Published:Updated:

ராசிபலன்

ராசிபலன்
பிரீமியம் ஸ்டோரி
News
ராசிபலன்

ஜூன் 16 முதல் 29 வரை

மேஷம்

ராசிபலன்

தனாதிபதி சுக்கிரன் வலுவாக இருப்பதால், எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். வாகன வசதி பெருகும். வீட்டைச் சீர்திருத்தம் செய்வீர்கள்.

இதுவரை 2-ம் வீட்டில் இருந்த சூரியன் இப்போது 3-ம் வீட்டில் நுழைந்திருப்பதால், புதிய திட்டங்கள் தீட்டு வீர்கள். அரசாங்கக் காரியங்கள் சாதகமாகும். பிள்ளைகளை, அவர்கள் எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் சேர்ப்பீர்கள்.

புதன் சாதகமாக இருப்பதால் புதியவர்கள் நண்பர்களா வார்கள். உறவினர்கள் மத்தி யில் செல்வாக்கு உயரும். கோயில் விழாக்களை முன்னின்று நடத்துவீர்கள்.

வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் மறைமுக நெருக்கடிகள் நீங்கும். மேலதிகாரி உதவுவார். கலைத்துறையினரின் புகழ், கௌரவம் உயரும்.

வி.ஐ.பி-களின் பாராட்டைப் பெறும் காலம் இது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

ரிஷபம்

ராசிபலன்

செவ்வாயின் போக்கு சாதகமாக இருப்பதால் பெரிய பதவிக்குத் தேர்ந்தெடுக்கப் படுவீர்கள். வீடு கட்ட எதிர்பார்த்த பணம் வரும்.

உங்களின் பூர்வ புண்ணி யாதிபதி புதன் சாதகமான வீடு களில் செல்வதால், குடும்பத்தில் அமைதி நிலவும். அன்பு அதிகரிக்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தைத் தந்து முடிப்பீர்கள். பழைய சொந்தங்களைச் சந்திப்பீர்கள். நட்பு வட்டம் விரியும்.

ராசிநாதன் சுக்கிரன் வலுவாக இருப்பதால், இழுபறியாக இருந்த வேலைகள் உடனே முடியும். சூரியன் ராசிக்கு 2-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் அலைச்சல் குறையும்.

வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் கவனமா கப் பழகுங்கள். கலைத் துறையினரின் கடின உழைப் புக்கு அங்கீகாரம் கிடைக்கும்.

ரகசியம் காக்கவேண்டிய நேரம் இது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மிதுனம்

ராசிபலன்

ராசிநாதன் புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் தைரியம் பிறக்கும். பழைய பிரச்னை களுக்குத் தீர்வு காண்பீர்கள். உறவினர்கள், நண்பர்கள் வீட்டு சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள்.

சுக்கிரன் 12-ம் வீட்டில் நிற்பதால் பிள்ளைகளின் உயர் கல்வி, திருமண முயற்சிகள் அலைச்சலின்பேரில் நல்ல விதமாக முடியும்.

சூரியன் ராசியில் நிற்பதால் வீண் வாக்குவாதம் செய்ய வேண்டாம். செவ்வாய் சாதகமாக இருப்பதால், பாக்கித் தொகையைக் கொடுத்து புதிய சொத்து ஒன்றைப் பத்திரப் பதிவு செய்வீர்கள். சகோதரிக்குத் திருமணம் முடியும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும்.

வியாபாரத்தில் பணியாளர்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத் தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும்; சக ஊழியர் மத்தியில் உங்களின் மதிப்பு உயரும். கலைத் துறை யினருக்கு சம்பளப் பாக்கி கைக்கு வரும்.

சிக்கனத்தைக் கடைப்பிடிக்க வேண்டிய தருணம் இது.

கடகம்

ராசிபலன்

சுக்கிரன் லாப வீட்டில் அமர்ந் திருப்பதால், புதிய வாகனம் வாங்குவீர்கள். வீடு கட்ட வங்கிக் கடன் கிடைக்கும்.

புதன் சாதகமான நட்சத் திரங்களில் செல்வதால் எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர்கள் உங்களைப் புரிந்துகொள்வார்கள். சூரியன் 12-ம் வீட்டில் மறைந்திருப்பதால், அரசுக்குச் செலுத்த வேண்டிய வரிகளை உடன் செலுத்துங்கள்.

18-ம் தேதி முதல், செவ்வாய் 9-ம் வீட்டில் அமர்வதால், குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல், குழப்பங்கள் விலகும். சகோதரர் வகையில் இருந்த பிணக்குகள் நீங்கும்.

வியாபாரத்தில் பெரிய நிறுவனங்களுடன் புதிய ஒப்பந்தம் செய்வதன் மூலம் உங்கள் நிறுவனத்தின் புகழ் கூடும். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். கலைத்துறையினரின் சம்பளம் உயரும். மூத்த கலைஞர்கள் உதவுவார்கள்.

சாதுர்யமான பேச்சால் சாதிக்கும் காலம் இது.

சிம்மம்

ராசிபலன்

உங்களின் ராசிநாதன் சூரியன் லாப வீட்டில் நுழைந் திருப்பதால் சவாலான காரியங் களையும் எளிதாக முடிப்பீர்கள். அரசியலில் செல்வாக்கு உயரும். வரவேண்டிய பணம் கைக்கு வரும்.

உங்களின் நிர்வாகத்திறன், ஆளுமைத் திறன் அதிகரிக்கும். சுக்கிரன் சாதகமாக இருப்பதால் கணவன் மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். பாதியில் நின்ற வீடு கட்டும் வேலைகளைத் தொடர்வீர்கள். சகோதரர்கள் வகையில் அனுசரித்துப் போகவும்.

புதன் சாதகமான நட்சத்திரங்

களில் செல்வதால் வெளி வட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். பழைய வேலையாள்கள் மீண்டும் பணியில் வந்து சேர்வார்கள்.

உத்தியோகத்தில் சில நுணுக்கங்களைக் கற்றுக் கொள்வீர்கள். கலைத் துறை யினரின் படைப்புகளை அனைவரும் பாராட்டுவார்கள்.

புதிய முயற்சிகளில் வெற்றி பெறும் நேரம் இது.

கன்னி

ராசிபலன்

தன பாக்யாதிபதியான சுக்கிரன், சொந்த வீட்டில் வலுவாக நிற்கிறார். ஆகவே, சோம்பல் நீங்கி உற்சாகம் அடைவீர்கள். திடீர் பணவரவு உண்டு. வாகனத்தை மாற்றுவீர்கள்.

குடும்பத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறு வீர்கள். பிள்ளைகளிடம் குவிந்து கிடக்கும் திறமைகளை இனம் கண்டறிந்து வளர்ப்பீர்கள்.

தந்தையின் உடல்நலம் சீராகும். தந்தைவழிச்

சொத்துகள் கைக்கு வரும். சூரியன் இப்போது 10-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் வீண் செலவுகள் குறையும். புதிய வேலை கிடைக்கும். பெரிய பதவிக்குத் தேர்ந்தெடுக்கப் படுவீர்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள்.

வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகளால் மதிக்கப் படுவீர்கள். கலைத் துறையினர் வீண் வாக்குவாதங்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது.

இழந்தவற்றை மீண்டும் பெறும் தருணம் இது.

துலாம்

ராசிபலன்

உங்களின் பாக்கியாதிபதி புதன் வலுவாக இருப்பதால், மனத்தில் தைரியம் பிறக்கும். கேட்ட இடத்தில் பணம் கிடைக் கும். புதிய இடத்தில் வேலை கிடைக்கும். பழைய கடனில் ஒரு பகுதியை அடைப்பீர்கள்.

ராசிநாதன் சுக்கிரன் 8-ம் வீட்டில் மறைந்தாலும், ஆட்சி பெற்று இருப்பதால், எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

தடைப் பட்ட வேலைகள் முடியும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். மகான்கள், சித்தர்களின் ஆசி கிடைக்கும்.

18-ம் தேதி முதல் செவ்வாய் 6-ம் வீட்டில் நுழைவதால் பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். பூர்வீகச் சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும்.

வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரியின் தவறுகளைச் சுட்டிக்காட்டுவீர்கள். கலைத் துறையினர், தங்களின் திறமை களை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும்.

உங்களின் பலம் - பலவீனத்தை உணரும் வேளை இது.

விருச்சிகம்

ராசிபலன்

சுக்கிரன் 7-ம் வீட்டில் சாதகமாக நிற்பதால் புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வீடு, வாகனச் சேர்க்கை உண்டு. வீடு கட்ட வங்கிக் கடனுதவி கிடைக்கும்.

உயர் பதவியில் இருப்பவர் களின் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் குழப்பங்கள் நீங்கும். அடகு வைத்திருந்த நகையை மீட்பீர்கள். அரசியலில் செல்வாக்கு கூடும்.

பழைய நண்பர்கள், உறவி னர்கள் தேடி வந்து பேசுவார்கள். பூர்வீகச் சொத்தில் மாற்றம் செய்வீர்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்போது சந்திக்க நேரிடும்.

18-ம் தேதி முதல் செவ்வாய் 5-ம் வீட்டில் அமர்வதால், பாதியில் நின்ற வீடு கட்டும் பணியைத் தொடங்குவீர்கள்.

வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்ய வேண்டாம். உத்தியோகத்தில் வளைந்து கொடுத்துப்போவது நல்லது. கலைத்துறையினருக்கு, இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் விலகும்; புதிய பாதை புலப்படும்.

வேலைச்சுமை அதிகரிக்கும் காலம் இது.

தனுசு

ராசிபலன்

குரு 2-ம் வீட்டில் நிற்பதால் மாறுபட்ட அணுகுமுறையால் பழைய பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். பெரிய பதவியில் இருப்பவர்களின் தொடர்பு கிடைக்கும்.

குடும்பத்தில் உங்களின் கை ஓங்கும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். எதிர்பார்த்த விலைக்குப் பழைய மனையை விற்பீர்கள்.

20-ம் தேதி முதல் புதனும் சுக்கிரனும் 6-ம் வீட்டில் மறைந்திருப்பதால், பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும்.

18-ம் தேதி முதல் 4-ம் வீட்டில் செவ்வாய் அமர்கிறார். தாயாரின் உடல் நலனில் கவனம் தேவை. பழைய கடனை அடைக்க வழி பிறக்கும்.

வியாபார ரகசியங்கள் யார் மூலம் கசிகிறது என்பதை அறிந்து, புதிய முடிவு எடுப்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். கலைத்துறையினருக்குப் பழைய நிறுவனங்கள் மூலம் புதிய வாய்ப்பு கிடைக்கும்.

சமூகத்தில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும் காலம் இது.

மகரம்

ராசிபலன்

சூரியன் 6-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் எதிர்ப்புகள் அடங்கும். நாடாளுபவர்களின் நட்பு கிடைக்கும்.

தள்ளிப்போன வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். அரசாங்கக் காரியங்கள் விரைந்து முடியும். குடும்பத்தில் உங்களின் வார்த்தைக்கு மதிப்பு கூடும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துகொள்வார்கள்.

சுக்கிரன் ஆட்சி பெற்றிருப்ப தால் பணவரவு அதிகரிக்கும். கல்யாணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களை கட்டும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். புதியவர்கள் அறிமுகமாவார்கள். பேச்சில் முதிர்ச்சி தெரியும்.

சொத்து வாங்குவது, விற்பதில் இருந்த வில்லங்கம் விலகும். வியாபாரத்தில் புதிய மாற்றங்களைச் செய்வீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகளை அனுசரித் துப் போவது நல்லது. கலைத் துறையினருக்குப் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

தடைகளைத் தாண்டி முன்னேறும் நேரம் இது.

கும்பம்

ராசிபலன்

பிரபல யோகாதிபதி சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால், புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். பணவரவு உண்டு.

உங்களின் ரசனைக்கேற்ப வீடு, வாகனம் அமையும். கணவன் மனைவிக்குள் மனம் விட்டுப்பேசுவீர்கள். புதன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் உறவினர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள்.

பழைய நண்பர்கள் தேடி வருவார்கள். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

வியாபாரத்தில் வாடிக்கை யாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க புதிய சலுகைகளை அறிமுகப்படுத்துவீர்கள். போட்டியைச் சமாளிப்பீர்கள்.

உத்தியோகத்தில் பணிச் சுமை அதிகரிக்கும். எனினும் எளிதில் சமாளிப்பீர்கள். கலைத் துறையினர், கடின உழைப்பால் சாதித்துக் காட்டுவார்கள்.

சகிப்புத் தன்மையால் சாதிக்கும் வேளை இது

மீனம்

ராசிபலன்

சுக்கிரனும் புதனும் சாதக மான வீடுகளில் செல்வதால் நண்பர்கள் உதவுவார்கள். விலையுயர்ந்த பொருள்கள் வாங்குவீர்கள். வீட்டில் கூடுதலாக ஒரு தளம் கட்டு வீர்கள்.

சூரியன் 4-ம் வீட்டில் நிற்பதால், திடீர்ப் பயணம் போக வேண்டியிருக்கும். அரசு வகைக் காரியங்கள் இழுபறியாகும்.

18-ம் தேதி முதல் செவ்வாய் உங்களின் ராசியில் அமர்வதால், வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. சகோதர வகையில் இருந்த அலைச்சல் விலகும்.

ராசிநாதன் வலுவாக இருப்பதால் பிரச்னைகளையும் தாண்டி சந்தோஷம் நிலைக்கும்.

வியாபாரத்தில் புதிய யுக்தி களால் தேங்கிக் கிடந்த சரக்கு களை விற்றுத் தீர்ப்பீர்கள். உத்தியோகத்தில், முன்னேற்றம் உண்டு; தலைமையின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். கலைத்துறையினருக்குப் புதிய வாய்ப்புகள் தேடி வரும்.

எதிர்பாராத வெற்றிகளைச் சந்திக்கும் காலம் இது.