Published:Updated:

ராசிபலன்

ராசிபலன்
பிரீமியம் ஸ்டோரி
ராசிபலன்

செப்டம்பர் 22 முதல் அக்டோபர் 05 வரை

ராசிபலன்

செப்டம்பர் 22 முதல் அக்டோபர் 05 வரை

Published:Updated:
ராசிபலன்
பிரீமியம் ஸ்டோரி
ராசிபலன்

மேஷம்

ராசிபலன்

சூரியன் 6-ல் நுழைந்திருப் பதால் நாடாளுபவர்களின் நட்பு கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வீடு கட்ட ப்ளான் அப்ரூவல் கிடைக்கும். பிள்ளை களின் போக்கில் நல்ல மாற்றம் உண்டாகும். புது வேலை அமையும்.

குருவும் சுக்கிரனும் சாதகமாக இருப்பதால் பணவரவு அதிகரிக் கும். சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். புதிதாகச் சொத்து வாங்குவீர்கள். புதன் 7-ல் அமர்வதால் மனக்கசப்பு நீங்கும். இழுபறியாக இருந்த பல வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். நட்பு வட்டம் விரியும்.

செவ்வாய் ராசிக்குள் அமர்ந்திருப்பதால் துணிச்சலான முடிவுகள் எடுப்பீர்கள். ஆனால் அடிக்கடி உணர்ச்சிவசப்படுவீர்கள். வியாபாரத்தில் அதிரடி அறிவிப்புகள் மூலம் போட்டிகளை ஈடுகட்டுவீர்கள். உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர் கள். கலைத்துறையினரின் படைப்புகளுக்கு நல்ல வரவேற்பும் பாராட்டும் கிடைக்கும்.

எதிர்பார்த்தவை நிறைவேறும் காலம் இது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ரிஷபம்

ராசிபலன்

ராசிநாதன் சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் பண வரவு உண்டு. பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். மகளின் திருமணத்தைச் சிறப்பாக நடத்துவீர்கள்.

வெளியூர்ப் பயணங்களால் உற்சாகம் அடைவீர்கள். எதிர்பார்த்த வேலைகள் முடிவடை யும். புதன் 6 - ல் மறைவதால் பிள்ளைகளால் அலைச்சல், டென்ஷன் வந்து செல்லும். சளித் தொல்லை, தொண்டைப் பிரச்னை வந்து செல்லும்.

சூரியன் 5 - ல் நிற்பதால் முன்கோபம் வரும். அரசாங்க விஷயங்கள் தாமதமாக முடியும்.வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும். ராகுவும் கேதுவும் சரியில்லாததால் சில நேரங்களில் மன அமைதியற்ற நிலை ஏற்படும்.

வியாபாரத்தில் புது வேலையாள்களைச் சேர்ப்பீர்கள். பங்குதாரரிடம் கறாராகப் பேசுங்கள். உத்தியோகத்தில், சக ஊழியர்களுடன் விவாதங்கள் வந்துபோகும். கலைத்துறையினர் புதுமையாகச் சில படைப்புகளை வெளியிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பார்கள்.

நிதானத்தால் நெருக்கடிகளைச் சமாளிக்கும் நேரம் இது.

மிதுனம்

ராசிபலன்

புதனும் சுக்கிரனும் சாதகமான வீடுகளில் செல்வதால், கற்பனை வளம் பெருகும். அழகு, இளமை கூடும். பணப் புழக்கம் அதிகரிக்கும். பழைய வீட்டைப் புதுப்பிக்கும் முயற்சியில் இறங்குவீர்கள். உறவினர்கள், நண்பர்கள் உங்களின் பெருந்தன்மையைப் புரிந்துகொள்வார்கள். விலை உயர்ந்த பொருள்கள் வாங்குவீர்கள். விருந்தினர்களின் வருகையால் வீடு களைகட்டும்.

சூரியன் 4-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால், தாய்வழியில் ஆதரவு பெருகும். அரசாங்க விஷயங்கள் சாதகமாக முடியும். வங்கிக் கடன் உதவி கிடைக்கும். செவ்வாய் லாப வீட்டில் அமர்ந் திருப்பதால் எதிர்பாராத பணவரவு உண்டு. வீடு, மனை வாங்குவீர்கள்.

குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளால் தேங்கிக் கிடந்த சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரித்தாலும் புதிய அனுபவங் களை கற்றுக் கொள்வீர்கள். கலைத்துறையினரின் வருமானம் உயர வழி பிறக்கும்.

எங்கும் எதிலும் வெற்றி பெறும் வேளை இது.

கடகம்

ராசிபலன்

சூரியன் 3-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் தைரியம் கூடும். எதிரிகளும் நண்பர்கள் ஆவார்கள். மேல்மட்ட அரசியல்வாதிகள் உதவுவார்கள். வராது என்றிருந்த பணம் வரும். அரசியலில் செல்வாக்கு கூடும்.

தடைப்பட்டிருந்த வீடு கட்டும் பணியைத் தொடங்குவீர்கள். வெளிநாட்டு நண்பர்களால் ஆதாயம் உண்டு. சுக்கிரனும், புதனும் சாதகமாக இருப்பதால் உறவினர் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். வாழ்க்கைத் துணைவர் வழியில் நல்லது நடக்கும். புதுவேலை அமையும். பழுதான மின்னணு சாதனங்களை மாற்றுவீர்கள்.

குரு 6 - ம் வீட்டில் மறைந்து காணப்படுவதால், சில நேரங்களில் நிம்மதி இல்லாமல் தவிப்பீர்கள். தன்னைச் சுற்றியிருப்பவர்கள் தன்னை ஏமாற்றுவதாக நினைத்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் கடையை விரிவுபடுத்தத் திட்டம் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்குச் சில ஆலோசனைகள் தருவீர்கள். சக ஊழியர்கள் மதிப்பார்கள். கலைத்துறையினரின் வசதி, வாய்ப்புகள் பெருகும்.

புதிய பாதையில் பயணிக்கும் வேளை இது.

சிம்மம்

ராசிபலன்

புதனும் சுக்கிரனும் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் பணப் புழக்கம் அதிகரிக்கும். உடல் நலம் சீராகும். உறவினர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். பால்ய நண்பர்கள் மனம் விட்டுப் பேசுவார்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும்.

குரு சாதகமாக இருப்பதால் பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். அவர்களுடன் இருந்து வந்த கசப்பு உணர்வுகள் நீங்கும். செவ்வாய் 9 - ம் வீட்டில் நிற்பதால் பிரச்னைகளைச் சமாளிக்கும் சக்தி கிடைக்கும். சகோதரர்கள் சாதகமாக இருப்பார்கள். வீடு, மனை வாங் குவதும், விற்பதும் நல்ல விதத்தில் முடியும்.

2 ல் சூரியன் அமர்ந்திருப்பதால் பேச்சில் நிதானம் தேவை. வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். வாடிக்கையாளர்களிடம் நற்பெயரைச் சம்பாதிப்பீர்கள். உத்தியோகத்தில் தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்கப்பாருங்கள். கலைத்துறையினரே! உங்களின் புதிய முயற்சிக்கு ரசிகர்களிடமிருந்து பாராட்டுகள் குவியும்!

விமர்சனங்களைத் தாண்டி வெற்றி பெறும் வேளை இது.

கன்னி

ராசிபலன்

ராசிநாதன் புதன் வலுவாக இருப்பதால், நினைத்தது நிறைவேறும். பிரபலங்கள் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. பூர்வீகச் சொத்தால் வருமானம் வரும். மகிழ்ச்சியான சம்பவங்கள் குடும்பத்தில் நிகழும்.

குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகளிடம் குவிந்து கிடக்கும் திறமைகளை இனம் கண்டறிந்து வளர்ப்பீர்கள். உறவினர்கள் சிலர் உங்களின் அதிரடியான வளர்ச்சியைக் கண்டு பொறாமைப்படுவார்கள். சுக்கிரன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், வீடு கட்டவும் வாங்கவும் வங்கிக் கடன் கிடைக்கும்.

சூரியன் ராசிக்குள் நிற்பதால் கண் எரிச்சல், அடிவயிற்றில் வலி வந்து போகும். அரசுக் காரியங்கள் தாமதமாக முடியும். ராகு மாற்றத்தால் புது வேலை கிடைக்கும். வியாபாரத்தில் மாற்றங்கள் செய்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர் களின் ஒத்துழைப்புடன் சில வேலைகளை முடிப்பீர்கள். கலைத் துறையினருக்குப் பழைய நிறுவனங் களிலிருந்து புதிய அழைப்பு வரும்.

மௌனத்தால் வெல்லும் காலம் இது.

துலாம்

ராசிபலன்

உங்கள் ராசிநாதன் சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால், உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். வாகனத்தைச் சீர் செய்வீர்கள். எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். வீட்டு ப்ளான் அப்ரூவலாகி வரும்.

சூரியன் 12-ல் மறைந்து இருப்பதால் எவருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். புதன் உங்கள் ராசிக்குள் வந்து அமர்வதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். தந்தைவழியில் மனவருத்தம் நீங்கும். தந்தையாரின் உடல் நிலை சீராகும். 3-ல் குரு முடங்கிக் கிடந்தாலும் ஆட்சி பெற்றிருப்பதால் தன்னம்பிக்கை பிறக்கும். வி.ஐ.பிகளின் நட்பு கிடைக்கும்.

எதையும் சமாளிக்கும் சாமர்த் தியம் பிறக்கும். குடும்பத்திலிருந்த கூச்சல், குழப்பங்கள் விலகும். வியாபாரத்தில் முக்கிய பிரமுகர்களின் அறிமுகத்தால் பெரிய நிறுவனங்களின் ஒப்பந்தங்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் உங்களின் புது முயற்சிகளை அதிகாரிகள் பாராட்டுவார்கள். கலைத்துறையினர் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.

திட்டமிட்டு செயல்பட்டு வெற்றி பெறும் வேளை இது.

விருச்சிகம்

ராசிபலன்

குரு பகவான் பக்கபலமாக இருப்பதால், எவ்வளவு பிரச்னைகள் வந்தாலும் அவற்றையெல்லாம் கடந்து வெற்றி பெறுவீர்கள். உங்கள் ராசிக்குச் சாதகமான வீடுகளில் சுக்கிரன் செல்வதால், வாழ்க்கைத் துணைவர் வழியில் உதவிகள் கிடைக்கும்.

பழைய நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். சூரியன் லாப வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால், அரசு சம்பந்தப்பட்ட வேலைகள் விரைந்து முடியும். வழக்குகள் சாதகமாகும். 7-ல் ராகுவும் ராசிக்குள் கேதுவும் நிற்பதால், ஒருசில முடிவுகளை எடுப்பதிலும் செயல்படுத்துவதிலும் தயக்கமும் தடுமாற்றமும் வந்து நீங்கும். அவ்வப்போது பழைய கசப்பான சம்பவங்கள் நினைவுக்கு வந்து வருத்தத்தை உண்டாக்கும்.

ராசிநாதன் 6-ல் நிற்பதால் சகோதர வகையிலிருந்து வந்த சங்கடங்கள் விலகும். வியாபாரத் தில் திடீர் லாபம், முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் உங்கள் திறமைகள் வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும். கலைத் துறையினருக்கு அயல்நாடு தொடர்புடைய நிறுவனங் களிலிருந்து வாய்ப்புகள் வரும்.

பலவீனத்தைக் களைந்து பலம் பெறும் காலம் இது.

தனுசு

ராசிபலன்

உங்கள் ராசிக்குச் சாதகமான வீடுகளில் சுக்கிரன் சென்று கொண்டிருப்பதால், சொன்ன சொல்லை நிறைவேற்றுவீர்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு கூடும். வாழ்க்கைத் துணைவர் வழியில் ஆதரவு பெருகும். சிலருக்குக் கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வீடு, மனை வாங்குவதும் விற்பதும்

நல்லவிதத்தில் லாபகரமாக முடியும். நவீன மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள்.

கேது 12-ல் நிற்பதால், திடீர்ப் பயணங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. ராசிக்குள் குருவும் சனியும் அமர்ந்திருப்பதால், அவ்வப்போது பெரிய நோய் இருப்பது போன்ற பிரமையும் வந்து போகும். பழைய கடனை நினைத்து வருந்துவீர்கள்.

சூரியன் 10 - ம் வீட்டில் வலுவாக நிற்பதால் பணவரவு உண்டு. வியாபாரத்தில் மாறுபட்ட அணுகுமுறையால் லாபம் ஈட்டுவீர்கள். வாடிக்கை யாளர்கள் அதிகரிப்பர். உத்தியோகத்தில் பதவி உயர்வு உண்டு. சிலருக்குப் புதிய வேலை கிடைக்கும். கலைத் துறையினர் உற்சாகத்துடன் வலம் வருவார்கள்.

எதிர்பாராத நன்மைகளால் மகிழும் நேரம் இது.

மகரம்

ராசிபலன்

உங்கள் ராசிக்கு 9 - ம் வீட்டில் சூரியன் நிற்பதால், தந்தையாரின் உடல் நிலை பாதிக்கும். அவருடன் சின்னச் சின்ன மோதல்கள் வரும். புதன் சாதகமாக இருப்பதால், பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வதற்கு உதவிகள் கிடைக்கும்.

உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கேது லாப வீட்டில் நிற்பதால் ஷேர் மூலம் லாபம் வரும். உங்களைச் சுற்றி இருப்பவர் களில் நல்லவர் யார் என்பதை உணர்வீர்கள். வாழ்வின் சூட்சுமத்தை அறிய ஏதுவாக புதிய அனுபவங்கள் வாய்க்கும்.

சுக்கிரன் சாதகமாக இருப்பதால், வாழ்க்கைத் துணைவருக்கு உடல் நலம் சீராகும். அவர் வழி உறவினருடன் இருந்த மோதல்கள் நீங்கும். பூர்விகச் சொத்தை மாற்றிப் புது வீடு வாங்குவீர்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கை யாளர்கள் தேடி வருவார்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். உத்தியோகத்தில் மதிப்பு உயரும். மேலதிகாரியின் தவறுகளைச் சுட்டிக்காட்டுவீர்கள். கலைத் துறையினர், வேற்றுமொழி வாய்ப்பு களால் புகழடைவார்கள்.

தைரியமான முடிவுகளால் வெற்றி பெறும் காலம் இது.

கும்பம்

ராசிபலன்

புதன் 9-ம் வீட்டில் நுழைவதால் ஓரளவு பணவரவு உண்டு. எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். நண்பர்களுடன் இருந்து வந்த பிரச்னைகள் நீங்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும்.

உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டி லேயே 27 - ம் தேதிவரை சுக்கிரன் மறைந்து கிடப்பதால், எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியாதபடிச் செலவுகள் இருக்கும். 28 ம் தேதி முதல் சுக்கிரன் 7 - ம் வீட்டில் அமர்வதால், குடும்பத்தில் அமைதி திரும்பும். பிரிந்திருந்த கணவன் - மனைவி ஒன்று சேர்வார்கள். சிலருக்குக் கல்யாணப் பேச்சு வார்த்தை சுமுகமாக முடியும். தடைகள் நீங்கும். பழுதான வாகனத்தைச் சீர் செய்வீர்கள்.

8 -ல் சூரியன் நிற்பதால் மனச் சோர்வு உண்டாகும். சில தருணங் களில் கடுமையான பேச்சால் சிக்கல்கள் எழலாம்; கவனம் தேவை. வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் பிரச்னைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். கலைத்துறையினர் விமர்ச னங்களைத் தாண்டி முன்னேறு வார்கள்.

அனைவரையும் அனுசரித்துச் செல்லவேண்டிய நேரம் இது.

மீனம்

ராசிபலன்

ராகு 3-ம் வீட்டில் அமர்ந்திருக் கிறார். அவர் தரும் பலனால் உங்களுக்கு நல்லதொரு வளர்ச்சி உண்டாகும். பழைய பிரச்னை களைப் பேசி தீர்ப்பீர்கள். வாழ்வின் சூட்சுமத்தை உணர வைப்பார்.

28- ம் தேதி முதல் 6 - ம் வீட்டில் சுக்கிரன் மறைவதால் யூரினரி இன்பெக்ஷன், மனைவிக்கு மாதவிடாய்க் கோளாறு, சிறுசிறு வாகன விபத்துகள் ஏற்படக்கூடும். கணினி, லேப்-டாப், செல்போனை கவனமாகக் கையாளுங்கள். 7 - ல் சூரியன் நிற்பதால் கணவன் - மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. பிள்ளைகளின் வருங்காலத்திற்காக எந்த முடிவும் எடுக்க முடியவில்லையே என வருந்துவீர்கள்.

மகளுக்குத் திருமணத்திற்

காக கடனுதவியை நாடுவீர்கள். புதன் சாதகமாக இருப்பதால், வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். அதேநேரம், வேலை ஆள்களுடன் சச்சரவுகள் வரும். அவர்களிடம் கண்டிப்பு வேண்டாம். உத்தியோகத்தில் வேலைச்சுமை இருக்கும். கலைத்துறையினர், தங்களின் படைப்புகளைப் போராடி வெளியிட வேண்டி வரும்.

கோபத்தை வென்று இலக்கை அடையும் காலம் இது.