Published:Updated:

ராசி பலன்கள்

ராசி பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
ராசி பலன்கள்

பிப்ரவரி 4-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை

ராசி பலன்கள்

பிப்ரவரி 4-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை

Published:Updated:
ராசி பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
ராசி பலன்கள்
ராசி பலன்கள்

மேஷம்:

புத்திசாலித்தனம் வெளிப்படும். பழைய சொத்து ஒன்றை விற்று உங்களின் ரசனைக்கேற்ப வீடு வாங்குவீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். கணவரின் வருமானம் கூடும். புதிய முயற்சிகள் வெற்றி அடையும். உயர்ரக ஆபரணங்கள் வாங்குவீர்கள். பிள்ளைகளை நினைத்து சந்தோஷப் படுவீர்கள். அரசியலில் செல்வாக்கு உயரும். வியாபாரத்தில் பெரிய நிறுவனங்களுடன் புது ஒப்பந்தம் செய்வதன் மூலம் உங்களின் நிறுவனத்தின் புகழ் கூடும். உத்தியோகத்தில் பதவி உயர்வும் அதற்கேற்ற பலனும் கிடைக்கும். புதிய திட்டங்கள் நிறைவேறும் நேரமிது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
ராசி பலன்கள்

ரிஷபம்:

துணிச்சலாக சில முடிவுகள் எடுப்பீர்கள். பழைய சிக்கல்கள் தீரும். பணவரவு திருப்தி தரும். கணவர் உங்களை நம்பி பெரிய பொறுப்பை ஒப்படைப்பார். பிள்ளைகளின் முன் னேற்றத்துக்கான கதவுகள் திறக்கும். வழக்கில் நல்ல தீர்வு கிடைக்கும். சகோதரர் வகையில் பயனடைவீர்கள். நீண்ட நாள்களாகச் சந்திக்க நினைத்தவர்களைச் சந்திப்பீர்கள். மாமியார் உங்களின் வேலைகளைப் பகிர்ந்துகொள்வார். வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகளையும் தாண்டி லாபம் சம்பாதிப்பீர்கள். உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சமூகத்தில் மதிப்பு மரியாதை கூடும் நேரமிது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ராசி பலன்கள்

மிதுனம்:

பேச்சில் அனுபவ அறிவு கூடும். புகழ், கௌரவம் உயரும். பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வீடு கட்டும் பணி முழுமையடையும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். கணவன் மனைவி அந்நியோன்யம் அதிகரிக்கும். கணவருக்குத் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். பிள்ளைகளின் தனித்திறமைகளைக் கண்டறிவீர்கள். சொந்தங்களின் சுயரூபத்தைத் தெரிந்துகொண்டு செயல்படுவீர்கள். பழைய கடனை பைசல் செய்வீர்கள். உறவினர்கள் உங்களின் அறிவுரையை ஏற்றுக்கொள்வார்கள். வியாபார ரகசியங்கள் கசியாமல் பார்த்துக்கொள்ளுங்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் அளவாகப் பழகுங்கள். நிதானம் தேவைப்படும் நேரமிது.

ராசி பலன்கள்

கடகம்:

சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் உருவாகும். பூர்வீகச் சொத்தில் உங்களின் பங்கைக் கேட்டு வாங்குவீர்கள். பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள். கணவர் சில நேரங்களில் முணுமுணுத் தாலும் கடைசி நேரத்தில் உங்களின் கருத்தை ஏற்றுக் கொள்வார். உயர்கல்வி, உத்தியோகத்தின் பொருட்டு பிள்ளைகளைப் பிரிய வேண்டிய சூழ்நிலை உருவாகும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். உறவினர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் போட்டிகள் இருந்தாலும் லாபம் குறையாது. உத்தியோகத்தில் முக்கிய கோப்பு களைக் கையாளும்போது அலட்சியம் வேண்டாம்.பிற்பகுதியில் சாதிக்கும் நேரமிது.

ராசி பலன்கள்

சிம்மம்:

திட்டங்கள் நிறைவேறும். வி.ஐ.பிக்களின் நட்பு கிடைக்கும். உற்சாக மாகப் பல வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். பணபலம் அதிகரிக்கும். கணவர் உங்களின் திறமையைப் பாராட்டுவார். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். பிள்ளைகள் உங்களின் அருமையைப் புரிந்துகொள்வார்கள். வழக்கு சாதகமாக முடியும். பழைய கடன் பிரச்னையிலிருந்து விடுபடுவீர்கள். வியாபாரத்தில் மாற்றங்களைக் கொண்டு வருவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் உங்களிடம் புதிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். எதிர்நீச்சல் போட்டு வெற்றிபெறும் நேரமிது.

ராசி பலன்கள்

கன்னி:

திலும் மகிழ்ச்சி உண்டு. பிரச்னைகளைக் கண்டு அஞ்சமாட்டீர்கள். அறிஞர்களின் நட்பு கிடைக்கும். திருமணப் பேச்சுவார்த்தை கைகூடும். எதிர்பார்த்த பணம் வரும். கணவர் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார். நட்புவட்டம் விரியும். வீட்டை விரிவுபடுத்துவீர்கள். கண்டுகொள்ளாமல் இருந்த உறவினர்கள் வலியவந்து பேசுவார்கள். பழுதான சாதனங்களை மாற்றுவீர்கள். வியாபாரத்தில் புதிய கிளைகள் தொடங்குவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி களின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். ரகசியங்களைக் காக்கவேண்டிய நேரமிது.

ராசி பலன்கள்

துலாம்:

வாக்குறுதியை நிறைவேற்று வீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. உயர்பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். கணவர் உங்களிடம் பாச மழை பொழிவார். பிள்ளைகளின் அடிமனத்திலிருக்கும் பயத்தைப் போக்குவீர்கள். வழக்குகளில் சுமுகத் தீர்வு கிடைக்கும். மாமியார் உங்களைப் புரிந்துகொள்வார். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். நகைகளை இரவல் வாங்கவோ, தரவோ வேண்டாம். வியாபாரத்தில் புதிய யுக்திகளால் பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமையும் விமர்சனங்களும் அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் வெற்றிபெறும் நேரமிது.

ராசி பலன்கள்

விருச்சிகம்:

நீண்ட நாள் ஆசை நிறைவேறும். பூர்வீகச் சொத்தை மாற்றி யமைப்பீர்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். திருமணப் பேச்சுவார்த்தை கைகூடும். நல்ல வேலை அமையும். கணவர் மனம்விட்டுப் பேசுவார். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். அரசியலில் செல்வாக்கு கூடும். உடன்பிறந்தவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். வியாபாரத்தில் தரமான சரக்குகளை மொத்த விலையில் வாங்க முடிவு செய்வீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளிடம் உங்கள் செல்வாக்கு கூடும். நினைத்ததை முடித்துக்காட்டும் நேரமிது.

ராசி பலன்கள்

தனுசு:

நினைத்தது நிறைவேறும். பணப்புழக்கம் அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். அறிஞர்களின் நட்பால் தெளிவடைவீர்கள். பிரபலங்கள் உதவுவார்கள். வீடு கட்டுவதற்கு கடன் கிடைக்கும். கணவன் மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். நாத்தனாருக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். உறவினர்களிடம் வீண் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம். நட்பு வழியில் நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர் அறிமுகமாவார்கள். நல்ல லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் அலைச்சல் இருந்தாலும் அதிகாரிகளின் பாராட்டு ஆறுதல் தரும்.பணிச்சுமை அதிகரிக்கும் நேரமிது.

ராசி பலன்கள்

மகரம்:

மாறுபட்ட அணுகுமுறையால் வெற்றிபெறுவீர்கள். தோற்றப் பொலிவு கூடும். பணப்பற்றாக்குறையைச் சாமர்த்தியமாகச் சமாளிப்பீர்கள். கணவன் மனைவி அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளின் போக்கில் அக்கறை செலுத்துவீர்கள். உறவினர், தோழிகளின் ஆதரவு பெருகும். குடும்பத்தில் சுப காரியங்கள் ஏற்பாடாகும். வி.ஐ.பிக்களின் ஆதரவு கிடைக்கும். பூர்வீகச் சொத்து கைக்கு வரும். பழைய தோழிகள், உறவினர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் உயரதிகாரிகளின் ஆதரவுடன் மறைமுக எதிர்ப்புகளை முறியடிப்பீர்கள். வளைந்துக்கொடுக்கவேண்டிய நேரமிது.

ராசி பலன்கள்

கும்பம்:

பிடிவாதப் போக்கை மாற்றிக் கொள்வீர்கள். சிக்கல்களை எளிதாகத் தீர்ப்பீர்கள். கணவரின் குணமறிந்து நடந்து கொள்வீர்கள். அவரும் உங்களிடம் அன்பு பாராட்டுவார். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துகொள்வார்கள். தூரத்து சொந்தங்கள் உங்களைத் தேடிவருவார்கள். ஒரு சொத்தை விற்று புதிய சொத்து வாங்குவீர்கள். நட்புவட்டம் விரியும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக்கொள்வது நல்லது. உத்தியோகத்தில் சில சூட்சுமங்களைத் தெரிந்து கொள்வீர்கள். சிக்கனமும் பொறுமையும் தேவைப்படும் நேரமிது.

ராசி பலன்கள்

மீனம்:

ணப்புழக்கம் அதிகரிக்கும். கணவர் நீங்கள் சொல்வதைச் செய்வார். பூர்வீகச் சொத்து கைக்கு வரும். உயர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். உறவினர்கள், தோழிகள் மத்தியில் அந்தஸ்து உயரும். கோயில் விழாவை முன்னின்று நடத்துவீர்கள். சகோதரிக்குத் திருமணம் நிச்சயமாகும். மாமனார், மாமியார் புகழும்படி சிலவற்றைச் செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். உத்தியோகத்தில் உங்களைத் தாக்கிப் பேசினாலும் பதற்றப்படாதீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டிய நேரமிது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism