Published:Updated:

ராசி பலன்கள்

ராசி பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
ராசி பலன்கள்

ஜுலை 21 முதல் ஆகஸ்ட் 03 வரை

ராசி பலன்கள்

ஜுலை 21 முதல் ஆகஸ்ட் 03 வரை

Published:Updated:
ராசி பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
ராசி பலன்கள்
ராசி பலன்கள்

மேஷம்:

புதிய சிந்தனைகள் தோன்றும். கற்பனை வளம் பெருகும். பிரபலங்கள் நண்பர்களாவார்கள். கணவர் உங்களை கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பார். மாமனார், மாமியார் உங்களின் சகிப்புத்தன்மையைப் பாராட்டுவர். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். சகோதரிக்குத் திருமணம் முடியும். உறவினர், தோழிகள் உங்கள் உதவியை நாடுவார்கள். சமையலறையை நவீன மயமாக்குவீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமைகள் வெளிப்படும்.

நினைத்ததை முடிக்கும் நேரமிது.

ராசி பலன்கள்

ரிஷபம்:

சவால்களில் வெற்றி பெறுவீர்கள். மேல்மட்ட அரசியல்வாதிகள் உதவுவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. ஒரு சொத்தை விற்று மறு சொத்து வாங்குவீர்கள். கணவர் உங்களைத் தாமதமாகப் புரிந்துகொள்வர். அடகிலிருந்த நகையை மீட்பீர்கள். பள்ளி, கல்லூரி காலத் தோழிகளைச் சந்திப்பீர்கள். மாமியார், நாத்தனார் ஒத்தாசையாக இருப்பார்கள். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் தலையிட வேண்டாம்.

அதிரடியாகச் செயல்பட்டு வெற்றிபெறும் நேரமிது.

ராசி பலன்கள்

மிதுனம்:

உங்கள் செயலில் வேகம் கூடும். நீண்ட நாள் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். பூர்வீகச் சொத்தை மாற்றியமைப்பீர்கள். கணவர் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார். பிள்ளைகளின் எண்ண ஓட்டத்தை அறிந்து அதற்கேற்ப வழி நடத்துவீர்கள். உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். சகோதரருக்குப் புது வேலை கிடைக்கும். நாத்தனாருக்கு நல்ல வரன் அமையும். வியாபாரத்தில் தள்ளிப்போன ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் ஒரே நேரத்தில் பல வேலைகளைப் பார்க்க வேண்டியிருக்கும்.

விட்டுக்கொடுத்து முன்னேறும் நேரமிது.

ராசி பலன்கள்

கடகம்:

நினைத்ததை முடிப்பீர்கள். புகழ், கௌரவம் பல மடங்கு உயரும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். கணவர் உங்களைப் பெருமையாகப் பேசுவார். வெகுநாள் கனவாக இருந்த வீடு வாங்கும் ஆசை இப்போது நிறைவேறும். விலகிச்சென்ற சொந்தங்கள் உங்கள் வளர்ச்சியைக் கண்டு வலிய வந்து உறவாடுவார்கள். பழைய கடன் பிரச்னைகள் தீரும். உடல்நலம் பாதிக்கும். வியாபாரத்தில் வேலையாட்களால் வியாபாரத்தின் தரம் உயரும். உத்தியோகத்தில் மேலதிகாரி உங்களை நம்பி சில ரகசியப் பொறுப்புகளை ஒப்படைப்பார்.

புகழ், கௌரவம் கூடும் நேரமிது.

ராசி பலன்கள்

சிம்மம்:

கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். முக்கியப் பிரமுகர் களைச் சந்திப்பீர்கள். பழைய இடத்தை விற்று புது வீடு வாங்குவீர்கள். திடீர்ப் பணவரவு உண்டு. புது வாகனம் வாங்குவீர்கள். கணவருக் கிருந்த பிரச்னைகள் தீரும். பிள்ளைகளிடம் மறைந்திருந்த திறமைகளை இனம் கண்டறிவீர்கள். திடீர்ச் செலவுகள், பயணங்கள் ஏற்படலாம். வியாபாரத்தில் பாக்கிகளைக் கறாராகப் பேசி வசூலிப்பீர்கள். உத்தியோகத்தில் வேலைச் சுமை அதிகரித்தாலும் அதிகாரிகளின் பாராட்டால் உற்சாகமடைவீர்கள்.

பிற்பகுதியில் பெருமை சேர்க்கும் நேரமிது.

ராசி பலன்கள்

கன்னி:

எதிலும் வெற்றி கிட்டும். கல்வியாளர்கள், அறிஞர்களின் நட்பால் தெளிவடைவீர்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். கணவரின் குறைநிறைகளைச் சுட்டிக்காட்டுவீர்கள். பாதியில் நின்றுபோன வீடு கட்டும் வேலையைத் தொடங்குவீர்கள். அரசாங்க விஷயங்கள் சாதகமாக முடியும். சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் தீர்ப்பு தள்ளிபோகும். வியாபாரத்தில் புது ஏஜென்சி எடுப்பீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகளின் நம்பிக்கையைப் பெறுவீர்கள்.

மூளை பலத்தால் முன்னேறும் நேரமிது.

ராசி பலன்கள்

துலாம்:

அரசாங்க அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். பூர்வீகச் சொத்தைச் சீர்செய்வீர்கள். பதவிகள் தேடி வரும். பிள்ளைகள் தங்கள் தவற்றை உணருவார்கள். உறவினர்கள் எதிர்பார்ப்பு களுடன் பேசுவார்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். நட்புவட்டம் விரியும். அரசியலில் செல்வாக்கு கூடும். வீடு, மனை வாங்குவது, விற்பதில் அவசரம் வேண்டாம். வழக்கில் அலட்சியம் காட்டாதீர்கள். பயணத்தைத் தவிர்ப்பது நல்லது. வியாபார ரகசியங்கள் கசியாமல் பார்த்துக்கொள்ளுங்கள். உத்தியோகத்தில் தானுண்டு தன் வேலையுண்டு என்றிருப்பது நல்லது.

சகிப்புத் தன்மை தேவைப்படும் நேரமிது.

ராசி பலன்கள்

விருச்சிகம்:

சாணக்கியத்தனமாகப் பேசி சில காரியங்களை சாதிப்பீர்கள். உயர் பதவியில் இருப்பவர்களின் தொடர்பு கிடைக்கும். வீடு கட்ட ப்ளான் அப்ரூவலாகும். கடனாகக் கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். கணவரின் அன்பு பெருகும். குழந்தை பாக்கியம் சிலருக்குக் கிடைக்கும். பிள்ளைகளின் உத்தியோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் நல்ல விதத்தில் முடியும். நவீனப் பொருள்கள் வாங்குவீர்கள். உறவினர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் தரமான சரக்குகளை மொத்த விலையில் வாங்க முடிவு செய்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும் நேரமிது.

ராசி பலன்கள்

தனுசு:

உங்களின் நிர்வாகத் திறமை, ஆளுமைத்திறன் அதிகரிக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். கடன் பிரச்னைகள் விரட்டினாலும் இங்கிதமாகப் பேசி வட்டியைத் தருவீர்கள். நீண்ட நாள்களாக எதிர்பார்த்த உறவினர் ஒருவரைச் சந்திப்பீர்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். பயணங்களுக்குத் திட்டமிடுவீர்கள் மாமனார், நாத்தனார் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துகொள்வர். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உங்களைப் பற்றி விமர்சித்தாலும் அனுசரித்துப் போங்கள்.

நாவடக்கம் தேவைப்படும் நேரமிது.

ராசி பலன்கள்

மகரம்:

அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். வீட்டை விரிவு படுத்திக் கட்டுவீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். விலையுயர்ந்த பொருள்கள் வாங்குவீர்கள். சொந்தங்கள் தேடி வருவார்கள். கணவர் சில நேரங்களில் உணர்ச்சிவசப்பட்டுப் பேசுவார். அனுசரித்துப்போங்கள். நாத்தனார் வகையில் டென்ஷன் அதிகரிக்கும். அரசாங்க அதிகாரிகளைப் பகைத்துக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகளைத் தள்ளுபடி விலையில் விற்று முடிப்பீர்கள். உத்தியோகத்தில் உங்களின் புது முயற்சிகளை அதிகாரிகள் பாராட்டுவார்கள்.

உறவினர்களிடம் செல்வாக்கு கூடும் நேரமிது.

ராசி பலன்கள்

கும்பம்:

எதிர்த்தவர்கள் நண்பர்களாவார் கள். அரசாங்க விஷயங்கள் விரைந்து முடியும். பாதியில் நின்ற வீடு கட்டும் பணியைத் தொடங்குவீர்கள். கணவர் அவ்வப்போது அலுத்துக்கொண்டே வேலை பார்ப்பார். உறவினர், தோழிகளின் வருகையால் வீட்டில் உற்சாகம் பொங்கும். சகோதர வகையில் செலவுகள் இருக்கும். மாமியார், நாத்தனார் வகையில் சங்கடங்கள் வரும். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். புதிய சலுகை களை அறிமுகப்படுத்துவீர்கள். உத்தியோகத்தில் சில நேரங்களில் பிடிப்பில்லாமல் போகும்.

பழைய சொந்தங்களால் மகிழ்ச்சி பொங்கும் நேரமிது.

ராசி பலன்கள்

மீனம்:

யதார்த்தமான பேச்சால் கவர்வீர்கள். பிரபலங்களுக்கு நெருக்கமா வீர்கள். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். வீட்டில் கூடுதலாக ஓர் அறை கட்டுவீர்கள். வாகனத்தை மாற்றுவீர்கள். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். மாமியார் புது பொறுப்பை ஒப்படைப்பார். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். கர்ப்பிணிகள் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. மின்சாரப் பொருள்களை கவனமாக கையாளுங்கள். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி லாபம் வரும். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் மோதல் வரும்.

முன்கோபத்தைத் தவிர்க்க வேண்டிய நேரமிது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism