Published:Updated:

ராசி பலன்கள்

ராசி பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
ராசி பலன்கள்

பிப்ரவரி 18-ம் தேதி முதல் மார்ச் 2-ம் தேதி வரை

ராசி பலன்கள்

பிப்ரவரி 18-ம் தேதி முதல் மார்ச் 2-ம் தேதி வரை

Published:Updated:
ராசி பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
ராசி பலன்கள்
ராசி பலன்கள்

மேஷம்:

நிர்வாகத் திறன் அதிகரிக்கும். வீட்டை உங்கள் ரசனைக் கேற்ப மாற்றியமைப்பீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். கணவர் உங்களைக் கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பார். பிள்ளைகள் உங்களைப் புரிந்து கொள்வார்கள். உறவினர், தோழிகள் மத்தியில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் இங்கிதமாகப் பேசி வாடிக்கையாளர்களைக் கவருங்கள். உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்த்த இடமாற்றம் உண்டு. அனுபவத்தைப் பயன்படுத்தி முன்னேறும் நேரமிது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
ராசி பலன்கள்

ரிஷபம்:

ங்களின் புகழ், கௌரவம் உயரும். நல்ல வேலை அமையும். சுப நிகழ்ச்சிகள், பொது விழாக்களில் முதல் மரியாதை கிடைக்கும். வீடு, மனை வாங்க முன்பணம் தருவீர்கள். கணவர் உங்களின் பெருந்தன்மையைப் பாராட்டுவார். பிள்ளைகளைப் புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். இங்கிதமாகப் பேசி மாமனார், மாமியாரைக் கவருவீர்கள். வீட்டை விரிவுபடுத்துவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றி கிடைக்கும். வியாபாரத்தில் குறைந்த லாபம் வைத்து விற்பதன் மூலம் வாடிக்கையாளர்கள் அதிகமாவார்கள். உத்தியோகத்தில் மரியாதை கூடும். சில எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நேரமிது.

ராசி பலன்கள்

மிதுனம்:

னவலிமை அதிகரிக்கும். வி.ஐ.பிக்களின் உதவியால் சில விஷயங்களை சாதித்துக்காட்டுவீர்கள். சேமிக்கத் தொடங்குவீர்கள். கணவருக்கு ஆலோசனைகள் வழங்குவீர்கள். பூர்வீகச் சொத்தைப் புதுப்பிக்கும் முயற்சியில் இறங்குவீர்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். பள்ளி, கல்லூரி காலத் தோழியை சந்திப்பீர்கள். திருமணப் பேச்சுவார்த்தை சுபமாகும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகம், திருமணத்தின் பொருட்டு வெளியில் கடன் வாங்க வேண்டி வரும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வதன் மூலம் லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளால் சில பிரச்னைகளைச் சந்திப்பீர்கள். புதிய பாதையில் பயணிக்கும் நேரமிது.

ராசி பலன்கள்

கடகம்:

டையூறுகளைத் தாண்டி முன்னேறு வீர்கள். எதிர் பார்த்திருந்த தொகை வரா விட்டாலும் எதிர்பாராத வகையில் ஓரளவு பணவரவு உண்டு. கல்வியாளர்களின் நட்பால் தெளிவடைவீர்கள். வங்கிக்கடன் கிடைக்கும். கணவர் பாராமுகமாக இருப்பார். வீண் பேச்சைத் தவிர்ப்பது நல்லது. பிள்ளைகள் உடல்நலனில் கவனம் தேவை. அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். வழக்கில் வழக்கறிஞரைக் கலந்தாலோசித்து முடிவெடுங்கள். மாமனார், மாமியார் வகையில் மனத்தாங்கல் வரும். வியாபாரத்தில் ஆழம் தெரியாமல் காலை விடாதீர்கள். உத்தியோகத்தில் ஈகோ பிரச்னைகள் வரக்கூடும். நாவடக்கம் தேவைப்படும் நேரமிது.

ராசி பலன்கள்

சிம்மம்:

திட்டங்களில் ஒன்று நிறைவேறும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வீடு கட்ட தொடங்குவீர்கள். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தைக் கொடுத்து முடிப்பீர்கள். பங்குச்சந்தை மூலம் பணம் வரும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துகொள்வார்கள். கணவருடன் இருந்த பிணக்குகள் நீங்கும். புது வாகனம் வாங்குவீர்கள். அரசாங்க விஷயத்தில் அலைச்சல் இருக்கும். வீண் வாக்குவாதம் வேண்டாம். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் சொல்வதை உடனே செயல்படுத்துவது நல்லது. விடாமுயற்சியால் வெற்றிபெறும் நேரமிது.

ராசி பலன்கள்

கன்னி:

நினைத்தது நிறைவேறும். எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். குழப்பம் நீங்கி எதிலும் தெளிவு பிறக்கும். பணவரவு திருப்தி தரும். வங்கிக் கடன் கிடைக்கும். கணவரின் போக்கில் மாற்றம் உண்டாகும். பிள்ளைகளின் பாசம் அதிகரிக்கும். அரசால் ஆதாயம் உண்டு. அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். வீடு கட்ட அனுமதி கிடைக்கும். பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். வியாபாரத்தில் மற்றவர்களை நம்பி பெரிய முதலீடு செய்ய வேண்டாம். உத்தியோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களைச் சொல்லித் தருவார். தொட்டது துலங்கும் நேரமிது.

ராசி பலன்கள்

துலாம்:

புத்திசாலித்தனமாகச் செயல்பட்டு சவால்களைச் சமாளிப்பீர்கள். பணப் பற்றாக்குறை நீடித்தாலும் கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். கணவருக்குத் தொழிலில் முன்னேற்றம் உண்டு. வாகனத்தை மாற்றுவீர்கள். மாமியார் நம்பிக்கையைப் பெறுவீர்கள். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தும் உட்கொள்ள வேண்டாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க புதிய சலுகைகளை அறிமுகப்படுத்துவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கே சில ஆலோசனைகள் தருவீர்கள். புதிய பொறுப்புகள் கூடும் நேரமிது.

ராசி பலன்கள்

விருச்சிகம்:

திப்பு, மரியாதை கூடும். அதிகார மையத்தில் இருப்பவர்கள் உதவுவார்கள். எதிர்பார்த்த பணம் வரும். அரசு வேலைகள் உடனே முடியும். சபைகளில் மதிக்கப்படுவீர்கள். வீடு மாறுவீர்கள். சிலர் கூடுதல் அறை ஒன்று கட்டுவீர்கள். கணவர் உங்கள் மனங்கோணாமல் நடந்துகொள்வார். நல்ல வேலை கிடைக்கும். நாத்தனார் உங்களின் பேச்சுக்கு மதிப்பளிப்பார். சிலருக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். வியாபாரத்தில் புதிய கிளை தொடங்குவீர்கள். பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் அதிகாரிகள் பாராட்டும்படி நடந்துகொள்வீர்கள். பழைய சிக்கல்களில் இருந்து விடுபடும் நேரமிது.

ராசி பலன்கள்

தனுசு:

முகப்பொலிவு கூடும். பணப்புழக்கம் அதிகரிக்கும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். கணவர் உங்களுக்கு முழு உரிமை தருவார். மகளின் திருமணத்தைச் சிறப்பாக நடத்துவீர்கள். மகனுக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். நவீன டிசைனில் நகை வாங்குவீர்கள். சகோதரரின் மனம் மாறும். நாத்தனாரின் கோபம் தீரும். மாமியார் மெச்சுவார். வியாபாரத்தில் இருப்பவர்கள் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப மாற்றங்கள் செய்வீர்கள். உத்தியோகத்தில் அலுவலக ரகசியங்கள் வெளிவராமல் பார்த்துக்கொள்ளுங்கள். தைரியமும் தன்னம்பிக்கையும் கூடும் நேரமிது.

ராசி பலன்கள்

மகரம்:

செயலில் வேகம் கூடும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். கணவர் உங்கள் வார்த்தைகளுக்கு மதிப்பளிப்பார். வாகனத்தை மாற்றுவீர்கள். எதிரும் புதிருமாகப் பேசிக்கொண்டிருந்த உறவினர்கள் தங்களின் தவற்றை உணர்வார்கள். அத்தியாவசியச் செலவுகள் அதிகரிக்கும். சிலர் உங்களை விமர்சித்தாலும் நீங்கள் அமைதி காப்பது நல்லது. குடும்ப வருமானம் ஓரளவு உயர வாய்ப்பிருக்கிறது. மாமனார், மாமியாருடன் பக்குவமாகப் பேசுங்கள். வியாபாரத்தில் சந்தை நிலவரத்துக்கேற்ப மாற்றி யோசிப்பீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளின் பாராட்டு ஆறுதலாக இருக்கும். தடைப்பட்ட காரியங்கள் விரைந்து முடியும் நேரமிது.

ராசி பலன்கள்

கும்பம்:

திர்மறை எண்ணங்கள் விலகும். பிள்ளைகளால் பெருமை யடைவீர்கள். வீடு, மனை வாங்குவது, விற்பது சுலபமாக முடியும். பணத் தட்டுப்பாடு குறையும். ஷேர் மார்க்கெட் மூலம் பணம் வரும். கடனில் ஒரு பகுதியைத் தீர்க்க வழி பிறக்கும். திடீர்ப் பயணங்களால் ஆதாயம் உண்டு. கணவர் சில நேரங்களில் வெறுப்பாகப் பேசினாலும் நீங்கள் அரவணைத்துப்போவது நல்லது. வியாபாரத்தில் கமிஷன், துணி வகைகளால் லாபம் உண்டு. உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டு. தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்க வேண்டிய நேரமிது.

ராசி பலன்கள்

மீனம்:

நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். வராது என்றிருந்த பணம் வரும். பிள்ளைகள் உங்கள் அருமையைப் புரிந்துகொள்வார்கள். கடன் பிரச்னை களிலிருந்து மீள்வீர்கள். உறவினர்கள் எதிர்பார்ப்புகளுடன் பழகு வார்கள். திடீர்ப் பயணங்கள் அதிகரிக்கும். கணவருடன் சச்சரவுகள் வந்தாலும் பேசி தீர்ப்பது நல்லது. வியாபாரத்தில் வேலையாட்களை உற்சாகப்படுத்தி வேலை வாங்குங்கள். உத்தியோகத்தில் அதிருப்தி உண்டாகும். சில சங்கடங்கள் நேரும். கோபத்தைக் கட்டுப்படுத்தவேண்டிய நேரமிது.