Published:Updated:

ராசிபலன்

ராசிபலன்
பிரீமியம் ஸ்டோரி
ராசிபலன்

மார்ச் 24 முதல் ஏப்ரல் 6-ம் தேதி வரை

ராசிபலன்

மார்ச் 24 முதல் ஏப்ரல் 6-ம் தேதி வரை

Published:Updated:
ராசிபலன்
பிரீமியம் ஸ்டோரி
ராசிபலன்

மேஷம்

தைரியஸ்தானாதிபதி புதன் சாதகமான வீடுகளில் தொடர்வதால், எவ்வளவு பிரச்னைகள் வந்தாலும் எதிர்நீச்சல் போட்டு வெற்றி பெறுவீர்கள். உறவினர்களில் ஒரு சிலர் உங்களைச் சரியாகப் புரிந்து கொள்ளாவிட்டாலும் நண்பர்கள் உதவுவார்கள். சுக்கிரன் சாதகமாக இருப்பதால், மனத்தில் இருந்த பயம் படிப்படியாக விலகும்.

மேஷம்
மேஷம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

29-ம் தேதி முதல் சுக்கிரன் ஆட்சிபெற்று 2-ம் வீட்டில் அமர்வதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். செவ்வாய் 10-ம் வீட்டில் நுழைந்திருப்பதால் சொத்துகள் வாங்குவது விற்பது லாபகரமாக இருக்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகளைத் தள்ளுபடி விலைக்கு விற்றுத் தீர்ப்பீர்கள். உத்தியோகத்தில் பணிகளைப் போராடி முடிக்க வேண்டி வரும். கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் வரும்.

போராடி வெற்றிபெறும் வேளை இது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ரிஷபம்

சூரியனும் புதனும் சாதகமாக இருப்பதால் தொடங்கிய வேலைகளை வெற்றிகரமாக முடித்துக்காட்டுவீர்கள். வி.ஐ.பிக்கள் ஆதரவாக இருப்பார்கள். உறவினர்கள், நண்பர்கள் மதிப்பார்கள். அரசால் அனுகூலம் உண்டு. பெரிய பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். குழந்தை பாக்கியம் சிலருக்குக் கிடைக்கும். திருமணம் கூடி வரும்.

ரிஷபம்
ரிஷபம்

28-ம் தேதி வரை ராசிநாதன் சுக்கிரன் 12-ம் வீட்டில் மறைந் திருப்பதால் உடல்நலனில் கவனம் தேவை. உங்களின் ரசனைக்கேற்ப வீடு, வாகனம் அமையும். செவ்வாய் 9-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால், சகோதர வகையில் இருந்த மனக்கசப்பு நீங்கும். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்தியோகத்தில் எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். கலைத்துறையினரின் படைப்புகளுக்கு வேறொருவர் உரிமை கொண்டாடுவார்.

பிரபலங்களின் உதவியால் முன்னேறும் காலம் இது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மிதுனம்

சுக்கிரன் சாதகமாக இருப்பதால் பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டு. பூர்வீகச் சொத்துப் பிரச்னை கட்டுப்பாட்டுக்குள் வரும். நீண்ட நாள் பேசாமல் இருந்த உறவினர் தேடி வந்து பேசுவார். ராசிநாதன் புதன் சாதகமாக நிற்பதால் பெரிய பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். டி.வி, ஃப்ரிட்ஜ், எலெக்ட்ரானிக் சாதனங்கள் வாங்குவீர்கள். நிலுவையிலுள்ள வழக்கில் வழக்கறிஞரின் ஆலோசனையின்றி முடிவுகள் எடுக்க வேண்டாம்.

மிதுனம்
மிதுனம்

சூரியன் 10-ம் வீட்டில் நிற்பதால் நல்ல வேலை கிடைக்கும். புதிய பொறுப்புகள் தேடி வரும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் கை ஓங்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு தேடி வரும். கலைத்துறையினரின் புகழ் பட்டிதொட்டியெங்கும் பரவும்.

நினைத்ததை நடத்தி முடிக்கும் தருணம் இது.

கடகம்

சுக்கிரன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் இங்கிதமாகப் பேசி பல வேலைகளையும் முடிப்பீர்கள். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். பெரிய பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். புதன் ஓரளவு சாதகமாக இருப்பதால், சமயோஜித புத்தியால் சாதிப்பீர்கள். உறவினர், நண்பர்களால் அனுகூலம் உண்டு. வெளியூர்ப் பயணங்களால் ஆதாயம் உண்டு. உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள்.

கடகம்
கடகம்

எதிர்பார்த்த விலைக்குப் பழைய மனையை விற்றுவிட்டு புது வீடு வாங்குவீர்கள். சூரியன் 9-ம் வீட்டில் நிற்பதால் வேலைச்சுமை இருக்கும். வியாபாரத்தில் லாபம் இருக்கும். உத்தியோகத்தில் பிறரின் குறைகளை நாசூக்காகச் சுட்டிக்காட்டுங்கள். கலைத்துறையினர், மூத்த கலைஞர்களின் வழிகாட்டல் மூலம் வெற்றியடைவார்கள்.

ரகசியங்களைக் காக்க வேண்டிய வேளை இது.

சிம்மம்

புதன் உங்களின் ராசியைப் பார்த்துக்கொண்டே இருப்பதால் புதிய முயற்சிகள் வெற்றி அடையும். நல்ல அந்தஸ்தில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். சூரியன் 8-ம் வீட்டில் மறைந்திருப்பதால் அடுத்தடுத்து அலைச்சலும் எதிர்பாராத செலவுகளும் வந்து போகும். சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள். கல்யாணம், சீமந்தம் என வீடு களைகட்டும்.

சிம்மம்
சிம்மம்

சகோதரனுக்கு நல்ல வாழ்க்கைத்துணை அமையும். வாழ்க்கைத் துணைவரின் உடல்நலனில் கவனம் தேவை. வழக்கு சாதகமாகும். உறவினர்களுடன் இருந்த மனவருத்தம் நீங்கும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

பழைய சிக்கல்கள், பிரச்னைகள் தீரும் நேரம் இது.

கன்னி

செவ்வாய் 5-ம் வீட்டில் நிற்பதால் நினைத்தது நிறைவேறும். அறிஞர்கள், கல்வியாளர்களின் தொடர்பு கிடைக்கும். குடும்பத்தில் நல்லது நடக்கும். வீடு, மனை விற்பது, வாங்குவது லாபகரமாக இருக்கும். சுக்கிரன் 28-ம் தேதி வரை 8-ம் வீட்டில் மறைந்திருப்பதால் தவிர்க்க முடியாத செலவுகளால் திணறுவீர்கள். 29-ம் தேதிக்குப் பிறகு நிலைமை சரியாகும். வாகன வசதிகள் பெருகும்.

கன்னி
கன்னி

உடல்நலனில் கவனம் வையுங்கள். தண்ணீரை அதிகம் பருகுங்கள். உடன்பிறந்தவர்கள் அவ்வப்போது கோபப்படுவார்கள். வெளியூர்ப் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகளைச் சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் சின்னச்சின்ன இடர்பாடுகளைச் சமாளிக்க வேண்டியிருக்கும். கலைத்துறையினரின் கலைத்திறன் வளரும்.

விடாமுயற்சியால் வெற்றிபெறும் வேளை இது.

துலாம்

சுக்கிரன் உங்கள் ராசியைப் பார்த்துக்கொண்டு இருப்பதால் சவாலான விஷயங்களைக்கூட எளிதாக முடிப்பீர்கள். சமயோஜித புத்தியால் சாதிப்பீர்கள். வி.ஐ.பிக்கள் அறிமுகமாவார்கள். உங்களின் கை ஓங்கும். வேலைச்சுமை இருக்கும். சூரியன் 6-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் அரசாங்க அதிகாரிகள் உதவுவார்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய வழி பிறக்கும்.

துலாம்
துலாம்

5-ம் வீட்டில் புதன் நிற்பதால் பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். செவ்வாய் 27-ம் தேதி முதல் குருவுடன் சேர்வதால் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். தள்ளிப்போன சுப காரியங்கள் ஏற்பாடாகும். வியாபாரத்தில் லாபத்தைப் பெருக்குவீர்கள். உத்தியோகத் தில் பதவி உயர்வு உண்டு. கலைத்துறையினர் சம்பள விஷயத்தில் கறாராக இருப்பது நல்லது.

நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும் காலம் இது.

விருச்சிகம்

புதன் சாதகமான வீடுகளில் நிற்பதால் உங்களின் அனுபவ அறிவால் முன்னேறுவீர்கள். வளைந்துபோகக் கற்றுக்கொள்வீர்கள். இடம், பொருள், ஏவல் அறிந்து பேசுவது, பழகுவது நல்லது. சூரியன் 5-ம் வீட்டில் நிற்பதால் பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகம் குறித்த முயற்சிகள் எடுப்பீர்கள். பூர்வீகச் சொத்துக்காகப் போராட வேண்டாம்.

விருச்சிகம்
விருச்சிகம்

29-ம் தேதி முதல் சுக்கிரன் 7-ம் வீட்டில் அமர்ந்து ராசியைப் பார்க்க இருப்பதால், குடும்பத்தில் நிம்மதி உண்டு. ராசிநாதன் செவ்வாய் 3-ம் வீட்டில் அமர்வதால் சவால்களில் வெற்றிபெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்களைப் புரிந்துகொள்வார்கள். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்தியோகத்தில் அதிகாரிகளைக் கலந்தாலோசிக்காமல் முடிவெடுக்க வேண்டாம். கலைத்துறையினர் புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம்.

எதிலும் விட்டுக்கொடுத்துச் செயல்படவேண்டிய வேளை இது.

தனுசு

ங்களின் பாக்கியாதிபதி சூரியன் 4-ம் வீட்டில் கேந்திர பலம் பெற்று நிற்பதால், நிர்வாகத்திறன் கூடும். பணப்புழக்கம் அதிகரிக்கும். அரசால் அனுகூலம் உண்டு. தந்தைவழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். 3-ம் வீட்டில் புதன் மறைந்து நிற்பதால் மாறுபட்ட அணுகுமுறையால் சாதிப்பீர்கள். சுக்கிரன் 5-ம் வீட்டில் தொடர்வதால் பிள்ளைகளால் அந்தஸ்து உயரும்.

தனுசு
தனுசு

மகனுக்குக் கல்வி, உத்தியோகம் எதிர்பார்த்த நிறுவனத்தில் கிடைக்கும். 29-ம் தேதி முதல் சுக்கிரன் 6-ம் வீட்டுக்கு வருவதால், வாழ்க்கைத் துணைவரின் உடல்நலனில் கவனம் தேவை. வியாபாரத்தில் சில நுணுக்கங்களைக் கற்றுக்கொள்வீர்கள். உத்தியோகத்தில் சிலருக்கு இடமாற்றம் ஏற்படும். கலைத்துறையினருக்கு வசதி, வாய்ப்புகள் பெருகும்.

அலைச்சலுடன் முன்னேற்றத்தையும் தரும் காலம் இது.

மகரம்

சூரியனும் புதனும் சாதகமாக இருப்பதால் பெரிய பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். குடும்பத்தினர் உங்களின் ஆலோசனையை ஏற்பார்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். நட்புவட்டம் விரிவடையும். புது வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு நல்ல பதில் வரும். தன்னார்வத் தொண்டு நிறுவனங்களால் கௌரவிக்கப்படுவீர்கள். சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் தன்னம்பிக்கை பிறக்கும்.

மகரம்
மகரம்

வாகனம் வாங்குவீர்கள். ஒரு சொத்தை விற்று மற்றொன்று வாங்குவீர்கள். செவ்வாய் ராசிக்குள் நிற்பதால் முன்கோபத்தைக் குறைத்துக்கொள்வது நல்லது. வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்தியோகத்தில் சூட்சுமங்களை உணர்வீர்கள். கலைத்துறையினர் மூத்த கலைஞர்களின் நட்பைப் பெறுவார்கள்.

பழைய நண்பர்களால் முன்னேறும் காலம் இது.

கும்பம்

ங்களின் பூர்வ புண்ணியஸ்தானாதிபதி புதன் ராசிக்குள்ளேயே நிற்பதால் மனநிம்மதியும், மகிழ்ச்சியும் கிடைக்கும். பூர்வீகச் சொத்து கைக்கு வரும். பழைய சொந்தங்களைச் சந்திப்பீர்கள். வெளியூர்ப் பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். வாழ்க்கைத்துணைவரின் வழியில் நல்ல செய்தி வரும். சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் செல்வாக்கு கூடும். புதிய வாகனம் வாங்குவீர்கள்.

கும்பம்
கும்பம்

2-ம் வீட்டில் சூரியன் நிற்பதால் உடல்நலனில் கவனம் செலுத்துங்கள். சேமிப்புகள் கரையும். அரசாங்க காரியங்கள் தாமதமாக முடியும். செவ்வாய் 12-ம் வீட்டில் மறைவதால் ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் தள்ளிப்போன வாய்ப்புகள் தேடி வரும். உத்தியோகத்தில் கவனமாக இருப்பது நல்லது. கலைத்துறையினருக்குப் புது நிறுவனங்களிலிருந்து வாய்ப்புகள் வரும்.

ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்தவேண்டிய வேளை இது.

மீனம்

செவ்வாய் வலுவாக இருப்பதால் சொன்ன சொல்லைக் காப்பாற்றுவீர்கள். உயர்பதவியில் இருப்பவர்களின் தொடர்பு கிடைக்கும். ஆனால், ராசியை விட்டு சூரியன் இன்னும் நகராமலிருப்பதால் உணர்ச்சிவசப்பட்டுப் பேசுவீர்கள். வீண் வாக்குவாதங்கள் செய்யாமலிருப்பது நல்லது. தியானத்தில் ஈடுபடுவது நல்லது. சுக்கிரன் தொடர்ந்து சாதகமாக இருப்பதால், எதிர்பார்த்த பணம் வரும். ரசனைக்கேற்ற வீடு, இடம் அமையும்.

மீனம்
மீனம்

கல்யாண முயற்சிகள் வெற்றி அடையும். பிள்ளைகளுக்குத் தகுந்த ஆலோசனை கூறி தேர்வில் அதிக மதிப்பெண் பெற உதவுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்தியோகத்தில் அதிகாரிகள் தொடர்ந்து உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். கலைத்துறையினரின் திறமைகள் வெளிப்படும்.

முக்கிய வேலைகளைச் செய்து முடிக்கும் நேரம் இது.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism