரித்துப்போவது நல்லது. வாகனப் பழுதை சரிசெய்வீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக் கொள்ளுங்கள். பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் ஒரே நேரத்தில் பல வேலைகளைப் பார்க்கவேண்டி வரும். கலைத் துறையினர் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவார்கள்.

உணர்ச்சிக்கு இடம்கொடுக்காமல் செயல்படவேண்டிய காலம் இது.

துலாம்

மூத்த சகோதரர் சாதகமாக இருப்பார். புதனும் சுக்கிரனும் 5-ம் வீட்டில் நிற்பதால் பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். உறவினர்கள், நண்பர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் தங்கும். உறவினர்கள் உங்களின் தேவையறிந்து உதவுவார்கள். தாயாரின் உடல்நலனில் கவனம் செலுத்துங்கள். அரசு வகையில் ஆதாயம் உண்டு. நவீனப் பொருள்கள் வாங்குவீர்கள்.

துலாம்
துலாம்

பிப்ரவரி 4-ம் தேதி முதல் சுக்கிரன் 6-ம் வீட்டில் மறைவதால் கணவன் மனைவிக்குள் வீண் வாக்குவாதங்கள் வேண்டாம். சிலர் வீடு மாற வேண்டிய சூழல் உண்டாகும். வியாபாரத்தில் புதிய யுக்திகளைப் புகுத்தி வெற்றி பெறுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

சமயோஜித புத்தியால் சாதிக்கும் தருணம் இது.

விருச்சிகம்

சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தைத் தந்து முடிப்பீர்கள். கணவன் மனைவிக்குள் ஈகோ பிரச்னை தீரும். பிள்ளைகளால் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். பழுதான மின்னணு சாதனங்களை மாற்றுவீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும்.

விருச்சிகம்
விருச்சிகம்

சூரியன் 3-ம் வீட்டில் நிற்பதால் தைரியமாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் வெளிநாட்டுப் பயணங்கள் உண்டு. சாதுர்யமாகப் பேசி பழைய பிரச்னைகளைத் தீர்ப்பீர்கள். உடன்பிறந்தவர்களை அனுசரித்துப்போவீர்கள். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். உத்தியோகத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். கலைத்துறையினர் புதுமையான படைப்பு களை வெளியிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பார்கள்.

காத்திருந்து காய் நகர்த்தவேண்டிய வேளை இது.

தனுசு

சுக்கிரன் வலுவாக நிற்பதால் கடனை பைசல் செய்வீர்கள். வீட்டைக் கட்டுவது, வீடு மாறுவது போன்ற முயற்சிகள் பலிதமாகும். வழக்கில் வெற்றி உண்டு. கல்யாண பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும். 2-ம் வீட்டில் நிற்கும் சூரியன் கறாராகப் பேச வைப்பார்.

தனுசு
தனுசு

புதன் சாதகமான வீடுகளில் செல்வதால், பணவரவு அதிகரிக்கும். வாழ்க்கைத் துணை வழியில் செல்வாக்கு கூடும். நல்ல வேலை அமையும். பூர்வீகச் சொத்தைப் புதுப்பிப்பீர்கள். ஜன்ம குருவால் பொறுப்புகளும் வேலைச்சுமையும் அதிகரிக்கும். அவசரப்பட்டு வாக்குறுதி அளித்துவிட்டு பிறகு அவதிப்படவேண்டாம். வியாபாரத்தில் புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்துவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் தொடர்ந்து உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். கலைத்துறையினரின் வசதி, வாய்ப்புகள் பெருகும்.

சமூகத்தில் உங்களின் மதிப்பு உயரும் காலம் இது.

மகரம்

சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் ஓரளவு பணம் வரும். பொன் வைக்குமிடத்தில் பூவைப்பதுபோல தரவேண்டிய பணத்தில் ஒரு பகுதியைத் தந்து முடிப்பீர்கள். விலையுயர்ந்த தங்க ஆபரணம் வாங்குவீர்கள். வி.ஐ.பிக்களின் நட்பு கிடைக்கும்.

மகரம்
மகரம்

புதன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் சாதுர்யமாகப் பேசி சில காரியங்களைச் சாதிப்பீர்கள். உங்களைப் புரிந்துகொள்ளாமல் விலகிச்சென்ற நண்பர்கள், உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். அரசு வகை காரியங்கள் இழுபறியாகி முடியும். வியாபாரம் சுமாராக இருக்கும். பங்குதாரர்கள், வேலையாட்களிடம் கறாராக இருங்கள். உத்தியோகத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். கலைத்துறையினரின் சம்பளப் பாக்கி கைக்கு வரும்.

வளைந்துகொடுத்து செல்லவேண்டிய வேளையிது.

கும்பம்

புதனும் சுக்கிரனும் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், உங்களின் புத்திசாலித்தனம் வெளிப்படும். பணவரவு திருப்தி கரமாக இருக்கும். சுபச் செலவுகள் ஏற்படும். பிள்ளைகளின் கோரிக்கை களுக்கு முக்கியத்துவம் தருவீர்கள். உறவினர்கள், நண்பர்களுடன் மனம்விட்டுப் பேசுவீர்கள்.

கும்பம்
கும்பம்

12-ம் வீட்டில் சூரியன் மறைந்திருப்பதால் திடீர்ப் பயணங்கள் இருக்கும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். லாப வீட்டில் முக்கிய கிரகங்கள் அமர்ந்திருப்பதால் புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். கணவன் மனைவிக்குள் அந்நியோன்யம் பிறக்கும். வியாபாரத்தில் தேங்கிக்கிடந்த சரக்குகளைச் சாமார்த்தியமாக விற்றுத் தீர்ப்பீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி பாராட்டுவார். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

சூழ்ச்சிகளைத் தாண்டி முன்னேறும் காலம் இது.

மீனம்

சூரியன் லாப வீட்டில் நிற்பதால் எதிலும் வெற்றிபெறுவீர்கள். மேல்மட்ட அரசியல்வாதிகளின் தொடர்பு கிடைக்கும். பணபலம் உயரும். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துகொள்வார்கள். உறவினர்களால் ஆதாயம் உண்டு. அயல்நாடு செல்லும் வாய்ப்பு சிலருக்குக் கிடைக்கும்.

மீனம்
மீனம்

சுக்கிரனும் புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால் புதிய பொருள்கள் வாங்குவீர்கள். உறவினர்கள் உதவுவார்கள். நட்பு வட்டம் விரிவடையும். நெடுநாள்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களைத் தேடி வருவார். வியாபாரத்தில் புகழ்பெற்ற நிறுவனங் களுடன் ஒப்பந்தங்கள் செய்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துகொள்வார்கள். கலைத்துறையினரின் கற்பனைத்திறன் வளரும்.

புதிய முயற்சிகளில் வெற்றிபெறும் வேளையிது.