தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

ராசி பலன்கள்

ராசி பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
ராசி பலன்கள்

ஏப்ரல் 28-ம் தேதி முதல் மே 11-ம் தேதி வரை

ராசி பலன்கள்

மேஷம்

ருங்காலத் திட்டங்கள் விரைவில் நிறைவேறும். நீண்ட நாள்களாக எதிர்பார்த்துக் காத்திருந்த பணம் கைக்கு வரும். வி.ஐ.பிக்கள் நண்பர்களாவார்கள். உங்கள் ரசனைக்கேற்ப வீடு அமையும். பழைய காலி மனையை விற்று புதிய இடம் வாங்க முடிவு செய்வீர்கள். சகோதரர்கள் பக்கபலமாக இருப்பார்கள். சுப காரியங்கள் குறித்துத் திட்டமிடுவீர்கள். அரசு வகை காரியங்கள் தாமதமாக முடியும். வழக்கில் அவசரம் வேண்டாம். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களை அதிகாரிகள் பாராட்டுவார்கள்.

திடீர் முடிவுகளால் வெற்றிபெறும் நேரமிது.

ராசி பலன்கள்

ரிஷபம்

கடனாக வாங்கி யிருந்த பணத்தைக் கொடுத்து முடிப்பீர்கள். முடங்கியிருந்த நீங்கள் சுறுசுறுப்பாவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்களை உதாசீனப்படுத்திய நிலை மாறும். உறவினர்கள் ஓடிவந்து உதவுவார்கள். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து திட்டமிடுவீர்கள். நெளிவுசுளிவுகளைக் கற்றுக் கொள்வீர்கள். முகப்பொலிவு கூடும். பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்களின் ரசனைக்கேற்ப வீடு, வாகனம் தேடும் முயற்சியில் இறங்குவீர்கள். வியாபாரத்தில் லாபம் இரட்டிப்பாகும். உத்தியோகத்தில் உங்களின் திறமை வெளிப்படும்.

விடாமுயற்சியால் சாதிக்கும் நேரமிது.

ராசி பலன்கள்

மிதுனம்

திர்பாராத பணவரவு உண்டு. வழக்குகள் சாதகமாகும். மகனுக்கு நல்ல இடத்தில் மணப்பெண் அமைவார். அடுக்கடுக்காக சுப செலவுகள் இருக்கும். அவ்வப்போது பணப்பற்றாக்குறை ஏற்படும். கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். கணவர் உங்களின் பேச்சுக்கு மதிப்பளிப்பார். பயணங்களுக்குத் திட்டமிடுவீர்கள். விலையுயர்ந்த ஆபரணங்களைக் கையாளும்போது கவனம் தேவை. வியாபாரத்தில் கமிஷன் வகைகளால் லாபம் கணிசமாக உயரும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டு.

வி.ஐ.பிக்களால் ஆதாயம் அடையும் நேரமிது.

ராசி பலன்கள்

கடகம்

ன்மைகள் அதிகரிக்கும். இதுவரையில்லாத தன்னம்பிக்கை மனத்தில் பளிச்சிடும். புகழ், கௌரவம் ஒருபடி உயரும். நல்ல வேலை கிடைக்கும். எதிர்த்தவர்கள் அடங்குவார்கள். உடல்நலனில் கவனமாக இருப்பது நல்லது. கணவன் மனைவிக்குள் வீண் வாக்குவாதங்கள் வேண்டாம். பிள்ளைகளிடம் அனுசரித்துச் செல்வது நல்லது. உறவினர்களிடம் உங்கள் மதிப்பு உயரும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். புதிய முயற்சியில் இறங்குவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கி புதிய பாதையில் பயணிப்பீர்கள்.

நிதானித்து வெற்றிபெறும் நேரமிது.

ராசி பலன்கள்

சிம்மம்

ன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பழுதான சாதனங்களை மாற்றுவீர்கள். பழைய உறவினர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். தைரியமாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்கள், அறிமுகமாவார்கள். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். வேலைச்சுமையும் அலைச்சலும் இருந்து கொண்டேயிருக்கும். வியாபாரத்தில் சந்தை நிலவரத்தை அறிந்து முதலீடு செய்யுங்கள். உத்தியோகத்தில் வேலைச் சுமை அதிகரிக்கும்.

அனுபவ அறிவால் வெற்றிபெறும் நேரமிது.

ராசி பலன்கள்

கன்னி

திர்பார்த்த பணம் கைக்கு வரும். விலையுயர்ந்த பொருள்கள் வாங்குவீர்கள். மகளுக்குத் திருமணம் ஏற்பாடாகும். பிள்ளைகளைப் பயிற்சி வகுப்புகளில் சேர்ப்பீர்கள். அவர்களால் அலைச்சல், செலவினங்கள் இருக்கும். குடும்பத்துடன் வெளியூர் சென்று மாறுபட்ட சூழ்நிலையில் தங்கிவந்தால் மன இறுக்கங்கள் குறையும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகாரிகளால் பாராட்டப்படுவார்கள்.

சிக்கல்களுக்குத் தீர்வு காணும் நேரமிது.

ராசி பலன்கள்

துலாம்

ணவன் மனைவிக்குள் இருந்த பனிப்போர் விலகும். பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள். நல்ல வேலை கிடைக்கும். தாய்வழிச் சொத்து கைக்கு வரும். உடன்பிறந்தவர்கள் உங்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். முன்பணம் தந்து முடிக்காமல் இருந்த வீடு, மனையை மீதிப் பணம் தந்து பத்திரப்பதிவு செய்வீர்கள். உறவினர்களால் அலைச்சல் அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருந்த பிரச்னைகள் விலகும். அதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள்.

சொந்தங்களின் சுயரூபத்தை அறியும் நேரமிது.

ராசி பலன்கள்

விருச்சிகம்

துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சகோதரர் வகையில் அனுகூலம் உண்டு. தடுமாற்றம், குழப்பம் நீங்கும். எதிர்பாரா பணவரவு உண்டு. வழக்கு சாதகமாகும். புதிய வேலை கிடைக்கும். தள்ளிப்போன விஷயங்கள் உடனே முடியும். வரவேண்டிய பணம் கைக்கு வரும். கணவன் மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். வியாபாரத்தில் ஏற்றுமதி இறக்குமதி வகைகளால் ஆதாயம் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களை உயரதிகாரி பாராட்டுவார்.

தன்னம்பிக்கை துளிர்விடும் நேரமிது.

ராசி பலன்கள்

தனுசு

றவினர்கள், நண்பர்கள் மத்தியில் உங்களின் அந்தஸ்து உயரும். எதிர்பார்த்திருந்த பணம் கைக்கு வரும். ஏமாற்றங்கள் குறையும். கொடுத்த வாக்குறுதியை நிறை வேற்றுவீர்கள். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தைத் தந்து முடிப்பீர்கள். நவீன சாதனங்கள் வாங்குவீர்கள். பிள்ளைகளை அவர்களின் போக்கிலேயே விட்டுப் பிடிப்பது நல்லது. வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்குப் பலவிதத்தில் பாராட்டுகள் கிடைக்கும்.

சகிப்புத்தன்மை தேவைப்படும் நேரமிது.

ராசி பலன்கள்

மகரம்

திலும் வெற்றி உண்டாகும். வீட்டு உபயோகப் பொருள்கள் வாங்குவீர்கள். குழந்தை பாக்கியம் சிலருக்குக் கிடைக்கும். பாதி பணம் கொடுத்து முடிக்காமல் இருந்த வீட்டை மீதி பணம் தந்து பத்திரப் பதிவு செய்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். சுப நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடாகும். உடல்நலனில் கவனமாக இருப்பது நல்லது. உறவினர்களுடன் மனம்விட்டுப் பேசுவதைத் தவிர்க்கவும். வியாபாரத்தில் பங்குதாரர்களை மாற்றுவீர்கள். உத்தி யோகத்தில் இருப்பவர்களுக்குப் பொறுப்புகள் அதிகரிக்கும். வேலைப்பளு கூடும்.

புதிய முயற்சிகளில் வெற்றிபெறும் நேரமிது.

ராசி பலன்கள்

கும்பம்

நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். வாகனத்தைச் சரி செய்வீர்கள். குழந்தை பாக்கியம் சிலருக்குக் கிடைக்கும். புதிதாக வீடு, மனை வாங்கும் யோகம் இப்போது உண்டாகும். சகோதர வகையில் கொஞ்சம் அலைச்சல், செலவினங்கள் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. வியாபாரத்தில் வேலை யாட்கள் உதவிகரமாக இருப்பார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைச்சுமை அதிகரிக்கும். ஆனால், அதற்கேற்ற பலன் உண்டு.

ஏமாற்றங்கள் விலகும் நேரமிது.

ராசி பலன்கள்

மீனம்

சாதுர்யமாகப் பேசி பல காரியங்களையும் சாதிப்பீர்கள். சிலர் புது வீட்டுக்கு மாறுவீர்கள். பழுதான வாகனத்தைச் சரி செய்வீர்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். இளைய சகோதரர் உதவுவார். கணவன் மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவீர்கள். சுப நிகழ்ச்சிகளுக்குத் திட்ட மிடுவீர்கள். வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு அழகு சாதனங்கள், உணவு வகைகள் மூலம் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்குப் பதவி உயர்வு நிச்சயம்.

போராடி வெற்றிபெறும் நேரமிது.