Published:Updated:

ராசி பலன்கள் - டிசம்பர் 22 முதல் ஜனவரி 4 வரை

ராசி பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
ராசி பலன்கள்

#Lifestyle

ராசி பலன்கள் - டிசம்பர் 22 முதல் ஜனவரி 4 வரை

#Lifestyle

Published:Updated:
ராசி பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
ராசி பலன்கள்
ராசி பலன்கள் - டிசம்பர் 22 முதல் ஜனவரி 4 வரை

மேஷம்: வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். இங்கிதமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தைத் தந்து முடிப்பீர்கள். புதிதாக வீடு, மனை, வாகனம் வாங்கத் திட்டமிடுவீர்கள். கணவர் சில நேரத்தில் கடிந்துபேசினாலும் பல தருணங்களில் கனிவாக நடந்துகொள்வார். புது டிசைனில் ஆபரணம் வாங்குவீர்கள். மாமனார், மச்சினர் வகையில் உதவி உண்டு. பிள்ளைகளால் அலைச்சலும் செலவினங்களும் இருக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் உழைப்புக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கவில்லையே என ஆதங்கப்படுவீர்கள். விடா முயற்சியால் வெற்றி பெறும் நேரமிது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
ராசி பலன்கள் - டிசம்பர் 22 முதல் ஜனவரி 4 வரை

ரிஷபம்: சோர்வு நீங்கி சுறுசுறுப்படைவீர்கள். பாதியில் நின்ற வேலைகள் உடனே முடியும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். கணவர் உங்களுக்கு ஒத்தாசையாக நடந்துகொள்வார். குழந்தை பாக்கியம் கிடைக்கும். சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். மகளுக்குப் புது வேலை அமையும். ஆடை, ஆபரணங்கள் சேரும். அவ்வப்போது குடும்பத்தில் சலசலப்பு, வாகனப்பழுது, பணத்தட்டுப்பாடு, சொத்து சிக்கல்கள், தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபங்கள் வந்து நீங்கும். வியாபாரத்தில் நல்ல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் உங்கள் திறமைகள் வெளிப்படும். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நேரமிது.

ராசி பலன்கள் - டிசம்பர் 22 முதல் ஜனவரி 4 வரை

மிதுனம்: எதிர்பார்த்த வகையில் பணம் வரும். அரசுக் காரியங்கள் விரைந்து முடியும். எதிரிகள் அடங்குவார்கள். வழக்குகளில் வெற்றிகிட்டும். கணவர் உங்களின் புதிய முயற்சிகளுக்கு ஆதரவு தருவார். பிள்ளைகளிடம் முக்கியமான குடும்ப விஷயங்களைப் பகிர்ந்துகொள்வதில் தவறில்லை. தாய்வழி உறவினர்கள் உதவுவார்கள். பள்ளி, கல்லூரிக் கால தோழிகளைச் சந்தித்து மகிழ்வீர்கள். நவீன சமையலறை சாதனங்கள் வாங்குவீர்கள். ஆனாலும் உறவினர் பகை, வீண் செலவுகள், கண் எரிச்சல் வந்து நீங்கும். யாருக்கும் வாக்குறுதி தர வேண்டாம். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்வீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகளை விமர்சனம் செய்யாதீர்கள்.முன்கோபத்தைத் தவிர்க்க வேண்டிய நேரமிது.

ராசி பலன்கள் - டிசம்பர் 22 முதல் ஜனவரி 4 வரை

கடகம்: தைரியமாகச் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. எதிர்மறை எண்ணங்கள் நீங்கும். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள்.

பழைய வீட்டை நல்ல விலைக்கு விற்று, புது இடம் வாங்குவீர்கள். வீடு கட்ட லோன் கிடைக்கும். கணவரின் வேலைச்சுமையைப் பகிர்ந்துகொள்வீர்கள். உறவினர்கள் மதிப்பார்கள். உடன்பிறந்தவர்கள் வலிய வந்து உதவுவார்கள். மாமியார் உங்களுக்காகப் பரிந்து பேசுவார். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் தலைமையால் பாராட்டப்படுவீர்கள். தொட்டது துலங்கும் நேரமிது.

ராசி பலன்கள் - டிசம்பர் 22 முதல் ஜனவரி 4 வரை

சிம்மம்: வி.ஐ.பி-க்களின் நட்பு கிட்டும். பூர்வீகச் சொத்தின் பங்கைக் கேட்டு வாங்குவீர்கள். கணவர் உங்களுக்குச் சாதகமாகப் பேசுவார். அவரின் வருமானம் உயரும். பிள்ளைகளைக் கூடாப் பழக்க வழக்கங்களிலிருந்து மீட்பீர்கள். தோழிகள் உதவுவர். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். உயர்ரக ஆபரணங்கள் வாங்குவீர்கள். அவ்வப்போது முன்கோபம், பிள்ளைகளால் செலவுகள், மாமியாருடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். அரசு காரியங்கள் தாமதமாக முடியும். வியாபாரத்தில் சந்தை நிலவரம் அறிந்து புது ஏஜென்சி எடுங்கள். கமிஷன் வகை லாபம் தரும். உத்தியோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. மௌனத்தால் சாதிக்கும் நேரமிது.

ராசி பலன்கள் - டிசம்பர் 22 முதல் ஜனவரி 4 வரை

கன்னி: தொட்ட காரியம் துலங்கும். பெரிய பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடக்கும். கணவர் நேசிப்பார். உங்களை நம்பிப் புதிய பொறுப்புகளை ஒப்படைப்பார். பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். விருந்தினர்களின் வருகையால் வீடு களைகட்டும். முகப்பொலிவு கூடும். மாமியார், நாத்தனார் உங்களின் திறமையைக் கண்டு அதிசயிப்பார்கள். வழக்கு சாதகமாகும். ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும். சகோதர வகையில் சங்கடங்கள் வரும். வியாபாரத்தில் வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் பதவி உயர்வுடன் இடமாற்றம் உண்டு. தன்னம்பிக்கையால் வெல்லும் நேரமிது.

ராசி பலன்கள் - டிசம்பர் 22 முதல் ஜனவரி 4 வரை

துலாம்: வர வேண்டிய பணம் கைக்கு வரும். அரசாங்க அதிகாரிகள் உதவுவார்கள். புது வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு நல்ல பதில் வரும். கணவர் உங்களிடம் அனுசரணை யாக நடந்துகொள்வார். பிள்ளைகளின் தனித் திறமைகளை வளர்ப்பீர்கள். கண்டும் காணாமல் இருந்தவர்கள் வலிய வந்து பேசுவார்கள். நிலம், வீடு வாங்குவது, விற்பது சுலபமாக முடியும். மாமனார், மாமியார் வகையில் மகிழ்ச்சி உண்டு. ஆனாலும் எதிர்பாராத செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பேசுங்கள். உத்தியோகத்தில் பணிகளைப் போராடி முடிப்பீர்கள். வெற்றிக்கனியை சுவைக்கும் நேரமிது.

ராசி பலன்கள் - டிசம்பர் 22 முதல் ஜனவரி 4 வரை

விருச்சிகம்: புதிய திட்டங்கள் உதயமாகும். தினம்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். வி.ஐ.பி-க்கள் அறிமுகமாவார்கள். கணவர் மனம்விட்டுப் பேசுவார். புதிதாகச் சொத்து வாங்குவீர்கள். பிள்ளைகளின் கோரிக்கை நிறைவேறும். மாமியார், நாத்தனாருடன் இருந்த ஈகோ பிரச்னை தீரும். உறவினர்கள், நண்பர்கள் வீட்டு விசேஷத்தை முன்னின்று நடத்துவீர்கள். அவ்வப்போது உடல் உபாதைகள் ஏற்பட்டு விலகும். அரசு காரியங்களில் நிதானம் அவசியம். வெளி வட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததைவிட லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் பொறுப்புகள் கூடும். உணர்ச்சிவசப்படுவதை ஒத்திப் போட வேண்டிய நேரமிது.

ராசி பலன்கள் - டிசம்பர் 22 முதல் ஜனவரி 4 வரை

தனுசு: எதிர்பாராத பணம் வந்து சேரும். கணவரின் குறை நிறைகளைச் சுட்டிக்காட்டித் திருத்துவீர்கள். பூர்வீகச் சொத்தை சீர் செய்வீர்கள். மகளின் பிடிவாத குணம் மாறும். புதிய சமையலறை சாதனங்கள் வாங்குவீர்கள். தூரத்து சொந்தங்கள் தேடி வருவார்கள். சுப நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்வீர்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். மாமியார், நாத்தனாருடன் விரிசல் வரும். மன இறுக்கம் வந்து நீங்கும். அரசு காரியங்கள் இழுபறியாகும். வியாபாரத்தில் போட்டிகள் அதிகமாகும். கூட்டுத் தொழில் லாபம் தரும். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளைத் தாண்டி அதிகாரியின் ஆதரவைப் பெறுவீர்கள். நாவடக்கம் தேவைப்படும் நேரமிது.

ராசி பலன்கள் - டிசம்பர் 22 முதல் ஜனவரி 4 வரை

மகரம்: பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டு. பூர்வீகச் சொத்திலிருந்த வில்லங்கம் விலகும். கணவரின் கோபம் குறையும். உங்களின் பெருந்தன்மையை இப்போது அவர் புரிந்து கொள்வார். பழைய கடன் பிரச்னை குறையும். மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். மற்றவர்களை நம்பி முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம். மாமனார், மாமியார் ஏதேனும் குற்றம், குறை கூறுவர். வியாபார ரகசியங்கள் யார் மூலம் கசிகின்றன என்பதை அறிந்து புது முடிவு எடுப்பீர்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமையுடன் செல்வாக்கும் உயரும். சிக்கனம் தேவைப்படும் நேரமிது.

ராசி பலன்கள் - டிசம்பர் 22 முதல் ஜனவரி 4 வரை

கும்பம்: திடீர்ப் பணவரவு உண்டு. பிரச்னைகளின் ஆணிவேரைக் கண்டறிந்து களைவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதைக் கண்டறிவீர்கள். கணவர் உங்கள் மனம்கோணாமல் நடந்துகொள்வார். வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள். மூத்த சகோதரிக்கு இருந்த பிரச்னைகள் நீங்கும். வேலை கிடைக்கும். வெளிநாட்டில் இருக்கும் உறவினர்கள், தோழிகளால் ஆதாயம் உண்டு. யோகா, தியானத்தில் மனம் செல்லும். நாத்தனார், மாமியாருக்கு உங்கள் மீது நம்பிக்கை வரும். ஆனாலும் ஒருவிதப் படபடப்பு, தாழ்வுமனப்பான்மை வந்து நீங்கும். வியாபாரத்தில் புது கிளைகள் தொடங்குவீர்கள். உத்தியோகத்தில் பதவி உயர்வு உண்டு. நினைத்ததை முடிக்கும் நேரமிது.

ராசி பலன்கள் - டிசம்பர் 22 முதல் ஜனவரி 4 வரை

மீனம்: புது வேலை கிடைக்கும். பூர்வீகச் சொத்து வந்து சேரும். பலரால் பாராட்டப்படுவீர்கள். கணவரின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. வி.ஐ.பி-க்கள் அறிமுகமாவார்கள். உடன்பிறந்தவர்கள் வலிய வந்து உதவுவார்கள். சொத்து வாங்குவது, விற்பது சுலபமாக முடியும். அரசு காரியங்கள் விரைந்து முடியும். மாமியாருடன் இருந்த மனவருத்தம் நீங்கும். வெளிவட்டாரத்தில் நிதானம் அவசியம். குடும்பத்தில் யாரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்பட்டாலும், சக ஊழியர்கள் மதிப்பார்கள். சாதுரியமான பேச்சால் சாதிக்கும் நேரமிது.