Published:Updated:

ராசி பலன்கள்

ராசி பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
ராசி பலன்கள்

டிசம்பர் 10-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை

ராசி பலன்கள்

டிசம்பர் 10-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை

Published:Updated:
ராசி பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
ராசி பலன்கள்

மேஷம்:

மாறுபட்ட அணுகுமுறையால் வெற்றிபெறுவீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். வி.ஐ.பி-க்கள் உதவுவார்கள். பணப்புழக்கமும் கணிசமாக உயரும். கணவர் உங்களிடம் முக்கிய விஷயங்களைப் பகிர்ந்துகொள்வார். மகனின் அலட்சியப்போக்கு மாறும். பழுதான பொருள்களை மாற்றுவீர்கள். மாமியார் உங்களைப் புரிந்துகொள்வார். நவீன டிசைனில் நகைகள் வாங்குவீர்கள். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். செலவுகள் அதிகரிக்கும்.வியாபாரத்தில் வரவு உயரும். உத்தியோகத்தில் அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். விட்டுக்கொடுத்து வெற்றி பெறும் நேரமிது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
ராசி பலன்கள்

ரிஷபம்:

நிர்வாகத் திறன் கூடும். புதியவர்களால் ஆதாயம் உண்டு. பணப்பற்றாக்குறை நீடித்தாலும் கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும். கணவர் உங்களின் ஆலோசனையை முதலில் மறுத்தாலும் பிறகு ஏற்றுக்கொள்வார். சூழ்நிலைக்குத் தகுந்தாற்போல் பிள்ளைகள் பொறுப்பாக இருப்பார்கள். உறவினர்கள் உதவுவார்கள். ஒரு சொத்தைக் காப்பாற்ற, மற்றொரு சொத்தை விற்கவேண்டி வரும். வியாபாரத்தில் புதிய முதலீடுகளை இப்போது செய்ய வேண்டாம். உத்தியோகத்தில் இருந்துவந்த பிரச்னைகள் தீரும். எதிர்ப்புகளைத் தாண்டி முன்னேறும் நேரமிது.

ராசி பலன்கள்

மிதுனம்:

திட்டமிட்ட செயல்கள் வெற்றிபெறும். ஓரளவு பணம் வரும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்கள் ஆதரிப்பார்கள். கணவர் உங்களின் தியாக மனத்தைப் புரிந்துகொள்வார். பிள்ளைகளின் பிடிவாதத்தை சாதுர்யமாகப் பேசி போக்குவீர்கள். வீடு, மனை வாங்குவது, விற்பது விரைந்து முடியும். மாமனார், மாமியார் பிரச்னைகள் முடிவுக்கு வரும். சகோதரர் உதவுவார். உங்கள் ரசனைக்கேற்ற வீட்டுக்கு மாறுவீர்கள். வியாபாரத்தில் உள்ளவர்கள் புதிய பணியாளர்களை நியமிப்பார்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். சாந்தமாக இருந்து சாதிக்கும் நேரமிது.

ராசி பலன்கள்

கடகம்:

புதிய முயற்சிகள் யாவும் வெற்றி யடையும். உயர்பதவிகள் தேடி வரும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். வி.ஐ.பி-க்களின் அறிமுகம் கிடைக்கும். கணவர் உங்களின் ஆலோசனைகளை ஏற்று நடப்பார். பூர்வீகச் சொத்திலிருந்த வில்லங்கம் விலகும். நாத்தனார் உதவிகரமாக இருப்பார். ஏளனமாகப் பேசி ஒதுங்கியவர்கள், உங்களைத் தேடி வருவார்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். பயணங்கள் வெற்றியைத் தரும். வியாபாரத்தில் புதிய முதலீடு செய்து விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் கருத்துக்கு ஆதரவு பெருகும். சமூகத்தில் செல்வாக்கு கூடும் நேரமிது.

ராசி பலன்கள்

சிம்மம்:

தடைகள், ஏமாற்றங்கள் வந்தாலும் தளர மாட்டீர்கள். தெம்பு பிறக்கும். கடனாகக் கொடுத்த பணம் கைக்கு வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். வங்கிக்கடன் கிடைக்கும். கணவருக்குப் புதிது புதிதாக ஆலோசனைகள் தருவீர்கள். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பூர்வீகச் சொத்தை விற்று நீண்டநாள் பிரச்னைகளைத் தீர்ப்பீர்கள். மாமியார், நாத்தனாரிடம் வீண் வாக்குவாதம் செய்ய வேண்டாம். உறவினர்கள் கடன் கேட்டு வருவார்கள். வியாபாரத்தில் அதிரடி அறிவிப்புகளால் லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் சொல்வதைக் கேட்டு அதன்படி பணிபுரியுங்கள். சாதுர்யமான பேச்சால் சாதிக்கும் நேரமிது.

ராசி பலன்கள்

கன்னி:

எதிர்பாராத பணவரவு உண்டு. புதிய வீடு கட்டி குடிபுகுவீர்கள். குடும்பத்தில் சில முக்கிய பொறுப்புகள் உங்கள் கைக்கு வரும். கணவர் உங்களின் சகிப்புத்தன்மையைப் பாராட்டுவார். அரசாங்க காரியங்கள் சுலபமாக முடியும். வழக்கில் வெற்றி நிச்சயம். செல்வாக்கு கூடும். எதிரும் புதிருமாக இருந்த உறவினர்கள் தங்களின் தவற்றை உணர்வார்கள். குழந்தை பாக்கியம் சிலருக்குக் கிடைக்கும். மாமியார், நாத்தனார் உங்களை மெச்சுவார்கள். வியாபாரத்தில் ஆர்வம் பிறக்கும். புதிய முதலீடுகள் செய்வீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்களின் கோரிக்கையை ஏற்பார். புதிய கோணத்தில் செயல்புரிந்து வெற்றிபெறும் நேரமிது.

ராசி பலன்கள்

துலாம்:

மனவலிமை கூடும். சவாலான காரியங்களையும் எளிதாகச் செய்து முடிப்பீர்கள். அரசாங்கத்தாலும், அதிகாரம் மிக்க பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயம் உண்டு. கணவரின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். புதிய பதவிகள் தேடி வரும். வீடு, வாகன வசதிகள் பெருகும். கொழுந்தனார், நாத்தனார் மதிப்பார்கள். வழக்கில் வெற்றிபெறுவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்திகள் வரும். வியாபாரத்தில் பங்குதாரர்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் பொறுமை காப்பது நல்லது. சகிப்புத்தன்மையால் சங்கடம் தீரும் நேரமிது.

ராசி பலன்கள்

விருச்சிகம்:

எதிலும் வெற்றிபெறுவீர்கள். ஷேர் லாபம் தரும். குடும்பத்தில் அமைதி நிலவும். பாதிப் பணம் தந்து முடிக்கப்படாமல் இருந்த சொத்தை மீதிப் பணம் தந்து பத்திரப் பதிவு செய்வீர்கள். பிள்ளைகளால் சமூகத்தில் மதிப்பு கூடும். ஆலயங்களைப் புதுப்பிக்க உதவுவீர்கள். சொந்தங்களின் அன்புத்தொல்லை குறையும். விலை யுயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் வரவு சுமார்தான். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் பேசும்போது கவனமாக இருப்பது நல்லது. சிக்கல்களில் இருந்து விடுபடும் நேரமிது.

ராசி பலன்கள்

தனுசு:

புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். அதிகாரத்தில் இருப்பவர்கள் அறிமுக மாவார்கள். எதிர்பார்த்த இடத்தில் கடன் கிடைக்கும். பிள்ளைகளை அவர்களின் எண்ண ஓட்டத்திலேயே போகவிட்டுப் பிடிப்பதுதான் நல்லது. வெளியூர்ப் பயணம் உண்டு. மகளுக்கு நல்ல இடத்தில் வரன் பேசி முடிப்பீர்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். கடனைக் கொடுத்து முடிப்பீர்கள். உறவினர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களைப் பணியில் அமர்த்துவீர்கள். உத்தியோகத்தில் கூடுதல் நேரம் பணியாற்ற வேண்டியிருந்தாலும் அதற்கேற்ற பலன் உண்டு. கோபம் தணிந்து மகிழ்ச்சி பொங்கும் நேரமிது.

ராசி பலன்கள்

மகரம்:

சவால்களில் வெற்றிபெறுவீர்கள். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். தடைப்பட்ட வீடு கட்டும் பணி விரைந்து முடியும். கணவர் உங்களின் மனம்கோணாமல் நடந்துகொள்வார். பிள்ளைகளின் பாசம் அதிகரிக்கும். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். அநாவசிய செலவுகளைக் குறைப்பீர்கள். பள்ளிப்பருவத் தோழிகளைச் சந்தித்து மகிழ்வீர்கள். மாமியாரின் ஆதரவு உண்டு. வியாபாரத்தில் சந்தை நிலவரம் அறிந்துகொண்டு புதிய ஏஜென்ஸி எடுங்கள். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களைக் கற்றுக்கொள்வீர்கள். மன உறுதியால் வெல்லும் நேரமிது.

ராசி பலன்கள்

கும்பம்:

தடுமாற்றம், தயக்கம் நீங்கி தைரியம் பிறக்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். பூர்வீகச் சொத்தை விற்று புது வீடு வாங்குவீர்கள். சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். கணவர் உங்களின் பெருமையைப் பலருடன் பகிர்ந்துகொள்வார். பிள்ளைகள் நீண்ட நாள்களாகக் கேட்டுக்கொண்டிருந்ததை வாங்கித்தருவீர்கள். தூரத்து சொந்தங்கள் தேடி வருவார்கள். மாமியாரின் மனம் மாறும். உடன்பிறந்தவர்கள் உங்களின் உண்மையான பாசத்தை உணர்வார்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடிவருவார்கள். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். இங்கிதமான பேச்சால் உயரும் நேரமிது.

ராசி பலன்கள்

மீனம்:

உங்களிடம் மறைந்து கிடந்த திறமைகள் வெளிப்படும். பழைய சிக்கல் களுக்குப் புதிய தீர்வு கிடைக்கும். எதற் கெடுத்தாலும் கோபப்பட்ட கணவரின் மனம் மாறும். பிள்ளைகளைப் புதிய பாதையில் வழி நடத்து வீர்கள். கடன் பிரச்னைகள் கட்டுக்குள் வரும். பழைய வீட்டை நல்ல விலைக்கு விற்று, புது இடம் வாங்குவீர்கள். பதவிகள் உங்களைத் தேடி வரும். ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் போட்டிகளைச் சமாளித்து லாபம் அடைவீர்கள். உத்தியோகத்தில் அதிக சம்பளத்துடன் பதவி உயரும் தேடி வரும். புதிய முயற்சிகளில் வெற்றி காணும் நேரமிது.