Published:Updated:

ராசி பலன்கள்

ராசி பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
ராசி பலன்கள்

ஜனவரி 21-ம் தேதி முதல் பிப்ரவரி 3-ம் தேதி வரை

ராசி பலன்கள்

ஜனவரி 21-ம் தேதி முதல் பிப்ரவரி 3-ம் தேதி வரை

Published:Updated:
ராசி பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
ராசி பலன்கள்
மேஷம்
மேஷம்

மேஷம்:

சாதிக்க வேண்டுமென்ற தன்னம்பிக்கை அதிகமாகும். நாடாளுபவர் களின் நட்பு கிடைக்கும். பொறுப்புகள் தேடி வரும். பணவரவு அதிகரிக்கும். சிலர் வீட்டைப் புதுப்பிப்பார்கள். உங்கள் செயலுக்குக் கணவர் உறுதுணையாக இருப்பார். பிள்ளைகள் நல்ல வழிக்குத் திரும்புவார்கள். புதிய ரக ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். மாமியார், நாத்தனார் மதிப்பார்கள். அரசாங்க விஷயங்கள் சாதகமாக முடியும். வியாபாரத்தில் எதிர்பாராத புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் உங்களின் கை ஓங்கும். தொலைநோக்குச் சிந்தனையால் சாதிக்கும் நேரமிது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
ரிஷபம்
ரிஷபம்

ரிஷபம்:

எதிர்பாராத பணவரவு உண்டு. உங்களின் ரசனைக்கேற்ப வீடு வாங்குவீர்கள். கணவன் மனைவி அந்நியோன்யம் பெருகும். பிள்ளைகளிடம் குவிந்துகிடக்கும் திறமைகளை இனம்கண்டறிந்து வளர்ப்பீர்கள். வங்கிக் கடன் கிடைக்கும். நாத்தனார், மாமியார் உங்களின் மனத்தைப் புரிந்துகொள்வார்கள். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். சகோதர சகோதரிகள் உதவுவார்கள். வழக்கு சாதகமாகும். வியாபாரத்தில் வரவு சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் உயரதிகாரி உங்களின் ஆலோசனைக்கு முக்கியத்துவம் தருவார். உழைப்பால் உயரும் நேரமிது.

மிதுனம்
மிதுனம்

மிதுனம்:

உங்களின் நிர்வாகத்திறன் கூடும். வீடு, மனை வாங்குவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். அதிகாரம் மிக்க பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். கணவரின் புதிய முயற்சிகள் பலிதமாகும். பிள்ளைகள் படிப்பில் முன்னேறுவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. சொந்த பந்தங்களால் மதிக்கப்படுவீர்கள். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். ஆடை, அணிகலன்கள் சேரும். மாமனார், மாமியாரால் பாராட்டப்படுவீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகள் இருக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் பாராட்டுவார்கள். இடைவிடாமல் போராடி இலக்கை எட்டும் நேரமிது.

கடகம்
கடகம்

கடகம்:

வருங்காலத் திட்டங்களில் ஒன்று இப்போது நிறைவேறும். பிரபலங்களின் உதவியால் இழுபறி யாக இருந்த வேலைகள் எளிதில் முடியும். வீட்டை விரிவுபடுத்தத் திட்டமிடுவீர்கள். புதிதாக நகை வாங்குவீர்கள். பிள்ளைகளைப் புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். உறவினர்கள், தோழிகளின் வருகையால் வீடு களைகட்டும். சகோதரிக்குத் திருமணம் முடியும். மாமனார், மாமியாரை அனுசரித்துப்போவது நல்லது. திடீர்ப் பயணங்கள் உண்டு. பழைய கடன் பிரச்னையைத் தீர்க்க புதிய வழி பிறக்கும். வியாபாரத்தில் சில நுணுக்கங் களைக் கற்றுக்கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருந்த தொல்லைகள் நீங்கும். மனோபலத்தால் நினைத்ததை முடிக்கும் நேரமிது.

சிம்மம்
சிம்மம்

சிம்மம்:

அதிரடியாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வரவேண்டிய பணம் கைக்கு வரும். பூர்வீகச் சொத்தில் மாற்றம் செய்வீர்கள். சகோதரர் சாதகமாக இருப்பார். சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். நவீன சாதனங்கள் வாங்குவீர்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். அரசாங்க விஷயங்கள் உடனே முடியும். மாமியார் பாராட்டுவார். வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். வியாபாரத்தில் முக்கியமான முடிவுகள் எடுப்பீர்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமை இருந்தாலும் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். எதிர்பாராத திடீர் நன்மைகள் சூழும் நேரமிது.

கன்னி
கன்னி

கன்னி:

பண வரவு சுமாராக இருக்கும். அக்கம்பக்கத்தில் வாங்கியிருந்த கடனை ஒருவழியாகத் தந்து முடிப்பீர்கள். பழைய சொத்தை மாற்றி புது வீடு வாங்கு வீர்கள். மாமியார் உதவிகரமாக இருப்பார். பிள்ளைகளிடம் உங்களின் எண்ணங்களைத் திணிக்க வேண்டாம். கணவன் மனைவிக்குள் வீண் வாக்குவாதம் செய்ய வேண்டாம். குடும்பத்தில் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் அதிகாரியின் ஆதரவால் செல்வாக்கு அதிகரிக்கும். சூழ்ச்சிகளை முறியடித்து வெற்றிபெறும் நேரமிது.

துலாம்
துலாம்

துலாம்:

இங்கிதமாகப் பேசி வெற்றி பெறுவீர்கள். எதிர்பார்த்த வகையில் பணம் வரும். வீடு வாங்க வங்கிக் கடன் கிடைக்கும். உங்களின் நிர்வாகத் திறமையை கணவர் மதிப்பார். பூர்வீகச் சொத்தால் வருமானம் வரும். பிள்ளைகளின் திருமணப் பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். தோழிகள் உதவிகரமாக இருப்பர். வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்பு கிடைக்கும். பழைய சொந்தங்கள் தேடிவந்து பேசுவார்கள். வியாபாரத்தில் அதிரடி அறிவிப்புகள் மூலம் போட்டிகளைச் சமாளித்து லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் வளைந்துகொடுத்துப் போவது நல்லது. தன்னடக்கத்தால் தடைகளைத் தாண்டும் நேரமிது.

விருச்சிகம்
விருச்சிகம்

விருச்சிகம்:

மனத்திலிருந்த அச்சம் விலகும். மனோபலம் அதிகரிக்கும். பாதியில் முடங்கிக்கிடந்த வீடு கட்டும் பணியைத் தொடங்குவீர்கள். பணப்புழக்கம் கணிசமாக உயரும். அரசு வகை காரியங்கள் விரைந்து முடியும். பிள்ளைகள் உங்களின் மனங்கோணாமல் நடந்துகொள்வார்கள். கணவன் மனைவி அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள், தோழிகளின் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். கடன் பிரச்னை கட்டுப்பாட்டுக்குள் வரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் உயர்வு உண்டு. அதிரடி வளர்ச்சி காணும் நேரமிது.

தனுசு
தனுசு

தனுசு:

கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். வராது என்றிருந்த பணம் வரும். செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். பூர்வீகச் சொத்தில் உங்கள் பங்கைக் கேட்டு வாங்குவீர்கள். கணவர் நீங்கள் சொல்வதைச் செய்வார். பிள்ளைகள் உங்களின் அருமையைப் புரிந்துகொள்வார்கள். உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். வியாபாரத்தில் புது முதலீடுகளைத் தவிர்க்கவும். உத்தியோகத்தில் சில புதுமைகளைச் செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். பலவீனத் தைத் திருத்திக்கொள்ள வேண்டிய நேரமிது.

மகரம்
மகரம்

மகரம்:

மன இறுக்கம் விலகும். தள்ளிப்போன விஷயங்கள் உடனே முடியும். இங்கிதமான பேச்சால் எதையும் சாதிப்பீர்கள். உடல்நலனில் கவனம் செலுத்துவது நல்லது. நெருங்கிய உறவினர்களுடன் வீண் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். கணவரை அவரின் போக்கிலேயே சென்று ஆலோசனை கூறுங்கள். பிள்ளைகளிடம் இருந்த பொறுப்பின்மை விலகும். தடைப்பட்டிருந்த வீடு கட்டும் வேலையை மீண்டும் தொடர்வீர்கள். திடீர்ப் பயணம் உண்டு. வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். உத்தியோகத்தில் அதிகாரிகள் பாராட்டுவார்கள். புதிய வேலைக்கும் முயற்சி செய்யலாம். திடீர்த் திருப்பங்கள் நிறைந்த நேரமிது.

கும்பம்
கும்பம்

கும்பம்:

புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். வீடு வாங்குவதற்கு வங்கிக் கடன் கிடைக்கும். கணவர் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார். பிள்ளைகள் உங்களின் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். புதிய டிசைனில் நகை வாங்குவீர்கள். சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தைத் தெரிந்துகொள்வீர்கள். வியாபாரத்தில் போராடி பழைய பாக்கிகளை வசூல் செய்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் எல்லாவற்றையும் பகிர்ந்துகொள்ள வேண்டாம். கோபத்தை அடக்குவதால் முன்னேறும் நேரமிது.

மீனம்
மீனம்

மீனம்:

எடுத்த காரியங்கள் யாவற்றிலும் வெற்றிபெறுவீர்கள். பணம் பல வழிகளில் வரும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். வெளிவட்டாரத்தில் கௌரவப் பதவிகள் தேடி வரும். மாமனார், மாமியார் மெச்சும்படி நடந்துகொள்வீர்கள். விலகி நின்றவர்கள் விரும்பிவருவார்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். பிரச்னை தந்த பங்குதாரர் விலகுவார். உத்தியோகத்தில் உங்களின் திறமையைக்கண்டு மேலதிகாரி வியப்பார். புதிய முயற்சிகளில் வெற்றிகாணும் நேரமிது.