பிரீமியம் ஸ்டோரி
ராசிபலன்

ராசிக்கு 3-ம் வீட்டில் ராகு பலம்பெற்றிருப்பதால் எதிர்பார்த்திருந்த உதவிகள் கிடைக்கும். வீண் குழப்பங்கள் நீங்கும். வி.ஐ.பிக்கு நெருக்கமாவீர்கள். ஆனால் 9-ல் கேது நிற்பதால் திடீர் பயணங்கள், தந்தைக்கு உடல்நலக்குறைவு வரக்கூடும். புதன் 4-ல் நிற்பதால் வீட்டை விரிவுபடுத்திக் கட்ட முடிவெடுப்பீர்கள். நட்பு வட்டம் விரியும்.

சூரியன் வலுவாக இருப்பதால் பூர்விக சொத்தைச் சீர் செய்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் திடீர் பணவரவு, செல்வாக்கு உண்டாகும். எதிர்மறை எண்ணங்கள், தாழ்வுமனப்பான்மை நீங்கும். கண், காது வலி நீங்கும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்தியோகத்தில் மற்றவர்களின் வேலையையும் இழுத்துப் போட்டு செய்வீர்கள். கலைத்துறையினர் வேற்றுமொழி வாய்ப்புகளால் புகழடைவீர்கள்.

புது முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள்

ராசிபலன்

பூர்வ புண்யாதிபதி புதன் வலுவான நட்சத்திரங்களில் செல்வதால் பழைய நண்பர்களைச் சந்திப்பீர்கள். உறவினர்களின் ஆதரவு கிட்டும். பிள்ளைகளிடம் இருந்த பிடிவாதம் விலகும். சூரியன் 3-ல் நிற்பதால் வழக்கில் வெற்றி பெறுவீர்கள். புதிய முயற்சிகள் பலிதமாகும். தாயாரின் உடல் நலம் சீராகும். ஆனால் 2-ல் ராகு நிற்பதால் பேச்சில் கவனம் தேவை.

கேது 8-ல் நிற்பதால் சின்ன சின்ன அவமானங்கள், வேலைச்சுமை வந்து போகும். சுக்கிரன் சாதகமாக இருப்பதால் சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். உடல் ஆரோக்கியம் கூடும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். மனைவிவழி உறவினர்களால் ஆதாயமுண்டு. வியாபாரத்தில் அதிரடி லாபம் உண்டு. உத்தியோகத்தில் வேலைச்சுமை இருந்தாலும் அதிகாரிகளின் பாராட்டு ஆறுதல் தரும். கலைத்துறையினர் எதிர்பார்த்த புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

விருந்தினர்கள் வருகையால் வீடு களைக்கட்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ராசிபலன்

30 ம் தேதி முதல் சுக்கிரன் ராசிக்குள் நுழைந்திருப்பதால் சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். அரைகுறையாக நின்ற வேலைகள் உடனே முடியும். எதிர்ப்புகள் குறையும். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். ஆடை, ஆபரணம் சேரும். புதனும் 2-ம் வீட்டில் நிற்பதால் உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். குடும்பத்தில் நிம்மதி உண்டு.

வீடு, மனை வாங்கக் கடன் உதவி கிடைக்கும். உறவினர்களால் ஆதாயம் உண்டு. சூரியன் 2-ல் தொடர்வதால் நாவடக்கம் தேவை. ராகுவும், கேதுவும் சரியில்லாததால் எதிலும் ஒருவித தயக்கம், தடுமாற்றம் வரக்கூடும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களைக் கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். புதுப் பங்குதாரரைச் சேர்ப்பீர்கள். உத்தியோகத்தில் பதவி உயர்வு எதிர்பார்த்தபடி அமையும். கலைத்துறையினர் மூத்த கலைஞர்களின் வழிகாட்டல் மூலம் வெற்றியடைவீர்கள்.

தொட்டது துலங்கும்.

ராசிபலன்

புதன் சாதகமாக இருப்பதால் துணிச்சலான முடிவுகள் எடுப்பீர்கள். பழைய உறவினர்கள் தேடி வந்து பேசுவார்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். ராசிக்குள் சூரியன் நிற்பதால் சில நேரங்களில் கண் எரிச்சல் அதிகமாகும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். 6 - ல் நிற்கும் கேதுவால் வேற்று மதத்தினர், மொழியினரால் ஆதாயம் உண்டு.

சுக்கிரன் சாதகமான வீடுகளில் அமர்ந்ததால் வி.ஐ.பிகளின் நட்பு கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு. வீடு கட்ட லோன் கிடைக்கும். மனைவிவழி உறவினர்கள் மதிப்பார்கள். நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். கலைத்துறையினரின் படைப்புகளுக்கு வேறொருவர் உரிமை கொண்டாடுவார்.

விடாபிடியாக செயல்பட்டு விட்டதைப் பிடிப்பீர்கள்.

ராசிபலன்

30 ம் தேதி முதல் சுக்கிரன் லாப வீட்டில் நுழைந்திருப்பதால் செல்வம், செல்வாக்குக் கூடும். கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். நவீன ரக வாகனம் வாங்குவீர்கள். எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். புதன் சாதகமாக இருப்பதால் சுபச் செலவுகள் அதிகரிக்கும். இயக்கம், சங்கம் இவற்றில் கௌரவப் பதவிகள் தேடி வரும். நண்பர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள்.

ராசிநாதன் சூரியன் 12 - ல் மறைந்திருப்பதால் திடீர் பயணங்கள், வேலைச்சுமை அதிகரிக்கும். அரசு காரியங்கள் தாமதமாக முடியும். 5-ல் கேது தொடர்வதால் எதிர்மறை எண்ணங்கள் தோன்றும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். உத்தியோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். கலைத்துறையினருக்குப் பட்டிதொட்டியெங்கும் பாராட்டு கிடைக்கும்.

வெற்றியாளர்களைச் சந்திப்பீர்கள்.

ராசிபலன்

சுக்கிரன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் வீட்டை அழகுபடுத்துவீர்கள். ஏளனமாகவும், இழிவாகவும் பேசியவர்கள் இனி உங்களை மதிப்பார்கள். சூரியனும் 11-ம் வீட்டில் நிற்பதால் அரசாங்க அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு. புனிதப் பயணங்கள் சென்று வருவீர்கள். தாய்வழியில் ஆதரவுப் பெருகும்.

ராசிநாதன் புதன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். புது வேலை அமையும். 4-ல் கேது நிற்பதால் தாயாருடன் மனஸ்தாபங்கள் ஏற்படும். பயணங்கள் அலைச்சல் தரும். வெளிவட்டாரத்தில் அனுசரித்துப் போங்கள். வியாபாரத்தில் தேங்கிக் கிடந்த சரக்குகள் விற்கும். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். கலைத்துறையினரின் சம்பள பாக்கி கைக்கு வரும்.

நினைத்ததை முடிப்பீர்கள்.

ராசிபலன்

சுக்கிரன் சாதகமான வீட்டில் அமர்ந்திருப்பதால் வீண் செலவு, டென்ஷன் குறையும். வர வேண்டிய பணம் கைக்கு வரும் என்றாலும் பற்றாக்குறை நீடிக்கும். சூரியன் 10-ல் நிற்கும் யோகாதிபதி புதனுடன் சேர்ந்ததால் எதிர்ப்புகள் அடங்கும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். கௌரவப் பதவிகள் தேடி வரும். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். ஷேர் மூலம் பணம் வரும்.

ராசிக்கு 3-ம் வீட்டில் கேது பலமாக அமர்ந்ததால் எதிர்பார்த்ததெல்லாம் எளிதில் முடியும். வீட்டில் நல்லது நடக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சியுண்டு. எந்த பதிலும் வராமலிருந்த வரன் வீட்டாரிடமிருந்து நல்ல செய்தி வரும். மூத்த சகோதரர் உறுதுணையாக இருப்பார். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். கடையை வேறு இடத்திற்கு மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பர். கலைத்துறையினருக்கு மதிப்பு, மரியாதைக் கூடும்.

போராட்டங்கள் முடியும்.

ராசிபலன்

30ம் தேதி முதல் சுக்கிரன் 8-ல் மறைந்திருப்பதால் எதிர்பாராத பணவரவு, யோகம் உண்டு. வாகன வசதி பெருகும். வீடு கட்ட வங்கிக் கடன் கிடைக்கும். புதன் 9-ம் வீட்டில் நிற்பதால் புது முயற்சிகள் பலிதமாகும். போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள். வி.ஐ.பிகளின் உதவியால் தடைப்பட்ட சில காரியங்களை விரைந்து முடிப்பீர்கள். 9-ல் சூரியன் நிற்பதால் தந்தையுடன் கருத்து மோதல்கள் வரக்கூடும்.

அக்கம்-பக்கம் வீட்டாரிடம் குடும்ப அந்தரங்க விஷயங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டாம். ராகு, கேது சரியில்லாததால் பேச்சில் நிதானம் தேவை. அவ்வப்போது சோர்வு தட்டும். பிள்ளைகளின் நியாயமான ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். மேலதிகாரியுடன் பனிப்போர் வந்து நீங்கும். கலைத்துறையினர் மூத்த கலைஞர்களின் நட்பைப் பெறுவீர்கள்.

சகிப்புத் தன்மையால் சாதிப்பீர்கள்.

ராசிபலன்

30ம் தேதி முதல் சுக்கிரன் 7-ல் நுழைந்ததால் பணம் வரும். புதுத் தெம்பு பிறக்கும். முகப்பொலிவுக் கூடும். வாகனப் பழுது நீங்கும். பிரிந்த கணவன் - மனைவி ஒன்று சேர்வீர்கள். புதன் 8-ல் இருப்பதால் உறவினர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். பால்ய நண்பர்கள் தேடி வருவார்கள். ஆனால் சூரியன் 8-ல் நிற்பதால் அரசு வேலைகளை அலைந்து முடிக்க வேண்டி வரும்.

தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. ராகு, கேது சரியில்லாததால் டென்ஷன், நரம்புக்கோளாறு வந்துபோகும். வியாபாரம் சூடுபிடிக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். பதவிகள் தேடி வரும். அதிரடி அறிவிப்புகளால் லாபம் ஈட்டுவீர்கள். வேலையாள்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் பதவி உயர்வுடன் இடமாற்றம் உண்டு. கலைத்துறையினருக்கு அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனங்களிலிருந்து வாய்ப்புகள் வரும்.

நீண்ட நாள் எண்ணங்கள் நிறைவேறும்.

ராசிபலன்

புதன் வலுவடைந்திருப்பதால் புதிய சிந்தனைகள் தோன்றும். தந்தைவழியில் இருந்த பிணக்குகள் நீங்கும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். 30 ம் தேதி முதல் சுக்கிரன் 6 - ம் வீட்டிற்குள் நுழைந்திருப்பதால் வாகன விபத்து, டென்ஷன், முதுகு வலி, கண் வலி, சளித் தொந்தரவு வந்து விலகும். கணவன் - மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. ராகு வலுவாக இருப்பதால் பிரபலங்களின் சந்திப்பு நிகழும். எடுத்த வேலையை விரைந்து முடிக்க எண்ணுவீர்கள்.

7-ல் சூரியன் நிற்பதால் கணவன் மனைவிக்குள் சின்ன சின்ன சண்டை சச்சரவுகள், மனஸ்தாபங்கள் வரக்கூடும். பால்ய சிநேகிதர்களால் திடீர் திருப்பங்கள் ஏற்படும். வேலை கிடைக்கும். வியாபார ரகசியங்கள் யார் மூலம் கசிகிறது என்பதை அறிந்து வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் அலுவலகச் சூழ்நிலை அமைதி தரும். கலைத்துறையினருக்குக் கிசுகிசுத் தொந்தரவுகள், வதந்திகளெல்லாம் நீங்கும்.

அதிரடி மாற்றங்கள் நிகழும்.

ராசிபலன்

சூரியன் 6-ம் வீட்டில் வலுவாக இருப்பதால் இடர்பாடுகள், சிக்கல்களைச் சமாளிக்கும் சக்தி உண்டாகும். மேல்மட்ட அரசியல்வாதிகளின் தொடர்பு கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டு. அயல்நாட்டிலிருப்பவர்களால் உதவிகள் கிடைக்கும். புதன் சாதகமாக இல்லாததால் சோர்வு, களைப்பு வந்து நீங்கும். அண்டை வீட்டாருடன் சண்டை, சச்சரவுகள் வரக்கூடும்.

சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் பெரிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். பழைய சிக்கல்கள் தீரும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து யோசிப்பீர்கள். குழந்தை பாக்கியம் கிடைக்கும். வியாபாரத்தில் புது முதலீடுகளை யோசித்துச் செய்வது நல்லது. உத்தியோகத்தில் மற்றவர்களை நம்பி எந்த பொறுப்புகளையும் ஒப்படைக்க வேண்டாம். கலைத்துறையினருக்கு மறைமுகப் போட்டிகள் அதிகரிக்கும்.

எதிலும் முன்னெச்சரிக்கை தேவைப்படும்.

ராசிபலன்

புதனும் 5-ல் அமர்ந்திருப்பதால் மகிழ்ச்சி தங்கும். நண்பர்கள், உறவினர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். விருந்தினர் வருகை அதிகரிக்கும். பூர்விக சொத்தால் வருமானம் வரும். சூரியன் 5-ல் நிற்பதால் சில நேரங்களில் மன அமைதியற்ற நிலை ஏற்படக்கூடும். சுக்கிரன் சாதகமாக இருப்பதால் உங்கள் செயலில் வேகம் கூடும். எதிர்பார்த்த பணம் வரும். வாகனத்தை மாற்றுவீர்கள். கணவன் - மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவீர்கள்.

மனைவிவழியில் நல்லது நடக்கும். புதிய முயற்சிகள் பலிதமாகும். பிள்ளைகளால் மகிழ்ச்சியுண்டு. வியாபாரத்தில் பெரிய நிறுவனங்களுடன் புது ஒப்பந்தம் செய்வதன் மூலம் உங்கள் நிறுவனத்தின் புகழ் கூடும். உத்தியோகத்தில் மேலதிகாரியின் தவறுகளைச் சுட்டிக் காட்டுவீர்கள். சக ஊழியர்கள் உதவுவார்கள். கலைத்துறையினரின் திறன் வளரும்.

விருப்பங்கள் நிறைவேறும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு