Published:Updated:

ராசி பலன்கள்

ராசி பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
ராசி பலன்கள்

பிப்ரவரி 02 முதல் 15 வரை

ராசி பலன்கள்

பிப்ரவரி 02 முதல் 15 வரை

Published:Updated:
ராசி பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
ராசி பலன்கள்
ராசி பலன்கள்

மேஷம்: உங்களின் அணுகுமுறை மாறும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். கணவர் உங்கள் முயற்சிக்குப் பக்கபலமாக இருப்பார். பிள்ளைகளுக்கு வெளிநாட்டு நிறுவனத்தில் வேலை கிடைக்கும். அரசியலில் செல்வாக்கு கூடும். உங்கள் ரசனைக்கேற்ப வீடு, வாகனம் அமையும். விலையுயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். மாமியார், நாத்தனார் பாராட்டும்படி நடந்துகொள்வீர்கள். வியாபாரத்தில் பெரிய நிறுவனங்களுடன் புது ஒப்பந்தம் செய்வதன் மூலம் உங்கள் நிறுவனப் புகழ் கூடும். உத்தியோகத்தில் பதவி உயரும். சம்பளம் கூடும். புதிய திட்டங்கள் நிறைவேறும் நேரமிது.

ராசி பலன்கள்

ரிஷபம்: பழைய பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். பணவரவு திருப்தி தரும். கணவர் உங்களைப் புரிந்து கொள்வார். பிள்ளைகளிடம் குவிந்து கிடக்கும் திறமைகளை இனம் கண்டறிந்து வளர்ப்பீர்கள். வங்கிக் கடன் கிடைக்கும். வீட்டைப் புதுப்பிப்பீர்கள். மூத்த சகோதரிக்கு நல்ல வாழ்க்கைத் துணை அமைவார். பூர்வீகச் சொத்தை சீர் செய்வீர்கள். மாமனார் மதிப்பார். வழக்கில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். உடல்நலம் சீராகும். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகளையும் தாண்டி லாபம் சம்பாதிப்பீர்கள். உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். மதிப்பு, மரியாதை கூடும் நேரமிது.

ராசி பலன்கள்

மிதுனம்: சோர்வு, களைப்பு நீங்கும். ஓரளவு பணவரவு உண்டு. வாகனப் பழுது நீங்கும். பூர்வீகச் சொத்தை விற்றுச் சில பிரச்னைகளி லிருந்து வெளி வருவீர்கள். செலவுகள், சிறுசிறு காயங்கள், உறவினர்களுடன் மனக்கசப்பு, தர்மசங்கடமான சூழ்நிலைகள் ஏற்படக்கூடும். கணவர் சில நேரங்களில் வெறுப்பாகப் பேசினாலும் அரவணைத்துப்போவது நல்லது. பிள்ளைகளின் பிடிவாதத்தை அனுசரணையான பேச்சால் சரி செய்யுங்கள். யதார்த்தமாக நீங்கள் பேசுவதை மாமியார், நாத்தனார் தவறாகப் புரிந்துகொள்வார்கள். வியாபார ரகசியங்கள் கசியாமல் பார்த்துக்கொள்ளுங்கள். உத்தியோகத் தில் அதிகாரிகளுடன் அளவாகப் பழகுங்கள். நிதானம் தேவைப் படும் நேரமிது.

ராசி பலன்கள்

கடகம்: திடீர்ப் பணவரவு, நிம்மதி கிட்டும். குழம்பிக்கொண்டிருந்த நீங்கள் தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். பிள்ளைகள் குடும்பச் சூழ்நிலைக்குத் தகுந்தாற்போல் பொறுப்பாக இருப்பார்கள். சொத்து வாங்குவது விற்பது லாபகரமாக அமையும். பழைய கடன் பிரச்னையைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். குற்றம், குறை கூறிக்கொண்டிருந்த மாமியார், நாத்தனார் மனசு மாறும். வியாபாரத்தில் போட்டிகள் இருந்தாலும் லாபம் குறையாது. உத்தியோகத்தில் முக்கிய கோப்புகளைக் கையாளும்போது அலட்சியம் வேண்டாம். மேலதிகாரி ஆதரிப்பார். பிற்பகுதியில் சாதிக்கும் நேரமிது.

ராசி பலன்கள்

சிம்மம்: புதிய முயற்சிகள் பலிதமாகும். பணபலம் உயரும். கணவரின் போக்கில் நல்ல மாற்றம் உண்டாகும். பிள்ளைகளிடம் முக்கியமான குடும்ப விஷயங்களைப் பகிர்ந்து கொள்வதில் தவறில்லை. சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். மச்சினரின் திருமணத்தை முன்னின்று நடத்துவீர்கள். பழைய சொத்து சம்பந்தப்பட்ட வழக்கு சாதகமாகும். அரசால் ஆதாயம் உண்டு. கணவருக்கு மருத்துவச் செலவு, சிறுசிறு விபத்து, சகோதர வகையில் சங்கடங்கள் வரக்கூடும். நண்பர்களுடன் பகைமை வரக்கூடும். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் மதிப்பார்கள். சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். எதிர்நீச்சல் போட்டு வெற்றி பெறும் நேரமிது.

ராசி பலன்கள்

கன்னி: பிரச்னைகளைக் கண்டு அஞ்ச மாட்டீர்கள். அறிஞர்களின் நட்பு கிட்டும். வீடு, மனை அமையும். திருமணப் பேச்சு வார்த்தை கைகூடும். எதிர்பார்த்த பணம் வரும். கணவர் உங்களுக்கு ஒத்தாசையாகச் சில பணிகளைச் செய்வார். மாமியார், நாத்தனார் மதிப்பார்கள். நட்பு வட்டம் விரிவடையும். வீட்டை அழகுபடுத்துவீர்கள். கண்டு கொள்ளாமல் இருந்த உறவினர்கள் வலிய வந்து உறவாடுவார்கள். பிள்ளை களின் போக்கைக் கண்காணியுங்கள். சொத்து விஷயத்தில் கவனமாக இருங்கள். வியாபாரத்தில் புதிதாகக் கிளைகள் தொடங்குவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகளின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். ரகசியங்களைக் காக்க வேண்டிய நேரமிது.

ராசி பலன்கள்

துலாம்: ஓரளவு பணவரவு உண்டு. வி.ஐ.பி-க் களின் உதவியில் சில காரியங்களை முடிப்பீர்கள். மகனுக்கு நீங்கள் எதிர்பார்த் ததைப்போல நல்ல குடும்பத்திலிருந்து பெண் அமைவார். உறவினர்கள், தோழிகள் வீடு தேடி வருவார்கள். வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள். வெளிநாட்டில் இருப்பவர்களால் ஆதாயம் உண்டு. மாமனார் உங்களுக்கு ஆதர வாகப் பேசுவார். குழப்பம், முன்கோபம், கண் எரிச்சல், அடிவயிற்றில் வலி வந்து விலகும். நாத்தனார், உடன்பிறந்தவர்கள் வகையில் பிரச்னைகள் வரக்கூடும். வியாபாரத்தில் புது யுக்தி களால் பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமையும் விமர்சனங்களும் அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் வெற்றி பெறும் நேரமிது.

ராசி பலன்கள்

விருச்சிகம்: சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிட்டும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தோற்றப் பொலிவு கூடும். பொது நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். கணவர் உங்களிடம் சில முக்கிய விஷயங்களைப் பகிர்ந்துகொள்வார். பிள்ளைகளால் பெருமை யடைவீர்கள். வீட்டுக்குத் தேவையான அடிப்படை சாதனங்கள் வாங்குவீர்கள். இங்கிதமான பேச்சால் மாமனார், மாமியாரைக் கவருவீர்கள். தடைப்பட்ட வீடு கட்டும் பணி விரைந்து முடியும். வியாபாரத்தில் தரமான சரக்குகளை மொத்த விலையில் வாங்க முடிவு செய்வீர்கள். அலுவலகத்தில் சக ஊழியர்களைவிட அதிகாரிகளிடம் செல்வாக்கு கூடும். நினைத்ததை முடித்துக் காட்டும் நேரமிது.

ராசி பலன்கள்

தனுசு: தள்ளிப்போன விஷயங்கள் உடனே முடியும். சொத்து சேரும். தாழ்வு மனப்பான்மை நீங்கும். கணவரின் அலட்சியப்போக்கு மாறும். பிள்ளைகளின் இசை, ஓவியத் திறனை வளர்க்கப் பயிற்சி வகுப்பில் சேர்ப்பீர்கள். சகோதர வகையிலிருந்த பிரச்னைகள் தீரும். வீடு, வாகனத்தைச் சீர் செய்வீர்கள். கடனில் ஒரு பகுதியைப் பைசல் செய்வீர்கள். உறவினர்கள், தோழிகளால் உதவிகள் உண்டு. கொழுந்தனார், மாமியார் அன்பாக நடந்துகொள்வார்கள். குலதெய்வக் கோயிலுக்குச் சென்று வருவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. மாதவிடாய்க் கோளாறு நீங்கும். வியாபாரம் சூடுபிடிக்கும். பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் அதிகாரிகளின் பாராட்டு ஆறுதல் தரும். வேலைச்சுமை அதிகரிக்கும் நேரமிது.

ராசி பலன்கள்

மகரம்: புதிய எண்ணங்கள் தோன்றும். குடும்பத்தில் சுப காரியங்கள் ஏற்பாடாகும். வி.ஐ.பி-க்கள் ஆதரிப்பார்கள். பிள்ளைகளை உற்சாகப்படுத்த கேட்டதை வாங்கித் தருவீர்கள். பூர்வீகச் சொத்து கைக்கு வரும். பழைய தோழிகள், உறவினர்கள் உதவுவார்கள். வீண் டென்ஷன், வாகன விபத்து, சகோதரப் பகை வந்து போகும். கணவர் ஏதேனும் ஒரு வகையில் குற்றம், குறை கூறுவார். முன்கோபத்தைக் குறையுங்கள். மாமியார், நாத்தனார் வகையில் பொறுமை காப்பது நல்லது. வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகளை முறியடிப்பீர்கள். வளைந்து கொடுக்க வேண்டிய நேரமிது.

ராசி பலன்கள்

கும்பம்: குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகளால் நிம்மதி உண்டாகும். பணப் புழக்கம் கணிசமாக உயரும். நாத்தனாரின் சீமந்தத்தை எடுத்து நடத்துவீர்கள். வங்கியில் குறைந்த வட்டிக் கடன் கிடைக்கும். உற வினர்கள் வலிய வந்து உறவாடுவார்கள். மாமனார், மச்சினர் வகையில் உதவி உண்டு. புண்ணிய தலங்களுக்குச் சென்று முடிந்துவைத்திருந்த காணிக்கையைச் செலுத்துவீர்கள். உணர்ச்சிவசப்படுவீர்கள். கோபத்தில் வார்த்தைகளைக் கொட்டி விடாதீர்கள். கணவருக்கு அலைச்சல் இருக்கும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக் கொள்ளுங்கள். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களைத் தெரிந்து கொள்வீர்கள். சிக்கனமும் பொறுமையும் தேவைப்படும் நேரமிது.

ராசி பலன்கள்

மீனம்: மனப்போராட்டங்கள் ஓயும். கல்யாண விசேஷங்களில் முதல் மரியாதை கிடைக்கும். எதிர்பாராத வகையில் பண உதவி கிடைக்கும். கணவரின் புலம்பல் குறையும். வேலைகளைப் பகிர்ந்துகொள்வார். பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். நட்பு வட்டம் விரிவடையும். கலைப்பொருள்கள் வாங்குவீர்கள். வீட்டை அழகுபடுத்துவீர்கள். உறவினர்களால் அனுகூலம் உண்டு. பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்று வீர்கள். அரசுக் காரியங்கள் சுலபமாக முடியும். தாயாரின் உடல் நலம் சீராகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். உத்தியோகத்தில் உங்களைத் தாக்கிப் பேசினாலும் பதற்றப்படாதீர்கள். ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய நேரமிது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism