பிரீமியம் ஸ்டோரி

மேஷம்

சுக்கிரன் சாதகமான வீடு களில் செல்வதால் பணவரவு உண்டு. தவிர்க்க முடியாத செலவு களால் வெளியில் கடனும் வாங்க வேண்டி வரும். வாகனம் அடிக்கடி பழுதாகும். வீட்டில் கூடுதல் அறை கட்ட யோசிப்பீர்கள்.

7-ல் அமர்ந்து மனைவியைக் கோபப்பட வைக்கும் சூரியன், 8-ல் அமர்வதால் குடும்பத்தில் அமைதி திரும்பும் என்றாலும், கேதுவுடன் சேர்வதால் வீண் சந்தேகம் எட்டிப் பார்க்கும். பல், காது வலி, தொண்டைப் புகைச்சல் வந்து போகும்.

ராசிபலன்

25-ம் தேதி முதல் புதன் 8-ல் மறைவதால், வெளிநாட்டில் இருக்கும் நண்பர்கள், உறவினர் களால் ஆதாயம் உண்டு. அவர் களின் பாசமான விசாரிப்புகள் ஆறுதலாக இருக்கும்.

குரு 10-ல் அமர்வதால் வேலைச்சுமை கூடும். வியாபாரத் தில் கணிசமாக லாபம் உயரும். பழைய பங்குதாரர் மீண்டும் வந்து இணைவார். உத்தியோகத்தில் உயரதிகாரி சிலநேரங்களில் உங்களைக் கடிந்து பேசினாலும் அன்பாக நடந்து கொள்வார். கலைத்துறையினரின் கலைத் திறன் வளரும்.

மதிப்பு கூடும் வேளை இது.

ரிஷபம்

குருபகவான் 9-ல் அமர்வதால் வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். பணவரவு திருப்தி கரமாக இருக்கும். சுகாதிபதி சூரியன் 7-ல் அமர்வதால் எரிச்சல், கோபம் விலகும். தடைப் பட்ட அரசுக் காரியங்கள் விரைந்து முடியும்.

பெற்றோரின் உடல்நிலை சீராகும். சூரியன் கேதுவுடன் சேர்வதால் முதுகுவலி, முழங் காலில் அடிப்படுதல் போன்ற உபத்திரவங்கள் வந்துபோகும்.

ராசிபலன்

சுக்கிரனும், 24-ம் தேதி வரை புதனும் சரியில்லாததால் சோர்வு, தொண்டை வலி வந்து நீங்கும். 25-ம் தேதி முதல் புதன் சாதகமாக இருப்பதால் பழைய உறவினர்கள், நண்பர்களுடன் மனம் விட்டுப் பேசுவீர்கள். பூர்விகச் சொத்து கைக்கு வரும்.

வியாபாரத்தில் போட்டிகள் குறையும்; நீங்கள் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். கடையை விரிவுப்படுத்த முடிவெடுப்பீர்கள். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் தேவை; பணிகளை மற்றவரை நம்பி கொடுக்க வேண்டாம். கலைத் துறையினர், விமர்சனங்களைத் தாண்டி முன்னேறுவர்.

துணிவு துணை நிற்கும் நேரம் இது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மிதுனம்

சூரியன் 6-ம் வீட்டில் நுழைவ தால் புகழ், கௌரவம் கூடும். பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். வீட்டு விசேஷங்களில் முதல் மரியாதை கிடைக்கும். அரசாங்க விஷயங்கள் உடனே முடியும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். புது வீடு கட்டத் தொடங்குவீர்கள்.

சுக்கிரனும், 24-ம் தேதிவரை புதனும் சாதகமாக இருப்பதால் பிள்ளைகளால் வசதி, வாய்ப்புகள் வளரும். பிணக்குகள் நீங்கும். ஆனால் 25-ம் தேதி முதல் புதன் 6-ல் மறைவதால் சளித் தொந்தரவு, உறவினர்களால் அலைச்சல், பிரச்னைகள் வந்து நீங்கும்.

ராசிபலன்

குரு 8-ல் நிற்பதால் விலைஉயர்ந்த பொருள்களை கவன மாகக் கையாளுங்கள். அவற்றால் வீண் இழப்புகள் வர வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் வெளி நாட்டு நிறுவனங்களுடன் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

உத்தியோகத்தில் மேலதி காரியின் தவறுகளைச் சுட்டிக் காட்டும் அளவுக்கு அவருடன் நெருக்கம் ஆவீர்கள். சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். கலைத்துறையினரை, உதாசினப் படுத்திய நிறுவனமே அழைத்துப் பேசும்.

அறிவால் சாதிக்கும் வேளை இது.

கடகம்

சூரியன் 5-ல் அமர்வதால் பிள்ளைகளால் அலைச்சலும், அவர்களின் வருங்காலம் குறித்த கவலைகளும் வந்து போகும். கர்ப்பிணிப் பெண்கள் கவனமாக இருப்பது நல்லது.

சுக்கிரன் சாதகமாக இருப்ப தால் ஆடை, ஆபரணங்கள் சேரும். வீடு மாறுவீர்கள். கல்யாண நிகழ்வுகளை முன்னின்று நடத்து வீர்கள். புதன் சாதகமாக இருப்ப தால் இளைய சகோதரர்களால் நிம்மதி உண்டாகும்.

ராசிபலன்

உறவினர்கள், நண்பர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். கேதுவின் பலன், உங்களைச் சுற்றியுள்ளவர்களில் நல்லவர்கள் யார் என்பதை உணர்த்தும். குரு உங்கள் ராசியைப் பார்ப்பதால் கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த பனிப்போர் நீங்கும்.

வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் வரும். வேலையாள்களைத் தட்டிக் கொடுத்து வேலை வாங்கு வது நல்லது. உத்தியோகத்தில் உங்களைப் பற்றி வதந்திகள் வரும். அதிகாரிகளுடன் பனிப் போர் வந்து நீங்கும். கலைத் துறையினர், தங்களின் படைப்பு களைப் போராடி வெளியிட வேண்டிய நிலை வரும்.

எதிலும் வெற்றி பெறும் வேளை இது.

சிம்மம்

சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால், செயலில் வேகம் கூடும். வி.ஐ.பிகள் நண்பர்கள் ஆவார்கள். வெள்ளிப் பொருள்கள் வாங்குவீர்கள்.

பிரிந்த தம்பதி ஒன்றுசேர்வர். பழுதான வாகனத்தை மாற்றி விட்டுப் புதிது வாங்குவீர்கள். தள்ளிப்போன திருமணம் கூடி வரும். ராசிநாதன் சூரியன் 4-ல் அமர்வதால் உங்களின் நிர்வாகத் திறன் கூடும். புது வேலை கிடைக்கும். பழைய நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும்.

ராசிபலன்

புதன் வலுவாக நிற்பதால் சாதுர்யமாகப் பேசி சாதிப்பீர்கள். பூர்விகச் சொத்தைப் புதுப்பிப் பீர்கள். வெளியூர்ப் பயணங்களால் புது அனுபவம் உண்டாகும். குரு 6-ல் நிற்பதால் வீண்பழி, பகை வரக் கூடும்.

வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. வேலையாள்கள் உங்களின் பரந்த மனத்தைப் புரிந்துகொள்வர். உத்தியோகத்தில் அதிகாரிகள் உங்களை நம்பி

புதுப் பொறுப்புகளை ஒப்படைப் பார்கள். கலைத் துறையினர், மூத்த கலைஞர்களின் நட்பைப் பெறுவார்கள்.

புகழ் கூடும் வேளை இது.

கன்னி

சுக்கிரனும், புதனும் சாதகமாக இருப்பதால் புதிய எண்ணங்கள் தோன்றும். திடீர் பணவரவு உண்டு. உங்கள் ரசனைக்கேற்ப வீடு, வாகனம் அமையும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். தந்தையின் உடல் நலம் சீராகும். பழைய சொந்தங்கள் தேடி வரும். நட்பு வட்டம் விரியும்.

சூரியன் 3-ல் அமர்வதால் உங்களின் முதிர்ச்சியான பேச்சில் அறிவு வெளிப்படும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. நீண்ட நாள்களாக எதிர்பார்த்துக் காத்திருந்த அயல்நாட்டுப் பயணம் சாதகமாக அமையும்.

ராசிபலன்

குரு 5 - ம் வீட்டிற்கு வருவதால் பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். அவர்களின் உடல்நிலை சீராகும்.

வியாபாரத்தில் பல சூட்சுமங் களை உணருவீர்கள். வாடிக்கை யாளர்களிடம் கனிவாகப் பழகுங் கள். உத்தியோகத்தில் வேலைச் சுமை அதிகமானாலும் தலைமை இடத்தின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். கலைத்துறையினர் வேற்றுமொழி வாய்ப்புகளால் புகழடைவீர்கள்.

எதையும் சாதிக்கும் வேளை இது.

துலாம்

சுக்கிரனும், புதனும் சாதகமாக இருப்பதால் வீட்டைக் கட்டி முடிக்க எதிர்பார்த்த வங்கிக் கடன் கிடைக்கும். மனைவி வழியில் ஆதாயம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும்.

புதியவர்கள் நண்பர்களா வார்கள். உறவினர்கள் சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வாகனத்தைச் சீர் செய்வீர்கள். சூரியன் ராசியை விட்டு விலகுவதால் உடல்நலம் சீராகும். ஆனால் பேச்சில் காரம் வேண்டாம். அரசுக் காரியங்கள் தள்ளிப் போய் முடியும்.

ராசிபலன்

குரு 4-ல் அமர்வதால் ஓரளவு டென்ஷன் குறையும். எதிலும் ஆர்வமில்லாத நிலை, தொழிலில் முடக்கம் ஏற்படும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனைக் கேற்ற பல பொருள்களைக் கொள்முதல் செய்து லாபத்தைப் பெருக்குவீர்கள்.

உத்தியோகத்தில் புதிய நுணுக் கங்களைக் கற்றுக்கொண்டு வெற்றி பெறுவீர்கள். பணியில் மேலதிகாரி உங்களைப் பாராட்டு வார். கலைத்துறையினர், தங்களின் திறமைகளை வெளிப் படுத்த நல்ல வாய்ப்புகள் வரும்; பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

விஸ்வரூபம் எடுக்கும் வேளை இது.

விருச்சிகம்

சுக்கிரன் சாதகமாகச் செல்வதால் இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். எதிர்பார்த்த வகை யில் பணம் வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகளைப் புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். மனைவியின் உடல் நலம் சீராகும்.

பூர்விகச் சொத்துப் பங்கைக் கேட்டு வாங்குவீர்கள். பால்ய நண்பர்களைச் சந்திப்பீர்கள். ராசிக்குள் நிற்கும் கேதுவுடன் சூரியனும் சேர்வதால் முன்கோபம், உஷ்ணத்தால் அடிவயிற்றில் வலி, கண் எரிச்சல் வந்து நீங்கும்.

ராசிபலன்

குருபகவான் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் பாதியிலேயே நின்றுபோன வேலை களை விரைந்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகளைப் போராடி விற்பீர்கள். வேலையாள்களிடம் தொழில் சம்பந்தமான ரகசியங்களைச் சொல்ல வேண்டாம்.

உத்தியோகத்தில் சவால் களைச் சந்திக்க வேண்டி வரும். எனினும் சாமர்த்தியமாக சமாளித்து வெல்வீர்கள். கலைத் துறையினர், மூத்த கலைஞர் களின் வழிகாட்டல் மூலம் வெற்றி அடைவீர்கள்.

உறுதியுடன் போராடும் வேளை இது.

தனுசு

சுக்கிரனும், புதனும் சாதகமாக இருப்பதால் உங்கள் ரசனை மாறும். வீட்டை அழகுப்படுத்துவீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களைக் கண்டறிவீர்கள். விலகிச் சென்ற நண்பர்கள் வலிய வந்து பேசுவார்கள்.

மனைவிவழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வெளி வட்டாரத்தில் அந்தஸ்து உயரும். குரு ராசியை விட்டு விலகுவதால் சோர்வு, களைப்பு, எதிர்மறை எண்ணங்கள் நீங்கும். கணவன் - மனைவிக்குள் இருந்த ஈகோ பிரச்சனைகள் விலகும்.

ராசிபலன்

12-ல் சூரியன் நிற்பதால் சுபச்செலவுகள் உண்டாகும். தந்தை வழி உறவினர்களுடன் கருத்து மோதல்கள் வரும். வியாபாரத்தில் பழைய வேலையாள்களை மாற்றுவீர்கள். பங்குதாரர்கள் உங்கள் ஆலோ சனையை ஏற்பார்கள்.

உத்தியோகத்தில் வேலைச் சுமை குறித்து ஆதங்கப்படுவீர்கள். உயர் அதிகாரிகள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். கலைத் துறையினரின் வசதி, வாய்ப்புகள் பெருகும்; படைப்புகள் வெற்றி பெறும்.

தொட்டது துலங்கும் காலம் இது.

மகரம்

சூரியன் சாதகமாக இருப்ப தால் எதிர்ப்புகள் அடங்கும். அரசியல்வாதிகள் உதவுவார்கள். வீடு கட்டுவது, வாங்குவது சாதகமாக அமையும்.

புதுப் பொறுப்புகளும், பதவி களும் தேடி வரும். வழக்கில் சாதக மான தீர்ப்பு வரும். தந்தைவழியில் அனுகூலம் உண்டு. அரசுக் காரி யங்கள் சுலபமாக முடியும். அயல் நாடு செல்லும் வாய்ப்பு வரும்.

ராசிபலன்

சுக்கிரனும் புதனும் சாதகமாக இருப்பதால் சாதுர்யமான பேச்சால் சாதிப்பீர்கள். வர வேண்டிய பணம் கைக்கு வரும். உறவினர்கள், நண்பர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துகொள்வார்கள். குரு ராசிக்குள் நுழைவதால் மன உளைச்சல், டென்ஷன், வேலைச் சுமை அதிகரிக்கும். ஆன்மிகக் காரியங்களால் சந்தோஷம் கிடைக்கும்.

வியாபாரத்தில் ஆழம் தெரியாமல் காலை விடாதீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். சக ஊழியர்களிடம் கவனமாகப் பழகுங்கள். கலைத் துறையினர், புதுமையாகச் சில படைப்புகளை வெளியிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பார்கள்.

பேச்சால் சாதிக்கும் காலம் இது.

கும்பம்

புதனும், சுக்கிரனும் சாதகமான வீடுகளில் செல்வதால் புதிய திட்டங்கள் நிறைவேறும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் தொடர்பு கிடைக்கும். திருமணப் பேச்சு வார்த்தைக் கூடி வரும்.

உறவினர்கள், நண்பர்கள் உங்களின் பெருந்தன்மையைப் புரிந்து கொள்வார்கள். பால்ய நண்பர்களின் சந்திப்பால் மகிழ்ச்சி அடைவீர்கள். சூரியன் 10-ல் நிற்பதால் புது வேலை கிடைக்கும்.

ராசிபலன்

அரசாங்கத்தால் ஆதாயம் அடைவீர்கள். தந்தையின் உடல் நலம் சீராகும். தந்தைவழி உறவினர்கள் மதிப்பார்கள். குரு 12-ம் வீட்டில் செல்வதால் ஓரளவு பணப்புழக்கம் உண்டு; செலவுகளும் இருக்கும்.

வியாபாரத்தில் லாபம் குறையாது. வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் அதிகாரியின் ஆதரவால் செல்வாக்குக் கூடும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக் கும். கலைத்துறையினரின் படைப்புகளுக்கு வெளியிடங் களில் மதிப்பும் மரியாதையும் கிடைக்கும்.

சலுகைகள் கிட்டும் காலம் இது.

மீனம்

சுக்கிரனும், புதனும் சாதகமாக இருப்பதால் இழுபறியாக இருந்த வேலைகள் உடனே முடியும். பூர்விகச் சொத்தை மாற்றிப் புதுவீடு வாங்குவீர்கள். உறவினர்களுக்கு மத்தியில் ஒருபடி உயர்ந்து நிற்க வேண்டுமென எண்ணுவீர்கள். வாகனப் பழுதைச் சீர் செய்வீர்கள். வீடு கட்ட லோன் கிடைக்கும்.

மனைவி வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நட்பால் ஆதாயம் உண்டு. சூரியன், 9-ல் நிற்கும் கேதுவுடன் சேர்வதால் தந்தைக்கு வேலைச்சுமையும் அதனால் ஆரோக்கியக் குறைவும் வந்து போகும். வரவுக்கு மிஞ்சிய செலவுகளும் இருக்கும்.

ராசிபலன்

குரு 11-ல் அமர்வதால் பண வரவு உண்டு. வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வியாபாரத்தில் புது யுக்திகளால் தேங்கிக் கிடந்த சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

உத்தியோகத்தில், உங்கள் கருத்துக்கு அனைத்துத் தரப்பிலும் ஆதரவு பெருகும். கலைத்துறையினரின் உழைப் புக்கு அங்கீகாரம் கிடைக்கும்; பணமும் புகழும் வந்துசேரும்.

நட்பால் சாதிக்கும் காலம் இது

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு