பிரீமியம் ஸ்டோரி

மேஷம்

ராசிபலன்

உங்களின் பூர்வ புண்ணியாதிபதி சூரியன் 3-ல் நிற்பதால் அரசாங்க காரியங்கள் உடனே முடியும்.

கௌரவப் பதவிகள் தேடி வரும். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். குழந்தை பாக்கியம் சிலருக்குக் கிடைக்கும். பிள்ளைகளால் சமூகத்தில் மதிப்பு கூடும். சகோதரர் வகையில் உதவிகள் உண்டு. பூர்வீகச் சொத்துச் சிக்கல்கள் ஒரு முடிவுக்கு வரும். வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும்.

சுக்கிரனும் புதனும் சாதகமாக இருப்பதால் நினைத்தது நிறைவேறும். எதிர்பார்த்த வகையில் பணம் வரும். கணவன் மனைவிக்குள் அந்நியோன்யம் பிறக்கும்.

வியாபாரத்தில் கனிவாகப் பேசி வாடிக்கையாளர்களைக் கவர்வீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்களை நம்பி சில பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். கலைத்துறை யினருக்கு நீண்ட நாள் கனவு நனவாகும்.

ஈகை குணத்தால் பாராட்டு பெறும் காலம் இது.

ரிஷபம்

ராசிபலன்

உங்களின் பூர்வ புண்ணியாதிபதி புதன் சாதக மான நட்சத்திரங்களில் செல்வதால், தன்னம்பிக்கையால் எதையும் சாதிப்பீர்கள்.

குடும்பத்தில் மகிழ்ச்சி, பணவரவு உண்டு. ஆனால், 2-ம் வீட்டில் நிற்கும் சூரியன் சேமிப்புகளைக் கரைப்பார். ராசிநாதன் சுக்கிரன் வலுவாக நிற்பதால், எதிர்நீச்சல் போட்டு எல்லாவற்றிலும் வெற்றி பெறுவீர்கள். பழைய நண்பர்கள் உதவுவார்கள். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள்.

செவ்வாயும், 8-ம் தேதி வரை குருவும் சாதகமான வீடுகளில் பயணிப்பதால், எதிர்பார்த்த பணம் வரும். எடுத்த காரியங் களை வெற்றிகரமாக முடித்துக் காட்டுவீர்கள். வியாபாரத்தில் போட்டிகளைச் சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உங்களைப் பற்றி விமர்சித்தாலும் அனுசரித்துப் போங்கள். கலைத்துறையினர் தங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும்.

ஏமாற்றங்கள், எதிர்ப்புகளைக் கடக்கும் வேளை இது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மிதுனம்

ராசிபலன்

பூர்வ புண்ணியாதிபதி சுக்கிரன் வலுவாக இருப்பதால், வி.ஐ.பி-கள் உதவுவார்கள். குலதெய்வப் பிரார்த்தனைக்குத் திட்டமிடுவீர்கள். உங்கள் ராசிநாதன் புதன் சாதகமான வீடுகளில் நிற்பதால், கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். நண்பர்கள் பக்கபலமாக இருப்பார்கள். சூரியன் ராசிக்குள் நிற்பதால், அவ்வப்போது உணர்ச்சிவசப் படுவீர்கள்.

செவ்வாய் 10-ம் வீட்டில் நிற்பதால், சவாலான விஷயங் களைக்கூட சாதாரணமாக முடிப்பீர்கள். சகோதரர் வகையில் உதவிகள் உண்டு.

கணவன் மனைவிக்குள் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. வியாபாரத்தில் பெரிய முதலீடுகளைத் தவிர்க்கவும். வாடிக்கையாளர்கள், வேலை யாட்களிடம் கோபப்படாதீர்கள். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டு. கலைத்துறையினரின் கலைத்திறன் சிறப்பாக வளரும்.

எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறும் தருணம் இது.

கடகம்

ராசிபலன்

சுக்கிரனும் புதனும் சாதகமாக இருப்பதால் சிக்கனமாகச் செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வாகனப் பழுதைச் சரி செய்வீர்கள். தடைப்பட்ட காரியங்களை விரைந்து முடிப்பீர்கள்.

கோயிலைப் புதுப்பிக்க உதவுவீர்கள். செவ்வாய் 9-ம் வீட்டில் நிற்பதால் உறவினர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். சகோதரர்கள் உங்களைச் சரியாகப் புரிந்துகொள்வார்கள். பிள்ளைகளால் இருந்து வந்த அலைச்சல்கள் நீங்கும்.

8-ம் தேதி வரை குரு ராசியைப் பார்ப்பதால் பணவரவு திருப்தி தரும். திருமண விஷயம் சாதகமாக முடியும். வியாபாரத்தில் நவீன யுக்திகளைக் கையாளுவீர்கள்.

உத்தியோகத்தில் மேலதி காரியிடம் நற்பெயரை எடுப் பீர்கள். கலைத்துறையினர், பொது நிகழ்ச்சிகளில் தலைமை தாங்கும் அளவுக்குப் பிரபலமாவார்கள்.

நினைத்தது நினைத்தபடி நிறைவேறும் காலம் இது.

சிம்மம்

ராசிபலன்

லாப வீட்டில் ராசிநாதன் சூரியன் வலுவாக அமர்ந்திருப்ப தால், உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். வீடு கட்ட அரசு அனுமதி கிடைக்கும். வங்கிக் கடன் உதவி கிடைக்கும். பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.

சுக்கிரனும் புதனும் சாதகமாக இருப்பதால் தைரியமாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். கல்யாண விஷயம் சாதகமாக முடியும். விரும்பிய பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள்.

சொந்தங்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக் கும். அண்டை அயலாரின் ஆதரவு பெருகும். வியாபாரத்தின் தரம் உயரும். வி.ஐ.பி-களும் வாடிக்கையாளர்களாவார்கள்.

உத்தியோகத்தில் இடமாற்றம் இருக்கும். சிலர் உங்களின் பெயரைத் தவறாகப் பயன்படுத்துவார்கள். கலைத்துறையினர், புதுமையாக சில படைப்புகளை வெளியிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பார்கள்.

மனோபலத்தால் நினைத்ததை முடிக்கும் தருணம் இது.

கன்னி

ராசிபலன்

சூரியன் 10-ம் வீட்டில் நிற்பதால் தடைகள் நீங்கும். பதவிகள் தேடி வரும். சிலருக்குப் புதிய இடத்தில் நல்ல வேலை அமையும்.

வீட்டை மாற்றுவது, விரிவு படுத்திக் கட்டுவது போன்ற முயற்சிகள் வெற்றியடையும். அரசாங்க விஷயங்கள் சாதகமாகும். ஒரு சொத்தை விற்று மறுசொத்து வாங்குவீர்கள்.

சுக்கிரனும் புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால் அனுபவபூர்வமாகவும் அறிவு பூர்வமாகவும் பேசுவீர்கள். பிரபலங்கள் உதவுவார்கள். உறவினர்களால் நன்மையுண்டு. கல்யாணப் பேச்சுவார்த்தைகள் முன்னேற்றம் தரும்.

வியாபார ரகசியங்கள் யார் மூலம் கசிகிறது என்பதை அறிந்து புதிய முடிவு எடுப்பீர்கள். வாடிக்கையாளர்கள் விரும்பி வருவார்கள். உத்தி யோகத்தில் அதிகாரிகள் உங்களுக்குத் முக்கியத்துவம் தருவார்கள். கலைத்துறையினர் புதிய வாய்ப்பு களால் புகழடைவார்கள்.

இங்கிதமான பேச்சால் வெற்றி பெறும் வேளை இது.

துலாம்

ராசிபலன்

செவ்வாய் 6-ம் வீட்டில் அமர்வதால் வழக்கில் வெற்றி பெறுவீர்கள். கடன் பிரச்னைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். சகோதரர்கள் சாதகமாக இருப்பார்கள்.

ராசிநாதன் சுக்கிரன் 8-ம் வீட்டில் மறைந்திருந்தாலும் ஆட்சி பெற்றிருப்பதால், ஓரளவு பணம் வரும். ஆடை, ஆபரணங்கள் சேரும்.

உங்களின் ரசனைக்கேற்ற வீட்டுக்குக் குடிபுகுவீர்கள். புதன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், தடைப்பட்ட காரியங்களில் வெற்றி உண்டு.

குடும்பத்தில் மகிழ்ச்சி குறையாது. அதிரடியான முடிவுகளை எடுத்து அனைவரையும் ஆச்சர்யப்

படுத்துவீர்கள். வியாபாரம் சுமாராக இருக்கும். உத்தி யோகத்தில் வேலைச்சுமை இருந்து கொண்டேயிருக்கும். சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். கலைத்துறையினரே, கிடைக்கிற வாய்ப்பைத் தக்க வைத்துக்கொள்ளுங்கள்.

திட்டமிட்டு செயலாற்றி வெற்றி பெறும் தருணம் இது.

விருச்சிகம்

ராசிபலன்

சுக்கிரன் 7-ம் வீட்டில் தொடர்வதால் மாறுபட்ட அணுகுமுறையால் பழைய பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். சில இடங் களில் சிலரிடத்தில் வளைந்துகொடுப்பீர்கள்.

வாழ்க்கைத்துணை யதார்த்தமாக ஏதேனும் அறிவுரை சொன்னால் ஏற்றுக்கொள்ளுங்கள். பண வரவு உண்டு. ஆபரணம் வாங்குவீர்கள். பூர்வீகச் சொத்தை விற்று, புது வீடு வாங்குவீர்கள்.

பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். பிள்ளை களின் கல்லூரி, பள்ளிச் சேர்க்கையை நினைத்து வருத்தப்படுவீர்கள். பயணங் களுக்குத் திட்டமிடுவீர்கள்.

வியாபாரத்தில் வாடிக்கை யாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அலுவலகத்தில் மரியாதை அதிகரிக்கும். சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். கலைத்துறையினருக்கு, வெகு நாள்களாக தடைப்பட்ட வாய்ப்பு கூடி வரும்.

புதிய எண்ணங்களால் புகழடையும் காலம் இது.

தனுசு

ராசிபலன்

8-ம் தேதி வரை குரு 2-ம் வீட்டில் நிற்பதால் குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். கணவன் மனைவி உறவு மேம்படும். வருமானமும் உயரும். 4-ம் வீட்டில் நிற்கும் செவ்வாயால் வேலைச்சுமை அதிகரிக்கும்.

சுக்கிரன் ராசிக்கு 6-ம் வீட்டில் தொடர்வதால் வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். விலை யுயர்ந்த பொருள்களை கவனமாகக் கையாளுங்கள்.

சூரியன் 7 - ம் வீட்டில் நிற்பதால் உணர்ச்சிவசப்படுவீர்கள். வரிகளை உடன் செலுத்தப் பாருங்கள். பால்ய நண்பர்களின் சந்திப்பால் ஆறுதலடைவீர்கள்.

வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள்.வாடிக்கையாளர்களுடன் மோதல்கள் வரக்கூடும். உத்தியோகத்தில், மற்றவர் விஷயங்களில் தலையிட வேண்டாம். கலைத்துறையினர் வாக்குவாதத்தைத் தவிர்ப்பது நல்லது.

கடின உழைப்பால் வெற்றி பெறும் வேளை இது.

மகரம்

ராசிபலன்

சுக்கிரன் சாதகமாக இருப்பதால், புதிய முயற்சி களில் ஆர்வம்காட்டுவீர்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதி பிறக்கும். பிள்ளைகளிடம் நல்ல மாற்றம் உண்டாகும்.

வீட்டில் கலகலப்பான சூழல் ஏற்படும். 6-ம் வீட்டில் சூரியன் நிற்பதால் அரசாங்கக் காரியங்கள் விரைந்து முடியும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள்.

செவ்வாய் 3-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் வெற்றி பெற்ற மனிதர்களின் நட்பு கிடைக்கும். முன்பணம் கொடுத்து முடிக்கப்படாமல் இருந்த சொத்தை மீதிப் பணம் தந்து பத்திரப் பதிவு செய்வீர்கள்.

வியாபாரம் சூடுபிடிக்கும். பழைய வேலையாள்கள் மீண்டும் பணியில் வந்து சேர்வார்கள். உத்தியோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரிகள் பாராட்டுவார்கள். கலைத்துறையினர் மூத்த கலைஞர்களிடம் சில நுணுக்கங்களை கற்றுத் தெளிவார்கள்.

புதிய பாதை புலப்படும் வேளை இது.

கும்பம்

ராசிபலன்

சுக்கிரனும் புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால் தடைகளும் ஏமாற்றங்களும் இருந்தாலும் ஓயமாட்டீர்கள்.

பூர்வீகச் சொத்தைப் போராடி பெறுவீர்கள். வீடு, வாகனத் தைச் சீர் செய்வீர்கள். வாழ்க்கைத்துணை வழியில் ஆதரவு உண்டு. 2-ம் வீட்டில் செவ்வாய் நிற்பதால் பேச்சில் நிதானம் தேவை. யாரையும் தூக்கி எறிந்து பேசாதீர்கள். எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும்.

5-ம் வீட்டில் சூரியன் நிற்பதால் பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். அரசாங்க விஷயங்களில் அவசரம் வேண்டாம்.

வியாபாரத்தில் வேலையாள் களும் பங்குதாரர்களும் உங்களைத் தவறாகப் புரிந்துகொள்வார்கள். உத்தியோகத்தில் அதிருப்தி உண்டாகும். கலைத் துறையினருக்கு எதிர்பார்த்த ஒப்பந்தம் தாமதமாக முடியும்.

காத்திருந்து காய் நகர்த்த வேண்டிய காலம் இது.

மீனம்

ராசிபலன்

சுக்கிரனும் புதனும் வலுவாக நீடிப்பதால் உங்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். தைரியமாக சில முடிவுகள் எடுப்பீர்கள். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தைத் திருப்பித் தருவீர்கள்.

நீண்ட நாள் பிரச்னைக்குத் தீர்வு காண்பீர்கள். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். வி.ஐ.பி-கள் உதவுவார்கள்.

சூரியன் 4-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் அரைகுறை யாக நின்ற வீடு கட்டும் பணியைத் தொடங்குவீர்கள். தாய்வழி உறவினர்களின் ஆதரவு பெருகும்.

வியாபாரத்தில் பாக்கி கள் வசூலாகும். புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரித்தாலும் விரைந்து முடிப்பீர்கள். கலைத்துறை யினரின் திறமைகள் வெளிப் படும்; புகழ் சேரும்.

திடீர் நன்மைகள் சூழ்ந்து மகிழ்ச்சி அளிக்கும் நேரம் இது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு