Published:Updated:

ராசிபலன்

ராசிபலன்
பிரீமியம் ஸ்டோரி
News
ராசிபலன்

2.6.2020 முதல் 15.6.2020 வரை

மேஷம்

சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால், பணப்புழக்கம் அதிகரிக்கும். சுபநிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். புதனும், செவ்வாயும் சாதகமான வீடுகளில் செல்வதால், உறவினர் களால் ஆதாயம் கிடைப்பதுடன் கௌரவமும் ஒருபடி உயரும்.

புதிய நட்பு மலரும். உயர் கல்வித் தடைகள் நீங்கும். சொத்து வாங்குவது, விற்பதில் இருந்த வில்லங்கம் விலகும். உடன்பிறந்தவர்களால் இருந்த சங்கடங்கள் நீங்கும்.

ராசிபலன்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

10-ம் வீட்டில் குரு நிற்பதால், பொது விழாக்களை முன்னின்று நடத்துவீர்கள். சிக்கனமாக இருக்க நினைத்தாலும், அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும்.

வியாபாரத்தில் எதிர்பார்த் ததைவிட லாபம் அதிகரிக்கும். உத்தியோகத் தில் உங்களின் கை ஓங்கும். கலைத் துறையினர், புதிய படைப்புகளுக்காக கௌரவிக்கப்படுவார்கள்.

எடுத்த காரியங்களை முடித்துக் காட்டும் நேரம் இது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

ரிஷபம்

புதனும் ராசிநாதன் சுக்கிரனும் சாதகமான வீடுகளில் செல்வதால் தடைப்பட்ட வேலைகளை மாறுபட்ட அணுகுமுறையால் முடித்துக் காட்டுவீர்கள்.

உறவினர்கள் தேடி வந்து பேசுவார்கள். வீடு மாற வேண்டுமென நினைப்பீர்கள். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வாகனம் பழுதாகிச் சரியாகும். ஓரளவு பணவரவு உண்டு.

ராசிபலன்

எதிர்பார்ப்புகள் தாமதமாக முடியும். யாரையும் விமர்சித்துப் பேசாதீர்கள். குரு சாதகமாக இருப்பதால் வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். கல்யாணப் பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.

வியாபாரத்தில் ஆழம் தெரியாமல் காலை விடாதீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி அன்பு பாராட்டுவார். கலைத் துறையினரின் கடின உழைப் புக்கு அங்கீகாரம் கிடைக்கும்.

அமைதி காக்க வேண்டிய தருணம் இது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மிதுனம்

ராசிநாதன் புதன் சாதகமாக இருப்பதால், புதிய எண்ணங்கள் செயல் வடிவம் பெறும். வி.ஐ.பிகள் உதவுவார்கள். உறவினர்கள், நண்பர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களைப் பகிர்ந்துகொள்வார்கள்.

நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களைத் தேடி வருவார். சுக்கிரன் சாதகமாக அமர்ந்திருப்பதால் குழந்தை பாக்கியம் சிலருக்குக் கிடைக்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும்.

ராசிபலன்

பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பூர்வீகச் சொத்தை விற்று புது வீடு வாங்குவீர்கள்.

வியாபாரத்தில் அதிரடி சலுகைகளால் லாபம் அடைவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம். கலைத் துறையினருக்கு வரவேண்டிய சம்பளபாக்கி கைக்கு வரும்.

மன உறுதியுடன் போராடி வெல்லும் காலம் இது.

கடகம்

லாப வீட்டில் முக்கிய கிரகங்கள் வலுவாக அமர்ந்திருப்பதால் எதையும் சாதிப்பீர்கள். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். பிரபலங்களுக்கு நெருக்கமாவீர்கள். பழைய வழக்கில் வெற்றி பெறுவீர்கள்.

முக்கிய பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். வாகன வசதி பெருகும். உங்களின் ரசனைக்கேற்ப வீடு, மனை அமையும். புதன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், மனதுக்கு இதமான செய்திகள் வரும்.

ராசிபலன்

உறவினர்கள் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள். நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.

வியாபாரம் சூடுபிடிக்கும். வேலையாட்களிடம் கறாராக இருங்கள். உத்தியோகத்தில் மதிப்பு, மரியாதை கூடும். கலைத் துறையினரின் படைப்புகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும்.

புயலாய் இருந்த நிலைமாறி தென்றல் வீசும்.

சிம்மம்

சுக்கிரன் சாதகமாக இருப்பதால், சிறுக சிறுகச் சேர்த்து ஒரு வீட்டு மனையை யாவது புறநகர்ப் பகுதியில் வாங்கிவிட வேண்டுமென்று நினைப்பீர்கள். புதன் சாதகமாகச் செல்வதால் உறவினர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும்.

பால்ய நண்பர்களைச் சந்திப்பீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். சூரியன் சாதகமாக இருப்பதால் உங்களின் நிர்வாகத் திறன் அதிகரிக்கும்.

ராசிபலன்

திடீர் பணவரவு, செல்வாக்கு, கௌரவப் பதவிகள் தேடி வரும். புதிய இடத்தில் வேலை கிடைக்கும். அரசாங்க அதிகாரிகளின் நட்பு கிடைக்கும்.

வியாபாரத்தில் புதிய யுக்தி களால் தேங்கிக் கிடந்த சரக்கு களை விற்றுத்தீர்ப்பீர்கள். உத்தியோகத்தில் அதிகாரி களால் அலைக்கழிக்கப்படுவீர்கள். கலைத்துறையினர், மூத்த கலைஞர்களின் வழிகாட்டல் மூலம் வெற்றியடைவார்கள்.

அதிரடி மாற்றங்கள் நிகழும் பொன்னான காலம் இது.

கன்னி

சுக்கிரன் சாதகமாக இருப்பதால், விலை உயர்ந்த பொருள்கள் வாங்குவீர்கள். ராசிநாதன் புதன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் புது வேலை கிடைக்கும்.

வெளிவட்டாரத்தில் உங்களின் அந்தஸ்து உயரும். உறவினர்கள் உங்களைப் பற்றிப் பெருமையாகப் பேசுவார்கள். செவ்வாயின் போக்கு சாதகமாக இருப்பதால், பெரிய பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.

ராசிபலன்

வீடு கட்ட எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். உடன் பிறந்தவர்கள் உங்களின் வளர்ச்சிக்கு உதவியாக இருப்பர். வழக்கு சாதகமாகும். 4 -ம் வீட்டில் நிற்கும் கேது, சனியால் வேலைச்சுமை அதிகரிக்கும்.

சில்லறை வியாபாரத்தைத் தவிர்த்து மொத்த வியாபாரம் செய்யத் தொடங்குவீர்கள். உத்தியோகத்தில், சில நுணுக்

கங்களைக் கற்றுக்கொள்வீர்கள். கலைத் துறையினரின் கற்பனைத் திறன் வளரும்.

நீண்ட நாள் எண்ணங்கள் நிறைவேறும் காலம் இது.

துலாம்

புதன் சாதகமாக இருப்பதால், ஓரளவு பணவரவு உண்டு. வி.ஐ.பிகளின் தொடர்பு கிடைக்கும். வீட்டில் கூடுதலாக ஒரு தளம் கட்டுவீர்கள்.

பிதுர்வழிச் சொத்து கைக்கு வரும். உறவினர்களால் மகிழ்ச் சியும், தந்தைவழியில் ஆதரவும் பெருகும்.

கேதுவும் சனியும் 3-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் வெற்றி பெற்ற மனிதர்களின் நட்பு கிடைக்கும். முன்பணம் கொடுத்து முடிக்கப்படாமல் இருந்த சொத்தை மீதிப் பணம் தந்து பத்திரப் பதிவு செய்வீர்கள்.

ராசிபலன்

குரு சாதகமாக இருப்பதால் செல்வம், செல்வாக்கு கூடும். அடுத்தடுத்த விசேஷங்களால் வீடு களைகட்டும்.

வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். கலைத் துறையினருக்கு நழுவிச்சென்ற ஒப்பந்தங்கள் மீண்டும் கைக்கு வந்து சேரும்.

போராட்டங்களைக் கடந்து சாதிக்கும் வேளை இது.

விருச்சிகம்

சுக்கிரன் வலுவாக அமர்ந் திருப்பதால், உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். சமூகத்தில் உங்களின் அந்தஸ்து உயரும். திருமணம் கூடி வரும். குடும்பத்தில் நல்லது நடக்கும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

மனைவிவழியில் ஆதாயம் உண்டு. தங்க நகை ஆபரணங்கள் வாங்குவீர்கள். கடன் பிரச்னைகள் ஒரு பக்கம் விரட்டினாலும் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள்.

ராசிபலன்

சூரியன் சாதகமாக இல்லாததால் அரசு வகைக் காரியங்கள் தாமதமாக முடியும். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள்.

வியாபாரத்தில் வேலை யாள்கள், பங்குதாரர்கள் விசுவாசமாக நடந்து கொள்வர். உத்தியோகத்தில், அதிகாரியின் ஆதரவால் செல்வாக்கும் புகழும் கூடும். கலைத்துறையினரின் வருமானம் உயர, புதிய வாய்ப்புகள் பிறக்கும்.

எதிலும் ஏற்றம் நிறைந்த காலம் இது.

தனுசு

சூரியனும் புதனும் சாதகமாக அமர்ந்திருப்பதால் எதிலும் வெற்றி உண்டு. நாடாளுபவர்களின் நட்பு கிடைக் கும். கட்டட வேலையைத் தொடங்குவீர்கள். அதிக வட்டிக்கு வாங்கிய கடனை பைசல் செய்வீர்கள்.

பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். அரசாங்க விஷயங்கள் சாதகமாக முடியும். சிலர் வெளிநாடுகளுக்குச் சென்று வருவீர்கள்.

ராசிபலன்

சுக்கிரன் 6 - ம் வீட்டில் மறைந்திருப்பதால் அலைச்சலும், செலவுகளும் இருக்கும். கணவன்-மனைவிக்குள் வீண் வாக்குவாதம் வேண்டாம். குரு 2 - ம் வீட்டில் நீடிப்பதால் கோயில் மற்றும் விழா நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள்.

வியாபாரத்தில் எதிர்பாராத புதிய முதலீடுகள் செய்ய வேண்டாம். உத்தியோகத்தில், பணியில் கவனம் தேவை. கலைத் துறையினர், தங்களின் படைப்புகளைப் போராடி வெளியிட வேண்டி வரும்.

முற்போக்குச் சிந்தனையால் முன்னேறும் காலம் இது.

மகரம்

செவ்வாய் 2 - ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் வழக்கில் வெற்றி பெறுவீர்கள். கடன் பிரச்னைகள் கட்டுப்பாட்டுக்கு வரும். சகோதரர்கள் வகையில் சாதகமாக இருப்பார்கள்.

6 - ம் வீட்டில் ராகு நீடிப்பதால் அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். சுக்கிரன் சாதகமாக இருப்பதால் வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். கல்யாண முயற்சிகள் வெற்றி பெறும்.

புதன் 6 - ம் வீட்டில் மறைந் திருப்பதால் வேலைச் சுமை அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்களால் அன்புத் தொல்லைகள் உண்டு.

ராசிபலன்

வியாபாரத்தில், வாடிக்கை யாளர்களின் ரசனைக்கேற்ற பொருட்களைக் கொள்முதல் செய்து லாபத்தைப் பெருக் குவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். கலைத்துறையினர் பிரபலம் அடைவார்கள்.

வெற்றிக் கனியைப் பறிக்கும் தருணம் இது.

கும்பம்

சுக்கிரன் சாதகமாக இருப்பதால், உங்களின் செயலில் வேகம் கூடும். பழைய வீட்டைப் புதுப்பிக்கும் முயற்சியில் இறங்குவீர்கள். பணப் பற்றாக்குறையைச் சாமர்த்திய மாகச் சமாளிப்பீர்கள்.

குரு 12 - ல் தொடர்வதால் ஓய்வெடுக்கமுடியாதபடி உழைக்க வேண்டி வரும். யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம்.

ராசிபலன்

புதன் 5 - ம் வீட்டில் நிற்பதால் வி.ஐ.பிகள் உதவுவார்கள். எதிர்பார்ப்புகள் தடையின்றி முடியும். ராகு 5 - ம் வீட்டில் நிற்பதால், பாதியில் நின்ற வீடு கட்டும் பணியைத் தொடங்குவீர்கள்.

வியாபாரத்தில் வேலையாள்களிடம் தொழில் ரகசியங்களைச் சொல்ல வேண்டாம். பங்குதாரர்களை விட்டுப்பிடிப்பது நல்லது. உத்தியோகத்தில் அலட்சியம் வேண்டாம். கலைத்துறையினர் மறைமுகப் போட்டிகளைச் சமாளிப்பார்கள்.

திட்டமிட்டுச் செயல்பட்டு வெற்றி பெறும் காலம் இது.

மீனம்

புதனும் சுக்கிரனும் சாதகமான வீடுகளில் செல்வதால், திடீர் யோகம் உண்டாகும். மனைவிவழியில் உதவிகரமாக இருப்பார்கள். பூர்வீக சொத்தால் ஆதாயமடைவீர்கள்.

வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். உறவினர்கள், நண்பர்கள் ஆதரவாகப் பேசுவார்கள். குரு பகவான் வலுவாக 11 - ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் நினைத்த காரியம் நிறைவேறும். கல்வியாளர்கள், அறிஞர்களின் நட்பால் தெளிவடைவீர்கள்.

ராசிபலன்

குடும்பத்தில் அடுத்தடுத்து சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். கேது 10 - ல் தொடர்வதால் ஓய்வெடுக்க முடியாதபடி உழைக்க வேண்டி வரும்.

வியாபாரத்தில் போட்டிகளைச் சாமர்த்தியமாக எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். உத்தி யோகத்தில், உயரதிகாரிகளின் அணுக்கமும் ஆதரவும் கிட்டும். கலைத் துறையினரின் படைப்புத் திறன் வெற்றிபெறும்.

தைரியமான முடிவுகளால் வெற்றி பெறும் வேளை இது.