Published:Updated:

ராசிபலன்

ராசிபலன்
பிரீமியம் ஸ்டோரி
News
ராசிபலன்

அக்டோபர் 6 முதல் 19-ம் தேதி வரை

மேஷம்

குரு வலுவாக இருப்பதால் சுப நிகழ்ச்சிகள், பொது விழாக் களில் முதல் மரியாதை கிடைக் கும். வாழ்க்கைத் துணைவர் குடும்ப வருமானத்தை உயர்த்த சில ஆலோசனைகள் வழங்கு வார். வாழ்க்கைத் துணைவர் வழி உறவினர்கள் பாராட்டும்படி நடந்துகொள்வீர்கள்.

16-ம் தேதிவரை சூரியன் வலுவாக அமர்ந்திருப்பதால் பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் சாதக மாகும். அரசாங்க விஷயங்கள் விரைந்து முடியும்.

ராசிபலன்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

சுக்கிரனும், புதனும் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். நண்பர்கள் உங்களைப் புரிந்து கொள்வார்கள்.

புதிதாக டி.வி., ஃப்ரிட்ஜ் போன்ற சாதனங்கள் வாங்கு வீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இங்கிதமாகப் பேசி சக ஊழியர் களின் குறை, நிறைகளைச் சரி செய்வீர்கள். கலைத் துறையி னரின் கற்பனைத் திறன் வளரும்.

விட்டுக்கொடுப்பதால் வெற்றி பெறும் வேளை இது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

ரிஷபம்

பூர்வ புண்ணியாதிபதி புதனும் ராசிநாதன் சுக்கிரனும் சாதகமாக இருப்பதால், உங்கள் ரசனை மாறும். வி.ஐ.பிகளிடம் எதிர் பார்த்த உதவிகள் கிடைக்கும். வாகனத்தைச் சரி செய்வீர்கள். சிலர் வீடு மாற வேண்டுமென நினைப்பீர்கள்.

குரு 8-ல் நீடிப்பதால் மறைமுக விமர்சனங்களும், தாழ்வு மனப்பான்மையும் வந்து போகும். சுகாதிபதி சூரியன் சாதகமாக இல்லாததால், பிள்ளைகளால் மன உளைச்சல் ஏற்படலாம்.

ராசிபலன்

அவர்களுடன் வீண் வாக்குவாதங்களில் ஈடுபடுவ தைத் தவிருங்கள். உறவினர் களில் சிலர், நேரில் ஒரு பேச்சு; மற்றவர்களிடம் ஒரு பேச்சு என்று இருப்பார்கள்.

வியாபாரத்தில் ஓரளவு முன்னேற்றம் உண்டு. கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடித்தாலும் உயர் அதிகாரியால் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். கலைத் துறையினருக்குப் பழைய நிறுவனங்களிலிருந்து புதிய வாய்ப்புகள் தேடி வரும்.

செயல்களில் வேகம் காட்ட வேண்டிய நேரம் இது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மிதுனம்

குரு வலுவாக இருப்பதால் எதிலும் வெற்றி, லாபம் கிட்டும். சாணக்கியத்தனமாகப் பேசி சில காரியங்களைச் சாதிப்பீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். சுக்கிரனும் புதனும் சாதகமாக இருப்பதால் பணப் புழக்கம் அதிகரிக்கும்.

குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். சூரியன் 4 - ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் எதிர்ப்புகள் அடங்கும். மேல்மட்ட அரசியல்வாதிகள் உதவுவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். பாதியில் நின்ற வீடு கட்டும் பணியைத் தொடங்குவீர்கள்.

ராசிபலன்

தாயாரின் உடல் நிலை சீராகும். தாய்மாமன், அத்தை வகையில் மதிப்பு, மரியாதைக் கூடும். தாய்வழிச் சொத்துகள் கைக்கு வந்துசேரும்.

வியாபாரத்தில், கடையை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் குறைபட்டுக் கொள்வார்கள். கலைத்துறையினரின் வளர்ச்சிக்கு மூத்த கலைஞர்கள் உதவுவார்கள்.

புதிய திட்டங்கள் நிறைவேறும் காலம் இது.

கடகம்

சுக்கிரனும், புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால், பழைய நகையை மாற்றிப் புது நகைகள் வாங்குவீர்கள். பூர்விகச் சொத்தில் சீர்திருத்தம் செய்வீர்கள். உறவினர்களால் ஆதாயம் கிடைப்பதுடன் கௌரவமும் ஒரு படி உயரும். புதிய நட்பு வாய்க்கும்.

குருபகவான் 6-ல் மறைந்து நீடிப்பதால் சந்தேகத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும். சூரியன் சாதகமான வீடுகளில் நிற்பதால் அரசாங்க விஷயங்கள் சாதகமாக முடியும்.பேச்சில் கம்பீரம் பிறக்கும். வழக்கில் திருப்பம் ஏற்படும்.

ராசிபலன்

செவ்வாய் சாதகமாக இருப்ப தால் சகோதரர்களால் பயன் அடைவீர்கள். சொத்து சம்பந்தப் பட்ட வழக்குகளில் நல்ல தீர்ப்பு வரும். வியாபாரத்தில் பழைய வேலையாள்கள் மீண்டும் பணியில் வந்து சேர்வார்கள்.

உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். சக ஊழியர்களால் பாராட்டப்படுவீர்கள். அவர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கலைத் துறையினருக்கு வெளி நாட்டு நிறுவனங்களிலிருந்து புதிய வாய்ப்புகள் வரும்.

தடைகளைத் தகர்த்து சாதிக்கும் நேரம் இது.

சிம்மம்

ராசிநாதன் சூரியன் 16-ம் தேதி வரை 2-ல் நிற்பதால் பேச்சில் கடுமை காட்டாதீர்கள். அரசுக் காரியங்கள் தாமதமாக முடியும். வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும். 17-ம் தேதி முதல் எல்லா முயற்சிகளும் வெற்றி அடையும்.

புதனும், சுக்கிரனும் சாதகமாக இருப்பதால் அடிப்படை வசதி களை மேம்படுத்துவீர்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கும் மதிப்பும் கூடும்.

ராசிபலன்

குரு வலுவாக இருப்பதால் வீட்டில் சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். புது வீடு கட்டி, குடி புகுவீர்கள். விலகிச் சென்ற பழைய சொந்தங்களெல்லாம் வலிய வந்து உறவாடுவார்கள்.

வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்களின் கடின உழைப்பிற்கு அங்கிகாரம் கிடைக்கவில்லையே என ஆதங்கப்படுவீர்கள். கலைத் துறையினர், பொது நிகழ்ச்சிகளில் தலைமை தாங்கும் அளவிற்குப் பிரபலமாவார்கள்.

வெற்றிப் பாதையில் பயணிக்கும் காலம் இது.

கன்னி

சுக்கிரன் சாதகமாகச் செல்வதால் கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். கோயிலைப் புதுப்பிக்க உதவுவீர்கள். குடும்பத் தினருடன் குலதெய்வப் பிரார்த் தனைக்குச் சென்று வருவீர்கள். ராசிநாதன் புதன் சாதகமாக இருப்பதால் பழைய உறவினர், நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள்.

16-ம் தேதிவரை ராசிக்குள் சூரியன் அமர்ந்திருப்பதால் முன்கோபம், காரிய தாமதம், அலைச்சல் வந்து போகும். அரசுக்குச் செலுத்த வேண்டிய வரிகளை விரைந்து செலுத்தப் பாருங்கள்.

ராசிபலன்

குருவும், சனியும் 4 ல் நிற்பதால் தாய் வழி உறவினர்களுடன் கொஞ்சம் சண்டை, சச்சரவுகள் வந்து நீங்கும். செவ்வாய் 8-ல் உள்ளதால் உடல் நலக் குறைவு வந்து நீங்கும்.

வியாபார ரகசியங்கள் யார் மூலம் கசிகிறது என்பதை அறிந்து புது முடிவு எடுப்பீர்கள். உத்தியோகத்தில் செல்வாக்கு கூடும். கலைத்துறையினர்

மூத்த கலைஞர்களின் பாராட்டு களைப் பெறுவீர்கள்.

ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்தவேண்டிய காலம் இது.

துலாம்

ராசிநாதன் சுக்கிரனும், புதனும் சாதகமாக இருப்பதால் போராட்டங்களும், தடைகளும் இருந்தாலும் ஓயமாட்டீர்கள். பிரபலங்களின் உதவியுடன் சில காரியங்களைச் சாதிப்பீர்கள்.

எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். வீடு வாங்கவும் கட்டவும் வங்கிக் கடன் உதவி கிடைக்கும். தள்ளிப் போன திருமணம் கூடி வரும்.

ராசிபலன்

செவ்வாய் ஓரளவு சாதகமாக இருப்பதால் பூர்விகச் சொத்தி லிருந்த வில்லங்கம் பேச்சு வார்த்தை மூலம் சுமுகமாக முடியும். சூரியன் சாதகமாக இல்லாததால் திடீர்ப் பயணங்கள் அதிகரிக்கும். தூக்கம் குறையும். அரசாங்க அதிகாரிகளால் தொந்தரவுகள் வந்து போகும். குருபகவான் 3-ல் நிற்பதால் புதிய முயற்சிகள் சற்று தாமதமாக முடியும்.

வியாபாரத்தில் புது முதலீடு செய்வது பற்றி யோசிப்பீர்கள். உத்தியோகத்தில், மதிப்பு உயரும். உயரதிகாரி களால் மதிக்கப் படுவீர்கள். கலைத்துறையின ருக்குச் சம்பள விஷயத்தில் கண்டிப்பு தேவை.

ரகசியம் காப்பதால் காரியம் சாதிக்கும் காலம் இது.

விருச்சிகம்

சூரியன் 16 ம் தேதிவரை லாப வீட்டில் நிற்பதால் அதிகாரப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. புது வீடு கட்டத் தொடங்குவீர்கள். சிலருக்கு வேலை கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும்.

வழக்கில் வெற்றி பெறுவீர்கள். சுக்கிரனும் புதனும் வலுவான வீடுகளில் செல்வதால் திடீர் யோசனைகள் பிறக்கும். உறவினர்கள் சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். நட்பு வட்டம் விரியும்.

ராசிபலன்

குரு 2-ல் நிற்பதால் பண வரவு திருப்திகரமாக இருக்கும். ஆனால் செலவினங்களும் அதற்கேற்ப வரும். செவ்வாய் 6-ல் நிற்பதால் பழைய கடனை பைசல் செய்வீர்கள்.

வியாபாரத்தில் பழைய சரக்கு கள் விற்றுத் தீரும். புதுச் சலுகை களை அறிமுகப்படுத்துவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரி களுக்கு நெருக்கமாவீர்கள். கலைத்துறையினரின் படைப்புத் திறன் வளரும்.

வி.ஐ.பிகளின் ஆதரவால் வெற்றி பெறும் வேளை இது.

தனுசு

சூரியன் சாதகமான வீடுகளில் அமர்ந்திருப்பதால் உங்களின் நிர்வாகத்திறன், ஆளுமைத் திறன் அதிகரிக்கும்.

நாடாளுபவர்களின் நட்பு கிடைக்கும். கணவன் மனைவிக் குள் அந்நியோன்யம் பிறக்கும். மகளின் அலட்சியப் போக்கு மாறும். மகனுக்கு நல்ல பெண் அமைவார். வெளி நாட்டிலிருந்து நல்ல செய்தி வரும்.

ராசிபலன்

புதன் சாதகமாக இருப்பதால் பணவரவு அதிகரிக்கும். பூர்விகச் சொத்தைச் சீர் செய் வீர்கள். சுக்கிரன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், பயணங்களால் புது அனுபவம் உண்டாகும்.

ராசிக்குள் குரு இருப்பதால் காய்ச்சல், சளித்தொந்தரவு வந்துபோகும். உடல்நலனில் கவனம் தேவை.

வியாபாரத்தில் வெளிநாட்டு நிறுவனங்களின் தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். நல்ல வாய்ப்புகளும் தேடி வரும். கலைத்துறையினரின் படைப்புகளை அரசு கௌரவிக்கும்.

எதிர்ப்புகளைத் தாண்டி முன்னேறும் நேரம் இது.

மகரம்

சுக்கிரன் சாதகமான வீடு களில் செல்வதால் பிள்ளைகளின் நினைவாற்றல் கூடும். மகளுக்குத் திருமணம் ஏற்பாடாகும். புதிதாக கேமரா, செல்போன் வாங்கு வீர்கள். வாழ்க்கைத் துணைவரின் உடல் நலம் சீராகும். பண வரவு திருப்திகரமாக இருக்கும்

புதன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் உறவினர்களுக்கு மத்தியில் உயர்ந்து நிற்க வேண்டுமென எண்ணுவீர்கள். பூர்விகச் சொத்தை மாற்றி அமைப்பீர்கள். பிரியமான வர்களின் சந்திப்பு நிகழும்.

ராசிபலன்

16-ம் தேதிவரை சூரியன் 9-ல் நிற்பதால் தந்தைக்கு வேலைச் சுமை, கை, கால் வலி வந்து போகும். குரு 12-ல் தொடர்வதால் தூக்கமின்மை, வீண் விரயம் வந்து செல்லும். யாருக்காகவும் ஜாமீன், கேரண்டர் கையெழுத்திட வேண்டாம்.

வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் சூழல் சாதகமாகும்; எதிராக இருந்த அதிகாரி மாற்றப்படுவார். கலைத்துறையினருக்குப் பட்டிதொட்டியெங்கும் பாராட்டு கிடைக்கும்.

நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும் காலம் இது.

கும்பம்

சுக்கிரனும் புதனும் சாதகமாக இருப்பதால் புதுத் தெம்பு பிறக்கும். பழைய சிக்கல்கள் தீரும். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். சிலர் புது வாகனம் வாங்குவீர்கள்.

வீட்டில் கூடுதலாக ஒரு தளம் கட்டுவீர்கள். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். அடகிலிருந்த நகையை மீட்பீர்கள். வாழ்க்கைத் துணைவர் வழியில் மதிக்கப்படுவீர்கள். தந்தை வழி உறவுகளுடனான மோதல்கள் விலகும்.

ராசிபலன்

சூரியன் சாதகமாக இல்லாத தால் அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். வழக்கில் தீர்ப்பு தள்ளிப்போகும். வாகனத்தில் செல்லும்போது அலைபேசியில் பேச வேண்டாம். வியாபாரத்தில் நெளிவு, சுளிவு களைக் கற்றுக் கொள்வீர்கள்.

உத்தியோகத்தில் அடுத்

தடுத்து வேலைச்சுமை இருந்தா லும் அலுத்துக்கொள்ளாமல் முடித்துக் காட்டுவீர்கள். கலைத் துறையினர் இழந்த புகழை மீண்டும் பெற, யதார்த்தமான படைப்புகளைக் கொடுங்கள்.

மாறுபட்ட பாதையில் சென்று முன்னேறும் நேரம் இது.

மீனம்

புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் கடினமான வேலை களையும் மாறுபட்ட அணுகு முறையால் முடித்துக் காட்டு வீர்கள். பணப்பற்றாக்குறையை சாமார்த்தியமாகச் சமாளிப்பீர்கள்.

பிள்ளைகளின் பயத்தைப் போக்குவீர்கள். மனக்கசப்பால் ஒதுங்கியிருந்த உறவினர்கள், இனி உங்களிடம் வலியவந்து பேசுவார்கள். நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள்.

ராசிபலன்

சுக்கிரன் 6-ல்மறைந்து இருப்பதால் சைனஸ் தொந்தரவு, காய்ச்சல், வீண் செலவுகள் வந்து நீங்கும். கணவன் மனைவிக்குள் கருத்து மோதல்கள் வரும். சூரியன் சாதகமாக இல்லாததால் முன்கோபம், உடல் உஷ்ணத்தால் அடிவயிற்றில் வலி, வந்து போகும்.

ராசிக்கு 10-ல் குரு தொடர்வ தால் வேலை அதிகரிக்கும். வியாபாரம் சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் அலட்சியம் வேண்டாம். கலைத்துறையினர் மறைமுக விமர்சனங்களையும் வீண்பழிகளையும் எதிர்கொள்ள நேரிடும்; கவனம் தேவை.

இணக்கமான அணுகுமுறையால் சாதிக்கும் வேளை இது.