Published:Updated:

ராசிபலன்

ராசிபலன்
பிரீமியம் ஸ்டோரி
ராசிபலன்

அக்டோபர் 20 முதல் நவம்பர் 02 வரை

ராசிபலன்

அக்டோபர் 20 முதல் நவம்பர் 02 வரை

Published:Updated:
ராசிபலன்
பிரீமியம் ஸ்டோரி
ராசிபலன்

மேஷம்

பூர்வ புண்ணியாதிபதி சூரியன் 7-ல் அமர்ந்ததால் பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். பூர்விகச் சொத்தை மாற்றியமைப்பீர்கள். நிலுவையிலிருந்த வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். ஆனால் புதன் 6-ல் மறைந்திருப்பதால் குடும்பத்தில் சலசலப்புகள் வந்து போகும்.

ராசிபலன்

உறவினர்கள், நண்பர்களின் அன்புத் தொல்லை அதிகரிக்கும். 22ம் தேதி வரை சுக்ரன் 5-ம் வீட்டில் நிற்பதால் கணவன் -மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். சுக்ரன் 23-ம் தேதி முதல் 6-ம் வீட்டில் நுழைவதால் வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் வந்து போகும். கல்யாணப் பேச்சு வார்த்தை தள்ளிப் போகும். குரு பகவான் வலுவாக இருப்பதால் கல்யாண விசேஷங்களில் முதல் மரியாதை கிடைக்கும்.

பூர்விகச் சொத்தை மாற்றிப் புது வீடு வாங்குவீர்கள். வியாபாரத்தில் வழக்கமான லாபம் உண்டு. உத்தியோகத்தில் சக ஊழியர்களால் ஒதுக்கப்பட்டாலும் அதிகாரிகளால் மதிக்கப்படுவீர்கள். கலைத் துறை யினருக்குப் பட்டிதொட்டியெங்கும் பாராட்டு கிடைக்கும்.

நற்காரியங்களில் நீங்கள் தொட்டது துலங்கும் வேளை இது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ரிஷபம்

ராசிநாதன் சுக்கிரன் சாதமான வீடுகளில் செல்வதால் எதிர்பார்ப்பு கள் தடையின்றி முடியும். வீடு, வாகனத்தைச் சீர் செய்வீர்கள். புதன் சாதகமாக இருப்பதால் விலை உயர்ந்த மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்கு வீர்கள். நட்பு வட்டம் விரியும். சொந்த-பந்தங்கள் தேடி வரும்.

சூரியன் 6-ல் நிற்பதால் பண வரவு திருப்தி தரும். கடனை அடைக்கப் புது முயற்சியில் இறங்குவீர்கள். என்றாலும் நீசமாகியிருப்பதால் முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும் முன் கவனம் தேவை. தாயாரின் உடல் நலம் பாதிக்கும்.

ராசிபலன்

8-ல் குரு தொடர்வதால் நம்பிக்கையின்மை, இனந் தெரியாத கவலைகள், விரக்தி வந்து செல்லும். இரவு நேரத்துப் பயணங்களைத் தவிர்த்து விடுங்கள். வியாபாரத்தில் ஆழம் தெரியாமல் காலை விடாதீர்கள். உத்தியோகத்தில், அதிகாரி களின் கோபம் கண்டு மனம் தளர வேண்டாம். அவரே உங்களுக்கு உறுதுணையாக இருப்பார். கலைத் துறையி னரே, சம்பள விஷயத்தில் கறாராக இருங்கள்.

அலைச்சல் இருந்தாலும் அதனுடன் ஆதாயமும் பெறும் நேரம் இது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மிதுனம்

சுக்கிரனும் புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால் எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். பூர்விகச் சொத்தை சீர் செய்வீர் கள். தாய்வழியில் அனுகூலம் உண்டு. உறவினர்கள், நண்பர் கள் தேடி வந்து பேசுவார்கள். வெளியூர் பயணங்களால் உற்சாகம் அடைவீர்கள். பண வரவு உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும்.

குருபகவான் வலுவாக இருப்பதால் நினைத்த காரியம் நிறைவேறும். பணவரவு திருப்தி தரும். புது வீடு கட்டிக் குடிபுகுவீர்கள். வீட்டில் தள்ளிப் போன சுபகாரியங்கள் கூடி வரும். பிள்ளைகளால் மதிப்பு கூடும். சூரியன் 5-ம் வீட்டில் நுழைந்திருப்பதால் முன்கோபம், வாக்குவாதங்கள் வரக்கூடும்.

ராசிபலன்

கர்ப்பிணிப் பெண்கள் வெளியில் செல்வதைத் தவிர்த்து விடுங்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்களின் கோரிக்கையை மேலதிகாரி ஏற்பர். கலைத் துறையினர் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவார்கள்.

ஆரோக்கியத்தில் கவனம் தேவைப்படும் நேரம் இது.

கடகம்

புதனும் சுக்கிரனும் சாதகமான வீடுகளில் செல்வதால் துணிச்ச லாக சில முடிவுகள் எடுப்பீர்கள். உறவினர்கள், நண்பர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் பொங்கும். விசேஷங்களில் முதல் மரியாதை கிடைக்கும். பூர்விகச் சொத்தை மாற்றி, புது வீடு வாங்குவீர்கள்.

ராசிபலன்

சூரியன் 4-ல் அமர்ந்ததால் தடைகள் உடைபடும். மேல்மட்ட அரசியல்வாதிகள் உதவுவார்கள். பழைய வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வீட்டை விரிவு படுத்திக் கட்டுவீர்கள். சிலர் அதிகாரப் பதவியில் அமர்வீர்கள். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்பு உண்டு.

குரு 6-ல் மறைவதால் நெடுங் கால நண்பர்கள்கூட உங்களைக் குறை கூறுவார்கள். வழக்கில் வழக்கறிஞரை மாற்றுவீர்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் அதிகாரியின் ஆதரவால் செல்வாக்கு கூடும். கலைத்துறையினர் வேற்றுமொழி வாய்ப்புகளால் புகழடைவார்கள்.

எதிர்பாராத வெற்றிகள் சூழும் அற்புத வேளை இது.

சிம்மம்

புதனும் சுக்கிரனும் சாதகமான வீடுகளில் செல்வதால் வீட்டில் கூடுதலாக ஒரு தளம் அமைப்பீர்கள். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. கண்டும் காணாமல் இருந்தவர்கள் வலிய வந்து பேசுவார்கள். நண்பர்கள் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள். விலை உயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள்.

ராசிபலன்

சூரியன் 3-ல் நிற்பதால் எதிர்பார்ப்புகள் தடையின்றி முடியும். பதவிகள் தேடி வரும். நாடாளு பவர்களின் நட்பு கிடைக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். அரைகுறையாக நின்ற வீடு கட்டும் பணியைத் தொடர்வீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக் கும். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள்.

குரு வலுவாக இருப்பதால் சவாலான விஷயங்களையும் சாதாரணமாக முடிப்பீர்கள். கடன் பிரச்னைகள் கட்டுக்குள் வரும். வியாபாரத்தில் தேங்கிக் கிடந்த சரக்குகள் விற்றுத் தீரும். உத்தியோகத்தில் அதிகாரி களுடன் அளவாகப் பழகுங்கள். கலைத்துறையினரைப் பழைய நிறுவனம் அழைத்துப் பேசும்.

புதிய பாதையில் நீங்கள் சாதிக்கும் தருணம் இது.

கன்னி

ராசிநாதன் புதனும், 23-ம் தேதி முதல் உங்கள் ராசிக்குள்ளேயே நிற்கப் போகும் சுக்கிரனும் சாதகமாக இருப்பதால், தோற்றப்பொலிவு கூடும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தைத் தந்து முடிப்பீர்கள். மனக்கசப்பால் ஒதுங்கி இருந்த உறவினர்கள் இனி பேசுவார்கள்.

அக்கம் - பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்து வீர்கள். சூரியன் ராசியை விட்டு விலகி 2-ல் அமர்ந்ததால், முன்பை விட இப்போது ஓரளவு டென்ஷன் குறையும்.

ராசிபலன்

ஆனால் பேச்சால் பிரச்னை வரும். விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. 4-ல் குரு நிற்பதால் வீண் பழி, கடன் தொந்தரவு, வாகன விபத்து, தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வந்து போகும்.

மற்றவர்களுக்கு உங்கள் நடவடிக்கையில் சற்று வித்தியாசம் தெரியும். புது முதலீடு செய்து வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமை இருந் தாலும் மேலதிகாரியின் அறிமுகம் கிடைக்கும். கலைத்துறையினர், மூத்த கலைஞர்களின் நட்பைப் பெறுவார்கள்.

புகழும் கௌரவமும் அதிகரிக்கும் காலம் இது.

துலாம்

புதனும் சுக்கிரனும் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் மூளை பலத்தால் முன்னேறுவீர்கள். சோர்வு நீங்கித் துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். பிரபலங்கள் நண்பர்களாவார்கள். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். உறவினர்களில் உண்மை யானவர்களைக் கண்டறிவீர்கள்.

ராசிபலன்

வீட்டைக் கட்டி முடிக்க வங்கிக் கடன் கிடைக்கும். ராசிக்குள் சூரியன் நுழைந்திருப்பதால் முன்கோபம், மன உளைச்சல், தலைவலி வந்து போகும். ஆனால் வீடு, வாகன வசதி பெருகும். கூடவே அநாவசியச் செலவுகளும் ஒட்டிக்கொள்ளும்.

3-ம் வீட்டில் குரு அமர்ந்திருந் தாலும் அவர் ஆட்சி பெற்று அமர்வதால் சமயோசிதமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பிரச்னைகளின் ஆணிவேரைக் கண்டறிந்து களைவீர்கள்.

வியாபாரம் சூடு பிடிக்கும்; லாபம் அதிகரிக்கும். உத்தி யோகத்தில் சம்பளம் உயரும். கலைத்துறையினருக்குப் பழைய நிறுவனங்களிலிருந்து புதிய வாய்ப்புகள் வரும்.

உங்களின் நிர்வாகத்திறன் அதிகரிக்கும் காலம் இது.

விருச்சிகம்

ங்கள் ராசிக்குச் சாதகமான நட்சத்திரங்களில் சுக்கிரனும், புதனும் செல்வதால் தைரியமாகச் சில பெரிய முடிவுகள் எடுக்கலாம். சிலர் கொஞ்சம் கடன்பட்டு வீடு, மனை வாங்குவீர்கள். மாதாமாதம் லோன் பெரிய தொகை கட்ட வேண்டி வருகிறதே என கலங்க வேண்டாம். அதற்கான வழிவகைகள் பிறக்கும். வீடு கட்டுவதற்கும் ப்ளான் அப்ரூவலாகும்.

ராசிபலன்

கல்யாணப் பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். சகோதரர் களின் மனசு மாறும். சூரியன் 12-ல் அமர்ந்ததால் திடீர் பயணங் கள், தந்தைக்கு மருத்துவச் செலவுகள் வந்து போகும்.

குருபகவான் ராசிக்கு 2-ல் அமர்வதால் பணவரவு திருப்தி தரும். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். மூத்த சகோதரர் பிரச்சனைக்கு உதவுவார்.

வியாபாரத்தில் போட்டிகளைத் தாண்டி லாபம் சம்பாதிப்பீர்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளைத் தாண்டி முன்னேறுவீர்கள். கலைத் துறையினர் கிடைக்கின்ற வாய்ப்பைத் தக்கவைத்துக் கொள்வது நல்லது.

விட்டுக்கொடுப்பதால் நன்மை பெறும் காலம் இது.

தனுசு

சுக்கிரனும் புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால், உங்கள் ரசனை மாறும். இதமான பேச்சால் காரியம் சாதிப்பீர்கள். ஓரளவு பணவரவு உண்டு. வர வேண்டிய குடும்பச் சொத்து வந்து சேரும். வாகன வசதி பெருகும். குடும்பத் தில் மகிழ்வான சூழல் உருவாகும்.

உறவினர்களுக்கு மத்தியில் ஒருபடி உயர்ந்து நிற்க வேண்டு மென எண்ணுவீர்கள்.

ராசிபலன்

உங்களின் பாக்கியாதிபதி சூரியன் லாப வீட்டில் வலுவாக அமர்ந்ததால் எதிர்த்தவர்கள் நண்பர்களா வார்கள். பணவரவு அதிகரிக்கும். அரசாங்கத்தாலும், அதிகாரப் பதவியில் இருப்பவர் களாலும் ஆதாயம் உண்டு.

குருபகவான் ராசிக்குள் நிற்பதால் சிறுசிறு அவமானங்கள் ஏற்படக்கூடும். எனினும் கலங்க வேண்டாம்.வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களைத் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகள் உங்களின் ஆலோசனைக்கு முக்கியத்துவம் அளிப்பார்கள். கலைத்துறையினர் புதுமையாக சில படைப்புகளை வெளியிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பார்கள்.

உங்களுக்கு வசதி - வாய்ப்புகள் பெருகும் நேரம் இது.

மகரம்

புதனும் சுக்கிரனும் சாதகமாக இருப்பதால், புது வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு நல்ல பதில் வரும். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். நீண்ட நாள்களாகப் பார்க்க நினைத்த ஒருவரைச் சந்தித்து மகிழ்வீர்கள். புது டிசைனில் நகை வாங்குவீர்கள்.

சூரியன் 10-ல் அமர்ந்ததால் புதுப் பதவிகளும், பொறுப்புகளும் தேடி வரும். அயல்நாட்டு வேலை களுக்குச் செல்ல எடுத்த முயற்சிகள் இப்போது வெற்றி அடையும். தந்தையின் உடல் நலம் சீராகும்.

ராசிபலன்

12-ல் குரு மறைவதால் அடுக்கடுக்கான வேலைகளால் மனஇறுக்கம் அதிகரிக்கும். தடைப்பட்டுக்கொண்டிருந்த குலதெய்வப் பிராத்தனைகளை நிறைவேற்றுவீர்கள். பணவரவு உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சி நீடிக்கும்.

வியாபாரத்தில் லாபத்தைப் பெருக்க நவீன விளம்பர யுக்தி களைக் கையாளுவீர்கள்.பணியில் வீண் வதந்திகள் எழலாம். கலைத்துறையினரின் கற்பனைத்திறன் வளரும்.

உங்களின் நட்பு வட்டம் அதிகரிக்கும் காலம் இது.

கும்பம்

சுக்கிரனும் புதனும் சாகதமாக இருப்பதால் உங்களின் புகழ், கௌரவம் உயரும். திடீர் பணவரவு உண்டு. குடும்பத்தில் நல்லது நடக்கும். சேமிக்கத் தொடங்குவீர்கள். உறவினர்கள் உங்களைப் புரிந்துகொள்வார்கள். அடகில் இருந்த பொருள்களை மீட்பீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு.

சூரியன் 9-ம் வீட்டில் அமர்ந் திருப்பதால் தந்தைக்கு உடல் நலக் குறைவு வந்து நீங்கும். குருபகவான் லாப வீட்டில் வலுவாக அமர்ந் திருப்பதால் தொட்ட காரியம் துலங்கும். பணவரவு அதிகரிக்கும்.

ராசிபலன்

கல்வியாளர்கள், அறிஞர்களின் நட்பால் தெளிவடைவீர்கள். குடும்பத்தில் தடைகள் நீங்கி திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும்; சந்தோஷம் சூழும்.

வியாபாரத்தில் வாடிக்கை யாளர்களின் ரசனையைப் புரிந்து கொண்டு அதற்கேற்பச் சில மாற்றங்களைச் செய்யுங்கள்; லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இழந்த சலுகைகளை மீண்டும் பெறுவீர்கள். கலைத்துறை யினருக்குப் பெரிய வாய்ப்புகள் தேடி வரும்.

சொன்ன சொல்லைக் காப்பாற்றும் வேளை இது.

மீனம்

சுக்கிரன் 22 ம் தேதி வரை 6-ம் வீட்டில் மறைந்திருப்பதால் வீண் அலைச்சலும் செலவுகளும் வந்து போகும். சுக்கிரன் 23-ம் தேதி முதல் 7-ல் நுழைந்து உங்கள் ராசியை நேருக்கு நேராகப் பார்க்க இருப்பதால் நிம்மதி கிடைக்கும். தன்னம்பிக்கை ஊற்றெடுக்கும்.

கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த மனஸ்தாபம், ஈகோ பிரச்னைகள் நீங்கும். பிரிந்திருந்தவர்கள் ஒன்று சேர்வீர்கள். புதன் சாதகமாக இருப்பதால், இங்கிதமான பேச்சால் எல்லோரையும் கவர்வீர்கள். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள்.

ராசிபலன்

குரு 10-ல் நிற்பதால் உத்தியோகத் தில் மறைமுகத் தொந்தரவு, வீண் பழி வந்து செல்லும். சூரியன் உங்கள் ராசிக்கு 8-ல் மறைந்ததால் கணவன் - மனைவிக்குள் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. ஷேர் லாபம் தரும்.

அரசுக் காரியங்கள் விரைந்து முடியும். பழைய கடனைத் தீர்க்கப் புது வழி பிறக்கும். வியாபாரத்தில் சந்தை நிலவரத்தை அறிந்து முதலீடு செய்யுங்கள்; லாபம் தங்கும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்; அந்தஸ்து உயரும். கலைத்துறையினருக்குச் சம்பள பாக்கி கைக்கு வந்துசேரும்.

பிரச்னைகளைச் சந்தித்து வெற்றி பெறும் வேளை இது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism