லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
Published:Updated:

ராசி பலன்கள்

ராசி பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
ராசி பலன்கள்

ஏப்ரல் 14-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை

ராசி பலன்கள்

மேஷம்

ங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சிலர் வீடு மாறவேண்டிய சூழ்நிலை உருவாகும். வாகனத்தை மாற்றுவீர்கள். கணவரின் அன்பைப் பெறுவீர்கள். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை. பிள்ளைகளின் பிடிவாதம் அதிகமாகும். உறவினர்கள், தோழிகளிடம் உரிமை எடுத்துக்கொண்டு அதிகம் பேச வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகளைச் சமாளிக்க அதிகம் உழைக்க வேண்டி வரும். உத்தியோகத்தில் உங்களின் உழைப்புக்கேற்ற அங்கீகாரம் விரைவில் கிடைக்கும். பொறுமையும் சிக்கனமும் தேவைப்படும் நேரமிது.

ராசி பலன்கள்

ரிஷபம்

ல்லா பிரச்னைகளையும் எளிதாக சமாளிக்கும் பக்குவம் உண்டாகும். தொலைநோக்குச் சிந்தனை அதிகரிக்கும். தொழிலதிபர்களின் அறிமுகம் கிடைக்கும். அதிக சம்பளத்துடன் சிலருக்கு நல்ல வேலை அமையும். கணவர் உங்களுக்கு முழு சுதந்திரம் தருவார். வழக்கு சாதகமாகும். மாமனார் உங்களிடம் புதிய பொறுப்பைத் தருவார். திட்டமிடாத செலவுகளால் திணறுவீர்கள். சொந்தங்களின் அன்புத் தொல்லை அதிகரிக்கும். மாமியாரை அனுசரித்துப்போவது நல்லது. வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் வேலைச்சுமையுடன் செல்வாக்கு கூடும். புதிய திட்டங்கள் நிறைவேறும் நேரமிது.

ராசி பலன்கள்

மிதுனம்

ங்களின் நிர்வாகத்திறன், ஆளுமைத் திறன் அதிகரிக்கும். அரசியல்வாதிகள் உதவுவார்கள். அரசாங்க விஷயம் சாதகமாக முடியும். எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். வீடு கட்ட திட்டங்கள் தீட்டுவீர்கள். வங்கிக் கடன் கிடைக்கும். கணவர் உங்களின் பெருந்தன்மையைப் புரிந்துகொள்வார். உறவினர்களுடன் இருந்த மன வருத்தம் நீங்கும். நட்புவட்டம் விரிவடையும். உறவினர்கள் மூலம் தர்மசங்கடங்கள் வரலாம். சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனம் தேவை. வியாபாரத்தில் ராஜதந்திரத்தால் லாபத்தை அதிகரிப்பீர்கள். உத்தியோகத்தில் விமர்சனங்களைத் தாண்டி முன்னேறுவீர்கள். நீண்ட நாள் பிரச்னைகள் நீங்கும் நேரமிது.

ராசி பலன்கள்

கடகம்

திர்பாராத பணவரவு உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். கணவர் வீட்டு வேலைகளை இழுத்துப்போட்டு செய்வார். உறவினரிடம் வாங்கியிருந்த பணத்தைத் தந்து முடிப்பீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. பாதியில் நின்ற வீடு கட்டும் பணியைத் தொடங்குவீர்கள். உறவினர்கள், தோழிகளின் வருகையால் வீடு களைகட்டும். மாமனார், மாமியார் உங்களின் சகிப்புத் தன்மையைப் பாராட்டு வார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத்தில் உங்களுக்கு எதிராகச் செயல்பட்டவர்களின் மனநிலை மாறும். பதவி உயரும். வெளிவட்டாரத்தில் மதிப்பு மரியாதை கூடும் நேரமிது.

ராசி பலன்கள்

சிம்மம்

தையும் சாதிக்கும் துணிச்சல் வரும். பூர்வீகச் சொத்தை உங்களின் ரசனைக் கேற்ப மாற்றி அமைப்பீர்கள். வீட்டில் மகிழ்ச்சி தங்கும். கணவரின் நீண்ட நாள் கனவு நனவாகும். பிள்ளைகளின் அலட்சியப்போக்கு மாறும். உறவினர்களைச் சந்திப்பீர்கள். புதிதாக வாகனம் வாங்குவீர்கள். எதிலும் பொறுமை காப்பது நல்லது. வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் நினைத்ததை முடிப்பீர்கள். ரகசியங்களைப் பாதுகாக்க வேண்டிய நேரமிது.

ராசி பலன்கள்

கன்னி

சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். அரை குறையாக நின்ற வேலைகள் முழுமை அடையும். கடன் வாங்கி ஓரளவு பணப் பற்றாக்குறையைச் சமாளிப்பீர்கள். கணவர் முதலில் உங்களின் ஆலோசனையை மறுத் தாலும் பிறகு ஏற்றுக்கொள்வார். எந்த வேலையாக இருந்தாலும் நீங்களே நேரடியாகச் சென்று முடிப்பது நல்லது. பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்துபோகும். வியாபாரத்தில் சுமாரான போக்கு நிலவும். உத்தியோகத்தில் பிறரின் குறைகளை நாசூக்காக எடுத்துச்சொல்லுங்கள். சகிப்புத்தன்மை தேவைப்படும் நேரமிது.

ராசி பலன்கள்

துலாம்

பிரச்னைகளுக்கு நல்ல முடிவு கிடைக்கும். உயர்பதவியில் இருப்பவர்களின் ஆதரவு கூடும். தள்ளிப்போன திருமணம் கூடி வரும். சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். கணவர் உங்கள்மீது அவ்வப்போது அதிருப்தி அடைவார். குடிநீர்க் குழாய், கழிவுநீர்க் குழாய் ஆகியவற்றைப் பராமரிக்க வேண்டிவரும். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். பணத்தட்டுப்பாடு ஏற்படும். சொத்து வாங்கும்போது கவனம் தேவை. வியாபாரத்தில் வழக்கமான லாபம் வரும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். வெளியிடங்களில் கவனமாக இருக்க வேண்டிய நேரமிது.

ராசி பலன்கள்

விருச்சிகம்

ளைந்துகொடுத்து வெற்றி பெறுவீர்கள். உயர் பதவியில் இருப்பவர் களின் அறிமுகம் கிடைக்கும். எதிர்த்த வர்கள் அடங்குவார்கள். உங்களின் புதிய திட்டங்களை கணவர் வரவேற்பார். அரசாங்க விஷயம் சுலபமாக முடியும். புதிதாக வீடு கட்டும் பணியை ஒரு சில மாதங்களில் தொடங்குவீர்கள். உறவினர்கள், தோழிகளுடன் இருந்த மன வருத்தம் நீங்கும். விலகிச்சென்ற சொந்தங்கள் தேடிவந்து பேசுவார்கள். வியாபாரத்தில் சந்தை நிலவரம் அறிந்து லாபம் சம்பாதிப்பீர்கள். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரித்தாலும் அதிகாரிகளின் பாராட்டால் உற்சாகமடைவீர்கள். சவாலில் வெற்றி பெறும் நேரமிது.

ராசி பலன்கள்

தனுசு

ங்கிதமாகப் பேசி கடினமான காரியங் களையும் எளிதாகச் சாதிப்பீர்கள். பூர்வீகச் சொத்து கைக்கு வரும். திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகள் தள்ளிப்போகும். கணவர் பாசமழை பொழிவார். குடும்பத்தினருடன் குல தெய்வக் கோயிலுக்குச் சென்று நேர்த்திக்கடனைச் செலுத்துவீர்கள். நாத்தனார் உங்களின் பேச்சுக்கு மதிப்பளிப்பார். வெளிநாட்டிலிருக்கும் தோழிகளால் பயனடைவீர்கள். சொந்தங்களின் பலம், பலவீனத்தை உணர்ந்து செயல்படத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் வரவு உயரும். உத்தியோகத்தில் உயரதிகாரி அளவில் உங்களின் செல்வாக்கு கூடும். திடீர்த் திருப்பங்கள் நிறைந்த நேரமிது.

ராசி பலன்கள்

மகரம்

ங்களின் புத்திசாலித்தனம் வெளிப்படும். ஓரளவு பணவரவு உண்டு. சிலர் வீடு மாறுவார்கள். கணவர் உங்களுக்குப் புதிய பொறுப்புகளைத் தருவார். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய வழி பிறக்கும். நீண்ட நாள்களாகச் சந்திக்க நினைத்த ஒருவரைச் சந்திப்பீர்கள். உறவினர்கள், தோழிகள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். தாயாரின் உடல் நலனில் கவனம் தேவை. வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். மாமியார் உங்களைப் புரிந்துகொள்வார். வியாபாரத்தில் பங்குதாரர்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் ஒரே நேரத்தில் பல வேலைகளைப் பார்க்கவேண்டி வரும். ஓய்வெடுக்க முடியாத நேரமிது.

ராசி பலன்கள்

கும்பம்

ன்னம்பிக்கை அதிகரிக்கும். உயர் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். கணவருக்கு ஏற்பட்ட பிரச்னைகள் தீரும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். மகளின் திருமணத்தைச் சிறப்பாக நடத்துவீர்கள். பூர்வீகச் சொத்தைச் சீர் செய்வீர்கள். உடன்பிறந்தவர்களுடன் கருத்து மோதல்கள் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப முதலீடு செய்வீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகளுக்கு ஆலோசனைகள் தருவீர்கள். மாறுபட்ட அணுகுமுறையால் முன்னேறும் நேரமிது.

ராசி பலன்கள்

மீனம்

டைகளைத் தாண்டி முன்னேறும் சக்தி கிடைக்கும். கணவர் பக்கபலமாக இருப் பார். பழைய உறவினர்கள், தோழிகள் விசாரிப்பால் ஆறுதலடைவீர்கள். அரசு காரியங்கள் இழுபறியாகும். திட்டமிடாத செலவுகள் ஏற்படும். வழக்கில் அலட்சியம் வேண்டாம். யாருக்கும் பணம் வாங்கித் தருவதில் நீங்கள் ஈடுபட வேண்டாம். மாமியாருடன் வீண் வாக்குவாதம் வேண்டாம். வியாபாரத்தில் கடையை மாற்ற வேண்டிய நிர்பந்தம் உண்டாகும். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். உங்களுக்கு நீங்களே உதவி என்பதை உணரும் நேரமிது.