பிரீமியம் ஸ்டோரி

மேஷம்:

ராசி பலன்கள்

உங்களின் நிர்வாகத்திறன், ஆளுமைத்திறன் அதிகரிக்கும். உயர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். கணவரின் பிரச்னைகளைப் போக்குவீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனின் கூடா நட்பு விலகும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். அரசியலில் செல்வாக்கு கூடும். புது டிசைனில் நகை வாங்குவீர்கள். உறவினர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். அயல்நாட்டிலிருப்பவர்களால் ஆதாயமடைவீர்கள். வியாபாரத்தில் வரவு உயரும். உத்தியோகத்தில் மேலதிகாரி உங்களிடம் சில முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார். சாதித்துக் காட்டும் நேரமிது.

ரிஷபம்:

ராசி பலன்கள்

புதிய கோணத்தில் சிந்தித்துப் பழைய பிரச்னைகளைத் தீர்ப்பீர்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். வீட்டைப் புதுப்பிக்கத் திட்டமிடுவீர்கள். கணவர் உங்கள் ஆலோசனையை ஏற்பார். பிள்ளைகளின் கலைத் திறனைக் கண்டறிந்து வெளிக்கொணர்வீர்கள். மாமியார், நாத்தனார் உங்களுக்கு ஒத்தாசையாக இருப்பார்கள். பழைய உறவினர்கள் தேடிவந்து பேசுவார்கள். எதிர்பார்த்த விலைக்குப் பழைய மனையை விற்றுக் கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். சகோதரிக்குத் திருமணம் முடியும். விலையுயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் வெளிநாட்டு நிறுவனங்களின் தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் மறைமுகப் பிரச்னைகள் வந்து செல்லும். நிதானமும் பொறுப்புணர்வும் தேவைப்படும் நேரமிது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மிதுனம்:

ராசி பலன்கள்

எதிர்ப்புகளை எளிதாகச் சமாளிப் பீர்கள். பணவரவு திருப்தி தரும். பிள்ளைகளின் ஆசையைப் பூர்த்திசெய்வீர்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். கணவருடன் இருந்த மோதல்கள் விலகும். சகோதரர்கள், நாத்தனார் உங்களைப் புரிந்துகொள்வார்கள். சொத்து வாங்குவது, விற்பதிலிருந்த இழுபறி நிலை மாறும். அரசாங்க விஷயங்கள் தாமதமாக முடியும். மாமனாருக்கு மருத்துவச் செலவுகள் வரக்கூடும். வியாபாரத்தில் வரவு கணிசமாக உயரும். மற்றவர்களை நம்பி முதலீடுகள் செய்ய வேண்டாம். உத்தியோகத்தில் உழைப்புக் கேற்ற அங்கீகாரம் கிடைக்கவில்லையே என ஆதங்கப்படுவீர்கள். கடின உழைப்பால் ஒருபடி உயரும் நேரமிது.

கடகம்:

ராசி பலன்கள்

கனிவாகப் பேசி எதையும் சாதிப்பீர்கள். வீடு கட்ட வங்கிக் கடன் கிடைக்கும். நீண்ட நாள்களாகப் பார்க்க நினைத்த உறவினரைச் சந்திப்பீர்கள். மாமனார் உங்களுக்குப் பரிந்து பேசுவார். தோழிகளிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கணவரின் கசப்பான நடவடிக்கைகளுக்காக பிரச்னை செய்யாதீர்கள். பிள்ளைகள் எதிர்க்கேள்வி கேட்டால் கோபப்படாதீர்கள். உறவினர்களின் உரிமையில் தலையிடாதீர்கள். மின்னணு, மின்சார சாதனங்கள் பழுதாகும். மாமியார் அதிருப்தி அடைவார். வியாபாரம் சுமார்தான். போட்டி களால் தடுமாறுவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். வேலைச்சுமையால் சோர்வடையும் நேரமிது.

சிம்மம்:

ராசி பலன்கள்

எதிர்ப்புகள் அடங்கும். உங்கள் பலம், பலவீனத்தை உணர்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். அரசாங்க விஷயங்கள் சாதகமாக முடியும். வருமானம் உயரும். கடன் பிரச்னைகள் கட்டுப் பாட்டுக்குள் வரும். கணவர் உங்களுக்கு முழு உரிமை தருவார். பிள்ளைகளின் அலட்சியப் போக்கு மாறும். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். மாமனார், மாமியார் பாசமாக நடந்துகொள்வார்கள். புதிதாக வீட்டு உபயோகப் பொருள்கள் வாங்குவீர்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். உறவினர், தோழிகளுடன் விரிசல்கள் வரக்கூடும். வியாபார ரகசியங்கள் யார் மூலம் கசிகின்றன என்பதை அறிந்து புது முடிவு எடுப்பீர்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமை இருந்தாலும் மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும். உங்கள் கை ஓங்கும் நேரமிது.

கன்னி:

ராசி பலன்கள்

திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். தடைப்பட்டிருந்த வீடு கட்டும் வேலையை மீண்டும் தொடர்வீர்கள். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். வாகனப் பழுது நீங்கும். கணவரின் போக்கில் நல்ல மாற்றம் உண்டாகும். உறவினர், தோழிகள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துச் செல்வது நல்லது. நாத்தனாருடன் விவாதங் களைத் தவிர்க்கவும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனைக்கேற்ற பொருள்களைக் கொள்முதல் செய்து லாபத்தைப் பெருக்குவீர்கள். பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் தைரியமாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அனுபவ அறிவால் முன்னேறும் நேரமிது.

துலாம்:

ராசி பலன்கள்

அடுக்கடுக்கான செலவுகளைச் சமாளிக்கும் ஆற்றல் கிடைக்கும். பூர்வீகச் சொத்தைப் புதுப்பிப்பீர்கள். கணவர் சில நேரங்களில் முணுமுணுத்தாலும் கடைசி நேரத்தில் உங்கள் கருத்தை ஏற்றுக்கொள்வார். பிள்ளைகளின் இசை, ஓவிய, விளையாட்டுத் திறனை வளர்க்க முயற்சி செய்வீர்கள். மாமனார், மைத்துனர் உங்கள் பேச்சுக்கு மதிப்பளிப்பார்கள். நவீனப் பொருள்கள் வாங்குவீர்கள். உங்கள் பேச்சால் குடும்பத்தில் சலசலப்புகள் இருந்துகொண்டேயிருக்கும். வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகளையும் தாண்டி லாபம் சம்பாதிப்பீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் அளவாகப் பழகுங்கள். சக ஊழியர்கள் உதவுவார்கள். புதிய திட்டங்கள் நிறைவேறும் நேரமிது.

விருச்சிகம்

ராசி பலன்கள்

தடுமாற்றம் நீங்கும். தைரியம் பிறக்கும். அரசியல்வாதிகள் உதவுவார்கள். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். கணவரின் சாந்தமான பேச்சில் சந்தோஷப் படுவீர்கள். பிள்ளைகளின் கல்யாண விஷயம் சாதகமாக முடியும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். உறவினர் வருகையால் வீடு களைகட்டும். புது வாகனம் வாங்குவீர்கள். அரசுக் காரியங்கள் விரைந்து முடியும். உங்கள் ரசனைக்கேற்ப சொத்து வாங்குவீர்கள். வெளிநாட்டிலிருக்கும் தோழியால் திருப்பம் உண்டாகும். உடல்நலத்தில் சிறிது கவனம் தேவை. வியாபாரத்தில் ஆர்வம் பிறக்கும். பழைய பாக்கிகள் வசூலா கும். கடையை மாற்ற வேண்டிய சூழல் வரும். உத்தியோகத்தில் சில புதுமைகளைச் செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். செல்வம், செல்வாக்கு கூடும் நேரமிது.

தனுசு:

ராசி பலன்கள்

உங்கள் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பிரபலங்கள் உதவுவார்கள். திருமணப் பேச்சுவார்த்தை கைகூடும். வாகனப் பழுதை சரி செய்வீர்கள். வீட்டை விரிவுபடுத்துவது குறித்து யோசிப்பீர்கள். கணவர் நம்பிக்கை தருவார். பிள்ளைகளின் புது முயற்சியை ஆதரிப்பீர்கள். ஆடை, அணிகலன் சேரும். உறவினர், தோழிகளுடன் மனம்விட்டுப் பேசுவீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். பூர்வீகச் சொத்து கைக்கு வரும். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் புது யுக்திகளால் பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். உத்தியோகத்தில் அலைச்சல் இருந்தாலும் அதிகாரிகளின் பாராட்டு ஆறுதல் தரும். சமயோஜித புத்தியால் வெற்றிபெறும் நேரமிது.

மகரம்

ராசி பலன்கள்

புதிய திட்டங்கள் நிறைவேறும். வீட்டைக் கட்டி முடிக்க எதிர்பார்த்த வங்கிக் கடன் கிடைக்கும். பூர்வீகச் சொத்தால் வருமானம் உயரும். கணவரை அவர் போக்கில் சென்று மாற்றுவீர்கள். மகனுக்கு நீங்கள் எதிர்பார்த்ததைப்போல நல்ல குடும்பத்திலிருந்து பெண் அமையும். வீட்டுக்குத் தேவையான அடிப்படை சாதனங்கள் வாங்குவீர்கள். நாத்தனார் உங்கள் உதவியை நாடுவார். உறவினர்களால் அனுகூலம் உண்டு. குலதெய்வப் பிரார்த் தனையை குடும்பத்தினருடன் சென்று நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களைக் கற்றுக்கொள்வீர்கள். அலுவலகத்தில் சக ஊழியர்களைவிட அதிகாரிகளிடம் செல்வாக்கு கூடும். தொட்டது துலங்கும் நேரமிது.

கும்பம்:

ராசி பலன்கள்

சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். தைரியம் கூடும். சுற்றியிருப் பவர்களின் சுயரூபம் தெரிய வரும். பூர்வீகச் சொத்தை விற்றுப் புது வீடு, மனை வாங்கு வீர்கள். வருமானத்தைப் பெருக்க சில முயற்சிகள் மேற்கொள்வீர்கள். கணவர் முக்கியத்துவம் தருவார். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக்கொள்வார்கள். உங்களைத் தாழ்த்திப் பேசியவர்களின் மனசு மாறும். நாத்தனார் உங்களுக்கு ஒத்தாசையாகச் சில பணிகளைச் செய்வார். என்றாலும் அடுக்கடுக்காக அத்தியாவசியச் செலவுகள் வந்து நீங்கும். வியாபாரத்தில் வழக்கமான லாபம் உண்டு. வாடிக்கை யாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி உங்கள் ஆலோசனையை ஏற்பார். இடைவிடாத முயற்சியால் உயரும் நேரமிது.

மீனம்:

ராசி பலன்கள்

கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். புதுப் பொறுப்புகள் தேடி வரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுக மாவார்கள். அடகிலிருந்த நகையை மீட்பீர்கள். கட்டட வேலைகளைத் தொடங்குவீர்கள். வழக்கு சாதகமாகும். அரசால் ஆதாயம் உண்டு. தோழியிடம் கைம்மாற்றாக வாங்கியிருந்த பணத்தைத் திருப்பித் தருவீர்கள். தூரத்துச் சொந்தங்கள் தேடி வருவார்கள். கணவர் கடிந்து கொள்வார். நாத்தனார், மாமியாரின் விமர்சனங்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகள் இருந்தாலும் லாபம் குறையாது. உத்தியோகத்தில் உங்களைத் தாக்கிப் பேசினாலும் பதற்றப்படாதீர்கள். பிற்பகுதியில் மகிழ்ச்சி பொங்கும் நேரமிது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு