Published:Updated:

ராசிபலன்

ராசிபலன்
பிரீமியம் ஸ்டோரி
News
ராசிபலன்

ஜுலை 14 முதல் 27 வரை

மேஷம்

ராசிபலன்

குரு சாதகமாக இருப்பதால் அரசுக் காரியங்களில் பிணக்கு கள் தளரும். சுக்கிரனும் புதனும் சாதகமான வீடுகளில் செல் வதால், சாதுர்யமான பேச்சால் சாதித்துக் காட்டுவீர்கள்.

தடைகள் விலகும். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். 16 - ம் தேதி முதல் சூரியன் 4 - ல் அமர்வதால் பிள்ளைகளின் உயர்கல்வி சேர்க்கை, திருமண விஷயங்களை அலைந்து முடிக்க வேண்டி வரும்.

சனியும் கேதுவும் 9-ல் நிற்பதால் வீண் செலவு குறையும். நிலுவையிலிருந்த வழக்கு சாதகமாகும். சொத்து வாங்குவது, விற்பதில் இழுபறி நிலை மாறும்.

3-ல் நிற்கும் ராகுவால் உடல் நிலை சீராகும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்தியோகத்தில் மற்றவர்களின் வேலையையும் இழுத்துப் போட்டு செய்வீர்கள். கலைத்துறையினர், வேற்றுமொழி வாய்ப்புகளால் புகழடைவார்கள்.

புது முயற்சிகளில் வெற்றி காணும் நேரம் இது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

ரிஷபம்

ராசிபலன்

சூரியன் 16-ம் தேதி முதல் 3-ல் அமர்ந்திருப்பதால் ஆரோக்கியம் கூடும். மனஇறுக்கம் நீங்கும். அரசு விஷயங்கள் உடனே முடியும். வீடு, மனை வாங்குவது, விற்பது சுலபமாக முடிவடையும்.

சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் தடைகளையும் தாண்டி நீங்கள் முன்னேறுவீர்கள். மாறுபட்ட அணுகுமுறையால் பழைய சிக்கல்களுக்குத் தீர்வு காண்பீர்கள். புதன் சாதகமாக இருப்பதால் பணவரவு உண்டு. கைமாற்றுக் கடனை தந்து முடிப்பீர்கள்.

அஷ்டமச் சனி நடைபெறுவ தால் எதிர்காலத்தை நினைத்து ஒரு பயம் இருக்கும். வியாபாரத்தில் அதிரடி லாபம் உண்டு. பழைய வேலையாட்கள், பங்குதாரர்களை மாற்றுவீர்கள்.

உத்தியோகத்தில், வேலைச் சுமை இருக்கும். எனினும் அதிகாரிகளின் பாராட்டு ஆறுதல் தரும். கலைத்துறையினர்களுக்கு எதிர்பார்த்த புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

சுப நிகழ்ச்சிகளால் மனம் மகிழும் நேரம் இது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மிதுனம்

ராசிபலன்

ராசிநாதன் புதன் சாதகமாக இருப்பதால் தாழ்வு மனப்பான்மை விலகும். வீண் விவாதங்களைத் தவிர்ப்பீர்கள். குடும்பத்தில் உங்களுக்கு முக்கியத்துவம் கிடைக்கும்.

சூரியன் 16-ம் தேதி முதல் உங்கள் ராசியை விட்டு விலகுவதால் கோபம் விலகும். சூரியன் 2-ல் நிற்பதால் பேச்சால் பிரச்னை வரக்கூடும்.

சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் பிள்ளை களைப் பற்றிய கவலைகள் விலகும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும்.

கண்டகச் சனி நடைபெறுவ தால் மன அமைதி கெடும். குரு சாதகமாக இருப்பதால் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் பதவி உயர்வு உண்டு. கலைத் துறையினர், தகுந்த வழிகாட்டலால் வெற்றி அடைவார்கள்.

தொட்டது துலங்கும் அற்புதமான காலம் இது.

கடகம்

ராசிபலன்

புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் மனஇறுக்கங்கள் குறையும். தைரியம் பிறக்கும். பிரச்னைகளின் ஆணிவேரைக் கண்டறிய முனைவீர்கள்.

சுக்கிரன் சாதகமாக இருப்பதால், வாழ்க்கைத் துணைவர் வழியில் உதவிகள் கிடைக்கும். எதிலும் வெற்றி உண்டு. 16-ம் தேதி முதல் சூரியன் ராசிக்குள் நுழைவதால் கண் எரிச்சல் வந்துபோகும்.

அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். கேதுவும் சனியும் 6-ல் நிற்பதால் பிள்ளைகளின் பிடிவாதம் குறையும். உறவினர் மத்தியில் மனவருத்தம் நீங்கும்.

6-ல் குரு நிற்பதால் வீண் பழி ஏற்பட வாய்ப்பு உண்டு. விலையுயர்ந்த பொருள்களை கவனமாகக் கையாளுங்கள். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். உத்தியோகத்தில் சலுகைகள் கிடைக்கும். கலைத்துறையினரின் படைப்பு களுக்கு வேறொருவர் உரிமை கொண்டாடுவார்.

விடாப்பிடியாகச் செயல்பட்டு விட்டதைப் பிடிக்கும் வேளை இது.

சிம்மம்

ராசிபலன்

சுக்கிரன் வலுவாக நிற்பதால் பழைய சொத்து விற்பதன் மூலமாகவோ, பாகப் பிரிவினை மூலமாகவோ பணம் வரும். புதன் சாதகமாக இருப்பதால் தொட்ட காரியங்கள் துலங்கும்.

வீடு கட்டுவதற்கு அனுமதி கிடைக்கும். 16 - ம் தேதி முதல் சூரியன் 12 - ல் மறைவதால், வீண் செலவு, ஏமாற்றம், வீண் பழி வந்து போகும். 11 - ல் ராகு நிற்பதால் வேற்றுமொழி பேசுபவர்களால் ஆதாயமுண்டு.

அரசுக் காரியங்களில் அனுகூலம் உ ண்டு. ஆன்மிகத் தில் ஈடுபாடு அதிகரிக்கும். ராசிக்கு 5 - ம் வீட்டில் குரு பலம் பெற்றிருப்பதால், தடுமாறிக் கொண்டிருந்த சில காரியங்கள் முழுமையடையும். கணவன் மனைவிக்குள் பிணக்குகள் மாறும்.

வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். கலைத் துறையினருக்குப் பாராட்டுகள் அதிகரிக்கும்.

வெற்றியாளர்களைச் சந்திக்கும் வேளை இது.

கன்னி

ராசிபலன்

ராசி நாதன் புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் தன்னம்பிக்கை துளிர்விடும். அகமும் முகமும் மலரும். சுக்கிரன் சாதகமாக இருப்பதால் கணவன் - மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும்.

16-ம் தேதி முதல் லாப வீட்டில் சூரியன் நிற்பதால் அரசால் ஆதாயம் உண்டு. நாடாளுவோரின் நட்பு கிடைக்கும். பொது நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும்.

அர்த்தாஷ்டம சனி நடைபெறு வதால் செயல்பாடுகளில் கவனம் தேவை. 4 - ல் நிற்கும் குருவால் தாயாருக்கு மருத்துவச் செலவு வரலாம். உங்கள் மீது வீண்பழி வரக்கூடும். உறவினர்கள், நண்பர்கள் சிலர் குறை கூறுவர்.

வியாபாரத்தில் தேங்கிக் கிடந்த சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் மேல்அதிகாரிகளின் ஆதரவைப் பெருகுவீர்கள். கலைத் துறையினருக்குச் சம்பள பாக்கி கைக்கு வரும்.

நினைத்ததை முடிக்கும் நேரம் இது.

துலாம்

ராசிபலன்

ராசிநாதன் சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வ தால், நீண்ட கால எண்ணங்கள் நிறைவேறும். தடைப்பட்ட காரியங்கள் முடிவடையும். வீடு கட்ட கடன் உதவி கிடைக்கும்.

புதன் சாதகமாக இருப்பதால் உங்கள் செல்வாக்கு கூடும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். சனி பகவான் 3 -ல் நிற்பதால், பிரச்னைகளைச் சமாளிக்கும் சக்தி கிடைக்கும்.

16 - ம் தேதி முதல் சூரியன் 10-ம் வீட்டில் வலுவாக நிற்ப தால் பணவரவு உண்டு. தந்தை உங்களை ஆதரிப்பார். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. குரு சாதகமாக இருப்பதால், தடைப்பட்ட காரியங்கள் விரைந்து முடியும்.

குடும்பத்தினரின் ஆலோச னையை ஏற்றுச் செயல்படவும்.வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பர். கலைத் துறையினரின் மதிப்பு, மரியாதை கூடும்.

வாழ்வின் போராட்டங்கள் முடிவுக்கு வரும் காலம் இது.

விருச்சிகம்

ராசிபலன்

உங்களுக்குச் சாதகமாக புதனும் சுக்கிரனும் செல்வதால் புதிய முயற்சிகள் பலிதமாகும். சிலர் புது வாகனம் வாங்குவீர்கள். பழைய நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள்.

கணவன் - மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். மனைவிவழி உறவினர்கள் உறுதுணையாக இருப்பார்கள். திருமணம் தள்ளிப் போனவர் களுக்குக் கூடி வரும்.

16 - ம் தேதி முதல் 9-ல் சூரியன் நிற்பதால், தந்தையாரின் உடல் நிலை பாதிக்கும். சேமிப்பு கரையும். பெற்றோரின் அறிவுரையை ஏற்பது நல்லது.

ராசிக்கு 2-ல் குரு வலுவாக இருப்பதால் குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பிள்ளைகளால் பெருமை, மறைமுக லாபம் உண்டு.

வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். புதிய ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். உத்தியோகத்தில் வேலை அதிகரிக்கும். கலைத் துறையினர், மூத்த கலை ஞர்களின் நட்பைப் பெறுவர்.

சகிப்புத் தன்மையால் சாதிக்கும் வேளை இது.

தனுசு

ராசிபலன்

புதன் சாதகமாக இருப்பதால் தொட்ட காரியங்கள் துலங்கும். செல்வாக்குக் கூடும். வீடு கட்ட அனுமதி கிடைக்கும். வேலை வாய்ப்புக்காகக் காத்திருந்த அன்பர்களுக்கு நல்ல நிறுவனத் திலிருந்து அழைப்பு வரும்.

16-ம் தேதி முதல் சூரியன் 8-ல் மறைந்து நிற்பதால் வெளியூர்ப் பயணங்கள் தொடரும். உங்களின் தந்தைக்கு அலைச்சல் இருக்கும். தவிர்க்க முடியாத செலவுகள் அதிகரிக்கும்.

ஏழரைச் சனி இருப்பதால் எதிலும் அலட்சியம் வேண்டாம். ராசிக்குள் நிற்கும் குருவால் வீண் பழி, மன உளைச்சல் வரக் கூடும். பிள்ளைகளின் நலனில் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.

வியாபாரம் சூடுபிடிக்கும். அதிரடி அறிவிப்புகளால் லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் பதவி உயர்வுடன் இடமாற்றம் உண்டு. கலைத் துறையினருக்கு அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனங்களிலிருந்து வாய்ப்புகள் வரும்.

நீண்ட நாள் எண்ணங்கள் நிறைவேறும் காலம் இது.

மகரம்

ராசிபலன்

சுக்கிரன் சாதகமாக இருப்ப தால் வாழ்க்கைத் துணைவரின் ஆரோக்கியம் சீராகும். வீடு கட்ட அனுமதி கிடைக்கும். புதன்

6 -ம் வீட்டில் மறைந்திருப்பதால் அலைச்சல், செலவுகள் உண்டு.

கணவன்-மனைவிக்குள் சின்ன சின்ன வாக்குவாதங்கள் வரக்கூடும். 16-ம் தேதி முதல் 7-ல் சூரியன் நின்று உங்கள் ராசியைப் பார்ப்பதால், கோபத்தைத் தவிர்க்கவும்.

ஏழரைச் சனி நடைபெறுவதால், முறைப்படி அரசாங்க அனுமதி பெற்று வீடு கட்டுவது நல்லது. இடைத்தரகர்களிடம் பணம் கொடுத்து ஏமாறாதீர்கள்.

12 - ல் குரு நிற்பதால் பணப் பற்றாக்குறை வரக்கூடும். சில காரியங்களில் அலைச்சல் உண்டு. வியாபார ரகசியங்கள் யார் மூலம் கசிகிறது என்பதை அறிந்து, வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் அலுவலகச் சூழ்நிலை அமைதி தரும். கலைத் துறையினருக்கு, கிசுகிசுத் தொந்தரவுகள், வதந்திகள் நீங்கும்.

அதிரடி மாற்றங்கள் நிகழும் காலம் இது.

கும்பம்

ராசிபலன்

16 - ம் தேதி முதல் சூரியன் 6 - ம் வீட்டில் நுழைந்திருப்பதால் கோபம் குறையும். பயம் விலகும். அரைகுறையாக நின்ற பல காரியங்கள் உடனே முடியும். அரசால் ஆதாயம் உண்டு.

சுக்கிரன் சாதகமாக இருப்பதால் சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். பணவரவு அதிகரிக்கும். வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும்.

சனியும் கேதுவும் லாப வீட்டில் நிற்பதால் டி.வி., ஃப்ரிட்ஜ் போன்ற சாதனங்களைப் புதிதாக வாங்குவீர்கள். வி.ஐ.பிகளின் அறிமுகம் கிடைக்கும். குரு வலுவாக இருப்பதால் நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். பண வரவு உண்டு. பிரபலங்களால் மதிக்கப்படுவீர்கள்.

வியாபாரத்தில் புது முதலீடு களை யோசித்துச் செய்வது நல்லது. உத்தியோகத்தில் மற்றவர்களை நம்பி பொறுப்பு களை ஒப்படைக்க வேண்டாம். கலைத்துறை அன்பர்களுக்கு மறைமுகப் போட்டிகள் அதிகரிக்கும்.

முன்னெச்சரிக்கை தேவைப்படும் தருணம் இது.

மீனம்

ராசிபலன்

புதனும் சுக்கிரனும் சாதகமான வீடுகளில் செல்வதால் உங்களுடைய அணுகுமுறையை மாற்றிக் கொள்வீர்கள். உங்களின் பலவீனங்களை நீங்களே சரி செய்து கொள்வீர்கள். வாகனம் புதிதாக வாங்குவீர்கள்.

16-ம் தேதி முதல் சூரியன் 5 - ல் நிற்பதால் பிள்ளை களின் வருங்காலம் குறித்து கவலைப்படுவீர்கள். சொந்த ஊரில், பொது விஷயங்களில் மூக்கை நுழைக்க வேண்டாம்.

10-ல் குரு பகவான் நிற்பதால், வேலைச்சுமை வாட்டியெடுக்கும். எவரையும் விமர்சித்துப் பேசாதீர்கள். வியாபாரத்தில் பெரிய நிறுவனங்களுடன் புது ஒப்பந்தம் செய்வதன் மூலம் உங்கள் புகழ் கூடும்.

உத்தியோகத்தில் மேலதிகாரியின் தவறுகளைச் சுட்டிக்காட்டுவீர்கள். கலைத் துறையினரின் கலைத்திறன் வளரும்; அவர்களின் புகழ் அதிகரிக்கும்.

விருப்பங்கள் நிறைவேறும் வேளை இது.