Published:Updated:

ராசி பலன்கள்

ராசி பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
ராசி பலன்கள்

ஜூலை 7-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை

ராசி பலன்கள்

ஜூலை 7-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை

Published:Updated:
ராசி பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
ராசி பலன்கள்

மேஷம்:

ராசி பலன்கள்

தைரியம் பிறக்கும். வராது என்று நினைத்திருந்த பணம் வரும். வாகனத்தைச் சீர் செய்வீர்கள். கணவர் வீட்டு வேலைகளைப் பகிர்ந்துகொள்வார். உங்கள் ரசனைக்கேற்ற வீடு அமையும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் உதவிகள் கிடைக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டு. உறவினர்கள் மதிப்பார்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். நட்பு வட்டம் விரியும். மாமியார் உங்களை நம்பி சில பொறுப்பு களை ஒப்படைப்பார். வியாபாரத்தில் கடையை மாற்றி யமைக்கத் திட்டமிடுவீர்கள். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள்.

இடைவிடாமல் போராடி இலக்கை எட்டும் நேரமிது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ரிஷபம்:

ராசி பலன்கள்

உங்களின் அழகு, இளமை கூடும். எதிர்பார்த்தவர்களிடமிருந்து உதவிகள் கிடைக்கும். அறிஞர்களின் நட்பு கிடைக்கும். இங்கிதமாகப் பேசி இழுபறியான வேலைகளை முடிப்பீர்கள். பணப்பற்றாக்குறையைச் சமாளிப்பீர்கள். பழைய சம்பவங்களை நினைத்துப் பெருமூச்சு விடுவீர்கள். நல்ல சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தாமல் விட்டுவிட்டோமே என வருந்துவீர்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகளைப் போராடி வசூலிப்பீர்கள். உத்தியோகத்தில் உங்கள் உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லையே என ஆதங்கப்படுவீர்கள்.

பணிவால் சாதிக்கும் நேரமிது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மிதுனம்:

ராசி பலன்கள்

முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சோர்வு, களைப்பு நீங்கும். தோற்றப் பொலிவு கூடும். எதிர்பார்த்த பணம் வரும். சாதுர்யமான பேச்சால் சாதிப்பீர்கள். கணவரின் குறை நிறைகளைச் சுட்டிக் காட்டி சரி செய்வீர்கள். பூர்வீகச் சொத்தில் மாற்றம் செய்வீர்கள். நாத்தனார், மச்சினர் உங்கள் பரந்த மனத்தைப் புரிந்துகொள்வார்கள். உடல்நலம் சீராகும். சில நேரங்களில் உணர்ச்சிவசப்பட்டுப் பேசுவீர்கள். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் பிரச்னை தந்த மேலதிகாரி வேறிடத்துக்கு மாற்றப்படுவார்.

தலைநிமிர்ந்து நடக்கும் நேரமிது.

கடகம்:

ராசி பலன்கள்

எப்படியும் வெற்றி பெறு வோம் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும். நீண்ட நாள் பிரச்னை முடிவுக்கு வரும். தினந்தோறும் எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். கணவர் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து யோசிப்பீர்கள். தாயாரின் உடல்நலம் சீராகும். மாமனார், மாமியார் அன்பாக நடந்துகொள்வார்கள். முக்கியமான பயணத்துக்குத் திட்டமிடுவீர்கள் வியாபாரத்தில் சில தந்திரங்களைக் கற்றுக்கொள்வீர்கள். ஷேர் லாபம் தரும். உத்தியோகத்தில் வீண்பழி வந்து விலகும். உங்கள் மதிப்பு கூடும்.

எதிர்பார்த்தவற்றில் சில நிறைவேறும் நேரமிது.

சிம்மம்:

ராசி பலன்கள்

பிரச்னைகளின் வேகம் குறையும். பணப்புழக்கம் அதிகரிக்கும். வி.ஐ.பிக்கள் உதவுவார்கள். கணவரின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். மகளின் திருமணத்தைச் சிறப்பாக நடத்துவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதை கூடும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். மாமனார், மாமியார் மெச்சுவார்கள். வீடு கட்ட தொடங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் உழைப்புக்கேற்ற பாராட்டு கிடைக்கும்.

அச்சம் விலகி அதிகாரம் பெருகும் நேரமிது.

கன்னி:

ராசி பலன்கள்

புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். எதிர்பாராத பணவரவு உண்டு. நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். பாகப்பிரிவினை சுமுகமாக முடியும். கணவர் நீங்கள் சொல்வதைச் செய்வார். பிள்ளைகள் உங்கள் அருமையைப் புரிந்துகொள்வார்கள். சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தைத் தெரிந்துகொள்வீர்கள். வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள். மாமனார், நாத்தனாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பழைய நண்பர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் சலுகைகள் அறிவிப்பீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள்.

மதியூகத்தால் வெற்றிபெறும் நேரமிது.

துலாம்:

ராசி பலன்கள்

உங்கள் போக்கில் கொஞ்சம் மாற்றம் செய்வீர்கள். பணப்புழக்கம் கணிசமாக உயரும். நல்ல வேலை அமையும். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவருக்குப் புது ஆலோசனைகள் தருவீர்கள். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். தந்தையின் உடல்நலம் சீராகும். மாமியார், நாத்தனாரின் தொந்தரவுகள் குறையும். வியாபாரத்தில் பழைய பாக்கிகளை வசூலிப்பதில் தீவிரம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளிடம் உங்கள் செல்வாக்கு கூடும்.

திடமான சிந்தனையால் வெல்லும் நேரமிது.

விருச்சிகம்:

ராசி பலன்கள்

ஓரளவு பணம் வரும். எதிர்பார்த்த உதவிகள் வி.ஐ.பிக்களிடமிருந்து கிடைக்கும். பேச்சில் இருந்த கடுகடுப்பு குறையும். சகோதரிக்குத் திருமணம் முடியும். கணவர் சில நேரங்களில் முணுமுணுத்தாலும் கடைசியில் உங்கள் கருத்தை ஏற்றுக்கொள்வார். பிள்ளைகளிடம் உங்களின் எண்ணங்களைத் திணிக்க வேண்டாம். ஒரு சொத்தைக் காப்பாற்ற மற்றொரு சொத்தை விற்க வேண்டி வரும். வழக்கறிஞரை மாற்றுவீர்கள். வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகளையும் தாண்டி லாபம் சம்பாதிப்பீர்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும்.

கடின உழைப்பால் முதலிடம் பிடிக்கும் நேரமிது.

தனுசு:

ராசி பலன்கள்

திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். பணவரவு அதிகரிக்கும். ஆளுபவர்கள் அறிமுகமாவார்கள். கணவர் புதுத் தொழில் தொடங்குவார். பிள்ளைகள் நீண்ட நாளாகக் கேட்டுக் கொண்டிருந்ததை வாங்கித்தருவீர்கள். மாமியார், நாத்தனார் உங்களின் திறமையைக் கண்டு அதிசயிப்பார்கள். பழைய மனையை விற்று, புது வீடு வாங்குவீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் நீடிப்போமா, நீடிக்க மாட்டோமா என்ற நிலை உருவாகும்.

விஸ்வரூபமெடுக்கும் நேரமிது.

மகரம்:

ராசி பலன்கள்

சமயோஜித புத்தியால் சாதிப்பீர்கள். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். பூர்வீகச் சொத்தை விற்று, சில பிரச்னைகளிலிருந்து வெளி வருவீர்கள். தோழிகள் உதவுவார்கள். மாமனாரின் ஆதரவு கிட்டும். கணவருடன் மோதல் வந்து நீங்கும். பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். பிள்ளைகளிடம் கோபப்படாதீர்கள். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். வியாபாரத்தில் யோசித்து முடிவெடுங்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை தாண்டி அதிகாரியின் ஆதரவைப் பெறுவீர்கள்.

சாதுர்யத்தால் பிரச்னைகளைத் தீர்க்கும் நேரமிது.

கும்பம்:

ராசி பலன்கள்

நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பணவரவு திருப்தி தரும். கணவர் உங்களின் புது முயற்சிகளை ஆதரிப்பார். பிள்ளைகள் தங்கள் தவற்றை உணருவார்கள். வீட்டில் கூடுதலாக ஒரு தளம் கட்டத் திட்டமிடுவீர்கள். மற்றவர்களை நம்பி முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம். உறவினர்கள், தோழிகளுடன் பிணக்குகள் வரும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் வரும். பங்குதாரர்களுடன் போராட வேண்டிவரும். உத்தியோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள்.

காலநேரம் கனிந்து வரும் நேரமிது.

மீனம்:

ராசி பலன்கள்

எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பெரிய பதவிக்குத் தேர்ந்தெடுக்கப் படுவீர்கள். வழக்கில் திருப்பம் ஏற்படும். வாகனம் வசதி பெருகும். கல்யாணப் பேச்சு வார்த்தை சுமுகமாக முடியும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். புதிதாக வீடு, மனை வாங்க முயற்சி செய்வீர்கள். பழைய கடனை பைசல் செய்ய உதவி கிடைக்கும். வியாபாரத்தில் புது யுக்திகளைக் கையாளுவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்.

வெற்றியின் விளிம்பைத் தொடும் நேரமிது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism