Published:Updated:

ராசிபலன்

ராசிபலன்
பிரீமியம் ஸ்டோரி
ராசிபலன்

மார்ச் 10 முதல் 23 - ம் தேதி வரை

ராசிபலன்

மார்ச் 10 முதல் 23 - ம் தேதி வரை

Published:Updated:
ராசிபலன்
பிரீமியம் ஸ்டோரி
ராசிபலன்

மேஷம்

ங்களின் ராசியில் சுக்கிரன் நிற்பதால் புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். அழகும், இளமையும் கூடும். தடைப்பட்ட வேலைகள் விரைந்து உடனே முடியும். திருமணப் பேச்சுவார்த்தை கைகூடும். புதிய நட்பு மலரும். புதனும், 13-ம் தேதி வரை சூரியனும் லாப வீட்டில் நிற்பதால் வர வேண்டிய பணம் கைக்கு வரும்.

மேஷம்
மேஷம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அரசாங்க விஷயங்கள் சாதகமாக அமையும். குலதெய்வக் கோயிலுக்குச் சென்று வருவீர்கள். வழக்குகள் சாதகமாகும். சகோதரர் வகையில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் கணிசமாக உயரும். உத்தியோகத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். கலைத்துறையினர், பொது நிகழ்ச்சிகளுக்குத் தலைமை தாங்குவார்கள்.

திட்டமிட்டுச் செயல்பட வேண்டும்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ரிஷபம்

சூரியன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், உங்களின் நிர்வாகத் திறமை அதிகரிக்கும். எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். அதிகாரம் மிக்க பதவியில் இருப்பவர்களின் தொடர்பு கிடைக்கும். வங்கிக்கடன் உதவி கிடைக்கும். பிள்ளைகளின் போக்கில் அக்கறை செலுத்துவீர்கள். புதன் சாதகமாக இருப்பதால் உறவினர்கள், நண்பர்கள் வீட்டு சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள்.

ரிஷபம்
ரிஷபம்

வெளியூர்ப் பயணங்களால் புது அனுபவம் உண்டாகும். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுபச்செலவுகள் அதிகரிக்கும். வேலைச்சுமை இருக்கும். வியாபாரத்தில் புதிய திட்டங்கள் வகுத்து லாபத்தைப் பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் மற்றவர்களின் வேலையையும் சேர்த்துப் பார்க்க நேரிடும். கலைத்துறையினர் சம்பள விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது.

மனதில் உற்சாகம் பொங்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மிதுனம்

சுக்கிரனும், புதனும் சாதகமாக இருப்பதால் அநாவசியச் செலவுகளைக் கட்டுப்படுத்துவீர்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். செலவுகள் அதிகரிக்கும். தந்தையின் உடல் நலனில் கவனமாக இருப்பது நல்லது. பொறுப்புகளும், பதவிகளும் தேடி வரும். புது வேலை கிடைக்கும். அரசாங்க விஷயங்கள் சாதகமாக முடியும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். 21-ம் தேதி வரை 7-ம் வீட்டில் செவ்வாய் சாதகமாக இருப்பதால் புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள்.

மிதுனம்
மிதுனம்

அரசால் ஆதாயம் உண்டு. பிள்ளைகளிடம் உங்களின் எண்ணங்களைத் திணிக்க வேண்டாம். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்தியோகத்தில் உயர்வு உண்டு. சம்பளப் பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கும். கலைத்துறையினருக்கு, நழுவிச் சென்ற ஒப்பந்தங்கள் கைக்கு வந்து சேரும்.

புதிய பாதையில் பயணிப்பீர்கள்.

கடகம்

சூரியன் சாதகமாக இல்லாததால் அரசு வகைக் காரியங்கள் தடைப்பட்டு முடியும். தந்தையுடன் மனக்கசப்பு, அவருக்கு வேலைச்சுமை வந்து செல்லும். புதனும், சுக்கிரனும் சாதகமாக இருப்பதால் புதுத் தெம்பு பிறக்கும். வசதியான வேறு வீடு மாறுவீர்கள். மனைவிவழியில் ஆதரவுப் பெருகும். 21-ம் தேதி வரை 6-ம் வீட்டில் செவ்வாய் வலுவாக இருப்பதால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

கடகம்
கடகம்

வீடு கட்டும் பணி முழுமையடையும். கணவன், மனைவிக்குள் அந்நியோன்யம் பிறக்கும். வியாபாரத்தில் அதிரடி அறிவிப்புகள் மூலம் போட்டிகளைச் சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகளிடம் அதிக உரிமை எடுத்துக்கொள்ள வேண்டாம். கலைத்துறையினரின் படைப்புத் திறன் வளரும்.

கடின உழைப்பால் நினைத்தது நிறைவேறும்.

சிம்மம்

புதன் சாதகமான நட்சத்திரத்தில் செல்வதால் தடுமாறிக் கொண்டிருந்த சில காரியங்கள் முடிவுக்கு வரும். ஓரளவு பணப்புழக்கம் உண்டு. பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். நண்பர்கள், உறவினர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். சுக்கிரன் சாதகமாக இருப்பதால் உங்களின் புகழ், கௌரவம் உயரும்.

சிம்மம்
சிம்மம்

கைமாற்றாகவும், கடனாகவும் வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர்கள். ராசிநாதன் சூரியன் ஓரளவு சாதகமாக செல்வதால், அரசு வகையில் ஆதாயம் உண்டு. வங்கிக்கடன் கிடைத்து வீடு கட்ட தொடங்குவீர்கள். வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரியின் ஆதரவால் செல்வாக்கு கூடும். கலைத்துறையினரின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும்.

முயற்சிகளால் முன்னேறுவீர்கள்.

கன்னி

13-ம் தேதிவரை சூரியன் 6-வீட்டில் நிற்பதால் அரசாங்க அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். எதிர்பார்த்த இடத்தில் உதவிகள் கிடைக்கும். கணவன், மனைவிக்குள் வீண்வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. சுக்கிரன் தனஸ்தானத்தைப் பார்ப்பதால் பணவரவு உண்டு. கல்யாண பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வீடு, மனை வாங்கக் கடனுதவி கிடைக்கும்.

கன்னி
கன்னி

செவ்வாய் வலுவாக இருப்பதால் உங்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்தியோகத்தில் வீண் விமர்சனங்களைத் தவிர்த்து பணியில் கவனம் செலுத்தப்பாருங்கள். கலைத்துறையினர், பெரிய வாய்ப்புக்காகக் காத்திருக்காமல் கிடைக்கின்ற வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வது நல்லது.

நிதானித்துச் செயல்பட்டால், நினைத்ததைச் சாதிப்பீர்கள்.

துலாம்

சூரியன் 14-ம் தேதி முதல் 6-ம் வீட்டில் அமர்வதால் தடைப்பட்ட வேலைகள் உடனே முடியும். பணவரவு உண்டு. வழக்கு சாதகமாகும். அதிகாரம் மிக்க பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். புதனும், ராசிநாதன் சுக்கிரனும் சாதகமாக இருப்பதால் புதிய டிசைனில் நகை வாங்குவீர்கள். வெளிவட்டாரத்தில் புதியவர்கள் அறிமுகமாவார்கள். செவ்வாய் வலுவாக இருப்பதால் வீடு, மனை வாங்குவது லாபகரமாக முடியும். சகோதரிக்கு இருந்த பிரச்னையை தீர்த்து வைப்பீர்கள்.

துலாம்
துலாம்

சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் பற்றுவரவு உயரும். வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்த புதிய சலுகைகளை அறிமுகப்படுத்துங்கள். உத்தியோகத்தில் உங்களின் அதிரடியான செயல்களைக் கண்டு அனைவரும் வியப்பார்கள். கலைத்துறையினருக்குப் பட்டிதொட்டியெங்கும் பாராட்டு கிடைக்கும்.

மன நிறைவுடன் காணப்படுவீர்கள்.

விருச்சிகம்

13-ம் தேதிவரை 4-ம் வீட்டில் சூரியன் நிற்பதால் அரசால் அனுகூலம் உண்டு. கர்ப்பிணிப் பெண்கள் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. புதன் சாதகமாக இருப்பதால் சிலர் புது வீடு மாறுவதற்குத் திட்டமிடுவார்கள். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. எதிர்பார்த்த அயல்நாட்டுப் பயணம் தேடி வரும். நட்புவட்டம் விரிவடையும். திடீர் செலவுகள் ஏற்படும். சேமிப்பு கரையும். மனைவியின் உடல் நலனில் கவனம் செலுத்துங்கள். முன்கோபம், பேச்சில் கடுமை வேண்டாம்.

விருச்சிகம்
விருச்சிகம்

வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவது நல்லது. உத்தியோகத்தில் வேலைச்சுமை இருந்தாலும் சக ஊழியர்கள் உங்களின் வேலைகளைப் பகிர்ந்து கொள்வார்கள். கலைத்துறையினரின் படைப்புகளை ரகசியமாகப் பாதுகாப்பது நல்லது.

மனதில் புத்துணர்ச்சி ததும்பும்.

தனுசு

சூரியன் சாதகமான வீடுகளில் செல்வதால் உங்களின் ஆளுமைத்திறன் அதிகரிக்கும். பணபலம் உயரும். உயர் மட்ட அரசியல்வாதிகள் உதவுவார்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். அயல்நாட்டிலிருப்பவர்களால் திருப்பம் உண்டாகும். ராசிக்குள் செவ்வாய் இருப்பதால் சேமிப்புகள் கரையும். சுக்கிரனும், புதனும் சாதகமாக இருப்பதால் திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகள் வீட்டில் நடக்கும். பழைய வீட்டை இடித்துக் கட்டுவீர்கள்.

தனுசு
தனுசு

விலகிச் சென்ற நண்பர்கள் வலிய வந்து பேசுவார்கள். மனைவிவழியில் செல்வாக்கு உயரும். வியாபார ரகசியங்கள் யார் மூலம் கசிகிறது என்பதை அறிந்து வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் சில முக்கிய பொறுப்புகள் உங்கள் கைக்கு வரும். கலைத்துறையினரின் படைப்புகளை அரசு கௌரவிக்கும்.

திறமைகளை வெளிப்படுத்துவீர்கள்.

மகரம்

புதன் சாதகமாக இருப்பதால் எதையும் சாதிக்கும் துணிச்சல் வரும். எதிர்பார்த்த பணம் வரும். தடைப்பட்ட கல்யாணப் பேச்சுவார்த்தை வெற்றியடையும். 2-ம் வீட்டில் அமர்ந்து கோபமாக பேச வைப்பதுடன், சேமிப்புகளையும் கரைத்துக் கொண்டிருக்கும் சூரியன் 14-ம் தேதி முதல் 3-ம் வீட்டில் அமர்வதால் திடீர் யோகம் உண்டாகும். வழக்கில் வெற்றி உண்டு. உடல் நலம் சீராகும். குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல், குழப்பங்கள் விலகும்.

மகரம்
மகரம்

அரசாங்க வேலைகளில் இருந்த இழுபறி நிலை மாறும். சுக்கிரன் சாதகமாக இருப்பதால் வீட்டில் கூடுதலாக ஒரு தளம் கட்டுவீர்கள். மனைவிவழியில் ஆதரவு பெருகும். வியாபார நெளிவு, சுளிவுகளைக் கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் அநாவசிய விடுப்புகளைத் தவிர்க்கவும். கலைத்துறையினருக்குப் புதிய வாய்ப்புகள் தேடி வரும்.

தடைகளைத் தாண்டி முன்னேறுவீர்கள்.

கும்பம்

21-ம் தேதிவரை செவ்வாய் லாப வீட்டில் நிற்பதால், எதிலும் வெற்றி பெறுவீர்கள். சுக்கிரன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் பணவரவு உண்டு. இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். தோற்றப்பொலிவு கூடும். மனைவிவழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் மகிழ்ச்சி தங்கும்.

கும்பம்
கும்பம்

கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். 14-ம் தேதி முதல் ராசியை விட்டு சூரியன் விலகுவதால் நெஞ்சு எரிச்சல், தூக்கமின்மை நீங்கும். ராசிக்குள் புதனும் நிற்பதால் இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். பழைய நண்பர்கள் தேடி வந்து உதவுவார்கள். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் சுட்டிக்காட்டினால் அமைதியாக ஏற்றுக்கொள்ளுங்கள். கலைத்துறையினர் மூத்தகலைஞர்களின் பாராட்டைப் பெறுவார்கள்.

நீண்ட கால சிக்கல்கள் தீரும்.

மீனம்

புதனும், சுக்கிரனும் சாதகமாக இருப்பதால் சோர்ந்து கிடந்த நீங்கள் சுறுசுறுப்பாவீர்கள். உறவினர்கள் சிலர் உங்களின் அதிரடியான வளர்ச்சியைக் கண்டு பொறாமைப்படுவார்கள். நண்பர்களால் ஆதாயமடைவீர்கள். உறவினர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்பார். அரசு வகைகளில் காரியங்கள் இழுபறியாகும். செவ்வாய் சாதகமான வீடுகளில் செல்வதால் பூர்விக சொத்துப் பங்கைக் கேட்டு வாங்குவீர்கள்.

மீனம்
மீனம்

ரத்த சொந்தங்கள் வலிய வந்து பேசுவார்கள். தாய்மாமன் வகையில் மதிப்பு, மரியாதை கூடும். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்தியோகத்தில் உங்களின் கை ஓங்கும். கலைத்துறையினர் மூத்த கலைஞர்களின் வழிகாட்டல் மூலம் வெற்றியடைவார்கள்.

மலையாய் இருந்த தடைகள் பனியாக விலகும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism