Published:Updated:

ராசிபலன்

மேஷம்
பிரீமியம் ஸ்டோரி
மேஷம்

அக்டோபர் 22 முதல் நவம்பர் 4 - ம் தேதி வரை

ராசிபலன்

அக்டோபர் 22 முதல் நவம்பர் 4 - ம் தேதி வரை

Published:Updated:
மேஷம்
பிரீமியம் ஸ்டோரி
மேஷம்

மேஷம்

அசுவினி, பரணி, கிருத்திகை 1-ம் பாதம்

ங்களின் தனஸ்தானதிபதி சுக்கிரன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், மாறுபட்ட அணுகுமுறையால் எதையும் சாதிப்பீர்கள். சமூகத்தில் அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். குடும்பத்தில் சில முக்கியப் பொறுப்புகளை ஏற்பீர்கள். விலையுயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். திருமணத்தடை நீங்கும்.

பூர்வபுண்ணியாதிபதி சூரியன் 7-ம் வீட்டில் அமர்ந்ததால் பிள்ளை களின் பிடிவாதம் தளரும். குழந்தை பாக்கியம் சிலருக்குக் கிடைக்கும். பழைய கடனைத் தீர்ப்பீர்கள். பூர்வீகச் சொத்தை மாற்றி, புது வீடு வாங்குவீர்கள். ஆன்மிகத்தில் மனம் லயிக்கும். வியாபாரத்தில் வழக்கமான லாபம் உண்டு. உத்தியோகத்தில் அதிகாரிகளால் மதிக்கப்படுவீர்கள். கலைத்துறையினருக்குப் பட்டிதொட்டியெங்கும் பாராட்டு கிடைக்கும்.

தொட்டது துலங்கும் தருணம் இது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ரிஷபம்

ரிஷபம்
ரிஷபம்

செவ்வாய் சாதகமாக இருப்பதால் எதிர்ப்புகள் நீங்கும். பேச்சாலே பல காரியங்களைச் சாதிப்பீர்கள். சகோதர சகோதரிகள் உதவிகரமாக இருப்பார்கள். குடும்பத்தில் அமைதி திரும்பும். சூரியன் 6-ம் வீட்டில் நிற்பதால் முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும் முன் கவனம் தேவை.

பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். கணவன் மனைவி வீண் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். உறவினர்கள், நண்பர்களின் வருகை அதிகரிக்கும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். வாகனப் பழுதை சரிசெய்வீர்கள். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் இப்போது வேண்டாம். உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சம்பள உயர்வும் கிடைக்கும். கலைத்துறையினர் சம்பள விஷயங்களில் கவனமாக இருங்கள்.

அலைச்சலுடன் ஆதாயம் கிடைக்கும் வேளை இது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மிதுனம்

மிதுனம்
மிதுனம்

ராசிநாதன் புதனும் 28-ம் தேதி வரை சுக்கிரனும் சாதகமாக இருப்பதால் விலையுயர்ந்த மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். நட்புவட்டம் விரியும். சொந்தபந்தங்கள் தேடி வரும். வாகனத்தில் செல்லும் போது கவனம் தேவை. 29-ம் தேதி முதல் குரு பகவான் வலுவாக இருப்பதால் நினைத்த காரியங்கள் நிறைவேறும். பணவரவு திருப்தி தரும். பெரிய மனிதர்களின் தொடர்பு கிடைக்கும். புது வீடு கட்டி குடிபுகுவீர்கள். சுப நிகழ்ச்சிகள் கூடி வரும். குடும்பத்தினர் உங்களின் ஆலோசனையை ஏற்பார்கள். பிள்ளைகளால் சமூகத்தில் மதிப்பு கூடும்.

செவ்வாயும் சாதகமாக இருப்பதால் வீண் அலைச்சல் குறையும். இளைய சகோதரிக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துகொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்களின் கோரிக்கையை மேலதிகாரி ஏற்பார். கலைத்துறையினர் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவார்கள்.

நினைத்தது நிறைவேறும் காலம் இது.

கடகம்

கடகம்
கடகம்

சுக்கிரனும் புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால் எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். பூர்வீகச் சொத்தை சீர்செய்வீர்கள். தாய்வழியில் அனுகூலம் உண்டு. ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. உறவினர்கள், நண்பர்கள் தேடிவந்து பேசுவார்கள். வெளியூர்ப் பயணங்களால் உற்சாகமடைவீர்கள். சூரியன் 4-ம் வீட்டில் அமர்ந்ததால் தடைகள் விலகும். அரசாங்க உதவிகள் கிடைக்கும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள்.

சிலர் அதிகாரம் மிக்க பதவியில் அமர்வார்கள். குடும்பத்தில் உங்களின் வார்த்தைக்கு மதிப்பு கூடும். குழந்தை பாக்கியம் சிலருக்குக் கிடைக்கும். பழைய பிரச்னைகளைச் சுமுகமாகப் பேசி முடிப்பீர்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். வரவு உயரும். உத்தியோகத்தில் அதிகாரியின் ஆதரவால் செல்வாக்கு கூடும். கலைத்துறையினர் வேற்றுமொழி வாய்ப்புகளால் புகழடைவார்கள்.

எதிர்பாராத வெற்றிகள் சூழும் தருணம் இது.

சிம்மம்

சிம்மம்
சிம்மம்

சூரியன் 3-ம் வீட்டில் நிற்பதால் எதிர்பார்ப்புகள் தடையின்றி நிறைவேறும். நாடாளுபவர்களின் நட்பு கிடைக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். வீடு கட்டும் பணியைத் தொடர்வீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். புதிய இடத்தில் வேலை அமையும். துணிச்சலாக சில முடிவுகள் எடுப்பீர்கள். உறவினர்கள், நண்பர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் பொங்கும்.

29-ம் தேதி முதல் குரு வலுவாக இருப்பதால் சவாலான விஷயங்களையும் சாதாரணமாக முடிப்பீர்கள். கணவன் மனைவிக்குள் அன்பான சூழல் உருவாகும். வியாபாரத்தில் தேங்கிக்கிடந்த சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் அளவாகப் பழகுங்கள். கலைத்துறையினரை உதாசீனப்படுத்திய நிறுவனமே அழைத்து வாய்ப்பு தரும்.

புதிய பாதையில் பயணித்து, சாதிக்கும் வேளை இது.

கன்னி

கன்னி
கன்னி

புதனும் சுக்கிரனும் சாதகமான வீடுகளில் செல்வதால் வீட்டில் கூடுதலாக ஒரு தளம் அமைப்பீர்கள். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. கண்டும் காணாமல் இருந்தவர்கள் வலியவந்து பேசுவார்கள். நண்பர்கள் உங்களின் தேவையறிந்து உதவுவார்கள். விலையுயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள்.

சூரியன் ராசியை விட்டுவிலகி 2-ம் வீட்டில் அமர்ந்ததால் பணிச்சுமை குறையும். செவ்வாய் ராசிக்குள் இருப்பதால் எதிர்பார்த்த காரியங்கள் பூர்த்தியாகும். சுப நிகழ்ச்சிகள் நடக்கும். எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். புதிய முதலீடு செய்து வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமை இருந்தாலும் மேலதிகாரியின் அறிமுகம் கிடைக்கும். கலைத்துறையினர், மூத்த கலைஞர்களின் நட்பைப் பெறுவார்கள்.

சமூகத்தில் புகழ், கௌரவம் கூடும் காலம் இது.

துலாம்

துலாம்
துலாம்

புதனும் சுக்கிரனும் சாதகமாக இருப்பதால் தோற்றப்பொலிவு கூடும். மனக்கசப்பால் ஒதுங்கியிருந்த உறவினர்கள் நெருங்கிவருவார்கள். அக்கம்பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். ஆனால், ராசிக்குள் சூரியன் நுழைந்திருப்பதால் உடல்நலனில் கவனமாக இருங்கள். வீடு, வாகன வசதி பெருகும். நவீன ரக சாதனங்கள் வாங்குவீர்கள்.

29-ம் தேதி முதல் 3-ம் வீட்டில் குரு அமர்ந்திருந்தாலும் ஆட்சி பெற்று அமர்வதால், சமயோஜிதமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பிரச்னைகளின் ஆணிவேரைக் கண்டறிந்து களைவீர்கள். மூத்த சகோதரர் பக்கபலமாக இருப்பார். வியாபாரம் சூடு பிடிக்கும். உத்தியோகத்தில் சம்பளம் உயரும். கலைத்துறையினருக்குப் பழைய நிறுவனங்களில் இருந்து புதிய வாய்ப்புகள் வரும்.

நிர்வாகத் திறன் அதிகரிக்கும் வேளை இது.

விருச்சிகம்

விருச்சிகம்
விருச்சிகம்

புதனும் சுக்கிரனும் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். பிரபலங்கள் நண்பர்களாவார்கள். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். உறவினர்களில் உண்மையான வர்களைக் கண்டறிவீர்கள். வீட்டைக் கட்டி முடிக்க எதிர்பார்த்த வங்கிக் கடன் கிடைக்கும். கழிவுநீர், குடிநீர்ப் பிரச்னைகள் தீரும். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். திடீர்ப் பயணங்கள் இருக்கும்.

29-ம் தேதி முதல் குரு ராசிக்கு 2-ம் வீட்டில் அமர்வதால் பணவரவு திருப்தி தரும். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். வியாபாரத்தில் நிலவிய போட்டிகளை தாண்டி ஓரளவு லாபம் சம்பாதிப்பீர்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடித்து முன்னேறுவீர்கள். கலைத்துறையினர் கிடைக்கிற வாய்ப்பைத் தக்கவைத்துக்கொள்வது நல்லது.

விட்டுக்கொடுத்து முன்னேறும் தருணம் இது.

தனுசு

தனுசு
தனுசு

ங்களின் பாக்கியஸ்தானாதிபதி சூரியன் லாப வீட்டில் வலுவாக அமர்வதால் எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். பணவரவு அதிகரிக்கும். அரசாங்கத்தாலும், அதிகாரம் மிக்க பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயம் உண்டு. கணவன் மனைவிக்குள் மனம்விட்டுப் பேசுவது நல்லது. பிள்ளைகள் உங்களின் அறிவுரையை ஏற்றுக்கொள்வார்கள்.

சுக்கிரனும் புதனும் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் சுறுசுறுப்பாவீர்கள். வீட்டை விரிவுபடுத்துவீர்கள். மனைவிவழியில் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். பழுதாகியிருந்த பொருள்களை மாற்றுவீர்கள். செவ்வாய் வலுவாக இருப்பதால் உடன்பிறந்தவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களைத் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகள் உங்களின் ஆலோசனைக்கு முக்கியத்துவம் அளிப்பார்கள். கலைத்துறையினர், புதுமையாக சில படைப்புகளை வெளியிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பார்கள்.

வசதி, வாய்ப்புகள் பெருகும் காலம் இது.

மகரம்

மகரம்
மகரம்

சுக்கிரனும் புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால், உங்களின் ரசனையில் மாற்றம் வரும். இதமானப் பேச்சால் காரியம் சாதிப்பீர்கள். ஓரளவு பணவரவு உண்டு. பூர்வீகச் சொத்து வந்து சேரும். வாகன வசதி பெருகும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். பிள்ளைகளின் பயத்தைப் போக்குவீர்கள். உறவினர்களுக்கு மத்தியில் ஒருபடி உயர்ந்து நிற்கவேண்டுமென எண்ணுவீர்கள்.

சூரியன் 10-ம் வீட்டில் அமர்வதால் இயக்கம், சங்கங்களில் கௌரவப் பதவிகள் தேடி வரும். தந்தைவழியில் அனுகூலம் உண்டு. புண்ணிய தலங்களுக்குச் சென்று வருவீர்கள். செவ்வாய் 9-ம் வீட்டில் நிற்பதால் எதிர்பார்த்த வகையில் பணம் வரும். வியாபாரத்தில் லாபத்தைப் பெருக்க நவீன யுக்திகளைக் கையாளுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் கவனமாகப் பழகுங்கள். கலைத்துறையினரின் கற்பனைத்திறன் வளரும்.

பதவிகள் தேடிவரும் காலம் இது.

கும்பம்

கும்பம்
கும்பம்

குரு பகவான் 29-ம் தேதி முதல் லாப வீட்டில் வலுவாக அமர்வதால் தொட்ட காரியம் யாவும் துலங்கும். பணவரவு அதிகரிக்கும். கல்வியாளர்கள், அறிஞர்களின் நட்பால் தெளிவடைவீர்கள். புதிய சொத்து வாங்குவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடாகும். புதனும் சுக்கிரனும் சாதகமாக இருப்பதால் புதிய வேலை கிடைக்கும். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். நீண்ட நாள்களாகப் பார்க்க நினைத்த ஒருவரைச் சந்தித்து மகிழ்வீர்கள்.

சூரியன் 9-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் தந்தையின் உடல்நலத்தில் கவனம் தேவை. மனைவியுடன் பிணக்குகள் வந்து நீங்கும். பணிச்சுமை அதிகரிக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப சில மாற்றங்களைச் செய்வது நல்லது. உத்தியோகத்தில் இழந்த சலுகைகளை மீண்டும் பெறுவீர்கள். கலைத்துறையினருக்கு அதிரடி வாய்ப்புகள் தேடிவரும்.

சொன்ன சொல்லைக் காப்பாற்றும் நேரம் இது.

மீனம்

மீனம்
மீனம்

சுக்கிரனும் புதனும் சாதகமாக இருப்பதால் உங்களின் புகழ், கெரளவம் உயரும். திடீர்ப் பணவரவு உண்டு. பூர்வீகச் சொத்தில் கூடுதலாகச் செலவு செய்து அதைச் சீர்திருத்தம் செய்வீர்கள். பிள்ளைகளின் தனித்திறமைகளைக் கண்டறிவீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். உறவினர்கள் உங்களின் பரந்த மனத்தைப் புரிந்துகொள்வார்கள். நட்பால் ஆதாயம் உண்டு.

கணவன் மனைவி வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. அரசு வகை காரியங்கள் விரைந்துமுடியும். பழைய கடனைத் தீர்க்க புதிய வழி பிறக்கும். வீட்டைப் புதுப்பிக்கத் திட்டமிடுவீர்கள். செவ்வாய் 7-ம் வீட்டில் நிற்பதால் மனைவிவழியில் உதவிகள் கிடைக்கும். சகோதர, சகோதரிகள் உங்களைப் புரிந்துகொள்வார்கள். வியாபாரத்தில் சந்தை நிலவரத்தை அறிந்து முதலீடு செய்யுங்கள். உத்தியோகத்தில் உங்களின் கை ஓங்கும். கலைத்துறையினருக்கு சம்பளப் பாக்கி கைக்கு வரும்.

எதிர்நீச்சல் போட்டு வெற்றிபெறும் தருணம் இது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism