Published:Updated:

ராசிபலன்

மேஷம்
பிரீமியம் ஸ்டோரி
News
மேஷம்

நவம்பர் 19 முதல் டிசம்பர் 2 - ம் தேதி வரை

மேஷம்

சுக்கிரன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் புதிதாக வாகனம், டி.வி, ஃப்ரிட்ஜ் போன்ற சாதனங்களை வாங்குவீர்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயம் கிடைப்பதுடன் கௌரவமும் உயரும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும்.

புதனும் ராசிநாதன் செவ்வாயும் சாதகமாக இருப்பதால் உறவினர்கள், நண்பர்களுடன் மனம்விட்டுப் பேசுவீர்கள்; அவர்களால் ஆதாயம் உண்டு. பூர்வீகச் சொத்து கைக்கு வரும். சகோதரர்கள் உதவுவார்கள். சூரியன் 8-ம் வீட்டில் நிற்பதால், பிள்ளைகளிடம் உங்களின் எண்ணங்களைத் திணிக்கவேண்டாம். வியாபாரத்தில், எதிர்பார்த்தபடி கணிசமாக லாபம் உயரும். புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில், உயரதிகாரி சில தருணங்களில் உங்களிடம் கோபமாகப் பேசினாலும் உங்களுக்குப் பக்கபலமாக இருப்பார். கலைத்துறையினரின் கலைத்திறன் வளரும்; படைப்புகள் பாராட்டப்படும்.

சமூகத்தில் மதிப்பு, மரியாதை கூடும் தருணம் இது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
ரிஷபம்
ரிஷபம்

ரிஷபம்

ராசிநாதன் சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால், புதிய யோசனைகள் பிறக்கும். வாகனப்பழுதைச் சரிசெய்வீர்கள். பிள்ளைகளால் ஆறுதல் அடைவீர்கள். ஓரளவு பணவரவு உண்டு என்றாலும் சேமிக்க முடியாதபடி செலவுகள் தொடர்ந்துகொண்டே இருக்கும். நண்பர்கள் பக்கபலமாக இருப்பார்கள்.

செவ்வாய் 6-ம் வீட்டில் நிற்பதால் சொத்து வாங்குவதும் விற்பதும் லாபகரமாக இருக்கும். சூரியன் 7-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால், புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். பிரபலங்களின் சந்திப்பு மகிழ்ச்சியைத் தரும். குடும்பத்தில் உங்களின் பேச்சுக்கு மதிப்பு கூடும். பழைய கடனை அடைக்க புதிய வழி பிறக்கும். சொத்து சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில், போட்டிகள் குறையும்; எதிர்பார்த்த லாபம் வரும். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. கலைத்துறையினர், விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவார்கள்.

‘துணிவே துணை’ என்று செயல்படும் தருணம் இது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மிதுனம்
மிதுனம்

மிதுனம்

சூரியன் 6-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால், எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும். அரசியல் செல்வாக்கு கூடும். புதிய வேலை அமையும். வழக்கில் வெற்றிபெறுவீர்கள். பணவரவு அதிகரிக்கும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய வழிபிறக்கும்.

புதனும் செவ்வாயும் ஓரளவு சாதகமாக இருப்பதால், இளைய சகோதரர்களால் நிம்மதி உண்டாகும். உறவினர்கள், நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். கணவன் மனைவி இடையேயான மோதல்கள், பிணக்குகள் நீங்கும். வீடு, வாகனத்தைச் சரிசெய்வீர்கள். வியாபாரம் சூடுபிடிக்கும். வெளிநாட்டு நிறுவனங்களுடன் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்தியோகத்தில், மேலதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். கலைத்துறையினரே, உங்களை அலட்சியப்படுத்திய நிறுவனமே புதிய வாய்ப்பை வழங்கும்.

முன்யோசனையுடன் செயல்பட்டு வெற்றி காணும் வேளை இது.

கடகம்
கடகம்

கடகம்

புதனும் செவ்வாயும் வலுவாக இருப்பதால் பேச்சு வல்லமையால் காரியம் சாதிப்பீர்கள். பூர்வீகச் சொத்தைப் புதுப்பிப்பீர்கள். வெளியூர்ப் பயணங்களால் புதிய அனுபவம் உண்டாகும். 22-ம் தேதி முதல் சுக்கிரன் 6-ம் வீட்டில் மறைவதால், உடல்நலனில் கவனமாக இருப்பது நல்லது.

சூரியன் 5-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால், பிள்ளைகளால் கொஞ்சம் அலைச்சல் இருக்கும். அவர்களின் வருங்காலம் குறித்து திட்டம் வகுப்பீர்கள். கர்ப்பிணிகள் கவனமாக இருப்பது நல்லது; மருத்துவரின் ஆலோசனையின்றி மருந்து-மாத்திரைகளை உட்கொள்ளவேண்டாம். வியாபாரத்தில், புதிய முதலீடுகள் இப்போதைக்கு வேண்டாம். எதைச் செய்வதாக இருந்தாலும் கவனம் தேவை. உத்தியோகத்தில், சக ஊழியர் களிடம் எச்சரிக்கையுடன் பழகுங்கள். அதேபோல், அதிகாரிகளுடன் வீண் வாக்குவாதம் செய்யவேண்டாம். கலைத்துறையினர், தங்களுடைய படைப்புகளைப் போராடி வெளியிடவேண்டி வரும்.

வளைந்துகொடுத்து வெற்றிபெறும் காலம் இது.

சிம்மம்
சிம்மம்

சிம்மம்

புதனும் சுக்கிரனும் சாதகமான வீடுகளில் சென்றுகொண்டிருப்பதால் புதிய எண்ணங்கள் தோன்றும். திடீர்ப் பணவரவு உண்டு. உங்களின் ரசனைக்கேற்ப வீடு, வாகனம் அமையும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். பிள்ளைகள் நீண்டநாள்களாகக் கேட்டுக்கொண்டிருந்ததை வாங்கித் தருவீர்கள். தந்தையின் உடல்நலம் சீராகும். பழைய சொந்தங்கள் தேடி வருவார்கள். நட்புவட்டம் விரியும்.

சூரியன் 4-ம் வீட்டில் நிற்பதால் தடைப்பட்ட காரியங்கள் உடனே முடியும். நாடாளுபவர்களின் உதவி கிடைக்கும். கணவன் மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளின் வருங்காலத் திட்டங்களைப் பற்றி முடிவெடுப்பீர்கள். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில், அதிகாரிகள் உங்களை நம்பி புதிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். கலைத்துறையினர், மூத்த கலைஞர்களின் நட்பைப் பெறுவார்கள்; அதனால் ஆதாயம் உண்டு.

புதிய கண்ணோட்டத்துடன் பயணிக்கும் தருணம் இது.

கன்னி
கன்னி

கன்னி

சுக்கிரனும் புதனும் சாதகமாக இருப்பதால், வீட்டைக் கட்டி முடிக்க வங்கிக் கடன் கிடைக்கும். வாழ்க்கைத்துணைவர் வழியில் உதவிகள் கிடைக்கும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். உறவினர்கள் சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வாகனத்தைச் சீர்செய்வீர்கள்.

செவ்வாய் சாதகமாக இருப்பதால் சகோதரர்களால் மகிழ்ச்சி கிடைக்கும். வெகுநாள் கனவாக இருந்த வீடு வாங்கும் ஆசை இப்போது நிறைவேறும். 3-ம் வீட்டில் சூரியன் சாதகமாக இருப்பதால், பிரச்னைகளைச் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிக்குக் குறைவிருக்காது. பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். வியாபாரத்தின் சூட்சுமங்களை உணருவீர்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகமானாலும் தலைமை யின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். கலைத்துறையினர், வேற்றுமொழி வாய்ப்புகளால் புகழடைவார்கள்.

எதையும் சாதிக்க முயற்சி செய்யும் வேளை இது.

துலாம்
துலாம்

துலாம்

ங்களின் ராசியிலேயே செவ்வாய் நிற்பதால் தைரியம் கூடும். சகோதரர்களால் பயனடைவீர்கள். அவ்வப்போது முன்கோபம், வீண் டென்ஷன் ஆகியவை வந்து போகும். வழக்கு சாதகமாகும். சுக்கிரனும் புதனும் சாதகமாக இருப்பதால், பண வரவு திருப்தி தரும். உறவினர்கள் வீட்டுக் கல்யாணத்தைத் திறம்பட எடுத்து நடத்துவீர்கள். புதிய டிசைனில் நகை வாங்குவீர்கள். நண்பர்கள் சிலரின் சுயரூபத்தை இப்போது உணருவீர்கள். மனத்தில் உற்சாகம் பிறக்கும்.

சனி பகவான் 3-ம் வீட்டில் நிற்பதால், தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில், வாடிக்கையாளர்களின் ரசனைக்கேற்ற பொருள்களைக் கொள்முதல் செய்து, அதன் மூலம் லாபத்தைப் பெருக்குவீர்கள். உத்தியோகத்தில், சில நுணுக்கங்களைக் கற்றுக் கொள்வீர்கள். கலைத்துறையினர், தங்களின் திறமையை வெளிப் படுத்த நல்ல வாய்ப்புகள் வரும்.

வாழ்வில் விஸ்வரூபமெடுக்கும் வேளை இது.

விருச்சிகம்
விருச்சிகம்

விருச்சிகம்

சுக்கிரனும் புதனும் சாதகமாக இருப்பதால், உங்களின் ரசனைகள் மாறும். வீட்டை அழகுபடுத்துவீர்கள். உறவினர்களில் உண்மையானவர் களைக் கண்டறிவீர்கள். விலகிச்சென்ற நண்பர்கள் வலிய வந்து பேசுவார்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் உங்களின் அந்தஸ்து உயரும்.

ராசிநாதன் செவ்வாய் 12-ம் வீட்டில் நிற்பதால் திடீர்ப் பயணங்கள், செலவுகள், தூக்கமின்மை வந்துபோகும். உடன் பிறந்தவர்களிடம் வீண் வாக்குவாதங்கள் செய்யவேண்டாம். வழக்கில் வழக்கறிஞரை மாற்றுவீர்கள். புண்ணியத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். வியாபாரத்தில், பணியாளர்களிடம் தொழில் சம்பந்தமானவற்றை விவாதிக்க வேண்டாம். உத்தியோகத்தில், சவால்களைச் சந்திக்க வேண்டி வரும். கலைத்துறையினர், மூத்த கலைஞர்களின் வழிகாட்டல் மூலம் வெற்றியடைவார்கள்.

மன உறுதியுடன் போராடி வெல்லும் காலம் இது.

தனுசு
தனுசு

தனுசு

செவ்வாயும் புதனும் லாப வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் உங்களின் ஆளுமைத்திறன் அதிகரிக்கும். தினந்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகை இப்போது கைக்குக் கிடைக்கும். ஒரு சொத்தை விற்று, புதிய சொத்து ஒன்றை வாங்குவீர்கள். குடும்பத்தில் உங்களின் வார்த்தைக்கு மதிப்பு கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும்.

சுக்கிரன் சாதகமாக இருப்பதால் சாதுர்யமான பேச்சால் எதையும் சாதிப்பீர்கள். வரவேண்டிய பணம் கைக்கு வரும். உறவினர்களும் நண்பர்களும் உங்களின் வேலையைப் பகிர்ந்துகொள்வார்கள். நவீன ரக ஆபரணங்கள் வாங்குவீர்கள். சூரியன் 12-ம் வீட்டில் நிற்பதால் பிரபலங்களுக்கு நெருக்கமாவீர்கள். பழைய சொந்தங்கள் தேடி வருவார்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில், வேலை அதிகரிக்கும். கலைத்துறையினரின் வசதி, வாய்ப்புகள் பெருகும்.

எதிர்காலத் திட்டங்களில் ஒன்று நிறைவேறும் வேளை இது.

மகரம்
மகரம்

மகரம்

புதனும் சுக்கிரனும் சாதகமாக இருப்பதால் எதிர்பார்த்த பணவரவு உண்டு. உறவினர்கள், நண்பர்கள் வீட்டு சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். சகோதரர்கள் வகையில் ஒற்றுமை பலப்படும். செவ்வாய் 10-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். பேச்சில் கம்பீரம் பிறக்கும். உயர் பதவியிலிருப்பவர்கள் உதவி செய்வார்கள்.

சூரியன் சாதகமாக இருப்பதால், அரசாங்க வேலைகள் விரைந்து முடியும். சொந்தபந்தங்களுக்கு மத்தியில் மதிக்கப்படுவீர்கள். வீட்டை விரிவுபடுத்துவீர்கள். வியாபாரத்தில், புதிய முயற்சிகளில் ஆழம் தெரியாமல் காலைவிட வேண்டாம். பழைய பாக்கிகளைப் போராடி வசூலிப்பீர்கள். வாடிக்கையாளர்களிடம் கண்டிப்பு வேண்டாம். உத்தியோகத்தில், சக ஊழியர்களிடம் கவனமாகப் பேசுங்கள். கலைத்துறையினர், புதுமையான படைப்புகளை வெளியிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பார்கள்.

சாமர்த்தியமான செயல்பாடுகளால் வெற்றி பெறும் வேளை இது.

கும்பம்
கும்பம்

கும்பம்

சூரியன் வலுவாக அமைந்திருப்பதால் புத்துணர்ச்சி ததும்பும். பாதியில் நின்ற வேலைகள் முழுமையடையும். அரசாங்க அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். முன்கோபம் விலகும். சுக்கிரனும் புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால், உங்கள் செயலில் வேகம் கூடும். வி.ஐ.பி-கள் நண்பர்கள் ஆவார்கள். வெள்ளிச்சாமான்கள் வாங்குவீர்கள். கணவன் மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். தள்ளிப்போன திருமணம் கூடி வரும். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் கூடிவரும்.

செவ்வாய் 9-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால், பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். பூர்வீகச் சொத்தால் வருமானம் வரும். உடன் பிறந்தவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். தாய்வழியில் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் லாபம் குறையாது. உத்தியோகத்தில் அதிகாரியின் ஆதரவால் செல்வாக்கு கூடும். கலைத்துறையினரின் படைப்புகளுக்கு மதிப்பு மரியாதை கூடும்.

தகுதியறிந்து உதவி செய்யும் வேளை இது.

மீனம்
மீனம்

மீனம்

புதனும் சுக்கிரனும் சாதகமான வீடுகளில் செல்வதால் புதிய திட்டங்கள் நிறைவேறும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் தொடர்பு கிடைக்கும். புதிதாக வீடு, வாகனம் வாங்குவீர்கள். திருமணப் பேச்சுவார்த்தை கூடி வரும். பிள்ளைகளுடன் மனம்விட்டுப் பேசுவீர்கள். கழிவுநீர், குடிநீர்ப் பிரச்னை தீரும். விலையுயர்ந்த சமையலறைச் சாதனங்கள் வாங்குவீர்கள். உறவினர்கள், நண்பர்கள் உங்களின் பெருந்தன்மையைப் புரிந்துகொள்வார்கள். பால்ய நண்பர்களின் சந்திப்பால் மகிழ்ச்சியடைவீர்கள்.

சூரியன் 9-ம் வீட்டில் நிற்பதால் வேலைச்சுமை அதிகரிக்கும். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் உங்களின் கருத்தை மற்றவர்கள் ஏற்பதுடன், பாராட்டவும் செய்வார்கள். கலைத்துறையினரின் உழைப்புக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும்.

எதிர்பாராத வெற்றிகளைச் சந்திக்கும் தருணம் இது.