திருக்கதைகள்
திருத்தலங்கள்
ஜோதிடம்
Published:Updated:

ராசிபலன்

ராசிபலன்
பிரீமியம் ஸ்டோரி
News
ராசிபலன்

மே 19 முதல் ஜூன் 1 -ம் தேதி வரை

மேஷம்

சுக்கிரன் சாதகமாக இருப்பதால் இழுபறியான பல வேலைகள் முழுமையடையும். புதிய நல்ல இடத்தில் வேலை கிடைக்கும். சகோதர, சகோதரிகளின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். தாயாரின் உடல்நலம் சீராக இருக்கும். 2-ம் வீட்டில் சூரியன் நிற்பதால் மற்றவர்களிடம் பேசும்போது கவனம் தேவை. புதன் சாதகமாக நிற்பதால் புத்தி சாதுர்யத்துடன் செயல்படுவீர்கள்.

ராசிபலன்

வெளிவட்டாரத்தில் உங்களைப் பற்றிய மதிப்பு, மரியாதை கூடும். செவ்வாய் லாப வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் எதிர்பார்த்த விலைக்கு, பழைய மனையை விற்று புது வீடு வாங்குவீர்கள். உயர்கல்வியில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் உங்களிடம் தொழில்யுக்திகளைக் கற்றுக் கொள்வார்கள். உத்தியோகத்தில் உங்களின் கடின உழைப்பால் நிர்வாகத்தின் லாபம் உயரும். கலைத்துறையினருக்கு வசதி, வாய்ப்புகள் பெருகும்.

எங்கும், எதிலும் முதலிடம் பிடிப்பீர்கள்.

ரிஷபம்

சுக்கிரன் தனஸ்தானத்தில் அமர்ந்திருப்பதால் எதிர்பாராத பணவரவு உண்டு. ாசிக்குள் நிற்கும் சூரியனால் தூக்க மின்மை, கோபம் வரக்கூடும். ஆனால், உங்களின் பூர்வ புண்ணியாதிபதி புதன் சாதகமான வீடுகளில் பயணிப்ப தால் பிள்ளைகளால் ஏற்பட்ட அலைச்சல் குறையும்.

ராசிபலன்

வெளிவட்டாரம் பரபரப்பாக அமையும். வருங்காலத்துக்கான ஏற்பாடுகளைச் செய்து முடிப்பீர்கள். உங்களின் சிந்தனைத் திறன் அதிகரிக்கும். செவ்வாய் வலுவாக 10-ம் விட்டில் அமர்ந்திருப்பதால் உங்களின் நிர்வாகத்திறமை கூடும். உயர் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். வேலையாள்கள், வாடிக்கையாளர்களுடன் கனிவாகப் பழகுங்கள். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். சக ஊழியர்களை உதாசீனப்படுத்த வேண்டாம். கலைத்துறையினர் இழந்த புகழை மீண்டும் பெறுவார்கள்.

வளைந்துகொடுத்து நிமிர்வீர்கள்.

மிதுனம்

சுக்கிரன் ராசிக்குள்ளேயே அமர்ந்திருப்பதால் அலைச்சல் குறையும். உடல்வலி, சோர்வு, களைப்பு விலகும். தடைப்பட்ட வேலைகள் முடியும். புது வாகனம் வாங்குவீர்கள். பழுதான பொருள்களை மாற்றுவீர்கள். 12-ம் வீட்டில் சூரியன் நிற்பதால் வீண்கவலை அதிகரிக்கும். உங்கள் ராசிநாதன் புதன் சாதகமான நட்சத்திரத்தில் செல்வதால் தடுமாற்றம் அகலும்.

ராசிபலன்

அரசு வகை காரியங்களில் கொஞ்சம் அலைச்சல் இருந்தாலும் விடாப்பிடியாகச் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். செவ்வாய் 9-ம் வீட்டிலேயே தொடர்வதால் சொத்து வாங்குவது, விற்பது சாதகமாக அமையும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். வேலையாள்களால் மறை முகப் பிரச்னைகள் வரக் கூடும். உத்தியோகத்தின் சூட்சமங்களை உணர்வீர்கள். சக ஊழியர்கள் உதவுவார்கள். கலைத் துறையினர் கிடைக்கின்ற வாய்ப்பைத் தக்கவைத்துக் கொள்வது நல்லது.

சமயோஜித புத்தியுடன் நடந்துகொள்வீர்கள்.

கடகம்

சுக்கிரன் வலுவாக இருப்ப தால் சமயோஜித புத்தியால் சாதிப்பீர்கள். குழந்தை பாக்கியம் சிலருக்குக் கிடைக்கும். பணபலம் உயரும். உங்களின் ரசனைக்கேற்ப வீடு, வாகனம் வாங்குவீர்கள். லாப வீட்டில் சூரியன் சாதகமாக அமர்ந்திருப்பதால் தடைப்பட்ட வேலைகள் உடனே முடியும்.

ராசிபலன்

புதிய இடத்தில் நல்ல வேலை கிடைக்கும். பேச்சில் கம்பீரம் பிறக்கும். குடும்பத்தில் நிலவிய போட்டி பூசல் நீங்கும். புதன் சாதகமாக இருப்பதால் வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். நட்பு வகையில் ஆதாயமடைவீர்கள். 8-ம் வீட்டில் செவ்வாய் நிற்பதால், வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் பெரிய நிறுவனங்களுடன் புது ஒப்பந்தம் செய்வதன் மூலம் உங்கள் நிறுவனத்தின் புகழ் கூடும். உத்தியோகத்தில் வேலைச்சுமை இருந்தாலும், நல்ல பெயர் கிடைக்கும். கலைத்துறையினருக்குப் புதிய வாய்ப்புகள் வரும்.

அனைவராலும் மதிக்கப்படுவீர்கள்.

சிம்மம்

சூரியனும் புதனும் சாதகமாக இருப்பதால் தந்தையாரின் உடல் நிலை சீராகும். சமயோஜித புத்தி யுடன் நடந்துகொள்வீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக் கும். அரசாங்க காரியங்கள் உடனே முடியும். வீடு கட்ட அப்ரூவல் கிடைக்கும். வங்கிக் கடனுதவியும் கிடைக்கும்.

ராசிபலன்

வழக்கு வெற்றியடையும். வி.ஐ.பிக்களிடம் உதவி கேட்கலாமா, வேண்டாமா என்றிருந்த தயக்கம் விலகும். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு சில காரியங்களை முடிப்பீர்கள். சுக்கிரன் சாதகமாகச் செல்வதால் மனைவியுடன் இருந்த மோதல் விலகும். செவ்வாய் 7-ம் வீட்டில் நிற்பதால் வெகுநாள் கனவாக இருந்த வீடு வாங்கும் ஆசை இப்போது நிறைவேறும். வியாபாரத்தில் வரவு உயரும். தொல்லை தந்த வேலையாள்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் காலம் நேரம் பார்க்காமல் உழைக்கவேண்டி வரும். கலைத்துறையினருக்குப் பெரிய நிறுவனங்களின் அழைப்பு தேடி வரும்.

இங்கிதமான பேச்சால் எதையும் சாதிப்பீர்கள்.

கன்னி

சுக்கிரன் சாதகமான வீடு களில் பயணிப்பதால் வர வேண்டிய பணம் கைக்கு வரும். பழைய கடனை பைசல் செய்வீர்கள். பூர்வீகச் சொத்து சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்கு சுமுகமான தீர்வு காண்பீர்கள். உறவினர்களால் பயனடை வீர்கள். உங்களின் ராசிநாதன் புதன் சாதகமாக நிற்பதால் வீண் அலைச்சல் குறையும். முகம் பொலிவடையும். மறைமுக எதிர்ப்புகளைச் சமாளிப்பீர்கள்.

ராசிபலன்

பழைய நண்பர்களைச் சந்தித்து எதிர்காலத் திட்டங்களைப் பற்றி விவாதிப்பீர்கள். செவ்வாய் 6-ம் வீட்டிலேயே தொடர்வதால் எதிர்த்தவர்கள் அடங்குவார்கள். சகோதரர் வகையில் உதவிகள் கிடைக்கும். பழைய இடத்தை விற்று புது வீடு வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களைத் தீட்டுவீர்கள். புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். கலைத்துறையினர் பிற மொழிப்பட வாய்ப்புகளால் ஆதாயமடைவார்கள்.

புதிய முயற்சிகளால் வெற்றி பெறுவீர்கள்.

துலாம்

ங்கள் ராசிநாதன் சுக்கிரன் சாதகமாக இருப்பதால் புத்துணர்ச்சி பெருகும். மன வலிமை கூடும். குடும்பத்தில் நல்லது நடக்கும். கணவன் மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். சூரியன் 8-ம் வீட்டில் அமர்ந்ததால் திடீர் பணவரவு, அரசால் ஆதாயம் உண்டு. பழைய வாகனத்தை மாற்றுவீர்கள். புதன் சாதகமாக வீடுகளில் செல்வதால் திறமை களை சரியான நேரத்தில் வெளிப்படுத்துவீர்கள்.

ராசிபலன்

செவ்வாய் 5-ம் வீட்டில் நிற்பதால் பிள்ளைகள் பொறுப் பாகவும் சுறுசுறுப்பாகவும் செயல்படுவார்கள். வியாபார ரகசியங்கள் கசியாமல் பார்த்துக் கொள்ளுங்கள். வேலையாட்கள், பங்குதாரர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்களின் திறமையை மூத்த அதிகாரி பரிசோதிப்பார். சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். கலைத்துறையினர் மூத்த கலைஞர்களின் நட்பைப் பெறுவார்கள்.

சகிப்புத்தன்மையால் முன்னேறுவீர்கள்.

விருச்சிகம்

புதன் வலுவாக அமர்ந்திருப் பதால் தன்னம்பிக்கை துளிர்விடும். மதிப்பு, மரியாதை கூடும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வீட்டுக்குத் தேவையானவற்றை வாங்கி மகிழ்வீர்கள். எதிர் பார்த்த வாய்ப்புகள் தேடி வரும். சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் கணவன் மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். சொந்தங்களுக்கு மத்தியில் மதிக்கப்படுவீர்கள்.

ராசிபலன்

7-ம் வீட்டில் சூரியன் நிற்பதால் பழைய கடன் பிரச்னை தொல்லை தரும். பிள்ளைகளின் உயர்கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள். செவ்வாய் 4-ம் வீட்டில் நிற்பதால் சகோதர ஒற்றுமை பலப்படும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளைக் கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி உங்களின் ஆலோசனைகளை ஏற்பார். கலைத்துறையினர் அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பார்கள்.

சாதிப்பவர்களின் பட்டியலில் இடம் பிடிப்பீர்கள்.

தனுசு

சுக்கிரன் சாதகமாக இருப்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். வாகனத்தை மாற்றுவீர்கள். குடும்பத்தில் விட்டுக்கொடுத்துப்போவதன் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். முற்பகுதியில் புதன் 6-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் நண்பர்களால் செலவு, அலைச்சல் வரக்கூடும்.

ராசிபலன்

ஆனால், சூரியனும் 6-ம் வீட்டில் நிற்பதால் தடைப்பட்ட வேலைகள் உடனே முடியும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். அரசாங்க காரியங்கள் உடனே முடியும். செவ்வாய் 3-ம் வீட்டில் நிற்பதால் துணிச்சலான முடிவுகள் எடுப்பீர்கள். வீடு, மனை வாங்கும் வாய்ப்பில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்தி யோகத்தில் அதிகாரிகள் சுட்டிக்காட்டினால் அமைதியாக ஏற்றுக்கொள்ளுங்கள். கலைத் துறையினர் விமர்சனங்களைத் தாண்டி முன்னேறுவார்கள்.

துணிவே துணை என்று நினைப்பீர்கள்.

மகரம்

புதன் சாதகமாக இருப்பதால் மன இறுக்கம் விலகும். சொந்தங்களைச் சந்திப்பீர்கள். புதிய முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். எதிர்பார்த்தபடி பணம் கைக்கு வரும். குடும்பத்தில் உள்ளவர்களின் எண்ணங்களைப் பூர்த்தி செய்வீர்கள். சுக்கிரனும், பிற்பகுதியில் புதனும் பலவீனமாக இருப்பதால் வீண்செலவுகள் வரக்கூடும். உடன்பிறந்தவர்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயம் உண்டு.

ராசிபலன்

செவ்வாய் 2-ம் வீட்டில் நிற்பதால் அவ்வப்போது உணர்ச்சிவசப்படுவீர்கள். சகோதரர்களுடன் ஆரோக்கிய மான விவாதங்கள் வரும். வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டங்களை அனுபவ அறிவால் சரிசெய்வீர்கள். எதிர்பார்த்த லாபம் வரும். உத்தியோகத்தில் பழைய சிக்கல்கள் தீரும். கலைத்துறையினர், தங்களின் படைப்பு குறித்த ரகசியங்களைப் பாதுகாப்பது நல்லது.

இழுபறி நிலை மாறி ஏற்றம் பெறுவீர்கள்.

கும்பம்

சுக்கிரனும் புதனும் சாதகமாகச் செல்வதால் தைரியமாக முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். தன்னம்பிக்கை பிறக்கும். வீட்டில் விசேஷங்கள் ஏற்பாடாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். முகப்பொலிவு கூடும். கணவன் மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். ராசிக்கு 4-ம் வீட்டில் சூரியன் நிற்பதால் மனத்தில் இருந்த தடுமாற்றங்கள் நீங்கும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். அரசால் ஆதாயமடைவீர்கள். குடும்பத்தை அனுசரித்துப் போவீர்கள். உடல்நலத்தில் அக்கறைக் காட்டுவீர்கள்.

ராசிபலன்

ராசிக்குள் செவ்வாய் நிற்பதால் முன்கோபம் சம்பந்தப் பட்ட பிரச்னைகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் புதுத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவீர்கள். உத்தியோகத்தில் வேலைச் சுமையும், ஒருவித மனப் போராட்டமும் வந்து செல்லும். கலைத்துறையினரின் நீண்ட நாள் கனவு நனவாகும். வெற்றிக்கு வழிவகுப்பீர்கள்.

தொடர் முயற்சியால் வெற்றியடைவீர்கள்.

மீனம்

புதனும் சுக்கிரனும் சாதகமாக இருப்பதால் வரவேண்டிய பணம் வந்து சேரும். தடைப்பட்ட பணிகள் முழுமையடையும். வி.ஐ.பிக்களின் சந்திப்பால் உதவிகள் கிடைக்கும். சூரியன் 3-ம் வீட்டில் நிற்பதால் பக்குவமாகச் செயல்படுவீர்கள். மறைந்துகிடந்த திறமைகள் வெளிப்படும். தடைப்பட்ட காரியங்களை விரைந்து முடிப்பீர்கள்.

ராசிபலன்

பணவரவு திருப்திகரமாக இருக்கும். பழைய கடன் தீர வழி கிடைக்கும். குடும்பத்தில் அமைதி தங்கும். 12-ம் வீட்டில் செவ்வாய் மறைந்திருப்பதால் உடல்நலனில் கவனமாக இருப்பது நல்லது. வியாபாரத்தில் தள்ளிப்போன வாய்ப்புகள் தேடிவரும். வேலையாட்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில் மேலதிகாரியிடம் நற்பெயர் எடுக்க போராட வேண்டி வரும். கலைத்துறையினர் மூத்த கலைஞர்களிடம் சில நுணுக்கங்களைக் கற்றுத் தெளிவீர்கள்.

வாழ்க்கையில் வெற்றியும் ஏற்றமும் பெறுவீர்கள்.