Published:Updated:

ராசிபலன்

ராசிபலன்
பிரீமியம் ஸ்டோரி
ராசிபலன்

செப்டம்பர் 08 முதல் 21 வரை

ராசிபலன்

செப்டம்பர் 08 முதல் 21 வரை

Published:Updated:
ராசிபலன்
பிரீமியம் ஸ்டோரி
ராசிபலன்

மேஷம்

ராசிபலன்

ங்கள் தனாதிபதி சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். தள்ளிப் போன திருமணம் நிச்சயமாகும். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். பழைய நண்பர் ஒருவரின் நட்பை இழக்க நேரிடும். நெருங்கிய உறவினருடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். பூர்வ புண்ணியாதிபதி சூரியன் சாதகமான வீடுகளில் பயணம் செய்வதால் பிரச்னைகளை எதிர்கொள்ளும் தைரியம் பிறக்கும்.

பூர்விகச் சொத்துப் பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். உறவினர்கள், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். சர்ப்ப கிரகங்கள் சரியில்லாததால் ஏடாகூடமாகப் பேசி எதிலும் சிக்கிக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் கடையை விரிவுப்படுத்திக் கட்ட முடிவெடுப்பீர்கள். உத்தியோகத்தில் விடுமுறை காரணங்களால் வேலைபளு கூடும். கலைத்துறையினருக்கு மறைமுகப் போட்டிகள் அதிகரிக்கும்.

உழைப்பால் இலக்கை எட்டிப் பிடிப்பீர்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ரிஷபம்

ராசிபலன்

சுக்கிரனும், புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால் கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். சூரியனும் வலுவடைந்திருப்பதால் பாதியில் நின்ற விஷயங்கள் உடனே முடியும். வீடு கட்ட எதிர்பார்த்த பணம் வரும். கட்டிட வரைபடமும் அப்ரூவலாகும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகள் நீண்ட நாள் கேட்டுக் கொண்டிருந்ததை வாங்கித் தருவீர்கள். பூர்விகச் சொத்தை மாற்றி அமைப்பீர்கள். தாய்வழியில் மதிப்பு, மரியாதைக் கூடும். பணப் புழக்கம் நன்கு அமையும்.

வாகனம் புதிதாக வாங்குவீர்கள். உறவினர்களின் திருமணத்தை முன்னின்று நடத்துவீர்கள். ஆனால் ராசிக்குள் ராகு நிற்பதால் அவ்வப்போது தலைச்சுற்றல், டென்ஷன், எமோஷன்கள் வந்து நீங்கும். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் ஒதுக்கப்பட்டாலும் அதிகாரிகளால் மதிக்கப்படுவீர்கள். கலைத்துறையினர் சம்பள விஷயத்தில் கறாராக இருங்கள்.

செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மிதுனம்

ராசிபலன்

சுக்கிரன் தனஸ்தானத்தில் அமர்ந்திருப்பதால் பணவரவு அதிகரிக்கும். பெரிய மனிதர்களின் நட்பால் சில விஷயங்களை சாதித்துக் காட்டுவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். பயணங்களால் ஆதாயம் உண்டு. ராசிநாதன் புதன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் உற்சாகமடைவீர்கள். பள்ளிக் கல்லூரிக் கால நண்பர்களைச் சந்தித்துப் பேசுவது மகிழ்ச்சி அளிக்கும். பூர்விகச் சொத்து கைக்கு வரும். சூரியனும் சாதகமாக நிற்பதால் தைரியமாக சில முடிவுகள் எடுப்பீர்கள்.

அரசால் அனுகூலம் உண்டு. செவ்வாய் லாப வீட்டில் நிற்பதால் சகோதரர்களால் இருந்து வந்த அலைச்சல்கள், செலவீனங்கள் விலகும். வியாபாரத்தில் பெரிய நிறுவனங்களுடன் புது ஒப்பந்தம் செய்வதன் மூலம் உங்கள் நிறுவன புகழ் கூடும். உத்தியோகத்தில் அலுவலக வளர்ச்சிக்கு உங்கள் ஒத்துழைப்பு முழுமையாக இருக்கும். கலைத்துறையினர், புதுமையாகச் சில படைப்புகளை வெளியிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள்.

சமயோஜித புத்தியால் சாதிப்பீர்கள்.

கடகம்

ராசிபலன்

ராசிக்குள் சுக்கிரன் நிற்பதால் தோற்றப் பொலிவுக் கூடும். நவீன ரக ஆடியோ, வீடியோ சாதனங்கள் வாங்குவீர்கள். உங்கள் ரசனைக் கேற்ப வீடு, வாகனம் அமையும். புதனும் சாதகமாக இருப்பதால் உறவினர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். புது நட்பு மலரும். பூர்விகச் சொத்தை மாற்றியமைக்கும் முயற்சியில் இறங்குவீர்கள். மனதிற்கு இதமான செய்திகள் கேட்பீர்கள். சூரியன் சாதகமாக இருப்பதால் வழக்கில் திருப்பம் ஏற்படும். லோன் கிடைக்கும். சாதுர்யமாகப் பேசி சாதிப்பீர்கள்.

எதிர்பார்த்துக் காத்திருந்த பயணம் சாதகமாக அமையும். ராகு வலுவாக இருப்பதால் மனப்போராட்டங்கள் ஓயும். அரசாங்க அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். பிள்ளைகளின் நெடுநாள் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகளை வெல்வீர்கள். உத்தியோகத்தில் மற்றவர்களின் குறைகளில் கவனம் செலுத்த வேண்டாம். கலைத்துறையினர் மூத்த கலைஞர்களின் நட்பைப் பெறுவீர்கள்.

விட்டதைப் பிடிப்பீர்கள்.

சிம்மம்

ராசிபலன்

புதன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் உறவினர்களால் ஆதாயம் கிடைப்பதுடன் கௌரவமும் ஒருபடி உயரும். நட்பு வட்டம் விரியும். 17-ந் தேதி வரை உங்கள் ராசிநாதன் சூரியன் ஆட்சி பெற்று நிற்பதால் சவால்களில் வெற்றி பெறுவீர்கள். சாதுர்யமாகப் பேசுவீர்கள். பெரிய பதவிகள் தேடி வரும். நாடாளுபவர்கள் உதவுவார்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். பணப் புழக்கம் கூடும்.

தந்தைவழிச் சொத்து கைக்கு வரும். ராகுவும், கேதுவும் சரியில்லாததால் வீண் விவாதங்களைத் தவிர்க்கப் பாருங்கள். பிள்ளைகளால் கொஞ்சம் அலைச்சல் இருக்கும். வீட்டில் கழிவுநீர் பிரச்னை, வாகனப் பிரச்னை வரக்கூடும். வியாபாரத்தில் லாபத்தைப் பெருக்க புது விளம்பர யுக்திகளைக் கையாளுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் புதுப் பொறுப்பை ஒப்படைப்பார்கள். கலைத்துறையினர் எதிர்பார்த்த புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

விவாதம், போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள்.

கன்னி

ராசிபலன்

சுக்கிரனும், புதனும் சாதகமாக இருப்பதால் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். வி.ஐ.பிகள் நண்பர்களாவார்கள். கல்யாணம், கிரகப் பிரவேசம் என வீடு களைகட்டும். சிலர் பழைய வீட்டை இடித்துப் புது வீடு கட்டத் தொடங்குவீர்கள். பிதுர்வழிச் சொத்து கிடைக்கும். 17-ம் தேதி வரை சூரியன் 12 - ல் மறைந்திருப்பதால் தூக்கமின்மை வந்து விலகும். கேது வலுவாக இருப்பதால் வேற்றுமொழி, இனத்தவர்களால் திருப்பம் உண்டாகும். கடந்த கால சுகமான அனுபவங்கள், சாதனைகள் அவ்வப்போது நினைவுக்கு வரும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்வீர்கள். அனுபவமிக்க வேலையாள்களை பணியில் அமர்த்துவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். கலைஞர்கள் பெரிய வாய்ப்புக்காகக் காத்திருக்காமால் கிடைக்கின்ற வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளப் பாருங்கள்.

அதிரடி செயல்பாடுகளால் முன்னேறுவீர்கள்.

துலாம்

ராசிபலன்

ங்களின் பிரபல யோகாதிபதியான புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் ஓரளவு பணவரவு உண்டு. உறவினர்கள் எதிர்பார்ப்புகளுடன் பேசுவார்கள். ராகுவும் கேதுவும் சரியில்லாததால் அநாவசிய மற்றும் ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக் கொள்வது நல்லது. ஊர் பொது விவகாரங்களில் மூக்கை நுழைக்க வேண்டாம். ராசிநாதன் சுக்கிரன் 10-ல் இருப்பதால் வேலைச்சுமை இருந்துக் கொண்டேயிருக்கும். ஆனால் எல்லாவற்றையும் வெற்றிகரமாக முடித்துக்காட்டுவீர்கள்.

சூரியன் சாதகமாக இருப்பதால் வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். புது வேலை கிடைக்கும். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்களைக் கலந்தாலோசித்து முக்கிய முடிவுகளை எடுப்பார்கள். கலைத்துறையினருக்குப் பெரிய நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும்.

வி.ஐ.பிகளால் பாராட்டப்படுவீர்கள்.

விருச்சிகம்

ராசிபலன்

9-ம் வீட்டில் சுக்கிரன் நிற்பதால் தந்தைவழிச் சொத்துகள் வரக்கூடும். வழக்குகள் சாதகமாக முடியும். புதனும் வலுவாக இருப்பதால் வேற்றுமொழி பேசுபவர்கள், வேற்றுமாநிலத்தைச் சார்ந்தவர்கள், வெளிநாட்டில் இருப்பவர்களால் திடீர் முன்னேற்றங்கள், அதிரடி மாற்றங்கள் உண்டாகும். உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். உங்கள் ஜீவனாதிபதி சூரியன் வலுவாக இருப்பதால் தைரியம் பிறக்கும்.

புது வேலைக்கு முயற்சி செய்தீர்களே! நல்ல பதில் வரும். உறவினர்கள் உங்களைப் பெருமையாகப் பேசுவார்கள். அரசுக் காரியங்கள் விரைந்து முடியும். ஆனால் ராசிக்குள் கேது தொடர்வதால் கவலை படர்ந்த முகம், விரக்தி வரக்கூடும். வியாபாரத்தில் தரமான சரக்குகளை மொத்த விலையில் வாங்க முடிவு செய்வீர்கள். உத்தியோகத்தில் அதிகாரியின் ஆதரவால் செல்வாக்குக் கூடும். கலைத்துறையினர் வேற்றுமொழி வாய்ப்புகளால் புகழடைவீர்கள்.

எதிர்மறை எண்ணம் விலகும்.

தனுசு

ராசிபலன்

ராகு வலுவாக இருப்பதால் மனப்போராட்டங்கள் ஓயும். அரசாங்க அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். பிள்ளைகளின் நெடுநாள் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். சுக்கிரன் 8-ல் மறைந்திருப்பதால் ஒருபக்கம் வீண் செலவுகள் இருந்தாலும் திடீர் பணவரவும் உண்டு. கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தையும் தந்து முடிப்பீர்கள். புதன் வலுவாக இருப்பதால் பழைய நண்பர்கள், உறவினர்கள் தேடி வந்து பேசுவார்கள்.

சூரியன் ஓரளவு சாதகமாக இருப்பதால் செல்வாக்கு உயரும். அரசால் அனுகூலம் உண்டு. பணவரவு அதிகரிக்கும். தந்தையின் உடல் நலம் சீராகும். செவ்வாய் 5 - ல் நிற்பதால் பிள்ளைகளின் வருங்காலம் குறித்து முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் விட்டதைப் பிடிப்பீர்கள். வேலையாள்கள், பங்குதாரர்களின் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். கலைத்துறையினர் பற்றிய வதந்திகள் வரக்கூடும்.

செல்வாக்கு, கௌரவம் ஒருபடி உயரும்.

மகரம்

ராசிபலன்

ங்கள் ராசியை சுக்கிரன் பார்த்துக் கொண்டிருப்பதால் அழகு, இளமை கூடும். காரியத் தடைகள் நீங்கும். தைரியமாகச் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வி.ஐ.பிகள் வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள். எங்கு சென்றாலும் செல்வாக்கு உயரும். வாகனத்தைச் சீர் செய்வீர்கள். சிலர் புது வாகனம் வாங்குவீர்கள். சூரியனும், புதனும் வலுவாக இருப்பதால் ஆன்மிகத்தில் மனம் லயிக்கும்.

அரசாங்க விஷயங்கள் உடனே முடியும். வெளிவட்டாரத்தில் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. ஆனால் ராகு சரியில்லாததால் வீண் விவாதங்களைத் தவிர்க்கப் பாருங்கள். வியாபாரத்தில் ஆழம் தெரியாமல் காலை விடாதீர்கள். உத்தியோகத்தில் உங்களின் போராட்டங்கள் மற்றவர்களுக்குப் புரியவில்லையே என வருந்துவீர்கள். கலைத்துறையினரின் படைப்புகளைப் போராடி வெளியிட வேண்டி வரும்.

காரியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

கும்பம்

ராசிபலன்

சூரியனும், புதனும் ஓரளவு சாதகமாக இருப்பதால் உங்களின் மாறுபட்ட அணுகுமுறையால் வெற்றி பெறுவீர்கள். வி.ஐ.பிகளால் ஆதாயம் உண்டு. அரசுக் காரியங்கள் சுலபமாக முடியும். பதவிகள் தேடி வரும். குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகளின் அடிமனதிலிருக்கு பயத்தை போக்குவீர்கள். புது வேலை அமையும். சுக்கிரன் மறைந்து கிடப்பதனால் அலைக்கழிக்கப்படுவீர்கள். கொஞ்சம் நாவடக்கத்துடன் இருப்பது நல்லது. பல ரகசியங்கள் உங்கள் ஆழ்மனதில் இருக்கும். அவற்றையெல்லாம் வெளியிட வேண்டாம்.

ராகு - கேதுவால் வேலைச்சுமை அதிகரிக்கும். தாயாருடன் மனஸ்தாபங்கள் வந்துபோகும். உடல்நலத்தில் அக்கறை காட்டுங்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களைக் கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்களுக்கு நெருக்கமாக இருந்த உயர் அதிகாரி வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுப் புது அதிகாரியால் சில நெருக்கடிகளை நீங்கள் சந்திக்க நேரிடும்.கலைத்துறையினரின் திறமைகள் வெளிப்படும்.

ரகசியங்களை காக்க வேண்டும்.

மீனம்

ராசிபலன்

ராகு 3-ம் வீட்டிலேயே நீடிப்பதால் சாணக்கியத்தானமாக யோசித்து செயல்படுவீர்கள். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். 5-ம் வீட்டில் சுக்கிரன் நிற்பதால் வீடு கட்ட, வாகனம் வாங்க லோன் கிடைக்கும்.

புதன் சாதகமாக இருப்பதால் புது வேலைக்கு முயற்சி செய்தீர்களே! நல்ல பதில் வரும். ஷேர் மூலம் பணம் வரும். 17 - ம் தேதிவரை சூரியன் 6-ல் நிற்பதால் சவாலான காரியங்களையும் சர்வ சாதாரணமாக முடிப்பீர்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். நோய் விலகும்.

பணப்புழக்கம் கணிசமாக உயரும். வீடு வாங்க, கட்ட லோன் கிடைக்கும். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பர். தாயாரின் உடல் நலம் சீராகும். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். வேலையாள்களின் ஆதரவு கிட்டும். உத்தியோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களைச் சொல்லித் தருவார். கலைத்துறையினரின் நீண்ட நாள் எண்ணங்கள் பூர்த்தியாகும்.

அடிப்படை வசதிகள் உயரும்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism