லைஃப்ஸ்டைல்
என்டர்டெயின்மென்ட்
தன்னம்பிக்கை
Published:Updated:

ராசி பலன்கள்

ராசி பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
ராசி பலன்கள்

ஜனவரி 7-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை

மேஷம்: இழுபறி நிலை மாறும். குடும்பத்தில் இருந்த குழப்பம் நீங்கும். எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். பழைய சிக்கல்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். பேச்சில் முதிர்ச்சி தெரியும். கணவர் உங்களைப் புரிந்துகொள்வார்.

மேஷம்
மேஷம்

சொத்து வாங்குவது, விற்பதில் அவசரம் வேண்டாம். சகோதரர் வகையில் இருந்த பிணக்குகள் நீங்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி கூடும். மாமியார், நாத்தனாரின் மனம் மாறும். விலையுயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். பயணங்களால் பயனடைவீர்கள்.வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை கூடும். புதிய திட்டங்கள் நிறைவேறும் நேரமிது.

ரிஷபம்: குடும்பத்தில் நிலவிவந்த பணப்பற்றாக்குறை நீங்கும். கணவரை அவர் போக்கில் சென்று மாற்றுவீர்கள். உங்களைத் தாழ்த்திப் பேசியவர்களின் மனம் மாறும். வங்கிக் கடன் கிடைக்கும். சொந்த ஊரில் செல்வாக்கு கூடும்.

ரிஷபம்
ரிஷபம்

பிள்ளைகளின் நட்புவட்டத்தைக் கண்காணிப்பது நல்லது. தாய்வழி உறவினர்களால் அலைச்சல் இருக்கும். யாருக்கும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். நாத்தனார் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார். வியாபாரத்தில் புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். உத்தியோகத்தில் உயரதிகாரிகளின் குறைகளைச் சுட்டிக்காட்டுவீர்கள். தொட்டது துலங்குவதுடன் விட்டதைப் பிடிக்கும் நேரமிது.

மிதுனம்: வி.ஐ.பிக்கள் ஆதரவாக இருப்பார்கள். தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. சகோதர வகைகளில் இருந்துவந்த அலைச்சல் நீங்கும். செலவுகளும் திடீர்ப் பயணங்களும் துரத்தும். கணவன் மனைவிக்குள் வீண் வாக்குவாதம் வேண்டாம். மாமியார் உங்களை முழுவதுமாகப் புரிந்துகொள்வார்.

மிதுனம்
மிதுனம்

பிள்ளைகளிடம் பிடிவாதம் வேண்டாம்.வாகனம் அவ்வப்போது பழுதாகி சரியாகும். சமையலறையில் கவனம் தேவை. வியாபாரத்தில் லாபம் கணிசமாக உயரும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். நிதானமாகச் செயல்பட வேண்டிய நேரமிது.

கடகம்: புதிய முயற்சிகள் பலித மாகும். பிரபலங்கள் நண்பர்களா வார்கள். வர வேண்டிய பணம் கைக்கு வரும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். உங்கள் ரசனைக்கேற்ப வீடு, வாகனம் அமையும். கணவர் முழுமையாகப் புரிந்துகொள்வார். அவருக்குத் தொழில் முன்னேற்றம் உண்டு.

கடகம்
கடகம்

பிள்ளைகளால் உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். பூர்வீகச் சொத்தை மாற்றியமைப்பீர்கள். மாமியார், நாத்தனார் உங்களை ஆதரித்துப் பேசுவார்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். உத்தியோகத்தில் உயர்பதவியில் அமர்வீர்கள். இங்கிதமான பேச்சால் சாதிக்கும் நேரமிது.

சிம்மம்: புகழ், கௌரவம் உயரும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். கணவர் உங்களிடம் சில முக்கிய விஷயங்களைப் பகிர்ந்து கொள்வார். சொத்து வாங்க முன்பணம் தருவீர்கள். புதிய டிசைனில் நகை வாங்குவீர்கள். மாமனார், மாமியார் வகையில் மகிழ்ச்சி பெருகும்.

சிம்மம்
சிம்மம்

வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள். வழக்கில் வெற்றி உண்டு. உறவினர்கள், நண்பர்களால் அலைச்சல்களும் செலவு களும் வந்து நீங்கும். வியாபாரத்தில் வெளிநாட்டு நிறுவனங்களின் தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் அமைதி நிலவும். சவால்களில் வெற்றி பெறும் நேரமிது.

கன்னி: உங்களின் பலம், பலவீனத்தை உணர்வீர்கள். அரசு வகையில் லாபம் உண்டு. இழுபறியாக இருந்த வழக்கில் வெற்றி கிடைக்கும். வீடு கட்ட வங்கிக் கடன் கிடைக்கும். கணவர் உங்களிடம் சில முக்கிய விஷயங்களைப் பகிர்ந்துகொள்வார். நவீன சாதனங்கள் வாங்குவீர்கள்.

கன்னி
கன்னி

நட்புவட்டம் விரியும். மாமனார், மாமியார் உங்களை மதிப்பார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனைக்கேற்ப பொருள்களைக் கொள்முதல் செய்து லாபத்தைப் பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் பரந்த மனத்தை மூத்த அதிகாரி புரிந்துகொண்டு உதவுவார். திடீர்த் திருப்பங்கள் நிறைந்த நேரமிது.

துலாம்: சாதுர்யமான பேச்சால் சாதிப்பீர்கள். சோம்பல், அலட்சியம் நீங்கும். எதிரும் புதிருமாக இருந்த கணவர் இணக்கமாவார். அவரின் வருமானம் உயரும். ஆபரணம் சேரும். சகோதரரின் பாசமான விசாரிப்புகள் புதுத் தெம்பை தரும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோக முயற்சிகள் கூடி வரும். வாகனத்தைச் சரிசெய்வீர்கள்.

துலாம்
துலாம்

பங்குச் சந்தை மூலம் பணம் வரும். நாத்தனார் உதவிகரமாக இருப்பார். கோபம் குறையும். பெரியோரின் ஆசி கிடைக்கும். வியாபாரத்தில் வரவு கணிசமாக உயரும். உத்தியோகத்தில் சக ஊழியர் களால் பாராட்டப்படுவீர்கள். மதிப்பு, மரியாதை கூடும் நேரமிது.

விருச்சிகம்: திட்டவட்டமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். வழக்கு சாதகமாகும். பெரிய மனிதர்கள் உதவுவார்கள். கணவர் உங்கள் செயலுக்கு முக்கியத்துவம் தருவார். பிள்ளைகளின் இசை, ஓவிய, விளையாட்டுத் திறனை வளர்க்கும்படியான பயிற்சி வகுப்புகளில் சேர்ப்பீர்கள்.

விருச்சிகம்
விருச்சிகம்

கடன் பிரச்னைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். சொந்தங்கள் வலிய வந்து பேசுவார்கள். சொத்து வாங்க முன்பணம் தருவீர்கள். நாத்தனார், மைத்துனர் உங்களின் பேச்சுக்கு மதிப்பளிப்பார்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் உங்களின் கை ஓங்கும்.

அடிப்படை வசதி பெருகும் நேரமிது.

தனுசு: புதிய திட்டங்கள் நிறைவேறும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். முடங்கிக் கிடந்த பணிகளை விரைந்து முடிப்பீர்கள். பிள்ளைகள் நம்பிக்கை தருவார்கள். கணவருக்கு ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கும். அவரின் தொழில் முயற்சிகள் வெற்றியடையும். மாமனார், மைத்துனர் வகையில் உதவி கிடைக்கும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள்.

தனுசு
தனுசு

உங்களின் சொந்த விஷயங்களை வெளியில் சொல்ல வேண்டாம். வெளிநாட்டில் இருப்பவர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புதிய யுக்திகளைப் புகுத்துங்கள். உத்தியோகத்தில் மாற்றங்கள் வரும். திறமைகளை வளர்த்துக்கொள்ள வாய்ப்பு கிடைக்கும். நம்பிக்கை துளிர்விடும் நேரமிது.

மகரம்: சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரியவரும். பணப்பற்றாக்குறையைச் சரிசெய்ய முடியால் திணறுவீர்கள். வருமானத்தைப் பெருக்க புதிய முயற்சிகள் மேற்கொள்வீர்கள். உறவினர்களின் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். கணவருக்குப் புதிய வேலை கிடைக்கும்.

மகரம்
மகரம்

அவரின் சாந்தமான பேச்சில் சந்தோஷப்படுவீர்கள். மாமியார் உதவுவார். வங்கிக் கடன் கிடைக்கும். அரசு வகை காரியங்கள் தாமதமாக முடியும். வியாபாரத்தில் ஆர்வம் பிறக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் சம்பளப் பாக்கி கைக்கு வரும். சக ஊழியர்களால் பாராட்டப்படுவீர்கள். சொந்தங்களால் சுபம் பெறும் நேரமிது.

கும்பம்: உங்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். கணவன் மனைவி அந்நியோன்யம் பெருகும். குடும்ப வருமானம் உயரும். வேலை தேடிக்கொண்டிருந்தவர்களுக்கு நல்ல இடத்தில் வேலை கிடைக்கும். மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். நேர்த்திக்கடனை முடிப்பீர்கள். விலகியிருந்த உறவினர்கள் தவற்றை உணர்ந்து பேசுவார்கள்.

கும்பம்
கும்பம்

மாமியாரின் உதவிகள் அதிகரிக்கும். புதிதாக நகை வாங்குவீர்கள். அரசு வகையில் ஆதாயம் உண்டு. வழக்கு சாதகமாகும். வியாபாரத்தில் புதிய சரக்குகளைக் கொள்முதல் செய்வீர்கள். உத்தியோகத்தில் உற்சாகமான போக்கு நிலவும். புதிய பாதை தெரியும் நேரமிது.

மீனம்: சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். திட்டமிட்ட காரியங்கள் சுபமாக முடியும். கணவர் மனம்விட்டுப் பேசுவார். பிள்ளைகளின் கல்யாண விஷயம் சாதகமாக முடியும். அரசால் வகையில் ஆதாயம் உண்டு. சகோதரர் வகையில் இருந்த பிரச்னைகள் நீங்கும். வீடு, மனை வாங்குவீர்கள்.

மீனம்
மீனம்

வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வர வேண்டிய பணம் கைக்கு வரும். மாமியார் உங்களை மனம்திறந்து பாராட்டுவார். வியாபாரத்தில் அதிரடியான அறிவிப்புகள் மூலம் போட்டிகளைச் சமாளித்து லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் தைரியமாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சிக்கல்கள் தீரும் நேரமிது.