பிரீமியம் ஸ்டோரி
ராசி பலன்கள்
ராசி பலன்கள்

மேஷம்: இங்கிதமான பேச்சால் காரியம் சாதிப்பீர்கள். உங்களின் ஆளுமைத்திறன் அதிகரிக்கும். விலையுயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். பூர்வீகச் சொத்து கைக்கு வரும். நட்புவட்டம் விரியும். கணவர் உங்களுக்கு முழு உரிமை தருவார். பிள்ளைகளின் உயர்கல்வி பற்றி யோசிப் பீர்கள். மாமியார் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துகொள்வர். நாத்தனாருக்கு நல்ல வரன் அமையும். உறவினர், தோழிகள் மத்தியில் அந்தஸ்து உயரும். பழைய கடனில் ஒரு பகுதி யைத் தீர்க்க வழி பிறக்கும். வியாபாரத்தில் பழைய வேலையாட்கள் திரும்ப வருவார்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் பாராட்டுவார்கள்.

இங்கிதமான பேச்சால் எதையும் சாதிக்கும் நேரமிது.

ராசி பலன்கள்

ரிஷபம்: உங்களின் புத்திசாலித்தனம் வெளிப்படும். வி.ஐ.பிக்களின் உதவியுடன் காரியங்களைச் சாதிப்பீர்கள். வீட்டைப் புதுப்பிக்கத் திட்டமிடுவீர்கள். கணவர் உங்கள் ஆலோசனைகளை ஏற்றுக்கொள்வார். சொத்துப் பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கும். மாமனார், மாமியார் உதவுவார்கள். தோழிகள், உறவினர்களின் பாசமான விசாரிப்புகள் ஆறுதலாக இருக்கும். அரசாங்க விஷயங்கள் சாதகமாக முடியும். பிள்ளைகளிடம் உங்களின் எண்ணங்களைத் திணிக்க வேண்டாம். வியாபாரத்தில் பழைய பொருள்களை விற்க சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும்.

அவசர முடிவுகளைத் தவிர்க்க வேண்டிய நேரமிது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ராசி பலன்கள்

மிதுனம்: பொது அறிவை வளர்த்துக் கொள்வீர்கள். போட்டித் தேர்வில் வெற்றி கிடைக்கும். அழகு, இளமை கூடும். வீட்டை மாற்றுவது, விரிவுபடுத்தி கட்டுவது போன்ற முயற்சிகள் சாதகமாக முடியும். குறைந்த வட்டிக்கு வங்கிக் கடன் கிடைக்கும். கௌரவப் பதவிகள் தேடி வரும். நல்ல வேலை கிடைக்கும். கணவர் உங்களை நம்பி முக்கியப் பொறுப்புகளை ஒப்படைப்பார். பிள்ளைகளை எதிர்பார்த்த கல்விப் பிரிவில் சேர்ப்பீர்கள். பிள்ளைகளால் பெருமையும் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் வரும். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடித்து வெற்றிபெறுவீர்கள்.

புதிய நட்பால் முன்னேறும் நேரமிது.

ராசி பலன்கள்

கடகம்: புதிய முயற்சிகள் வெற்றியடையும். சொத்து பிரச்னை தீரும். கணவர் பாசமழைப் பொழிவார். பிள்ளைகளின் நினைவாற்றல் அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். சொந்தங்களின் சுயரூபம் தெரியவரும். வழக்கில் திருப்பம் ஏற்படும். மாமியார், நாத்தனார் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார். அரசாங்க காரியங்கள் தாமதமாக முடியும். வியாபாரத்தில் முக்கிய பிரமுகர்களின் அறிமுகத்தால் பெரிய நிறுவனங்களின் ஒப்பந்தங்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் கடினமான பணிகளையும் எளிதாக முடிப்பீர்கள்.

புதிய திட்டங்கள் தீட்டும் நேரமிது.

ராசி பலன்கள்

சிம்மம்: சவாலான விஷயங்களையும் சாதுர்யமாக முடிப்பீர்கள். பூர்வீகச் சொத்தை சீர்செய்வீர்கள். வி.ஐ.பிக்கள் அறிமுகமாவார்கள். செலவுகளைக் குறைக்கத் திட்டமிடுவீர்கள். கணவர் உங்கள் மனம் கோணாமல் நடந்துகொள்வார். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக்கொள்வார்கள். உறவினர், தோழி களின் அன்புத் தொல்லை குறையும். மாமியார் மதிப்பார். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்தி யோகத்தில் நேரங்காலம் பார்க்காமல் உழைத்தும் எந்த பயனும் இல்லையே என்று ஆதங்கப்படுவீர்கள்.

சிக்கனம் தேவைப்படும் நேரமிது.

ராசி பலன்கள்

கன்னி: உங்கள் கை ஓங்கும். மாறுபட்ட அணுகுமுறையால் வெற்றிபெறுவீர்கள். வர வேண்டிய பணம் கைக்கு வரும். வீடு கட்ட அரசு அனுமதி கிட்டும். கணவர் உங்கள் புதிய முயற்சிக்குப் பக்கபலமாக இருப்பார். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனின் பிடிவாதம் தளரும். நல்ல வேலை அமையும். உறவினர்களுக்கு மத்தியில் ஒருபடி உயர்ந்து நிற்கவேண்டுமென எண்ணுவீர்கள். பள்ளி, கல்லூரி தோழிகளைச் சந்திப்பீர்கள். வியாபாரத்தில் நவீன யுக்திகளைக் கையாளுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரியின் ஆதரவால் செல்வாக்கு கூடும்.

அடிப்படை வசதி வாய்ப்புகள் பெருகும் நேரமிது.

ராசி பலன்கள்

துலாம்: பணவரவு திருப்திகரமாக இருக்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தைக் கொடுத்து முடிப்பீர்கள். கணவர் வீட்டு வேலைகளுக்கு உதவுவார். பிள்ளைகள் ஆக்கபூர்வமாகச் செயல் படுவார்கள். திருமணப் பேச்சு வார்த்தை கைகூடும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். அரசாங்க காரியங்கள் விரைந்து முடியும். நாத்தனார் ஒத்தாசையாக இருப்பார். திடீர்ப் பயணங்கள் உண்டு. மாமியாரை அனுசரித்துச் செல்வது நல்லது. வியாபாரத்தில் மாறுபட்ட அணுகுமுறையால் லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் திறமையை வெளிப்படுத்த போராட வேண்டிவரும்.

வதந்திகளைத் தவிர்க்க வேண்டிய நேரமிது.

ராசி பலன்கள்

விருச்சிகம்: தந்திரத்தால் முக்கிய விஷயங்களைச் சாதிப்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். கணவர் உங்களின் நிர்வாகத் திறமையைப் பாராட்டுவார். பிள்ளைகள் படிப்பில் முன்னேறுவார்கள். வீடு கட்டத் தொடங்குவீர்கள். வாகன வசதிப் பெருகும். உறவினர்கள் சிலர் உங்களின் அதிரடியான வளர்ச்சியைக் கண்டு பொறாமைப்படுவார்கள். வியாபாரத்தில் வாடிக்கை யாளர்களின் ரசனையைப் புரிந்துகொள்வீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரியுடன் விவாதங்கள் வந்து நீங்கும்.

எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நேரமிது.

ராசி பலன்கள்

தனுசு: தளர்ந்திருந்த நீங்கள் உற்சாகமடைவீர்கள். பழைய இடத்தை விற்று உங்கள் ரசனைக்கேற்ப புது வீடு வாங்குவீர்கள். எதிர்பார்த்த பணவரவு உண்டு. கணவரின் சந்தேகம் தீரும். பிரிந்திருந்தவர்கள் ஒன்றுசேர்வீர்கள். பிள்ளைகளைப் புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். பழுதான சாதனங்களை மாற்றுவீர்கள். விலகிச்சென்ற உறவினர், தோழிகள் வலிய வந்து பேசுவார்கள். வழக்கு சாதகமாகும். மாமியார் உங்களை விமர்சிப்பார். வியாபாரத்தில் கடையை விரிவுபடுத்தும் முயற்சியில் இறங்குவீர்கள். உத்தியோகத்தில் நல்ல மாற்றம் ஏற்படும்.

குடும்ப ரகசியங்களைக் காக்க வேண்டிய நேரமிது.

ராசி பலன்கள்

மகரம்: எதிர்பார்ப்புகள் தடையின்றி முடியும். திடீர்ப் பணவரவு உண்டு. சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். பிள்ளைகள் உங்கள் அருமையைப் புரிந்துகொள்வார்கள். எதிர்பார்த்த விலைக்குப் பழைய மனையை விற்பீர்கள். புதியவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். வாகனம் பழுதாகும். கணவரால் சங்கடங்கள் வரும். அக்கம்பக்கத்தினருடன் அளவோடு பழகுங்கள். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் சம்பாதிப்பீர்கள். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும்.

மறப்போம் மன்னிப்போம் என்றிருக்க வேண்டிய நேரமிது.

ராசி பலன்கள்

கும்பம்: அடிப்படை வசதிகளைப் பெருக்குவீர்கள். பணவரவு உண்டு. ஆனால், செலவும் கட்டுக்கடங்காமல் போகும். குழந்தை பாக்கியம் சிலருக்குக் கிடைக்கும். பிள்ளைகளின் விருப்பத்தைப் பூர்த்திசெய்வீர்கள். உறவினர்களுடன் மனம்விட்டுப் பேசி மகிழ்வீர்கள். தோழிகளிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பழைய கடனைத் தீர்க்க புதிய வழி கிடைக்கும். சகோதர வகை யில் மனத்தாங்கல் வரும். வியாபாரத்தில் அதிரடி அறிவிப்புகளால் லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் எதிர்ப்புகளைத் தாண்டி முன்னேறுவீர்கள்.

பழைய பிரச்னைகளில் ஒன்று தீரும் நேரமிது.

ராசி பலன்கள்

மீனம்: நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். உயர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தைப் புரிந்துகொள்வீர்கள். தாய்வழி உறவினர்கள் உதவுவார்கள். சகோதரரின் திருமணத்தை முன்னின்று நடத்துவீர்கள். வீண் கவலைகள், விரயம், ஏமாற்றம் வந்து செல்லும். கணவருக்கு வேலைச்சுமை அதிகரிக்கும். மாமனார், மாமியாரால் பிரச்னைகள் வரக்கூடும். வியாபாரத்தில் நல்ல இடத்துக்குக் கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி உங்களைக் குறை கூறுவார். சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள்.

பழைய பிரச்னைக்குத் தீர்வு தேடும் நேரமிது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு