Published:Updated:

ராசிபலன்

ராசிபலன்
பிரீமியம் ஸ்டோரி
News
ராசிபலன்

நவம்பர் 3 முதல் 16 வரை

ராசிபலன்

ங்கள் ராசிக்குப் புதன் 4- ம் தேதி முதல் வலுவாக இருப்பதால் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். பணவரவு உண்டு. மகனுக்கு எதிர்பார்த்ததைப்போல் வேலை அமையும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.

பூர்வ புண்ணியாதிபதி சூரியன் 7 - ல் இருப்பதால் பிள்ளைகளின் ஆசைகளைக் கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள்.

மகளுக்குத் திருமணம் கூடி வரும். ஆனால் சுக்கிரன் 6 - ல் மறைந்திருப்பதால் வாகனம் அடிக்கடி பழுதாகும். சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும். குடிநீர், கழிவு நீர் குழாய் அடைப்பு வந்து போகும். 14-ம் தேதி வரை குரு 9 -ம் வீட்டில் நிற்பதால் வர வேண்டிய பணம் வந்து சேரும்.

வியாபாரத்தில் வழக்கமான லாபம் உண்டு. பெரிய முதலீடுகளைத் தவிர்க்கவும். உத்தி யோகத்தில் சின்னச் சின்ன பிரச்னைகள் எழ வாய்ப்பு உண்டு. உயரதிகாரிகளைப் பகைத்துக் கொள்ளாதீர்கள். கலைத்துறையினர், தங்களின் படைப்பு களைப் போராடி வெளியிட வேண்டி வரும்.

எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய காலம் இது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
ராசிபலன்

ரிஷபம்

சுக்கிரனும் புதனும் பரிவர்த் தனா யோகம் பெற்றிருப்பதால் ஓரளவு நிம்மதி உண்டு. சில வேலைகளை முதல் முயற்சியில் முடிக்க முடியாமல் இரண்டு, மூன்று முறை முயன்று முடிக்க வேண்டி வரும். எவ்வளவு பணம் வந்தாலும் செலவினங்கள் இருந்து கொண்டேயிருக்கும்.

சூரியன் 6 - ல் நிற்பதால் வழக்கில் வெற்றி, அரசால் அனு கூலம் உண்டு. ஆனால் உங்கள் சுகாதிபதியாகவும் சூரியன் வருவதால் வீண் அலைச்சல், செலவுகள் இருக்கும். வீட்டில் குடிநீர் பிரச்சனை, கழிவுநீர் பிரச்னைகள் வரக்கூடும்.

பால்ய நண்பர்களிடம் உதவி கேட்டும் கிடைக்காமல் போகும். 14-ம் தேதி வரை குரு 8 - ல் நிற்பதால் யாரையும் விமர்சித்துப் பேசாதீர்கள்.

வியாபாரத்தில் லாபம் இரட்டிப் பாகும். பழைய பாக்கிகள் வசூலா கும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கலைத் துறையினர் இழந்த புகழை மீண்டும் பெற யதார்த்த படைப்புகளைத் தர வேண்டும்.

வியாபாரத்தில் லாபம் பெருகும் காலம் இது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ராசிபலன்

மிதுனம்

சுக்கிரனும் புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால் வீடு கட்ட லோன் கிடைக்கும். வெள்ளிப் பொருட்கள் வாங்குவீர்கள். தாய் வழியில் ஆதரவு பெருகும். சுபச்செலவுகள் அதிகமாகும்.

14-ம் தேதி வரை 7 - ல் குரு அமர்ந்திருப்பதால் கணவன் - மனைவிக்குள் வீண் சந்தேகம் நீங்கி அந்நியோன்யம் அதிகரிக் கும். புதிய சொத்து வாங்குவீர்கள். பிரபலங்களின் துணையுடன் சில காரியங்களை நல்லபடியாகச் செய்து முடிப்பீர்கள்.

சூரியனின் நிலை சரியில்லாத தால் தூக்கமின்மை, இளைய சகோதரர் வகையில் வீண் பிரச்னைகள் வரக்கூடும்.

வியாபாரத்தில் புதிய திட்டங் களால் லாபத்தைப் பெருக்க முற்படுவீர்கள். வாடிக்கையாளர் கள் அதிருப்தி அடைவர்.

உத்தி யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிட்டும். சக ஊழியர் களிடம் அதிக நெருக்கம் வேண்டாம். எதிர் பார்த்த இடமாற்றம் கிடைக்கும். கலைத் துறையினருக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும்.

பழைய சிக்கல்களுக்குத் தீர்வு கிடைக்கும் நேரம் இது.

ராசிபலன்

கடகம்

சுக்கிரன் 3-ல் நிற்பதால் சிலர் புதிதாக வாகனம் வாங்குவீர்கள். சிலர் வண்டியை மாற்றுவீர்கள். புது வேலை அமையும். கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும்.

புதன் 4 - ம் வீட்டில் இருப்பதால் பால்ய நண்பர்களின் சந்திப்பால் உற்சாகமடைவீர்கள். விலகிச் சென்ற சொந்த-பந்தங்கள் வலிய வந்து பேசுவார்கள். இளைய சகோதரர் ஆதரவாக இருப்பர். நட்பு வட்டம் விரியும்.

சூரியன் பலமாக இருப்பதால் புத்துணர்ச்சி ததும்பும். அரசாங் கக் காரியங்களில் வெற்றியுண்டு. நாடாளுபவர்கள்,கல்வியாளர்களைச் சந்திப்பீர்கள். 14 ம் தேதி வரை குரு 6-ல் நிற்பதால் குடும்பத்தில் பிரச்னைகள் வந்து நீங்கும்.

வியாபாரத்தில் அயல்நாட்டு நிறுவனங்களுடன் புது ஒப்பந்தங் கள் செய்வீர்கள். வாடிக்கை யாளர்களின் ரசனையைப் புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் சம்பள உயர்வு, பதவி உயர்வு உண்டு. சக ஊழியர்களுக்காகப் பரிந்து பேசுவீர்கள். கலைத் துறையினர் உங்களின் கற்பனைத் திறன் வளரும்.

கடனில் ஒரு பகுதி அடைபடும் வேளை இது.

ராசிபலன்

சிம்மம்

ராசிநாதன் சூரியன் பலமாக இருப்பதால் அரைகுறையாக நின்று போன வேலைகளை முடித்துக் காட்டுவீர்கள். அரசாங்க அதிகாரிகளின் நட்பு கிடைக்கும்.

2-ம் வீட்டில் சுக்கிரனும், 3 - ம் வீட்டில் புதனும் நிற்பதால் சாதுர் யமாக பேசி காரியம் சாதிப்பீர்கள். விலையுயர்ந்த பொருள் கள் வாங்குவீர்கள்.

அக்கம்பக்கம் வீட்டாருடன் மோதல்கள் விலகும். சொந்த பந்தங்கள் மதிக்கும்படி நடந்து கொள்வீர்கள். உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வீடு வாங்குவது, கட்டுவதற்கு வங்கிக் கடன் கிட்டும். 14 - ம் தேதிவரை குரு 5- ல் நிற்பதால் வராது என்றிருந்த பணம் கைக்கு வந்து சேரும். குழந்தை பாக்கியம் உண்டாகும்.

வியாபாரத்தில் பழைய சரக்கு களைப் போராடி விற்பீர்கள். கமிஷன், புரோக்கரேஜ், கல்வி நிறுவனங்களால் ஆதாயம் அடைவீர்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். கலைத்துறையினரின் படைப்புகள் அனைவராலும் பாராட்டப்படும்.

இனிய பேச்சால் காரியம் சாதிக்கும் வேளை இது.

ராசிபலன்

கன்னி

ராசிநாதன் புதன் 2-ம் வீட்டில் பரிவர்த்தனா யோகம் பெற்றி ருப்பதால் திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். பூர்வீகச் சொத்தை சீர் செய்வீர்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். 2 - ல் சூரியனும் நிற்பதால் கண் எரிச்சல், தூக்கமின்மை வரக்கூடும்.

14-ம் தேதி வரை குரு 4-ம் வீட்டிற்குள் நிற்பதால் தாயாரின் உடல்நிலை பாதிக்கும். தாய்வழி உறவினர்களிடையே கருத்து வேறுபாடுகள் நிலவும். வாகனத்தை கவனமாக இயக்கப் பாருங்கள்.

சுக்கிரன் ராசிக்குள் நிற்பதால் உங்களின் அழகு, இளமை கூடும். குடும்பத்திற்குத் தேவை யான பொருள்களை வாங்கு வீர்கள்.

வியாபாரம் தழைக்கும். வாடிக்கையாளர்களின் கருத்தைக் கேட்டுக் கடையை இடமாற்றம் செய்வீர்கள். உத்தியோகத்தில் மதிப்பு, மரியாதை கூடும். சிலர் உங்களைப் பற்றித் தவறான வதந்திகளைப் பரப்புவார்கள்; பொருட்படுத்த வேண்டாம். கலைத்துறையினரின் வருமானம் உயர வழி பிறக்கும்.

அனுபவ அறிவால் சாதிக்கும் காலம் இது.

ராசிபலன்

துலாம்

புதன் ராசிக்குள்ளேயே அமர்வதால் பாதிப்புகள் குறையும். ஓரளவு நிம்மதி கிட்டும். ராசி நாதன் சுக்கிரன் 12 - ம் வீட்டில் நீச்சம் பெற்றிருப்பதால் மறைமுக எதிர்ப்புகள் வந்து போகும்.

புதன் வீட்டில் சுக்கிரன், சுக்கிரன் வீட்டில் புதனும் பரிவர்த் தனா யோகம் அடைந்திருப்பதால் பிரச்னைகள் இருந்தாலும் வெற்றி பெறுவீர்கள்.

ராசிக்குள் நிற்கும் சூரியனால் உடல்நலம் பாதிக்கும். கண், காது, மூக்கு, தொண்டை வலி இருக்கும். அவ்வப்போது வரும் முன்கோபத்தைக் குறைக்கப் பாருங்கள். 14-ம் தேதிவரை குரு 3-ல் நிற்பதால் சிறுசிறு தடைகள், மன உளைச்சல் வரும்.

வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். திடீரென்று அறிமுகமானவர்களை நம்பிப் பெரிய முதலீடுகள் செய்ய வேண்டாம். உத்தியோகத்தில் செல்வாக்கு கூடும். அலுவலக நிமித்தமாகச் சிலர் வெளி மாநிலம், அயல்நாடு சென்று வருவீர்கள். கலைத் துறையினருக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

உத்தியோகத்தில் செல்வாக்கு கூடும் வேளை இது.

ராசிபலன்

விருச்சிகம்

சுக்கிரன் லாப வீட்டில் நிற்பதால் திடீர் பணவரவு உண்டு. ஷேர் மூலம் லாபம் வரும். வீடு, மனை வாங்குவது, கட்டுவது போன்ற முயற்சிகள் வெற்றி அடையும். 12-ம் வீட்டில் சூரியன், புதனும் மறைந்து கிடப்பதால் எவ்வளவு பணம் வந்தாலும் செலவுகலும் இருக்கும். பணவரவு ஓரளவு திருப்தி தரும்.

14-ம் தேதிவரை குரு 2 - ல் நிற்பதால் குடும்பத்தில் ஒரு வித நிம்மதி கிடைக்கும். வீடு, மனை வாங்கும் யோகம் அமையும். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். பூர்விகச் சொத்துப் பிரச்னை விலகும்.

வியாபாரத்தில் திடீர் யோகம் உண்டாகும். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். வாகனம், கட்டட வகைகளால் ஆதாயம் அடைவீர்கள்.

உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டு. அதிகாரிகளுடன் பனிப் போர் வந்து நீங்கும். சக ஊழியர் களிடம் வளைந்து கொடுத்துப் போகவும். கலைத்துறையினர் புதுமையாக சில படைப்புகளை வெளியிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள்.

பொறுமையால் காரியங்களைச் சாதிக்கும் தருணம் இது.

ராசிபலன்

தனுசு

சூரியனும் புதனும் லாப வீட்டில் வலுவாக அமர்ந்திருப் பதால் மன தைரியம் அதிகரிக்கும். ஓரளவு பணம் வரும். ஆனாலும் வீண் செலவுகளைக் கட்டுப் படுத்துங்கள். குடும்பத்தினருடன் கலந்து ஆலோசித்து முக்கிய முடிவுகளை எடுங்கள்.

10-ம் வீட்டில் சுக்கிரன் இருப்ப தால் புது வேலை அமையும். வாகன வசதி பெருகும். பழுதான டி.வி, ஃப்ரிட்ஜை மாற்றுவீர்கள். மூத்த சகோதர வகையில் நன்மை உண்டு. 14 - ம் தேதி வரை குரு ராசிக்குள் இருப்பதால் வீண் அலைச்சல், மன உளைச்சல் வரக்கூடும். முக்கிய முடிவுகளில் அவசரம் வேண்டாம். எதிலும் பதறாமல் செயல்பட்டால் வெற்றி பெறலாம்.

வியாபாரத்தில் பற்று வரவு உயரும். வி.ஐ.பிகளும் வாடிக்கை யாளர்களாவார்கள். உத்தியோகத் தில் கூடுதலாக உழைக்க வேண்டி வரும். அதிகாரிகள் உங்களை நம்பி முக்கியப் பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். பாராட்டுகள் கிடைக்கும். கலைத் துறையினர் எதிர்பார்த்த புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

சேமிப்பை அதிகரிக்கவேண்டிய வேளை இது.

ராசிபலன்

மகரம்

சூரியன் 10-ல் பலம் பெற்றிருப்பதால் எதிர்பார்த்த வகையில் உதவியுண்டு. அரசாங்கக் காரியங்களில் வெற்றி கிட்டும். அரைகுறையாக நின்றுபோன பல வேலைகள் முழுமையடையும்.

சுக்கிரனும், புதனும் பரிவர்த்தனா யோகம் பெற்றிருப்பதால் நீண்ட நாள் கனவு நனவாகும். வீடு கட்ட லோன் கிடைக்கும். கட்டட வரைபடம் அப்ரூவலாகும். சொந்த ஊரிலே செல்வாக்கு கூடும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி களை முன்னின்று நடத்துவீர்கள்.

14-ம் தேதி வரை 12-ம் வீட்டிற்குள் குரு இருப்பதால் சுபச் செலவுகள் அதிகரிக்கும். கல்யாணம் கூடிவரும். இளம் வயதினர், பெற்றோரைக் கலந்து ஆலோசிக்காமல் எந்த முடிவும் எடுக்காதீர்கள்.

வியாபாரத்தில் லாபம் குறைவாக வருவதற்கான காரணத் தைக் கண்டறிந்து நீக்குவீர்கள். உத்தியோகத்தில் புது பொறுப்பு களை ஏற்பீர்கள். கேட்ட சலுகை கள் கிடைக்கும். கலைத் துறை யினர் உற்சாகத்துடன் காணப் படுவீர்கள்; புகழ் கூடும்.

ரகசியம் காக்கவேண்டிய காலம் இது.

ராசிபலன்

கும்பம்

ராசிக்கு 9-ல் சூரியன் நிற்பதால் தந்தையாருக்கு உடல் நலம் பாதிக்கும். அவர்வழி உறவினர்களிடையே மனக் கசப்புகள் வந்து நீங்கும். வெகு நாள்களாகப் போக நினைத்த வெளிமாநில புண்ணிய தலங் களுக்குச் சென்று வருவீர்கள்.

சுக்கிரனும், புதனும் சாதகமாகப் பரிவர்த்தனை பெற்றிருப்பதால் பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். பழைய கடனை நினைத்து சில நேரம் பயம் உண்டாகும்.

14 - ம் தேதி வரை குரு சாதக மாக இருப்பதால் எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். மூத்த சகோதரர்கள் ஒத்துழைப்பு தருவர். ஆன்மிகப் பெரியோர் களின் சந்திப்பு நிகழும்.

வியாபாரத்தில் போட்டியாளர்களைச் சமாளிக்கும் யுக்தியைக் கண்டறிவீர்கள். வேலையாள்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். சக ஊழியர்கள் உங்களின் திறமையைக் கண்டு வியப்பார்கள். கலைத்துறையினர் பொது நிகழ்ச்சிகளில் தலைமை தாங்குவீர்கள்.

பழைய வழக்கு பிரச்னைகள் தீரும் காலம் இது.

ராசிபலன்

மீனம்

சூரியன் 8-ல் நிற்பதால் பழைய கடனை பைசல் செய்ய வழி பிறக்கும். புதன் 8-ம் வீட்டில் இருப்பதால் நண்பர்கள் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள்.

உங்கள் ராசியை சுக்கிரன் பார்த்துக் கொண்டிருப்பதால் படபடப்பு, வீண் சந்தேகங்கள் விலகும். உங்களின் போக்கில் கொஞ்சம் மாற்றம் செய்வீர்கள். உற்சாகமாகப் பல வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். விலை உயர்ந்த ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள்.

14-ம் தேதி வரை குரு 10 - ம் வீட்டிற்குள் இருப்பதால் உத்தி யோகத்தில் பழைய பிரச்னைகள் மீண்டும் எழும். வேலைச்சுமை அதிகரிக்கும். என்றாலும் அனைத்தையும் வெல்வீர்கள்.

வியாபாரத்தில் லாபம் உயரும். வேலையாள்களிடம் பணிவாகப் பேசி வேலை வாங்குவது நல்லது. எதிர்பார்த்த வளர்ச்சி உண்டு. உத்தியோகத்தில் சிக்கல்கள் இருக்கும். அதிகாரி ஒருவர் உங் களை ஆதரித்தாலும் மற்றொரு வர் எதிராகச் செயல்படு வார். கலைத்துறையினரின் எண்ணங் கள் பூர்த்தியாகும்.

அனைத்திலும் சாதிக்கும் வேளை இது.